Kowsalya Tamizhachi

Kowsalya Tamizhachi அரசியல்,சினிமா,விளையாட்டு மற்றும் ஆன்மீக தகவல்கள்

எனக்கு இவ்ளோ காமெடி வராது, வேற காமெடியன் வச்சிக்கங்க: கமல் படத்தை மறுத்த பிரபல நடிகர்!1944-ம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டத...
10/07/2025

எனக்கு இவ்ளோ காமெடி வராது, வேற காமெடியன் வச்சிக்கங்க: கமல் படத்தை மறுத்த பிரபல நடிகர்!

1944-ம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்த டெல்லி கணேஷ் இந்திய விமானப்படையில் அதிகாரியாக வேலை செய்துள்ளார்.

தமிழ் சினிமாவில், காமெடி, வில்லன், குணச்சித்திரம் என பலதரப்பட்ட கேரக்டர்களில் நடித்து அசத்தியவர் டெல்லி கணேஷ். பல படங்களில் வில்லன் கேரக்டர்களில் நடித்து புகழ்பெற்ற இவர், எதிரி, அவ்வை சண்முகி உள்ளிட்ட பல படங்களில் காமெடி கேரக்டர்களிலும் நடித்து பாராட்டுக்களை பெற்றுள்ளார். ஆனால் அவ்வை சண்முகி படத்தில் நடிக்கும்போது இந்த கதையில் நடிக்க மறுத்துள்ளார் டெல்லி கணேஷ்.

1944-ம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்த டெல்லி கணேஷ் இந்திய விமானப்படையில் அதிகாரியாக வேலை செய்துள்ளார். அதன்பிறகு அதில் இருந்து ஓய்வு பெற்ற அவர், 1976-ம் ஆண்டு கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான பட்டின பிரவேசம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து அடுத்து பாலச்சந்தர் இயக்கத்தில் பல படங்களில் நடித்திருந்தார்,

மற்ற இயக்குனர்களின் படங்களிலும் நடித்துள்ள டெல்லி கணேஷ் குறிப்பாக கே.பாலச்சந்தரின் உதவி இயக்குனராக இருந்த விசு இயக்கிய அனைத்து படங்களிலும் டெல்லி கணேஷ் முக்கிய கேரக்டர்களில் நடித்திருப்பார். அதேபோல் கமல்ஹாசனின் அபூர்வ சகோதரர்கள், விசு இயக்கிய சிதம்பர ரசகியம், சுந்தர்.சி நடித்த தலைநகரம் உள்ளிட்ட பல படங்களில் வில்லனாகவும் நடித்துள்ளார். வில்லன் காமெடி என பலதரப்பட்ட கேரக்டர்களில் நடித்துள்ள டெல்லி கணேஷ், கமல்ஹாசனின் அவ்வை சண்முகி படத்தில் நடிக்க மறுத்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், அவ்வை சண்முகி படம் ஓரிரு நாட்கள் நடித்தேன். அதில் நிறைய காமெடி காட்சிகள் வந்தது. இதனால் பயந்துபோன நான் எழுத்தாளர் கிரேஸி மோகனிடம் சென்று எனக்கு எத்தனை சீன் வருகிறது என்று கேட்டேன். அவரோ சீனா, படம் ஃபுல்லா நீ வரய்யா என்று சொல்ல, அப்படியா, இவ்வளவு பரிய காமெடி என்னால் பண்ண முடியுமாயா? நீபாட்டுக்கு எழுதிட்டு போற, இதுக்கு ஒரு நல்ல காமெடியனை வச்சிக்கோங்க என்று சொன்னேன்.

இதை கேட்ட கிரேஸி மோகன் இதை நீ கமல்ஹாசனிடம் போய் சொல் என்று சொல்ல, நான் கமல்ஹாசனிடம் சென்று, சார் இவ்வளவு பெரிய காமெடி என்னால் பண்ண முடியுமா என்று தெரியவில்லை. நீங்கள் எதற்கும் வேறு ஒரு நல்ல ஆர்டிஸ்டா செலக்ட் பண்ணுங்க என்று சொன்னேன். உங்களுக்கு காமெடி பண்ண தெரியும் என்பது எனக்கு தெரியும். பண்ணுங்க என்று என்க்ரேஜ் பண்ணியது கமல்ஹாசன் தான். அவர் சொன்னதற்கு பிறகு ஒரு தைரியம் வந்தது பண்ண ஆரம்பிச்சேன். எல்லோரும் சிரித்தார்கள். நல்ல காமெடியாக வந்தது என்று கூறியுள்ளார்.

5 ஆண்டுகளில் 61 படங்கள்; 24 வயதில் கொடூரமா‌க கொலை செய்யப்பட்ட தமிழ் நடிகை: நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்!சுமார் 5 ஆண்டுகளி...
09/07/2025

5 ஆண்டுகளில் 61 படங்கள்; 24 வயதில் கொடூரமா‌க கொலை செய்யப்பட்ட தமிழ் நடிகை: நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்!

சுமார் 5 ஆண்டுகளில் 61 திரைப்படங்களில் நடித்த ஒரு நடிகை, கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்போதைய சூழலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது

தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் பிரபல நடிகையாக திகழ்ந்த, ராணி பத்மினியை இன்றைய தலைமுறையினர் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதன்படி, ராணி பத்மினியின் வாழ்க்கை பின்னணியை இந்த செய்திக் குறிப்பில் பார்க்கலாம்.

1962 ஆம் ஆண்டு சென்னையில் உள்ள அண்ணா நகரில் சௌத்ரி மற்றும் இந்திரா குமாரிக்கு ராணி பத்மினி பிறந்தார். அவர் பிறக்கும் முன்னரே அவரது சினிமா விதி எழுதப்பட்டிருந்தது. ஒரு திரைப்பட நட்சத்திரமாக வேண்டும் என்ற தனது சொந்த ஆசைகள் மற்றும் அந்த கனவைத் தேடி சென்னைக்கு குடிபெயர்ந்த போதிலும், இந்திரா குமாரியால் அதை அடைய முடியவில்லை. டப்பிங் கலைஞராக பணிபுரியும் போது, சௌத்ரி மூலமாக ராணியை பெற்றெடுத்தார். ராணி சென்னையிலேயே பிறந்து, வளர்ந்தார். இந்திரா தொடர்ந்து சினிமாவில் நுழைய முயற்சி செய்தாலும், அவர் வெற்றியடையவில்லை. இதனால், தனது மகளாவது தன்னால் அடைய முடியாததை அடைய வேண்டும் என்ற கனவு, இந்திராவின் உந்துதலாக மாறியது.

