Times Of Theni

Times Of Theni Times of Theni is a News & Media Application. Especially made to deliver all kinds of local news to the people of Theni.

கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட தாயராக இருந்தது. அப்போது அங்கு...
11/08/2021

கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட தாயராக இருந்தது. அப்போது அங்கு திடீரென மதுபோதையில் இருந்த குடிமகன் ஒருவர் பேருந்தின் முன்பு படுத்துக்கொண்டு என்ன தாண்டி போயிடுவியோ அப்படினு சொல்ற மாதிரி, அங்கேயே படுத்து உறங்க ஆரம்பித்தார்.

வழியில் படுத்து கொண்டு வழிவிடாமல் தொல்லை செய்த குடிமகனை கண்டு பேருந்தில் இருந்தவர்கள் ஒருபுறம் சிரித்தாலும் மறுபுறம் கடுப்புற்ற ஓட்டுநர் பேருந்தைவிட்டு இறங்கி வந்து வழியில் படுத்து கிடந்த குடிமகனை எழுப்பி பேருந்தை வழிமறித்ததன் காரணத்தை கேட்டார். அதற்க்கு பதிலளித்த குடிமகன் அரசு பேருந்துகளில் செல்ல பெண்களுக்கும் மட்டும் இலவச பேருந்து கட்டணம் வழங்கப்பட்டுள்ளது.

பெண்களுக்கு வழங்கப்பட்ட பேருந்து இலவச கட்டணத்தை போலவே தங்களுக்கும் வழங்க வேண்டுமெனவும் கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையத்திலிருந்து நஞ்சகவுண்டன்பாளையத்தில் உள்ள டாஸ்மாக் கடைக்கு நடந்து செல்ல பெரும் சிரமமாக உள்ளது.
ஆகையால் அரசிற்க்கு வருமானம் தரும் தங்களை போன்றோரை பேருந்துகளில் இலவசமாக அழைத்துச் செல்ல வேண்டும் என பேருந்தின் நடத்துனர் மற்றும் ஓட்டுனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதனை கண்ட அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அமைதியாக நின்று கொண்டிருந்த போது ஒருவர் மட்டும் சென்று குடிபோதையில் உள்ளவர்களை சமாதானபடுத்தி அங்கிருந்து அழைத்து சென்றார். இச்சம்பவத்தால் கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையத்தின் முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இன்று காலை 5.30 மணியளவில் நேப்பியர் பாலத்தில் இருந்து சுமார் முப்பது வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் கூவம் ஆற்றில் விழுந்த...
11/08/2021

இன்று காலை 5.30 மணியளவில் நேப்பியர் பாலத்தில் இருந்து சுமார் முப்பது வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் கூவம் ஆற்றில் விழுந்துள்ளார் பொதுமக்கள் தகவலின் பேரில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் அண்ணாசதுக்கம் காவல்துறையினர் சில மணி நேர போராட்டத்திற்கு பிறகு அவரை மீட்டனர்.

விசாரணையில் அந்த நபர் பெரியமேட்டைச் சேர்ந்த கார்த்தி (30) என்பது தெரியவந்தது.


இவர் நடை பயிற்சி மேற்கொண்டிருந்த போது அதிகாலை பொழுது அழகாக தெரிந்ததால் செல்பி எடுக்க முற்பட்டதாகவும், அப்போது தவறி பாலத்திலிருந்து கூவம் ஆற்றில் விழுந்ததும் தெரியவந்தது.

பின்பு முதலுதவி அளிக்கப்பட்டு நலமுடன் வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டார். இவர் நடை பயிற்சி மேற்கொண்டிருந்த போது அதிகாலை பொழுது அழகாக தெரிந்ததால் செல்பி எடுக்க முற்பட்டதாகவும், அப்போது தவறி பாலத்திலிருந்து கூவம் ஆற்றில் விழுந்ததும் தெரியவந்தது.

