Panmuga Medai Publication

Panmuga Medai Publication பன்முக மேடை
காலச்சுவடு பதிப்பது லட்சியம்.
எதிர் வருவதைக் கடந்து
அடையாளமாவது நிச்சயம்.

பன்முக மேடை பதிப்பக நூல்கள் அனைத்தும் https://www.discoverybookpalace.com/ ல் கிடைக்கும்.
07/03/2026

பன்முக மேடை பதிப்பக நூல்கள் அனைத்தும் https://www.discoverybookpalace.com/ ல் கிடைக்கும்.

Buy Tamil Books Online | Shop English Books Online | Leading Tamil Bookstore Online | Discovery Book Palace

பன்முக மேடையின் சார்பாக புதிய வெளியீடு
10/01/2026

பன்முக மேடையின் சார்பாக
புதிய வெளியீடு

புதிய வெளியீடு: மிதிவண்டி கனவுகள் நாவல்நண்பர்களை அழைக்கிறோம்...04.01.2026 காலை 10.30 மணிதேனாம்பேட்டை, சென்னை.
29/12/2025

புதிய வெளியீடு:
மிதிவண்டி கனவுகள் நாவல்
நண்பர்களை அழைக்கிறோம்...

04.01.2026 காலை 10.30 மணி
தேனாம்பேட்டை, சென்னை.

Theni Book Fair : 2025 December 21 to 28STALL No: 52All are welcome 🥰🥰🥰
20/12/2025

Theni Book Fair : 2025 December 21 to 28

STALL No: 52

All are welcome 🥰🥰🥰

பன்முக மேடை பதிப்பகத்தின் சார்பாக பாரதியார் பிறந்த தினத்தையொட்டியான ஒரு அறிவிப்பு.தேனி மாவட்ட மாணவர்களுக்கு மட்டும்...
07/12/2025

பன்முக மேடை பதிப்பகத்தின் சார்பாக பாரதியார் பிறந்த தினத்தையொட்டியான ஒரு அறிவிப்பு.

தேனி மாவட்ட மாணவர்களுக்கு மட்டும்...

Speaking Tiger Publication னுடன் இணைந்து பணியாற்றுவதில் இது மூன்றாவது புத்தகம். டில்லியில் வசிக்கின்ற பழைய பொருட்கள் சேக...
30/11/2025

Speaking Tiger Publication னுடன் இணைந்து பணியாற்றுவதில் இது மூன்றாவது புத்தகம். டில்லியில் வசிக்கின்ற பழைய பொருட்கள் சேகரித்து விற்கும் விளிம்புநிலை மனிதர்களின் வாழ்வை விவரிக்கின்ற இந்த நாவலின் கதாநாயகியான 12 வயது சிறுமியான நூர், தன்னுடைய 13 வது பிறந்தநாளில் தொடங்குகின்ற நாவல், அவளின் 14வது பிறந்தநாளில் முடிகிறது. ஒராண்டுகால அவர்களின் வாழ்க்கையை நாடுதழுவிய அரசியல் சாரத்துடன் கண்முன் காட்டுகின்ற இந்த 'மிதிவண்டி கனவுகள்' நாவலை ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார் ஜான்சி ராணி.

ஆழ்கடல் அமைதியையும் அண்ணாந்து பார்க்க வைக்கின்ற அறிவாற்றலையும் ஒருசேரப் பெற்றிருப்பவர் ஜான்சிராணி. கூடுதலாக ஒரே ஒரு அடியை எடுத்துவைப்பாரெனில், தமிழகத்தில் மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளர் வரிசையில் முதலிடத்தில் வரக்கூடிய பெண் ஆளுமையாக இருப்பார். பன்முக மேடை அவருக்கு நன்றியும் வாழ்த்துகளையும் தெரிவிக்கிறது.

கிளாசிக் வகைமையில் வைக்க வேண்டிய இந்த மிதிவண்டி கனவுகள் உலகெங்கிலும் உள்ள பெரியவர்கள் வாசிக்க வேண்டிய சிறார் நாவலாகும்.