மனோரமா ஆன்லைன் தளத்தின் படி, ராணி பதின்ம வயதை அடைந்ததும், இந்திரா தனது மகளுடன் மும்பைக்குச் சென்றார். ராணி பாலிவுட்டில் ஒரு முன்னணி நடிகையாக ஜொலிக்க வேண்டும் என்பதே இலக்காக இருந்தது. இருப்பினும், அவர்கள் எதிர்பார்த்த வாய்ப்புகள் அவருக்கு கிடைக்கவில்லை. பின்னர் இந்திரா தனது மகளை மீண்டும் இங்கே அழைத்து வந்து வாய்ப்புகளைத் தேடத் தொடங்கினார். விரைவில், இயக்குநர் மோகனின் 'கதயாரியாதே' (1981) மூலம் மலையாளத்தில் ராணி அறிமுகமானார். அதே ஆண்டு, 'தேனும் வயம்பும்', 'துஷாரம்', 'பராங்கிமலை' போன்ற படங்களில் நடித்தார். இருப்பினும், 'சங்கர்ஷம்' (1981) படத்தில் நடித்ததன் மூலம் பலரது கவனத்தையும் ஈர்த்தார்

1981 மற்றும் 1986 க்கு இடையில், ராணி பத்மினி தமிழ் மற்றும் கன்னட மொழிகளிலும் சுமார் 61 படங்களில் நடித்தார். குறிப்பாக, 'ராஜதந்திரம்', 'நிரபராதி, 'பக்கத்து வீட்டு ரோஜா' போன்ற தமிழ் படங்களில் நடித்தார். போதுமான செல்வமும் புகழும் கிடைத்தவுடன், தாய்-மகள் இருவரும் அண்ணா நகரில் உள்ள 18வது அவென்யூவில் ஒரு ஆடம்பர பங்களாவை வாடகைக்கு எடுத்து அங்கு குடியேறினர். நிதி ரீதியாக பாதுகாப்பாக உணர்ந்த அவர்கள், வீட்டு வேலைக்கு ஆட்களை நியமிக்க முடிவு செய்தனர். இந்த முடிவு அவர்களின் வாழ்க்கையை மாற்றும் என்று அவர்கள் அறியவில்லை.

வாட்ச்மேன், சமையல்காரர் மற்றும் ஓட்டுநர் ஆகிய மூன்று பணிகளுக்கு முன்னணி செய்தித்தாள்களில் விளம்பரம் செய்தனர். முதலில் ஜெபராஜ் என்பவ அவர்களின் ஓட்டுநரானார். தி இந்து செய்தியின் படி, மேலும் இரண்டு பேர் இணைந்தனர். லட்சுமி நரசிம்மன் மற்றும் கணேசன் ஆகியோர் வாட்ச்மேன் மற்றும் சமையல்காரராக பணிக்குச் சேரதனர்.

ராணி பத்மினி மற்றும் இந்திரா குமாரி இருவரும், 1986 ஆம் ஆண்டு அக்டோபர் 19 ஆம் தேதி பிற்பகலில் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர். இந்த சம்பவம் சில நாட்களுக்கு முன்பு நடந்ததால், அவர்களது உடல்கள் மிகவும் அழுகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டன. கொலைகளைத் தவிர, ராணி மும்பையில் வாங்கிய ஒரு இறக்குமதி செய்யப்பட்ட நிசான் காரும் திருடு போனது கண்டறியப்பட்டது. மேலும் ஓட்டுநர் மற்றும் வீட்டு உதவியாளரும் காணாமல் போயிருந்தனர். அவரும், அவரது தாயாரும் பங்களாவை விலைக்கு வாங்க தயாராகிக் கொண்டிருந்த சமயத்தில், ஒப்பந்தத்தை இறுதி செய்யவிருந்தபோது இந்த சம்பவம் நடந்தது. இந்திராவின் சகோதரர் வரும் வரை, அவர்களது உடல்கள் 10 நாட்களுக்கு பொது மருத்துவமனை சவக்கிடங்கில் உரிமை கோரப்படாமல் இருந்தன.

விசாரணையின் போது, பணத்திற்காக ஜெபராஜ், லட்சுமி நரசிம்மன் மற்றும் கணேசன் ஆகிய மூவரும் கொடூரமாக கொலை செய்ததாக போலீசார் முடிவு செய்தனர். நடிகையும், அவரது தாயும் எந்தவிதமான சோதனையும் இல்லாமல் அவர்களை பணிக்கு நியமித்திருந்தனர். ஜெபராஜ் பல வாகன திருட்டு வழக்குகளுடன் தொடர்புடையவர். அதைத் தவிர, ராணியுடன் தவறாக நடந்து கொண்டதற்காக இந்திரா, ஜெபராஜை அறைந்து, மீண்டும் வேலைக்கு வரக்கூடாது என்று சொன்னதாகவும் கூறப்படுகிறது. இது விரோதத்தை உருவாக்கி, மற்ற இருவருடன் சதி செய்யத் தூண்டியது.

சம்பவத்தன்று அன்று, ராணியும் இந்திராவும் பங்களா ஒப்பந்தத்திற்காக வங்கியில் பணம் எடுத்திருந்தனர். இதைப் பற்றிக் கேள்விப்பட்ட மூன்று பேரும், அவர்களைக் கொன்று பணத்தையும், நகைகளையும் பங்கிட முடிவு செய்ததாகக் கூறப்படுகிறது. மனோரமா ஆன்லைன் செய்தியின் படி, இந்திராவும், ராணியும் மது அருந்தும் பழக்கம் கொண்டிருந்தனர், அந்த கொடூரமான இரவிலும், அவர்கள் படுக்கைக்குச் செல்வதற்கு முன்பு மது அருந்தினர். மறுநாள் காலை, ராணி பசியுடன் எழுந்ததும் சமையலறைக்குச் சென்றார். இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்ட ஜெபராஜ், மறைந்திருந்து இந்திராவைக் கத்தியால் குத்தி கொன்றார். தனது தாயின் அலறல் சத்தத்தைக் கேட்டு ராணி ஓடி வந்து, அந்த காட்சியைக் கண்டு அதிர்ந்தார். அவர் தப்ப முயன்றார். எனினும், அவரும் படுகொலை செய்யப்பட்டார். ராணியின் உடலில் 12 காயங்களும், அவரது தாயாரின் உடலில் 14 காயங்களும் காணப்பட்டன.