பின்பு முதலுதவி அளிக்கப்பட்டு நலமுடன் வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தமிழகத்தின் நிதிநிலைமை குறித்த வெள்ளை அறிக்கையை நேற்றைய தினம் வெளியிட்டார். அதில...
11/08/2021

நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தமிழகத்தின் நிதிநிலைமை குறித்த வெள்ளை அறிக்கையை நேற்றைய தினம் வெளியிட்டார். அதில், ஒவ்வொரு குடும்பத்தின் மீதும், 2புள்ளி 63 லட்சம் ரூபாய் கடன் உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், நாமக்கல் மாவட்டம் பாலபட்டியை சேர்ந்த காந்தியவாதியான ரமேஷ் தியாகராஜன், ஆட்சியர் அலுவலகத்தில் கடன் தொகையை வழங்க காசோலையுடன் வந்துள்ளார். இச்சம்பவம் அங்கிருந்தவர்கள் இடையே வியப்பை ஏற்படுத்திய நிலையில், அவர் வழங்கிய காசோலையை ஆட்சியர் வாங்க மறுத்து அவரை திருப்பி அனுப்பியுள்ளார்.

தொழிலாளர் நலத்துறை சார்பில் கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, தேனி மாவட்ட...
31/07/2021

தொழிலாளர் நலத்துறை சார்பில் கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமை தாங்கி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

மாவட்டத்தில் தொழிலாளர் நலத்துறை சார்பில் மகப்பேறு நிதிஉதவி, திருமண நிதிஉதவி, கண்கண்ணாடிக்கான உதவித்தொகை, மாதாந்திர உதவித்தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் திட்டங்களின் கீழ் 739 கட்டுமான தொழிலாளர்கள், 577 அமைப்புசாரா தொழிலாளர்கள், 52 அமைப்புசாரா டிரைவர்கள் என மொத்தம் 1,368 பேருக்கு ரூ.26 லட்சத்து 85 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது.
இதில், முதற்கட்டமாக 18 தொழிலாளர்களுக்கு ரூ.2 லட்சத்து 54 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். விழாவில் தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் குலசேகரன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
முன்னதாக கலெக்டர் அலுவலகத்தில் புகையிலை, பான் மசாலா, குட்கா ஒழிப்பு குறித்த உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. அப்போது மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமையில், அரசு அலுவலர்கள், வணிகர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

கடமலைக்குண்டுவில் விவசாயிகள் சங்கம் சார்பில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு விவசாயிகள் சங்க மாநில செயலா...
31/07/2021

கடமலைக்குண்டுவில் விவசாயிகள் சங்கம் சார்பில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் சண்முகம் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தேனி மாவட்ட செயலாளர் வெங்கடேசன், விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இ்தில் விவசாயிகள் சங்க மாநிலக்குழு உறுப்பினர் ராஜப்பன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கடமலை-மயிலை ஒன்றிய செயலாளர் மணவாளன், மேகமலை ஊராட்சி மன்ற தலைவர் பால்கண்ணன் மற்றும் தும்மக்குண்டு, மேகமலை ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த மலைக்கிராம பொதுமக்கள், விவசாயிகள் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில், 3 தலைமுறைகளுக்கு மேல் மேகமலை வனப்பகுதியில் வசித்து வரும் மலைக்கிராம பொதுமக்களுக்கு வன உரிமை சட்டத்தின்படி பட்டா வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மலைக்கிராம பொதுமக்களை வனப்பகுதியில் இருந்து வெளியேற்ற தடை விதிக்கக்கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் விவசாயிகள் சங்கம் சார்பில் வழக்கு நடைபெற்று வருகிறது. எனவே வழக்கில் இறுதி தீர்ப்பு வரும் வரை மலைக்கிராம பொதுமக்கள் விவசாயத்தில் ஈடுபடுவதை வனத்துறையினர் தடுக்கக்கூடாது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டராக விளையாடி வருபவர் பென் ஸ்டோக்ஸ். சர்வதேச அளவில் தனது திறமையால் ரசிகர் பட்டாளத்தைப் பெற்ற...
31/07/2021

இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டராக விளையாடி வருபவர் பென் ஸ்டோக்ஸ். சர்வதேச அளவில் தனது திறமையால் ரசிகர் பட்டாளத்தைப் பெற்றுள்ள இவர் இங்கிலாந்து அணி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை வெல்லக் காரணமாக இருந்தார்.1991ஆம் ஆண்டு நியூசிலாந்தில் கிறிஸ்ட்சேர்ச் நகரத்தில் பிறந்தவர் பென் ஸ்டோக்.

இளம் வயதில் இங்கிலாந்துக்கு இடம்பெயர்ந்த இவர் உள்ளூர் கிரிக்கெட் அணிகளில் பங்கேற்று விளையாடத் தொடங்கினார்.

