23/07/2025
அஸ்ஸலாமு அலைக்கும்
*ஏகத்துவ முஸ்லீம் ஜமாத் தஞ்சை(குடந்தை)* மாவட்டம் சார்பாக
எதிர்வரும்
தேதி :27/7/2025 அன்று குடந்தை தவ்ஹீத் மர்க்கஸ்ஸில் பட்டமளிப்பு விழா நிகழ்ச்சி நடைப்பெற உள்ளது இதற்காக பெரும் பொருளாதாரம் தேவைப்பட்டநிலையில் மக்களிடையே அறிவிப்பு செய்யப்பட்டது இந்த செய்தியினை அறிந்த பத்தாம் வகுப்பு மாணவி (அய்யம்பேட்டை தனியார் பள்ளியில்) கல்விகற்றுவரும் மானவி தாமாக முன்வந்து தன் உண்டியல் பணத்தை நன்கொடையாக நிகழ்ச்சிக்காக வழங்கினார்...
மாஷா அல்லாஹ்...
மேலும் இச்சிறுமிக்கு இறைவன் உலகத்தோடு உறுதியான மார்க்ககல்வியை வழங்கவேண்டும் என ஏக இறைவனை பிரார்த்தனை செய்வோம்
இன்ஷா அல்லாஹ்
18. தர்மம் செய்யும் ஆண்களுக்கும், பெண்களுக்கும், அல்லாஹ்வுக்கு அழகிய கடன் கொடுத்தோருக்கும் பன்மடங்காகக் கொடுக்கப்படும். அவர்களுக்கு மதிப்புமிக்க கூலி உண்டு.
திருக்குர்ஆன் 57:18