குற்றவாளிகள் முதலில் தப்பியோடினாலும், இறுதியில் கைது செய்யப்பட்டனர். மார்ச் 1989 இல், ஒரு மாவட்ட அமர்வு நீதிமன்றம் ராணி பத்மினி மற்றும் அவரது தாயைக் கொன்றதற்காக அவர்களுக்கு மரண தண்டனை விதித்தது. பின்னர், சென்னை உயர் நீதிமன்றம் லட்சுமி நரசிம்மன் மற்றும் கணேசன் ஆகியோரை விடுவித்து, ஜெபராஜின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தது. இருப்பினும், உச்ச நீதிமன்றம் இறுதியில் லட்சுமி நரசிம்மனின் கொலைக் குற்றத்தை உறுதி செய்தது. இருப்பினும் அவரது தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தது. கணேசன் உயர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட பிறகு காணாமல் போனார். இறுதியில், லட்சுமி நரசிம்மன் 2008 ஆம் ஆண்டளவில் ஏழு ஆண்டுகள் சிறையில் இருந்ததால், மாநில திட்டத்தின் கீழ் முன்கூட்டியே விடுதலைக்கு தகுதியுடையவராக இருந்ததால் விடுவிக்கப்பட்டார். ஜெபராஜ் சிறையில் இறந்ததாகக் கூறப்படுகிறது.

ஜெய்சங்கருக்குக் கிடைக்க வேண்டிய 2 அருமையான வாய்ப்பு... ஆனால் தட்டிப் பறித்ததோ எம்ஜிஆர், ஜெமினி! ஏவிஎம் நிறுவனத்தின் தயா...
27/06/2025

ஜெய்சங்கருக்குக் கிடைக்க வேண்டிய 2 அருமையான வாய்ப்பு... ஆனால் தட்டிப் பறித்ததோ எம்ஜிஆர், ஜெமினி!

ஏவிஎம் நிறுவனத்தின் தயாரிப்பில் 2 மிக முக்கியமான படங்களைத் தவறவிட்டவர் ஜெய்சங்கர். இவ்வளவுக்கும் ஏவிஎம்மின் பிள்ளைகளான சரவணன், குமரன், பாலசுப்பிரமணியம் அனைவருடனும் நெருங்கிய நட்பு கொண்டவர் மக்கள் திலகம் ஜெய்சங்கர். எம்ஜிஆர் நடித்த அன்பே வா கலரில் உருவானது.

அந்தப் படத்தில் முதலில் ஜெய்சங்கர் நடிப்பதாக இருந்தது. அவரைத் தான் ஹீரோவாகப் போடணும்னு ஏவிஎம். நினைத்தார். இதற்கிடையில் எம்ஜிஆரின் கால்ஷீட் உடனடியாகக் கிடைக்கவே அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு எம்ஜிஆரை நடிக்க வைத்தார்கள்.

அதே போல ஜெய்சங்கர் தவற விட்ட இன்னொரு முக்கியமான படம் ராமு. ஜெய்சங்கர் கதாநாயகனாக நடித்த குழந்தையும், தெய்வமும் படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அதனால் தனது அடுத்த படத்திலும் ஜெய்சங்கரையே ஹீரோவாக நடிக்க வைக்க வேண்டும் என ஏவிஎம் நினைத்தனர்.

இந்த நிலையில்தான் ராமு என்ற ஒரு படத்தை ஏவிஎம் எடுக்கப்போவதை ஜெமினிகணேசன் அறிந்தார். உடனே அவர் மெய்யப்பச் செட்டியாரைத் தொடர்பு கொண்டு அந்தப் படத்தில் எப்படியாவது எனக்கு ஒரு வாய்ப்பை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

அப்போது நீ வாங்கற சம்பளம் அதிகம். நான் இந்தப் படத்தை சின்ன பட்ஜெட்ல எடுக்கலாம்னு நினைக்கிறேன்னு ஏவிஎம். சொன்னாராம். அதற்கு ஜெமினி நீங்க என்ன சம்பளம் கொடுக்குறீங்களோ கொடுங்க. ஆனா நான் தான் இந்தப் படத்தில ஹீரோவா நடிப்பேன்னு சொன்னாராம் ஜெமினி.

ஜெமினி ஏற்கனவே களத்தூர் கண்ணம்மா படத்தில் நடித்து ஹிட் கொடுத்தவர். அதனால் அவரது பேச்சைத் தட்ட முடியாத ஏவிஎம். தன்னுடைய மகன்களிடம் அந்தப் படத்தில் ஜெய்சங்கருக்குப் பதிலாக ஜெமினிகணேசனை ஒப்பந்தம் செய்யலாம்னு சொன்னார்.

அப்பாவின் பேச்சைத் தட்ட முடியாத சரவணன், குமரனுக்கோ ஜெய்சங்கரை மாற்ற துளி கூட விருப்பமில்லை. என்றாலும் அப்பா சொன்னதை தட்டாமல் இருவரும் ஏற்றனர். அதனால்தான் ராமு என்கிற மிகப்பெரிய வெற்றிப்படத்தில் நடிக்கக்கூடிய வாய்ப்பு ஜெமினிகணேசனுக்கு அமைந்தது. ஜெய்சங்கருக்கு அது மிஸ் ஆனது.