படிப்படியாக முன்னேறி இங்கிலாந்து அணியில் ஆல் ரவுண்டராக கலக்கி வந்தார்.

இந்நிலையில் அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அவரது இந்த அறிவிப்பு கிரிக்கெட் ரசிகர்களை கவலையடைய செய்துள்ளது.

தேனி:தமிழக நிதியமைச்சர் தியாகராஜன், விவசாயிகளுக்கு திருடர்கள் பட் டம் கொடுத்துள்ளார் என எதிர்ப்பு தெரிவித்து, அமைச்சர் ப...
23/07/2021

தேனி:தமிழக நிதியமைச்சர் தியாகராஜன், விவசாயிகளுக்கு திருடர்கள் பட் டம் கொடுத்துள்ளார் என எதிர்ப்பு தெரிவித்து, அமைச்சர் பெரியசாமியிடம் கம்பம் பள்ளத்தாக்கு விவசாய சங்கத்தினர் மனு அளித்தனர்.

தேனி மாவட்டத்தில், முல்லை பெரியாறு பட்டா நிலங்களில் கிணறு அமைத்து, பம்புசெட் மூலம் நீரை எடுத்துச் சென்று விவசாயத்திற்கு பயன்படுத்துகின்றனர். இதில் முல்லைப் பெரியாற்றில் தண்ணீர் திருடுவதாக கூறி, மின் இணைப்பை அதிகாரிகள் துண்டிக்கின்றனர். இதற்கு நிதியமைச்சர் தியாகராஜன் அழுத்தம் காரணம் என கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் புகார் கூறுகின்றனர்.

இந்நிலையில், கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியசாமி, நேற்று தேனி கலெக்டர் அலுவலகத்தில், உழவர் கருத்து கேட்பு கூட்டத்தில் பங்கேற்க வந்தார். கம்பம் பள்ளத்தாக்கு விவ சாயிகள் 200 பேர், அமைச்சரிடம் மனு அளித்தனர்.அதில், 'உணவு உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு நிதியமைச்சர், 'திருடர்கள்' பட்டம் கொடுத்துள்ளார். விவசாயிகள் நீரை எடுத்து சென்று உணவு உற்பத்திக்கு பயன்படுத்துகின்றனர்; வேறு தொழிலுக்கு பயன்படுத்தவில்லை.

'விவசாயிகளை பாதிக்கும் நிதியமைச்சரின் நடவடிக்கையை முதல்வர் தடுத்து நிறுத்தி, வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்' என கோரிஉள்ளனர்.அமைச்சர் பெரியசாமி கூறுகையில், ''இப்பிரச்னையில் விவசாயிகள் பாதிக்கப்படாமல் பார்த்து கொள்ளப்படும்,'' என்றார்.

தேனி மாவட்டத்தில் பிளஸ்-2 வகுப்பில் 14 ஆயிரத்து 859 பேர் தேர்ச்சி பெற்றனர். அவர்களில் 540 பேர் 551 மதிப்பெண்ணுக்கு மேல் ...
20/07/2021

