30/10/2024
நரகாசுரனை கொன்றது யார் ?
கிருஷ்ணர் தான் நரகாசுரனைக் கொன்றார் என்று சொல்கிறோம். ஆனால், உண்மையில் கிருஷ்ணரின் மனைவி சத்ய பாமாவே நரகாசுரனைக் கொன்றாள். பெற்ற தாயின் கையால் மட்டுமே சாவேன் என்பது நரகாசுரன் பெற்ற வரம்.
பூமாதேவியே அவனது தாய். அவள் திருமாலின் அவதாரங்களில் ஒன்றான கிருஷ்ணரின் மனைவியாக சத்யபாமா என்ற பெயரில் பூலோகத்தில் வாழ்ந்தாள்.
நரகாசுரன் தான் தன் பிள்ளை என்ற விஷயம் அவளுக்குத் தெரியாது. தெரியாமலேயே கிருஷ்ணனின் லீலையால் அவனைக் கொன்று விட்டாள்.
அது எப்படி என்றால் நரகாசுரன் கிருஷ்ணருடன் போரிட்டபோது, தேருக்கு சாரதியாக அவரது மனைவி சத்தியபாமா சென்றாள். போரின் போது, கிருஷ்ணர் மயங்கி விழுந்ததைப் போல நடித்தார்.
இதனை கண்டு பதறிய சத்தியபாமா நரகாசுரனால் கிருஷ்ணருக்கு ஆபத்து ஏற்படுமோ என அஞ்சி அவன் மீது அம்பினைத் தொடுத்தாள். பெற்ற வரத்தின் படி அவன் உயிர் துறந்தான்.
பின்னர், உண்மையறிந்து கிருஷ்ணனிடம், தன் மகனின் இறப்பை உலகமே கோலாகலமாகக் கொண்டாடுவதால், அந்நாளில் அதிகாலை வேளையில் எண்ணெய் தேய்த்து, வெந்நீரில் குளிக்க வரம் பெற்றாள்.
பிள்ளையை பறிகொடுத்த வேளையிலும், மக்கள் நலம் பேணிய தியாகவதி அவள். தன் பிள்ளையைப் போல், இன்னொரு பிள்ளை யாருக்கும் பிறக்கக் கூடாது என்றும் அவள் இறைவனிடம் பிரார்த்தித்தாள்.
தீபாவளியன்று பாமா ருக்மணி சமேத கிருஷ்ணரை வழிபாடு செய்ய வேண்டும்.
Who killed Narakasuran?
We often say that Krishna killed Narakasuran, but in reality, it was Krishna's wife, Satyabhama, who killed him. Narakasuran had obtained a boon that he would only die at the hands of his mother. His mother, Bhumadevi, was reborn as Satyabhama, Krishna's wife, in the mortal world.
Unbeknownst to her, she killed her own son during Krishna's battle with Narakasuran. Satyabhama drove the chariot during the battle, and when Krishna pretended to faint, she mistakenly killed Narakasuran with an arrow, fulfilling the boon.
After learning the truth, Satyabhama requested Krishna to grant her a boon to bathe in warm water and oil on the day of her son's death, which became a celebration.
Satyabhama also prayed that no other mother should lose her child, and thus, we worship Bama Rukmini, along with Krishna, on Diwali day.