சினிமாவில் முதல் படத்திலேயே ஒருவர் கவனிக்கப்பட வேண்டுமென்றால் சினிமா பின்னணி கொண்ட குடும்பத்தில் பிறந்திருக்க வேண்டும் அ...
25/06/2025

சினிமாவில் முதல் படத்திலேயே ஒருவர் கவனிக்கப்பட வேண்டுமென்றால் சினிமா பின்னணி கொண்ட குடும்பத்தில் பிறந்திருக்க வேண்டும் அல்லது தன் நடிப்புத் திறனையும் வசனங்களையும் ஒரு துள்ளலுடன் முன்வைத்து ரசிகர்களைக் கவர வேண்டும்.
இதில், இரண்டாம் பட்டியலில் இருப்பவர்கள் மிக மிகக் குறைவு. அந்தக் குறைவான நடிகர்களில் ஒருவராகத் திரைக்கு வந்தவர் ஸ்ரீகாந்த்.

ஸ்ரீகாந்த் சினிமா குடும்பப் பின்னணியில் பிறக்கவில்லை. சொல்லப்போனால், அவர் குடும்பத்தில் யாரும் திரைத்துறையில் இல்லை. கல்லூரி காலத்திலேயே நடிப்பின் மீது ஏற்பட்ட ஆர்வத்தால் நாடகங்கள் மற்றும் கே. பாலச்சந்தர் இயக்கிய சின்னத்திரை தொடரான ஜன்னல் மரபு கவிதைகள் உள்ளிட்டவற்றில் பணியாற்றியிருக்கிறார்.

2000-களின் துவக்கத்தில் சில இயக்குநர்களிடம் உதவி இயக்குநராகவும் வேலை பார்த்தவருக்கு முதலில் இயக்குநர் கதிர் இயக்கிய காதல் வைரஸ் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால், இறுதியில் ஸ்ரீகாந்துக்குப் பதில் ரிச்சர்ட் நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். பின், ஸ்ரீகாந்துக்கு இயக்குநர் ஜீவா மூலம் 12-பி படத்தில் நடிக்க வாய்ப்பு அமைந்தாலும் சில காரணங்களால் அப்படத்திலிருந்தும் நீக்கப்பட்டார். அவருக்குப் பதிலாகத்தான் நடிகர் ஷாம் அறிமுகமானார்.

ஸ்ரீகாந்த் மீண்டும் வாய்ப்புகளைத் தேடி அலைந்தார். நல்ல முகத்தோற்றம், காதலையும் காத்திருத்தலையும் மென்மையாக முன்வைக்கும் முகபாவனைகள் என எல்லாம் சரியாகப் பொருந்திய நடிகராக இருந்தவருக்கு இயக்குநர் சசி மூலம் திருப்புமுனை அமைகிறது.


அப்படித்தான் ஸ்ரீகாந்த் 2002 ஆம் ஆண்டு ரோஜாக்கூட்டம் படத்தின் மூலம் நாயகனாக திரைத்துறைக்கு அறிமுகமாகிறார். முதல் படம் பலருக்கும் சின்ன வெற்றியையும் கவனத்தையும் கொடுக்கும். ஆனால், இப்படம் ஸ்ரீகாந்துக்கு பெரிய வெளிச்சத்தையும் தமிழ் சினிமாவின் புதிய சாக்லேட் பாய் என்கிற பட்டத்தையும் கொடுத்தது.

அன்று, "மெட்டுகளே... மெட்டுகளே..", "ஆப்பிள் பெண்ணே..." பாடல்களைத் தமிழகத்தில் முணுமுணுக்காத வாய்கள் குறைவு. முக்கியமாக, ஆப்பிள் பெண்ணே பாடலில் நாயகி பூமிகா அமைதியாக உணர்ச்சிகளைக் கடத்த தன் காதலை ஸ்ரீகாந்த் பாவனைகளுடன் முன்வைக்கும் அனைத்துக் காட்சிகளும் அவருக்கான ரசிகைகள் படையையே உருவாக்கிக் கொடுத்தது.

முதல் படம் நல்ல ஹிட் என்பதால் அடுத்தடுத்து ஸ்ரீகாந்துக்கு வாய்ப்புகள் வரத் துவங்கின. மனசெல்லாம், பார்த்திபன் கனவு என தொடர்ந்து சில வெற்றிப்படங்கள் அமைய, தமிழ் சினிமாவின் வெற்றிகரமான இரண்டாம் தர நடிகர்கள் பட்டியலுக்குள் நுழைந்தார்.

: போதைப் பொருள் வழக்கு: நடிகா் ஸ்ரீகாந்த் கைது

ஸ்ரீகாந்த்தை வைத்து படம் இயக்கினால் ரசிகர்கள் வருவார்கள் என்கிற நிலை உருவானதால் பெரிய தயாரிப்பு நிறுவனங்களும் அவரைத் தேடிச் சென்றன. ஜூட் (2004), பம்பரக் கண்ணாலே (2005) ஆகிய படங்களும் வெற்றியைப் பெற்றதால் திரைத்துறைக்கு அறிமுகமான சில ஆண்டுகளிலேயே பெரிதாகப் பேசப்பட்டார்.

எல்லா மனிதர்களும் தங்களின் மோசமான காலகட்டத்தைச் சந்திக்க வேண்டும் என்பதுபோல, ஸ்ரீகாந்த் 2007 இல், தனது காதலி வந்தனாவை ஏமாற்றியதாக சர்ச்சையில் சிக்கினார். ஸ்ரீகாந்த் தன்னை திருமணம் செய்து கொள்ள மறுத்ததாக வந்தனா புகார் அளித்து சட்டப் போராட்டத்தை மேற்கொண்டது தமிழகத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. காதலித்துவிட்டு ஸ்ரீகாந்த் ஏமாற்றியதாக விவாதம் மாறியதால் இந்த விவகாரம் அவரது பிம்பத்தைக் கடுமையாக பாதித்ததுடன் சினிமா வாய்ப்புகளையும் குறைத்தது.

தொடர்ந்து, ஸ்ரீகாந்த் வந்தனாவை திருமணம் செய்து கொண்டு அடுத்தடுத்த ஆண்டுகளில் சில படங்களில் நடித்தார். ஆனால், எதுவும் அவருக்கு வெற்றிப்படமாக மாறவில்லை. விஜய், அஜித், சூர்யா, ஸ்ரீகாந்த் என அமைந்திருக்க வேண்டிய வரிசை, அந்த சர்ச்சை சமாச்சாரங்களால் முற்றிலும் மாறியது.

