29/06/2023
Meditation Benefits › தியானத்தின் பயன்கள்
தினசரி வாழ்வில் தியானம் ஜீரணம் கொண்டு, அண்ட விழிப்புணர்வு என்று அழைக்கப் படும் விழிப்புணர்வின் ஐந்தாவது நிலை பிறக்கின்றது இந்த நிலை - தன்னையே பிரபஞ்சத்தின் பகுதியாக உணர வைப்பதாகும்..
உங்களை உலகின் ஒரு பகுதியாக உணரும் போது, , உலகம் மற்றும் உங்களிடையே அன்பு வலுவாக பாய்கிறது. இந்த அன்பு வாழ்க்கையில் உங்களை எதிர்க்கும் சக்திகளை மற்றும் தொல்லைகளைத் தாங்க வலுவூட்டுகிறது.. கோபம் மற்றும் ஏமாற்றம் இவை, தோன்றினாலும் உடனேயே மறைந்து விடும்.
அறிவு, தெளிவு புரிதல் ஆகியவை சங்கமிக்கும் வாழ்க்கை முழுமை யாகின்றது.. நீங்கள் உயர்ந்த விழிப்புணர்வு நிலையில் வளரும்போது, நீங்கள் இன்னும் அழகாக ஆனால் வலுவாக - வாழ்க்கையில் பல்வேறு மதிப்புக் களைக் கையாளும் திறனுடைய, மென்மையான மற்றும் அழகாக மலர்வீர்கள்.
எவ்வாறு பலன்களை அடைவது
தியானத்தின் பலன்களை அனுபவிக்க, வழக்கமான சீரான பயிற்சி அவசியம். அது ஒவ்வொரு நாளும் ஒரு சில நிமிடங்கள் மட்டுமே எடுக்கிறது. ஒருமுறை தினசரி உள்ளெடுக்கப்படுவதன் மூலம் , தியானம் உங்கள் நாளின் ஒரு சிறந்த பகுதியாக மாறும்!
தியானம் ஒரு விதையைப் போன்றது. நீங்கள் அன்புடன் ஒரு விதையை விதைக்கும் போது, அதிகமாக பூக்கள் தோன்றுகிறது. அதே போல், விழிப்புணர்வு மரக்கன்று உங்களுக்குள் இருக்கிறது. அது எளிய தியான முறைககளின் மூலம் செழித்து வளர வேண்டும். சில பனை மரங்கள் மூன்று ஆண்டுகளில் வேறு சில பத்து ஆண்டுகளில்,பயன் தரும். பராமரிக்கப் படாதவை ஒருபோதும் பயன் தராது. அவைகள் வெறுமனே இருக்கின்றன.
அனைத்து பின்னணியில் இருந்தும் மக்கள் நன்றியுடன் ஒவ்வொரு நாளும் பணியில் இடை நிறுத்தி, சில நிமிடங்கள் தியானம் செய்து ஒரு புத்துணர்ச்சி அனுபவிக்கின்றார்கள்.. உங்கள் வாழ்க்கையை வளப்படுத்த. ஆழ்ந்து மூழ்க உங்களையும் அழைக்கிறோம்