தேனி மாவட்டத்தில் பிளஸ்-2 வகுப்பில் 14 ஆயிரத்து 859 பேர் தேர்ச்சி பெற்றனர். அவர்களில் 540 பேர் 551 மதிப்பெண்ணுக்கு மேல் எடுத்தனர்.தேனி :
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மாணவ, மாணவிகள் நலன் கருதி பிளஸ்-2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. மாணவ, மாணவிகளுக்கு மதிப்பெண் பட்டியல் வெளியிடப்படும் என்று அரசு அறிவித்தது. அதன்படி, எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் எடுத்த மதிப்பெண்ணில் இருந்து 50 சதவீதம், பிளஸ்-1 தேர்வில் 20 சதவீதம், பிளஸ்-2 செய்முறை தேர்வு மற்றும் உள்மதிப்பீடு அடிப்படையில் 30 சதவீதம் என மொத்தம் 100 சதவீதத்துக்கு மதிப்பெண் கணக்கிடும் பணி நடந்தது. இந்த பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து தமிழகத்தில் பிளஸ்-2 மதிப்பெண் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.தேனி மாவட்டத்தில் 139 பள்ளிகளில் படித்த 7 ஆயிரத்து 348 மாணவர்கள், 7 ஆயிரத்து 511 மாணவிகள் என மொத்தம் 14 ஆயிரத்து 859 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இவர்கள் அனைவரும் தேர்வுக்கு தயார் நிலையில் இருந்தவர்கள். அவர்கள் அனைவரும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றனர்.
மதிப்பெண் விவரம்
பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வில் மொத்தம் 600 மதிப்பெண்கள் ஆகும். இதில், 551 மதிப்பெண்களுக்கு மேல் 167 மாணவர்கள், 373 மாணவிகள் என மொத்தம் 540 பேர் எடுத்துள்ளனர். 501-ல் இருந்து 550 மதிப்பெண் வரை 2 ஆயிரத்து 545 மாணவ, மாணவிகளும், 451-ல் இருந்து 500 மதிப்பெண் வரை 3 ஆயிரத்து 733 மாணவ, மாணவிகளும் எடுத்துள்ளனர். 400-ல் இருந்து 450 மதிப்பெண் வரை 3 ஆயிரத்து 994 பேரும் எடுத்துள்ளனர். 400 மதிப்பெண்களுக்கு குறைவாக 4 ஆயிரத்து 47 பேர் பெற்றுள்ளனர்.
இந்த மதிப்பெண் பட்டியல் மாணவ, மாணவிகளின் செல்போன் எண்களுக்கு நேரடியாக அனுப்பி வைக்கப்பட்டது. இதனால், வீட்டில் இருந்தபடியே மாணவ, மாணவிகள் தங்களின் மதிப்பெண் விவரங்களை அறிந்து கொண்டனர். மேலும் இணையதளம் வாயிலாகவும் இந்த விவரங்களை மாணவ, மாணவிகள் அறிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

கூடலூர்:தமிழக-கேரள மாநில எல்லையில் முல்லைப்பெரியாறு அணை அமைந்துள்ளது. இந்த அணை தண்ணீர் மூலம் தேனி, திண்டுக்கல், மதுரை, ச...
20/07/2021

கூடலூர்:
தமிழக-கேரள மாநில எல்லையில் முல்லைப்பெரியாறு அணை அமைந்துள்ளது. இந்த அணை தண்ணீர் மூலம் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்கள் குடிநீர் மற்றும் பாசன வசதி பெற்று வருகிறது. இந்த அணையின் மொத்த நீர் மட்ட உயரம் 152 அடி ஆகும். இதில் 142 அடி வரை தண்ணீர் தேக்கி கொள்ள சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது. அதன்படி கடந்த மாதம் அணையில் 136.15 அடி வரை தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு இருந்தது. அதன்பிறகு மழைப்பொழிவு குறைந்தது. மேலும் தமிழகத்துக்கு அணையில் இருந்து அதிக அளவில் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறையத்தொடங்கியது. கடந்த 9-ந்தேதி அணையின் நீர்மட்டம் 126 அடியாக இருந்தது.
130 அடியாக உயர்வு
இந்தநிலையில் முல்லைப்பெரியாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. அதன்படி முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் நேற்று 129.85 அடியாக உயர்ந்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2 ஆயிரத்து 324 கனஅடியாக உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 1200 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. 4 ஆயிரத்து 665 மில்லியன் கன அடிநீர் இருப்பு உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளான முல்லைப்பெரியாற்றில் 12.8 மி.மீ. மழையும், தேக்கடியில் 15 மி.மீ. மழையும் பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

பெரியகுளம்:பெரியகுளம் அருகே உள்ள தாமரைக்குளம் பிரிவில் தமிழ்நாடு ஓட்டல் தொழிலாளர்கள் நலச்சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம...
20/07/2021

பெரியகுளம்:
பெரியகுளம் அருகே உள்ள தாமரைக்குளம் பிரிவில் தமிழ்நாடு ஓட்டல் தொழிலாளர்கள் நலச்சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாநில செயலாளர் பழனியாண்டி தலைமை தாங்கினார். தேனி மாவட்ட செயலாளர் ராஜ்குமார் முன்னிலை வகித்தார். ஓட்டல் தொழிலாளர் நலவாரியத்தை அரசு செயல்படுத்தாததை கண்டிப்பது, குடியிருக்க வீடு கட்டுவதற்கு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தேனி நகர செயலாளர் திருவாசகம், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராகவன் உள்பட பலர் கலந்துகொண்டு கோஷங்கள் எழுப்பினர்.