நண்பன் படத்தில் விஜய்யுடன் ஸ்ரீகாந்த்.
காத்திருந்து, காத்திருந்து 2012 ஆம் ஆண்டில் நண்பன் படத்தில் நடிகர் விஜய்யுடன் இணைந்து வெற்றியைப் பெற்றார். ஆனால், அந்த வெற்றி ஸ்ரீகாந்த்துக்கு பெரிய மாற்றத்தைக் கொடுக்கவில்லை.

ஆனாலும், ஸ்ரீகாந்துக்கு இன்றும் வாய்ப்புகள் இருக்கின்றன. ஆண்டிற்கு ஒரு படத்திலாவது நடித்து விடுகிறார். அவை வெற்றி பெறவில்லை என்றாலும் தன் சம்பளத்தைக் குறைத்துக்கொண்டு புதிய படங்களில் ஒப்பந்தமாகிறார்.

நிலைமை இப்படியிருக்க, இப்போது சந்திக்கக் கூடாத சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். போதைப்பொருள் பயன்படுத்தியதாகக் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்ட ஸ்ரீகாந்த் தான் கொகைன் போதைப்பொருளைப் பயன்படுத்தியதை ஒப்புக்கொண்டதுடன் தன் மகனின் நிலையைக் கூறி ஜாமீன் மனு கோரியிருக்கிறார்.

குடும்பப் பிரச்னை காரணமாக மன அழுத்தத்தில் இருந்ததால் தொடர்ந்து போதைப்பொருளைப் பயன்படுத்தியதாகவும் கூறியிருக்கிறார்.

சினிமாவில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக நாயகனாக நடித்துவரும் ஸ்ரீகாந்த் இப்படி போதைப்பொருள் வழக்கில் சிக்கியது பலரிடமும் கோபத்தை ஏற்படுத்தியதுடன் அவர் மீதான பார்வையையும் மாற்றியிருக்கிறது. வந்தனாவுடனான சர்ச்சையில் சினிமா அவருக்கு மீண்டும் வாய்ப்பை வழங்கியது. சரியான கதைகளைத் தேர்ந்தெடுக்க முடியாமல், தன்னுடைய பலமான குடும்ப & காதல் கதைகளில் முழு கவனத்தைச் செலுத்தாமல் ஆக்சன்களை நம்பியது உள்பட சில தவறுகளை ஸ்ரீகாந்த் செய்ததால் அவருக்கான இடம் அமையாமல் போனது.

ஆனால், இம்முறை போதைக்கடத்தல் வழக்கில் சிக்கியுள்ளார். அவர் மீதான பார்வைகள் கடுமையாக மாறியிருக்கும். ஸ்ரீகாந்த்தை வைத்து படம் இயக்கினால் சில எதிர்மறையான விமர்சனங்களைச் சந்திக்க வேண்டுமே என தயாரிப்பாளர்கள் பின் வாங்கலாம். முறையான வாய்ப்புகள் அமையுமா உள்பட நிறைய கேள்விகளை இனி ஸ்ரீகாந்த் எதிர்கொள்ள வேண்டிவரும். தமிழ் சினிமாவில் மிகப்பெரிய நட்சத்திரமாக வந்திருக்க வேண்டிய பலரும் தங்களின் தீய பழக்கங்களால் அந்த வாய்ப்புகளைக் கெடுத்துக்கொண்டனர். அந்த வரிசையில் ஸ்ரீகாந்த், 'நான் போதைப்பொருளுக்கு அடிமையாகிவிட்டேன்" எனக் கூறியிருப்பது அவருடைய ரசிகர்களிடம் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

1994 ஏப்ரல் 14 ல் வெளிவந்த ஹானஸ்ட் ராஜ் கேப்டனுக்கு 114 வது திரைப்படம்.     T.G.தியாகராஜன் தயாரிப்பில் இப்படத்தின் இயக்க...
19/06/2025

1994 ஏப்ரல் 14 ல் வெளிவந்த ஹானஸ்ட் ராஜ் கேப்டனுக்கு 114 வது திரைப்படம்.

T.G.தியாகராஜன் தயாரிப்பில் இப்படத்தின் இயக்குனர் K.S.ரவி.
இசை இளையராஜா .

நம்பிக்கை துரோகியான நண்பன் வேடத்தில் தேவன் நடித்திருந்தார் . ஆம்னி ஜோடியாக நடித்தார். மேலும் கவுதமி, செந்தில் மனோரமா, நிழல்கள் ரவி, விஜயகுமார், பொன்னம்பலம், அஜய் ரத்னம் மற்றும் பலர் நடித்துள்ளனர்

ஆனஸ்ட் ராஜ் எனும் நேர்மையான போலீஸ் அதிகாரியாக நடித்திருப்பார் கேப்டன். இப்படத்தில் வானில் விடிவெள்ளி பாடல் அற்புதமான மெலடி.
ராக்கி ராஜேஷ் அருமையாக சண்டைக் காட்சிகள் அமைத்திருந்தார். படம் 100 நாள் ஓடிய வெற்றி படமாக அமைந்தது


முதல் நாள் படப்பிடிப்பு... சட்டையைப் பிடிச்ச விஜயகாந்த்... நடிகர் தகவல்!50 க்கும் மேற்பட்ட படங்களில் உதவி இயக்குனர். பின...
31/05/2025

முதல் நாள் படப்பிடிப்பு... சட்டையைப் பிடிச்ச விஜயகாந்த்... நடிகர் தகவல்!

50 க்கும் மேற்பட்ட படங்களில் உதவி இயக்குனர். பின்னணி குரல் கலைஞர், நடிகர் என பன்முகத்திறன் கொண்டவர் அண்ணாத்துரை கண்ணதாசன். இவர் கவியரசர் கண்ணதாசனின் மகன். இவர் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் தனது சினிமா உலக அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார். என்ன சொல்றாருன்னு பாருங்க.

தேவராஜ் மோகன், ராபர்ட் ராஜசேகரன், கேயார் ஆகிய இயக்குனர்களின் படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்தேன். கேயார் எங்கிட்ட ஒரு நாள் நான் மீட்டிங் போறேன். நீ சூட்டிங் ஆரம்பி. நான் இடையில வந்து ஜாய்ன் பண்ணிக்கிறேன்னு சொன்னார். நான் விக் மட்டும் கொஞ்சம் பார்த்துக்கறேன்னு சொன்னேன்.

