Comedy News Tamil

Comedy News Tamil Hit the Follow button enjoy more fun😎

Summer holidays
17/04/2026

Summer holidays

07/04/2026

~ மரண தண்டனை வழங்கப்பட்ட ஒன்பது போலீஸ் அதில் ஒருவர் முத்துராஜா அவருடைய சக நண்பர் கல்லூரி தோழர் அவரைப்பற்றி ஒரு பதிவு போட்டிருக்கிறார் 👇

"சாத்தான்குளம் தந்தை மகன் காவல்நிலையத்தில் வைத்து கொலை செய்யப்பட்ட அரிதிலும் அரிதான வழக்கில் கைதான அனைவருக்கும் மிகப்பெரிய தண்டனையான மரண தண்டனை விதித்து மதுரை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதில் குற்றத்தில் தொடர்புடைய காவலர் முத்துராஜா அவரைப் பற்றி சொல்கிறேன்.

முத்துராஜா வேற யாரும் இல்லை, என்னுடன் டிப்ளோமா படித்த எனது நெருங்கிய நண்பன். நான் கல்லூரி விடுதியில் தங்கி படித்த போது முத்துராஜாவும் எங்களுடன் தான் தங்கி படித்தான். நண்பர்களுக்கு ஒன்று என்றால் உயிரையும் தருவான், எப்போதும் சிரித்த முக அழகன் போல தான் இருப்பான், ரொம்ப சத்தம் போட்டு மற்றவர்களிடம் பேச மாட்டான், கெட்ட வார்த்தை சிறிதும் உபயோகப்படுத்த மாட்டான், வகுப்பில் அதிகம் சேட்டை செய்யமாட்டான், இவனால் யாருக்கும் எந்த வகையிலும் தொல்லை இல்லை, சிறந்த கபடி விளையாட்டு வீரன், இவன் கபடியில் ரெய்டு பாடி வந்தால் எதிரணி வீரர்கள் நிலைகுலையும் அளவிற்கு மிகவும் சாமர்த்தியமாக விளையாடுவான், இப்படி இவனிடம் நாங்கள் அனைவரும் நல்ல குணத்தை மட்டுமே பார்த்தோம்.

ஆனால், அது தான் அவனுக்கு இப்போது வினையாகியுள்ளது. ஆமாம், தனது உற்றவர்கள் என்ன சொன்னாலும் முடியாது என்று சொல்ல மாட்டான். இப்படித்தான் இன்ஸ்பெக்டர் ஶ்ரீதர் அவர்களும் சக SI அதிகாரிகளும் கட்டளையிட்டவுடன் மற்ற காவலர்களுடன் இணைந்து இந்த மகா பாவ செயலை செய்துவிட்டான். அதற்கு தண்டனையாக ஒரு பெரும் அபராத தொகையுடன் மரண தண்டனையும் பெற்றுள்ளான்.

இதில் இருந்து நாம் அறிய வருவது என்னவென்றால், என்னதான் நமது மேலதிகாரிகளுக்கு நாம் விசுவாசமாக இருந்தாலும், அவர்களுக்கு என்று ஒரு பிரச்சனை வரும் போது நம்மைக் கண்டுகொள்ள மாட்டார்கள். அவர்களைப் பாதுகாத்துக்கொள்ள மட்டுமே பார்ப்பார்கள் அல்லது கடைநிலை ஊழியர்களை மாட்டிவிடப் பார்ப்பார்கள். இனியாவது அனைத்து அரசு ஊழியர்களும் தங்களது பொறுப்பை உணர்ந்து கடமையாற்றிட வேண்டும் என்ற விழிப்புணர்வு இந்த தண்டனை மூலம் அனைத்து அரசு அதிகாரிகளுக்கும் நிச்சயம் வரும்.

சாத்தான்குளம் ஜெயராஜ் மற்றும் பெனிக்ஸ் அவர்களின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். நல்லதொரு தீர்ப்பை வழங்கிய நீதிபதியின் நேர்மையைப் பாராட்டுகிறேன்.

~ பகிர்வு

Happy birthday 🎂 🥳
27/03/2026

Happy birthday 🎂 🥳

23/03/2026

*🌷🌷படித்துப்பாருங்கள் சிந்திப்பீர்கள்..🤔*
🌹பணக்காரனாகிவிட்டான் பாகன்.,
*🌹இன்னும் பிச்சையெடுக்கிறது யானை.*

🌷ஆணி குத்திய கால்களுடன்
*🌹செருப்பு தைக்கும் சிறுவன்*.

