27/06/2025
ஆட்டோகாரங்களோட கஷ்டத்தை யாரும் புரிஞ்சுக்க மாட்றாங்க. சரிதான் ஆட்டோகாரங்க நடுத்தர குடும்பத்தின் கஷ்டத்தை என்னைக்காவது புரிஞ்சுக்குறீங்களா?
என்னடா இப்படி சொல்றானேனு தப்பா எடுத்துக்கிட்டாலும் பரவாயில்ல. நடுத்தர மக்கள் ஆத்திரம் அவசரம்னா அவங்க நம்பி ஏறுற ஒரே வாகனம் ஆட்டோதான். அந்த ஆட்டோ நியாயமான விலையில நடுத்தர மக்களுக்கு கிடைக்குதானு கேட்டா இல்லை என்பதுதான் உண்மை.
திருவெறும்பூர்ல இருந்து திருச்சி பஸ் ஸடாண்ட் 15 கிமீ கொஞ்சம் பெரிய பேக் அப்புறம் ஒரு வயதான நபருடன் பயணம் செய்வதால் பஸ்ல கொஞ்சம் சிரமமாக இருக்கும். அதனால ஆட்டோல போகலாம்னு முடிவு பண்ணுனேன்.
எதுக்குப்பா இந்த விளக்கம்னு கேட்டீங்கனா இவ்வளவு விளக்கமா சொல்லியும் இவரு பெரிய ரிச் 🐛🔥 பஸ்தான் அடிக்கடி இருக்குல ஆட்டோல எதுக்கு போகனும்னு கடிச்சு வைக்க ஒரு குரூப் வரும். நம்ம எந்த சூழ்நிலையில் பயணம் பண்றோம்னு புரியாத ஜென்மங்கள். அதை விடுங்க நம்ம கதைக்கு வருவோம்.
ஒரு ஆட்டோக்காரர்கிட்ட போக எவ்வளவு ஆகும்னு கேட்டேன் 400 ரூபாய் சொன்னாரு. என்னண்ணே 400 சொல்றீங்கனு கேட்டா தம்பி ரிட்டர்ன் சும்மாதான் வரனும்னாரு. இந்த கதையை கிராமத்துல சொன்னா பரவாயில்ல. பாவம் திருச்சி பஸ் ஸ்டாண்ட்ல ஆளே கிடைக்காது ரைட்டுதான். ரொம்ப நேரம் பேச்சு வார்த்தைக்கு அப்புறம் 350 க்கு வந்தாரு. எனக்கு அதுவும் கட்டுபடி ஆகல.
இருக்கவே இருக்கு நம்ம ஓலா சட்டுனு போனை எடுத்து டக்குனு புக் பண்ணுனா 206 ரூபாய் தான். ஆப்ல இருக்க ஆட்டோ அண்ணனுக்கு போன் பண்ணுனா இவ்வளவு நேரம் யார்கிட்ட பேரம் பேசுனேனோ அவரேதான் புக் ஆகிருக்காரு.
மறுபடியும் முதல்ல இருந்தாங்குற மனநிலை தம்பி 100 ரூபாய் சேர்த்து 300 ரூபாயா கொடுங்க போகலாம்னாரு. 50 சேர்த்து 250 தாரேன் வாங்கனு சொன்னேன் வந்துட்டாரு. நீங்க கேன்சல் பண்ணிடுங்க அவன் வேற 30 கமிஷன் புடிச்சுடுவான்னாரு. நானும் கேன்சல் பண்ணிட்டேன். பஸ் ஸ்டாண்ட் இறங்கி வந்து 250 கொடுத்துட்டு வந்துட்டேன்.
இதை எதுக்கு சொல்றேன்னா இப்போ 250 எப்படி கட்டுப்படி ஆச்சு?. ஆட்டோகாரங்க தப்பா நினைக்காதீங்க கிலோமீட்டருக்கு 20 ரூபாய் வச்சாலும் 300 கூட நியாயமான ரேட்டு. ஆனா 400 ரூபாயெல்லாம் அநியாயம் இல்லையா?
ஒருத்தர் ரெண்டு பேர் செய்யுறதுனு சமாளிக்கவும் முடியாது ஸ்டாண்ட்ல மொத்தமா பேசி வச்சுதான் ரேட் சொல்றீங்க. ஆனா உங்க ஆட்டோவுல ஏறுறது ஒன்னும் பணக்காரன் இல்ல நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவங்கதான் அதிகம் வாராங்க. அவங்களும் உங்களை மாதிரி கஷ்டப்படுறவங்கதான். அவங்ககிட்டயே அடிச்சு புடுங்குறது நல்லாயில்லை.
அதுக்காக ஊபர், ஓலாவுக்கு சப்போர்ட் பண்ணல. நீங்க இப்படி ரெண்டு மடங்கு விலை ஏத்தி சொன்னா ஒரு நடுத்தர குடும்பஸ்தனா ஊபர், ஓலாவை ஆதரிக்குறதுல என்ன தப்புனு தோணுது நன்றி🙏.