பார்த்துக்கலாம்னு சொல்லிட்டுப் போயிட்டார். அது விஜயகாந்த் படம். கொஞ்சநேரத்துல நீக்ரோஸ் வச்சிருக்குற மாதிரி பெரிய விக்கை வச்சிட்டு நடந்துட்டு வர்றாரு. ஏன் சார் இப்போ வந்தீங்கன்னு கேட்டேன். அந்த காஸ்டியூமர்தான் போய் காட்டிட்டு வந்துருன்னு சொன்னாரு. அப்புறம் விக்கை மாத்திட்டோம். ரொம்ப இன்னோசென்ட். நான் பார்த்த நடிகர்லயே எந்த கேள்வியும் கேட்க மாட்டாரு. சொல்றதைக் கேட்டுக்குவாரு.

விஜயகாந்த் எங்கிட்ட முதல் அறிமுகமே எங்கிட்ட வந்து என் சட்டைக் காலரை இரண்டையும் ப்ரண்ட்லியாகப் பிடித்துக் கொண்டு 'அண்ணாத்துரை சார் எந்த வருஷம் பிறந்தீங்கன்னு சொல்லுங்க'ன்னாரு. நான் வருஷத்தைச் சொன்னேன். என்னை விட சீனியர்னு நினைச்சிக்கிட்டு அப்படிக் கேட்டாரு.

சொன்னதும் 'ஏய் போடா. போய் வேலையைப் பாரு'ன்னு சொல்லிட்டாரு. ஏன்னா நான் நாலஞ்சு வயசு சின்னவன். ரொம்ப தங்கமான கேரக்டர் விஜயகாந்த். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

கேயார் விஜயகாந்தை வைத்து அலெக்சாண்டர், தர்மா ஆகிய இரு படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அலெக்சாண்டர் 96லும், தர்மா 98லும் ரிலீஸ் ஆனது. இவற்றில் அலெக்ஸாண்டர் படத்தின்போது தான் அண்ணாத்துரை கண்ணதாசன் சொன்ன நிகழ்வு நடந்து இருக்கலாம் என தெரிகிறது.

பார்த்தேன் ரசித்தேன் சரண் இயக்கத்தில் வந்த ஒரு வித்யாசமான படம். சிம்ரனின் நடிப்பு இப்படத்தில் ரொம்பவும் நன்றாக இருந்தது....
09/05/2025

பார்த்தேன் ரசித்தேன் சரண் இயக்கத்தில் வந்த ஒரு வித்யாசமான படம். சிம்ரனின் நடிப்பு இப்படத்தில் ரொம்பவும் நன்றாக இருந்தது.

தன் நெருங்கிய நண்பர் தன்னிடம் நட்பாக இல்லாது தன்னை விரும்பாது வேறு பெண்ணை விரும்புகிறார் என்ற கோபத்தில் சிம்ரன் செய்யும் அதிரடி வில்லத்தனங்கள் தான் கதை.

செரின் மூவி மேக்கர்ஸ் தயாரித்த இந்த படம் 2000ம் ஆண்டு வெளிவந்தது. பரத்வாஜ் இசையமைத்திருந்தார்.

பிரசாந்த், லைலா, சிம்ரன் நடித்த இந்த படம் 100 நாட்கள் ஓடியது மட்டுமல்லாமல் தெலுங்கு கன்னடத்தில் ரீமேக் செய்யப்பட்டது, கன்னடத்தில் படம் எடுக்கப்பட்டாலும் ஏதோ சில காரணங்களால் படம் ரிலீசாகவில்லை.

1981 இல் வெளிவந்த திரைப்படம் கோயில் புறா. இந்த படத்தில் சங்கர், சரிதா மற்றும் பலரானோர் நடித்தனர்.இப்படத்தின் கதையை எழுதி...
06/05/2025

1981 இல் வெளிவந்த திரைப்படம் கோயில் புறா. இந்த படத்தில் சங்கர், சரிதா மற்றும் பலரானோர் நடித்தனர்.இப்படத்தின் கதையை எழுதியது நடிகர் வினுசக்கரவர்த்தி அவர்கள்.

இசைஞானி இளையராஜா இசையமைத்த இந்த படத்தில் பாடல்கள் நன்றாக இருந்தன.குறிப்பாக வேதம் நீ, இனிய நாதம் நீ என்ற பாடல் மிக நன்றாக இருந்தது. பாடல் கர்நாடக ராகமான கவுலா ராகத்தில் இசையமைக்கப்பட்டது.

படத்தின் பாடல்கள் எழுதியது புலவர் புலமைப்பித்தன் அவர்கள். படத்தில் இடம்பெற்ற இன்னொரு பாடலான அமுதே தமிழே அழகே மொழியே என்ற பாடலும் மிக நன்றாக இருந்தது.

1981 ஜூலை மாதம் இந்த படம் வெளிவந்தது.

சகோதர பாசத்தின் சின்ன-பெரிய வரலாறு: சின்ன தம்பி பெரிய தம்பி படப்பயணம்!தமிழ் சினிமாவில் சகோதர பாசத்தையும், குடும்ப பிணைப்...
27/04/2025

சகோதர பாசத்தின் சின்ன-பெரிய வரலாறு: சின்ன தம்பி பெரிய தம்பி படப்பயணம்!

தமிழ் சினிமாவில் சகோதர பாசத்தையும், குடும்ப பிணைப்புகளையும் அழகாகச் சொல்லிய படங்களில் "சின்ன தம்பி பெரிய தம்பி" (1987) ஒரு முக்கியமான இடத்தை பிடித்தது. இயக்குநர் மணிவண்ணன் இத்திரைப்படத்தை இயக்கி, பெரும் வரவேற்பைப் பெற்றார்.

படம் உருவான விதம்:

"சின்ன தம்பி பெரிய தம்பி" திரைப்படம், குடும்ப பாசத்தின் மீதான நம்பிக்கையையும், இரு சகோதரர்களுக்கிடையே நடக்கும் உணர்ச்சி மோதல்களையும் மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. இப்படத்தில் சத்யராஜ் மற்றும் பிரபு முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்தனர்.

