19/07/2024
Contemporary கவிஞர் வாலி♥️
‘Mr.ரோமியோ’ படம் 1996ம் ஆண்டு நவம்பர் மாதம் வெளியானது. ரஹ்மான் மலேசியா வாசுதேவனும் நாகூர் முகமது அலியும் இணைந்து பாடிய ‘மோனாலிசா’ பாடல் மலேசியா வாசுதேவனுக்கு மிகவும் வித்தியாசமானதொரு பாடல். பாடலும் செம துள்ளல் ரகம்.
இந்தப் பாடலில் வரும் வரிகள்.
“Atlanta Olympics தான்
முடிந்தால் என்ன
அன்பே நம் love games
முடியாதம்மா”
1996ம் ஆண்டு ஒலிம்பிக்ஸ் போட்டிகள் July 19 தொடங்கி ஆகஸ்ட் 4 வரை நடந்தது.
“சார்லசும் டயானாவும்
பிரிந்தால் என்ன
நாளை நம் love என்றும்
பிரியாதம்மா”
உலகமே அறிந்த இங்கிலாந்து அரச குடும்பத்தின் திருமணம் சார்லஸ்-டயானா திருமணம். அந்தத் திருமணத்தைப் போலவே அவர்களது விவாகரத்தும் பரபரப்பாக பேசப்பட்டது. பின்னர் டயானா கார் விபத்தில் மர்மமாக உயிரிழந்தது உலகை உலுக்கிய பெருந்துயர். சார்லஸ்-டயானா இருவரும் முறைப்படி விவாகரத்து பெற்ற நாள் 28 ஆகஸ்ட் 1996.
“நீ போதும் நான் வாழ
உற்சாகமா
அந்த ஹார்லிக்ஸ்சும் காம்ப்ளானும்
வேண்டாம் அம்மா”
90களில் பிரபலமடைந்த Horlicks, Complan
“விம்பிள்டன் போல் எந்தன் நெஞ்சில் வந்து
நித்தம் விளையாடிடும்
சின்ன டென்னிஸ் பந்து”
1996ல் Wimbledon’s tennis championship போட்டிகள் 24 ஜூன் முதல் 7 ஜூலை வரை நடைபெற்றது.
“காதல் கிரிக்கெட்டிலே
பௌலிங் நீ போடடி
அந்த டெண்டுல்கர் போல்
சிக்ஸர் அடிப்பேனடி”
1996 கிரிக்கெட் உலகக்கோப்பையில் சச்சின் 523 ரன்கள் எடுத்து Man of the tournament பெற்றிருந்தார்.
“வாடி வாடி எந்தன் கிலக்சோ பேபி
என்னை நீங்கி போனால்
ஏறும் எந்தன் பிபீ”
90களில் பிரபலமான Glaxo baby.
ஒரு பாடலுக்குள் எத்தனை எத்தனை விஷயங்கள்.
புதுப்பித்துக்கொள்ளுதல் என்பது softwareகளுக்கு மாத்திரம் அல்ல. கலைஞர்களுக்கும் முக்கியமானது.
சமாகலத்துக்கு ஏற்றார்போல யார் அப்படிச் செய்தாலும் அவர்களுக்கு வெற்றியையும் புகழையும் தமிழ் ரசிகர்கள் கொடுத்துக்கொண்டே இருப்பார்கள்.
அப்படி வெற்றி சிம்மாசனத்தில் இந்தப்பாடலை எழுதியது “அமரர் வாலி” ♥️
(இப்படி உதாரணமாகச் சொல்ல பலப்பல பாடல்கள் இருக்கின்றன. ஒரு சோற்றுப்பதமாக இந்தப் பாடல்)