🌷சாதிச்சான்றிதழை சமர்ப்பித்துவிட்டு வகுப்புக்கு சென்றால் சிறுமி,, *
🌹பாடம் நடத்தினார் ஆசிரியர் சாதிகள் இல்லையடி பாப்பா.*

🌷சாவியை நான் தொலைத்துவிட்டு தண்டனையை *
🌹பூட்டுக்கு கொடுத்தேன்.*

🌷ஆடு ஆடுகிறது கோழி குதிக்கிறது ஒவ்வொருவர் *
🌹வீட்டின் குழம்பு சட்டியில்.*

🌷ஆயிரம் பெற்றோர்கள் இருந்தும்
முத்தமிட ஒரு குழந்தைக்கூடயில்லை
*🌹முதியோர் இல்லத்தில்.*

🌷அழைத்தக்குரலுக்கு ஓடி வர
ஆள் இல்லாத நெடுஞ்சாலை விபத்தில்,
உயிருக்குப்போராடி இறந்துக்கிடந்தார்
*🌹அவசர ஊர்தி ஓட்டுனர்.*

🌷எரிவாயு விலையேற்றத்தைக்கண்டித்து
எதிர்க்கட்சியினர் எரித்துவிட்டனர்*
🌹*ஏழைக்குடிசைகளை.*

🌷குங்குமம் வார இதழை
விரும்பிப்படிக்கும் வாசகி *
🌹விதவையானாள்.*

🌷பட்டினி சாவை எதிர்த்து
ஊர் மக்கள் இன்று *
🌹உண்ணாவிரதம்.*

🌷அதிக வலியெடுக்கிறபோது
"அம்மா" என்று கத்திவிடுகிறது
*🌹அனாதை குழந்தை.*

💜✨💜✨💜✨💜✨

😃😃😃😆
13/03/2026

😃😃😃😆

11/03/2026

1965 ஆம் ஆண்டு வெளிவந்த ஆயிரத்தில் ஒருவன் இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், ஜெயலலிதா, நம்பியார், நாகேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
B. R. பந்துலு இந்த படத்தை இயக்கியிருப்பார்.

இந்த படத்தின் ஒரு காட்சியில் நாயகிக்காக ஆசைப்பட்டு நம்பியார் எம். ஜி. ஆர்-ரிடம் வாக்குவாதம் செய்வார்.
அந்த காட்சியில் எம். ஜி. ஆர் பேசும் பன்ச் வசனங்கள் மிக அருமையாக எழுதப்பட்டு இருக்கும்….

NR: கேவலம் ஒரு பெண்ணுக்காக நட்பை கெடுத்து கொள்ளாதே…. யோசித்து சொல்….

MGR: யோசிக்கவேண்டியவன் நானல்ல அவளை யாசிப்பதை விடுங்கள்….

NR: உயிர் மீது உனக்கு ஆசை இல்லையா..??

MGR: இதே கேள்வியை நானும் கேட்கலாமா..?

NR: மோதுவது தான் உன் முடிவா…??

MGR: உங்களுக்கு அதைத்தவிர வேறு வழியில்லை என்றால் நான் தயார்.

NR: அவளை அடைந்தே தீருவேன்…

MGR: அது தான் நடக்காது…

NR: (கோவத்தோடு) என்னையே எதிர்க்க துணிந்து விட்டாய்.
மதம் கொண்ட யானை என்ன செய்யும் தெரியுமா..??

MGR: சினம் கொண்ட சிங்கத்துடன் தோற்று ஓடும்.

NR: தோல்வியே அடையாதவன் நான்.

MGR: தோல்வியை எதிரிகளுக்கு பரிசளித்தே பழகியவன் நான்.

NR: நாவை அடக்கு…. நான் உன் தலைவன்…

MGR: ஆனால் உங்கள் நடத்தை அப்படி இல்லையே.

இதன் பின்னர் கத்திச்சண்டை போட ஆரம்பித்து விடுவார்கள்.
இந்த படத்தின் பன்ச் வசனங்கள் காலம் கடந்து இன்றும் பலரால் ரசிக்கப்படுகிறது.
நானும் ரசிக்கிறேன்….

06/03/2026

Address

Tenkasi

Alerts

Be the first to know and let us send you an email when Comedy News Tamil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share