கிராமத்து பின்னணியில் அவர்கள் வாழும் சூழல், குடும்ப உறவுகள், சண்டைகள் மற்றும் பாசம் ஆகியவை இயல்பாகக் காட்டப்பட்டது. மணிவண்ணன் தனக்கே உரிய நகைச்சுவை மற்றும் உணர்ச்சி கலவையுடன் இப்படத்தை உருவாக்கினார்.

சுவாரசிய சம்பவம்:

இத்திரைப்படத்திற்கு மணிவண்ணன் இசை அமைப்பதற்காக சிறந்த பாடல்களை தேர்ந்தெடுத்தார். குறிப்பிடத்தக்கது, "இளமை காலங்களில்" என்ற பாடலை முன்பே எழுதப்பட்ட ஒரு மெலடியை சிறு மாறுபாடுகளுடன் மாற்றி பயன்படுத்தியிருக்கிறார் என்ற ஒரு சுவாரசிய தகவல் ரசிகர்கள் மத்தியில் பரவியது. ஒரு காதல் என்பது என்ற அந்த பாடலை மட்டும் இசைஞானி இளையராஜா இசையமைத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், சத்யராஜ் மற்றும் பிரபு இருவரும் தங்களது நடிப்பாற்றலை கொண்டு இப்படத்தை சிறப்பித்தனர். இருவரின் நட்பு, பாசம், சண்டை ஆகிய அனைத்தும் நன்கு வெளிப்பட்டது. இவர்கள் இருவரும் உள்ளந்தோன்றலாக நடித்ததாலும், படம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

தொழில்நுட்பம் மற்றும் சிறப்புகள்:

இசை அமைப்பு: சங்கர் கணேஷ்.

திரைக்கதை மற்றும் இயக்கம்: மணிவண்ணன்.

நடிப்பு: சத்யராஜ் மற்றும் பிரபுவின் கலந்த நடிப்பு பாராட்டப்பட்டது.

உணர்ச்சி மற்றும் நகைச்சுவை கலவையில் சிறந்த படம்.

"சின்ன தம்பி பெரிய தம்பி" திரைப்படம் இன்று வரை சகோதர பாசத்தின் சிறந்த எடுத்துக்காட்டாக பார்க்கப்படுகிறது. தம்பி தம்பி இடையே நிலவும் பாசத்தை உணர்த்தும் அழகிய முயற்சியாக இத்திரைப்படம் என்றும் நினைவுகூரப்படும்.

உயிரிலே கலந்தது – காதலையும், தாய்மையையும் வாழ்த்தும் திரைப்படம்!சூர்யா - ஜோதிகா ஜோடியின் உணர்ச்சி கனிந்த படைப்பு"உயிரிலே...
26/04/2025

உயிரிலே கலந்தது – காதலையும், தாய்மையையும் வாழ்த்தும் திரைப்படம்!

சூர்யா - ஜோதிகா ஜோடியின் உணர்ச்சி கனிந்த படைப்பு

"உயிரிலே கலந்தது" 2000 ஆம் ஆண்டு வெளியான ஒரு தமிழ்த் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தை இயக்கியவர் கே.ஆர். ஜெயா மற்றும் தயாரிப்பாளர் எம்.ஏ. சிவகுமார். இத்திரைப்படம் காதல், தாய் மகன் பாச உறவு மற்றும் சகோதர அன்பு ஆகியவற்றின் நுட்பமான உணர்வுகளை அழகாக சித்தரிக்கிறது.

கதைக்குறிப்பு:

திரைப்படத்தில், சூர்யா "சுரேஷ்" என்ற கதாபாத்திரத்தில் தன் தாயுடன் கொண்ட பாசத்தின் முக்கியத்துவத்தையும், தனது காதலான ஜோதிகாவைத் (ப்ரியா) எதிர்த்து தன் குடும்ப பாசத்திற்கும் இடையில் ஏற்பட்ட மனஅழுத்தங்களையும் வெளிப்படுத்துகிறார். ரகுவரன் முக்கியமான கதாபாத்திரத்தில் இந்த திரைப்படத்தில் நடிக்க, அவரது சிறந்த நடிப்பும் பாராட்டுப் பெற்றது.

கதை சுருக்கமாக:

தாயின் ஆசைகள்,

மகனின் காதல் வாழ்க்கை,

குடும்பத்தில் உருவாகும் நுணுக்கமான மோதல்கள் இவை அனைத்தையும் உணர்ச்சி பூர்வமாக காட்சிப்படுத்துகிறது.

முக்கிய நடிகர்கள்:

சூர்யா – சுரேஷ்

ஜோதிகா – ப்ரியா

சின்னி ஜெயந்த், ரகுவரன், ராம்ஜி, சிவகுமார், வையாபுரி ஆகியோரும் சிறப்பான விருந்தினராக நடித்துள்ளனர்.

இசை மற்றும் பாடல்கள்:

இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் தேவா. பாடல்களின் வரிகளை வைரமுத்து, கலைக்குமார் மற்றும் கே. சுபாஷ் எழுதினர். ஒவ்வொரு பாடலும் கதையின் நகர்வுடன் அமைந்துள்ளன.

பிரபலமான பாடல்கள்:

"சாய்ந்தாடு கண்ணே" – எஸ்.பி.பி

"உயிரே உயிரே அழைத்ததென்ன" – ஹரிஹரன், சுஜாதா

"தேவ தேவ தேவதையே" – ஹரிஹரன், ஹரினி

"Husaine Husaine" – சுக்விந்தர் சிங்

இந்த பாடல்கள் காதல் உணர்வை வலுப்படுத்தி, கதையின் ஓட்டத்தை முன்னேற்றுகின்றன.

விமர்சனங்கள் மற்றும் வரவேற்பு:

திரைப்படம் வெளிவந்த போது, ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக சூர்யா மற்றும் ஜோதிகாவின் நடிப்பு மிகவும் பேசப்பட்டது. தேவாவின் இசை மிகுந்த பாராட்டை பெற்றது. குடும்பப் பாங்கான மற்றும் காதல் கதைகள் விரும்பும் மக்களுக்கு இது மிகவும் பிடித்த படமாக அமைந்தது.