சவுதி அரேபியாவில் உள்ளூர்வாசிகளுக்கு மட்டுமான புனித ஹஜ் யாத்திரை தொடங்கியுள்ளது.ஹஜ் யாத்திரையில் பங்கேற்க வெளிநாட்டுப் ப...
19/07/2021

சவுதி அரேபியாவில் உள்ளூர்வாசிகளுக்கு மட்டுமான புனித ஹஜ் யாத்திரை தொடங்கியுள்ளது.
ஹஜ் யாத்திரையில் பங்கேற்க வெளிநாட்டுப் பயணிகளுக்கு இரண்டாவது ஆண்டாகத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு, ஐந்து நாள்களுக்கு நீடித்த யாத்திரையில் எந்தக் கிருமித்தொற்றுச் சம்பவமும் பதிவாகவில்லை. இந்த ஆண்டும், அதேபோன்ற பாதுகாப்பான யாத்திரைக்கு ஏற்பாடு செய்ய, சவுதி அரேபியா விரும்புகிறது.

18 வயதுக்கும் 65 வயதுக்கும் இடைப்பட்ட எந்தவொரு நாள்பட்ட நோயும் இல்லாத சவுதி அரேபியக் குடியிருப்பாளர்கள் 60 ஆயிரம் பேர், இம்முறை ஹஜ் யாத்திரையை மேற் கொள்ள உள்ளனர். கடந்த ஆண்டு அனுமதிக்கப்பட்டவர்களைக் காட்டிலும் அந்த எண்ணிக்கை அதிகமாகும். பாதுகாப்பு இடைவெளி நடைமுறைகள் மட்டுமின்றி, “Smart Haj card” எனும் புதிய அட்டையும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பரவலுக்கு முன்பு, உலகெங்கிலுமுள்ள 2 மில்லியனுக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள், மக்காவிலும் மதினாவிலும் புனித யாத்திரை மேற் கொண்டு வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகம்

[19/07, 1:29 pm] ňűjį...☺️: தேனி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால், வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதன...
19/07/2021

[19/07, 1:29 pm] ňűjį...☺️: தேனி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால், வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் வைகை அணையின் நீர்மட்டம் 68 அடியாக உயர்ந்துள்ளது.
[19/07, 1:30 pm] ňűjį...☺️: ஆண்டிப்பட்டி:
தேனி மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. குறிப்பாக மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் மழை பெய்வதால் மூல வைகை ஆறு, கொட்டக்குடி மற்றும் சுருளியாற்றில் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது.அந்த ஆறுகளில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர் வைகை அணையில் போய் சேருகிறது. இ்தன் எதிரொலியாக, அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதன்படி வைகை அணைக்கு நேற்று வினாடிக்கு 1,601 கனஅடி நீர்வரத்து இருந்தது.
71 அடி உயரம் கொண்ட வைகை அணை நீர்மட்டம், ஏற்கனவே 67 அடிக்கு மேல் இருந்த நிலையில், தற்போது கூடுதல் நீர்வரத்தால் நீர்மட்டம் 68 அடியாக உயர்ந்துள்ளது.
விரைவில் நிரம்பும்
வைகை அணை நீர்மட்டம் 66 அடியை எட்டும் போது, முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும், 68.50 அடியில் 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும், 69 அடியில் 3-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே உபரி தண்ணீராக திறக்கப்படுவது வழக்கம்.
இந்நிலையில் வைகை அணை நீர்மட்டம் 68 அடியை எட்டியுள்ளதால் விரைவில் அணை நிரம்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வைகை அணையின் நீர்த்தேக்கப்பகுதி கடல்போல காட்சியளிக்கிறது.
நேற்று மாலை 4 மணி நிலவரப்படி வைகை அணை நீர்மட்டம் 68.01 அடியாக இருந்தது. அணையில் இருந்து பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 769 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. அணையின் மொத்த நீர் இருப்பு 5ஆயிரத்து 299 மில்லியன் கன அடியாக இருந்தது.

Address

Theni
625531

Website

Alerts

Be the first to know and let us send you an email when Times Of Theni posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Times Of Theni:

Share