Pothigai Express

Pothigai Express பொதிகை எக்ஸ்பிரஸ் பல்சுவை வார இதழ். Nil

14/09/2025

செங்கோட்டை பார்டரில் உள்ள மரக்கடை ஒன்றில் நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்து...!!!

12/09/2025

கன்னியாகுமரி ரயில் நிலையம் அருகே கிரேன் வாகனம் மோதியதில் கல்லூரி மாணவர் உள்ளிட்ட மூவர் பலியானதாக தகவல்.
கிரேன் ஆபரேட்டர் மதுபோதையில் இருந்ததால் விபத்து நடந்துள்ளதாக பொதுமக்கள் தகவல். போலீஸார் விசாரணை..

12/09/2025

பழைய குற்றாலம் சாலையில் நடமாடும் கரடி மற்றும் மிளா சுற்றுலா பயணிகள் மற்றும் வியாபாரிகள் கொட்டும் உணவு மற்றும் பழ கழிவுகளை உண்ண வன விலங்குகள் வருவதால் ஆபத்து...!!!

10/09/2025

கேரள மாநிலத்தில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு மின்னொளியில் ஜொலிக்கும் தென் இந்தியாவின் மிக பெரிய நீர்தேக்கமான தென்மலை அணையை ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டுகளித்து வருகின்றனர்...!!!

09/09/2025

கேரள மாநிலத்தில் கொண்டாடப்பட்ட நாராயண குரு ஜெயந்தி விழா ஊர்வலம்...!!!

08/09/2025

இறுதிக் கட்டத்தில் குற்றால சீசன்...!!!

குற்றால சீசன் காலம் என்பது ஜூன் 15 முதல் ஆகஸ்ட் 15 வரை ஆகிய 60 நாட்கள் என்பது தான் முழுமையான குற்றால சீசன் ஆகஸ்ட் 15 முதல் செப்டம்பர் இறுதி வரை ஓரளவு நீர்வரத்தை பொறுத்து சுற்றுலா பயணிகள் குற்றாலம் வந்து செல்வது வழக்கம் இந்த நிலையில் தற்போது மலைப் பகுதிகளில் மட்டுமே பொழிந்த மழையை வைத்து சீசன் ஆஹா ஓஹோ என பலர் சிலாகித்து வருகின்றனர் ஆனால் உண்மையிலேயே தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை அளவு என்பது மிகவும் குறைவாகவே இந்த ஆண்டு பொழிந்துள்ளது ஏதோ சிலரது சுயநலத்திற்காகவும் சிற்றின்பத்திற்காகவும் குற்றால சீசன் சிறப்பு அற்புதம் அருமை என புகழ்ந்தாலும் உண்மையான நிலவரம் மிக சுமாரான சீசன் என்பது நிதர்சனம்.

இதற்கு மிக எடுத்துக்காட்டாக தென்காசி மாவட்டத்தை ஒட்டிய கேரள மாநிலத்தின் கொல்லம் திருவனந்தபுரம் மாவட்டத்தின் மழை அளவுகளே ஆதாரம் ஏனென்றால் கேரள மாநிலத்தில் கொட்டி தீர்க்கும் கனமழையின் தாக்கம் தான் மேற்கு தொடர்ச்சி மலையால் தடுக்க பெற்று தென்மேற்கு பருவக்காற்று எனக் கூறக்கூடிய குளிர்ந்த காற்றுடன் வீசும் தென்றல் காற்றாய் மாறி சாரல் மழையுடன் கூடிய சீதோசன நிலை தான் குற்றால சீசன் என்பது பலருக்கு தெரியாத விஷயம்.

ஆனால் குற்றாலம் மற்றும் அதனை சுற்றிய கிராமவாசிகளுக்கு தெரியும் சீசன் ஆரம்பிப்பதற்கு முன்னால் இந்தப் பகுதியில் வீசும் காற்று எவ்வாறு இருக்கும் அந்த காற்றை வைத்து இந்த ஆண்டு சீசன் எவ்வாறு இருக்கும் என கணிக்கும் முன்னோர்களே அறிவியல் வல்லுநர்கள் என்பது நிதர்சனமான உண்மை...!!!

எது எப்படியோ குற்றாலம் வந்தவர்கள் மன மகிழ்வாய் சென்றால் நமக்கும் மன மகிழ்வு தான்...!!!

செங்கோட்டையன் கருத்துக்கு ஆதரவாக தென்காசியில் ஒலித்தது ஒன்றிணைவோம் குரல்...!!!
08/09/2025

செங்கோட்டையன் கருத்துக்கு ஆதரவாக தென்காசியில் ஒலித்தது ஒன்றிணைவோம் குரல்...!!!

அதிமுக ஒன்றிணைய வேண்டும் என தற்போது அதிமுக நிர்வாகிகளும் பலரும், தொண்டர்கள் பலரு...

07/09/2025

மேக்கரை அடவிநயினார் அனையை ஒட்டிய வனப்பகுதியில் திரியும் அபாயகரமான சிறுத்தை விபரீதம் தெரியாமல் விரட்டும் இளைஞர்கள்....!!!

06/09/2025

110 வது பிறந்தநாள் கொண்டாடிய மூதாட்டி...!!!

தென்காசி மாவட்டம் பாட்டாகுறிச்சி பகுதியைச் சேர்ந்த மூதாட்டி பூல்பாண்டியன் என்பவரது மனைவி வள்ளியம்மாள் என்பவருக்கு மகன் மகள் பேரன் பேத்தி பூட்டன் பூட்டி என 100க்கும் மேற்பட்ட ரத்த உறவுகள் சேர்ந்து வானவேடிக்கை தப்பாட்டம் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் கொண்டாடிய 110 வது பிறந்தநாள் விழா.‌.!!!

06/09/2025

ஓணம் பண்டிகை விடுமுறை குற்றாலத்தில் குவிந்த கேரள மாநில சுற்றுலா பயணிகள்...!!!

03/09/2025

வேட்டையாடிய மான் உடன் சிக்கி வேட்டையர்கள்...!!!

தென்காசி மாவட்டம் ஊத்துமலை அருகே மான் வேட்டை ஆடிய வேட்டையர்கள் இரண்டு பேர் மானை‌ கொன்று ஆட்டோவில் கடத்தும் போது காவல்துறையிடம் சிக்கிய வேட்டையர்கள்..

03/09/2025

கடையநல்லூர் நகராட்சியில் அகற்றப்பட்ட பிரதமர் மோடி படத்தை நகராட்சி கூட்டரங்கில் மீண்டும் வைக்க கோரி உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வரும் பாஜக கவுன்சிலர்கள்...!!!

Address

1/5, Haji Husan Complex, West Car Street
Tenkasi
627811

Alerts

Be the first to know and let us send you an email when Pothigai Express posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Pothigai Express:

Share

Category