சிறப்பு அம்சங்கள்:

தாய்-மகன் பாசத்தின் உணர்ச்சி மூடிய காட்சி அமைப்புகள்

காதலின் அன்பும் குடும்பத்தின் பாசமும் இடையே நிகழும் குழப்பங்கள்

தேவாவின் மனம் கொள்ளை கொள்ளும் இசை

சூர்யா - ஜோதிகா ஜோடியின் ஆரம்ப கால இணைவு

மெல்ல பேசும் காதல்…! – ‘சின்ன பூவே மெல்ல பேசு’ தமிழ் சினிமாவின் மென்மையான காதல் கவிதைகளில் ஒன்று “சின்ன பூவே மெல்ல பேசு”...
25/04/2025

மெல்ல பேசும் காதல்…! – ‘சின்ன பூவே மெல்ல பேசு’

தமிழ் சினிமாவின் மென்மையான காதல் கவிதைகளில் ஒன்று “சின்ன பூவே மெல்ல பேசு”. 1987ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம், ராபர்ட் ராஜசேகர் இயக்கத்தில் உருவானது.

இத்திரைப்படத்தில் பிரபு, ராம்கி, நர்மதா, சுதா சந்திரன், சபிதா ஆனந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இப்படத்தில் இசையமைப்பாளராக எஸ் ஏ ராஜ்குமார் மற்றும் கதாநாயகன் ராம்கி அறிமுகமானவர்கள். நடிகை நர்மதாவும் இப்படத்தில் அறிமுகம்.

இளமையின் இரு பக்கங்கள் – கதைசுருக்கம்:

இந்த திரைப்படம், இரண்டு இளைய காதலர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு, காதலில் ஏற்படும் மாறுபாடுகள், குறைபாடுகள் மற்றும் சமூகக் கோணங்களை அழுத்தமாக சித்தரிக்கிறது.

பிரபு ஒரு மென்மையான காதலன். அவனது நட்பு, கண்ணியம், உணர்ச்சி என்பவை ரசிகர்களின் மனதில் உறைந்துபோனவை. மற்றொரு புறம், ராம்கி ஒரு எழுச்சியான இளைஞர். இரண்டு காதல் கோணங்கள், ஒரு பெண் மற்றும் ஒரு குழப்பமான சூழ்நிலை – இதுதான் இந்தக் கதையின் களம். காதலின் உண்மை அர்த்தம் என்ன? வெறும் ஆசையா? அல்லது உறுதியா? என்பதை திரைப்படம் நன்கு எடுத்துக்காட்டுகிறது.

இசை

எஸ்.ஏ ராஜ்குமார் இசை இந்த திரைப்படத்திற்கே ஒரு தனி உயிர் கொடுத்தது. "சின்ன பூவே மெல்ல பேசு" என்ற தலைப்பு பாடல் மட்டுமல்ல, “காதல் ஒரு பூவா…?”, “வானம்பாடி பாடுது...” போன்ற பாடல்கள், இன்றும் காதலர்களின் பிளேலிஸ்ட்களில் இடம்பிடித்திருக்கின்றன.

பிரபுவின் நிஜமான காதலன் முகம்:

இப்படத்தில் பிரபு மிக அழகாக ஒரு காதலனாக நடித்துள்ளார். அவரது பார்வை, மென்மையான நடிப்பு, உணர்ச்சி நிறைந்த உரையாடல்கள், அவரை அந்தக் காலத்தில் ரொமான்ஸ் ஹீரோக்களுள் முக்கிய இடத்திற்கு எடுத்துச் சென்றது.

ராம்கியின் நவீன காதலனான கவர்ச்சி:

இப்படத்தில் ராம்கி கொஞ்சம் அட்டகாசமாகவும், கொஞ்சம் உணர்ச்சிபூர்வமாகவும் நடித்தார். புதிய தலைமுறையை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், காதலின் வேறுபட்ட பார்வையை அவர் நன்றாகப் பதிவு செய்தார்.

முடிவில்...

“சின்ன பூவே மெல்ல பேசு” என்பது, காதலைச் சொல்லுவதற்கான ஒரு மென்மையான உரை. சண்டை சத்தம் இல்லாத, உணர்வும் இசையும் கலந்த ஒரு இயற்கை கலை. தமிழில் காதல் படம் என்றாலே, இது முதலில் சொல்லப்பட வேண்டிய பெயர்தான்.

சிம்பு ஆரம்ப காலத்தில் நடித்த படங்கள் எல்லாம் பெரிய வரவேற்பு பெறவில்லை. ஏனென்றால் சிம்புவை, சிறுவயதில் இருந்து பார்த்து ...
24/04/2025

சிம்பு ஆரம்ப காலத்தில் நடித்த படங்கள் எல்லாம் பெரிய வரவேற்பு பெறவில்லை. ஏனென்றால் சிம்புவை, சிறுவயதில் இருந்து பார்த்து ரசித்த மக்கள், அவர் ஹீரோவாக வந்த பிறகு பேசும் அதிகப்படியான பஞ்ச் டயலாக்குகள் இது போன்றவற்றை வயதுக்கு மீறிய தன்மையாக பார்த்தனர். அவரின் ஒரே மாதிரியான குத்துப்பாட்டு கொண்ட படங்கள், கவர்ச்சி அதிகம் கொண்ட படங்கள் இந்த ஃபார்முலா எல்லாம் சிம்பு படத்தில் தொடர்ந்து இருந்தது, இதெல்லாம் அவர் ரசிகர்களை மட்டும் தான் கவர்ந்திருந்தது மக்களை கவரவில்லை.

சிம்புவை அனைத்து தரப்புக்கும் பிடிக்கும் நடிகராக மாற்றியது இயக்குனர் ஹரிதான் அவர் இயக்கிய கோவில் திரைப்படத்தில் தான் சிம்புவை எல்லோருக்கும் பிடித்த ஒரு நாயகராக அவர் மாற்றினார் அதன் பிறகு தான் சிம்பு எல்லோருக்கும் பிடித்த ஒரு நடிகரானார்.

Address

Chennai

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kowsalya Tamizhachi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share