
26/07/2025
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ., அவர்கள் தலைமையில் முஸ்லிம் தலைவர்கள் உடன் வட்டமேசை கூட்டம் மற்றும் விருந்து நிகழச்சி நடைபெற்றது.
இதில் இஸ்லாமிய இயக்கங்கள் கட்சிகள் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
போன பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி முஸ்லிம்களுக்கு பிரதிநிதித்துவம் கொடுக்க வில்லை மேலும் காங்கிரஸ் கட்சியில் தேசிய பொறுப்பு முதல் கிளை பொறுப்பு வரை முஸ்லிம்களுக்கு பிரதிநிதித்துவம் இல்லை என்பதை புள்ளிவிவரங்கள் உடன் எடுத்து கூறி இனி வரும் சட்டமன்ற தேர்தலில் முஸ்லிம்களுக்கு விகிதாச்சார அடிப்படையில் 3 இடங்களை காங்கிரஸ் கட்சி ஒதுக்கி தந்து அதிகாரத்தில் பிரதிநிதித்துவத்தை முஸ்லிம்களுக்கு தர வேண்டும் என்று கூறி
கூட்டத்தில் துவக்க உரையாக இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநில துணை தலைவர் நிகழ்த்தினார்..
இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநில பொது செயலாளர் முஹம்மது ஷிப்லி அவர்கள் கலந்து கொண்டார்.
மேலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் காதர் முகைதீன் அவர்கள் மனித நேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் எம்எல்ஏ
மனித நேய மக்கள் கட்சி பொது செயலாளர் அப்துல் சமது எம்எல்ஏ ஜமாஅத்துல் உலமா சபை துணை தலைவர் இல்யாஸ் ரியாஜி, தேசிய லீக் கட்சி தலைவர் பஷிர் அஹ்மது எஸ்டிபிஐ மாநில துணை தலைவர் அப்துல் ஹமீது மாநில பொது செயலாளர் ஏ கே கரிம் ஜமாஅத்தே இஸ்லாம ஹிந்த் மாநில தலைவர் அனிபா மன்பயி மாநில செயலாளர் எஸ் என் சிக்கந்தர் மஸ்ஜித் கூட்டமைப்பு தலைவர் பஷீர் அஹமது ,
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொது செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அபுபக்கர் மனித நேய மக்கள் கட்சி மாநில அமைப்பு செயலாளர் புழல் சேக் முஹம்மது அலி, இந்திய தேசிய லீக் கட்சி பொருளாளர் குத்தூஸ் அவர்கள் மற்றும் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் கட்சிகள் தலைவர்கள் கலந்து கொண்டனர்..
இந்த நிகழ்வை தமிழ் நாடு காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ( ஆராய்ச்சி துறை) நபில் அஹ்மது அவர்கள் ஒருங்கிணைத்தார்..
ிரிவு