310 பக்கங்கள்
கெட்டி அட்டை விலை 500.00
பேப்பர் அட்டை விலை 350.00
2025 டிசம்வர் 28 வெளியீடு

2025 டிசம்பர் 28 ல் தேனியில் வெளியாகிறது 'சொல்லப்பட்ட கதைகளின் பின்வாசல்' என்கின்ற உலக சினிமா கட்டுரைகள் அடங்கிய நூல். இ...
29/11/2025

2025 டிசம்பர் 28 ல் தேனியில் வெளியாகிறது 'சொல்லப்பட்ட கதைகளின் பின்வாசல்' என்கின்ற உலக சினிமா கட்டுரைகள் அடங்கிய நூல். இந்நூலை கவிதைக்காரன் இளங்கோ எழுதியிருக்கிறார். நூலில் வைக்கப்பட்டுள்ள மூன்று இந்தியப் படங்கள் உட்பட பத்து சர்வதேசப் படங்களும், சர்வதேச அரசியல் பேசுகின்றன.

கவிதைக்காரன் இளங்கோவின் திரை சார்ந்த அணுகுமுறை குறித்து பெருமிதம் கொள்ளலாம். படங்களின் மீதான அவரின் மாறுபட்ட கோணங்கள் அற்புதமானவை, அவசியமானவை. அவருடைய எழுத்துகளும், உரையாடல் திறனும் அனைவருக்குமான கற்றல் அனுபவமாகும். உண்மையில் இது மனத்திற்கு மிகவும் நிறைவைத் தந்த பணி. 'சொல்லப்பட்ட கதைகளின் பின்வாசல்' இதோ இன்று அச்சுக்குச் செல்கிறது. இளங்கோ தோழருக்கு வாழ்த்தும் நன்றியும்.

Tarkovsky Cine Forum ன் இரண்டாவது முயற்சியிது. முன்னதாக 'ரித்விக் கட்டக்: கலையும் கலகமும்' என்ற சிறுநூல். இந்த வரிசையில் 2026 டிசம்பருக்குள் திரைப்படம் தொடர்பான ஐம்பது நூல்களை Tarkovsky Cine Forum வெளியிடுவது என்ற அதன் திட்டத்துடன் பன்முக மேடைகரம் கோர்க்கிறது.

பன்முக மேடை பதிப்பகத்தின்முன்வெளியீட்டுத் திட்டம்-----------------------------------மனதை ஆட்கொள்ளும் கன்னி நிலம் நாவல்16...
26/11/2025

பன்முக மேடை பதிப்பகத்தின்
முன்வெளியீட்டுத் திட்டம்
-----------------------------------
மனதை ஆட்கொள்ளும் கன்னி நிலம் நாவல்

16 க்கு 23 செ.மீ அளவு
கெட்டி அட்டை
மதிமயக்கும் வடிவமைப்பு
800 பக்கங்கள்
விலை 1500

முன்வெளியீட்டு விலை ரூபாய் 1000 மட்டும்.
பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு மட்டும் 900 ரூபாய்.
அஞ்சல் செலவு தனி.

2025 டிசம்பர் 28 ஞாயிறன்று வெளியிடப்படும்.

2026 தனிக்கவன வெளியீடு 5-------------------------------------- ஒரு பதிப்பளார், புத்தகங்களைச் சுமந்துகொண்டு நாடு முழுமைக்...
18/11/2025

2026 தனிக்கவன வெளியீடு 5
--------------------------------------
ஒரு பதிப்பளார், புத்தகங்களைச் சுமந்துகொண்டு நாடு முழுமைக்கும் 20 மாநிலங்களுக்குள், பங், கஞ்சா போதையுடன் சுமார் 35000 கிலோ மீட்டர் பயணம் செய்ததில் கிடைத்த அனுபவங்களின் கதை...

கஞ்சா பொழுதுகள்!

ஒடிசாவில் பாங், கஞ்சா மற்றும் அபின் நுகர்வு பற்றிய விவரணையை, நிகழ்வுகள் மற்றும் தரவுகள் நிறைந்த ஒரு சுவாரஸ்யமான இந்த உரையாடல் தொகுப்பில், அக்‌ஷயா பஹிபாலா வழங்குகிறார். கதைகளுடனான டைரி பதிவு, உண்மைகளை விவரிப்பது மற்றும் ஒரு போதைப் பழக்கத்திற்கு அடிமையானவரின் கல்லெறியப்பட்ட பேச்சுக்கள் போன்றவற்றைப் போல செல்கிறது இது...

மேலும் அந்த உற்சாகம் ஒருபோதும் குறையாது.

புனைவு தோய்ந்த அல்-புனைவு நூலான 'கஞ்சா பொழுதுகள்' 2026 மார்ச்சில் வெளியாகும்.

Address

Theni
625531

Telephone

9487845666

Alerts

Be the first to know and let us send you an email when Panmuga Medai Publication posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Panmuga Medai Publication:

Share

Category