திண்டிவனம் செய்திகள்

திண்டிவனம் செய்திகள் திண்டிவனம் சுற்றி நடக்கும் அனைத்து நிகழ்வுகளும் உடனுக்குடன் ! For Advertisements and News publishing, WhatsApp: +91 8300958102.

திண்டிவனத்தில் அரசு பஸ் டிரைவரைத் தாக்கிய தனியார் பஸ் டிரைவரை போலீசார் கைது செய்தனர். காஞ்சிபுரம் மாவட்டம், ஓரிக்கை கிரா...
11/06/2025

திண்டிவனத்தில் அரசு பஸ் டிரைவரைத் தாக்கிய தனியார் பஸ் டிரைவரை போலீசார் கைது செய்தனர். காஞ்சிபுரம் மாவட்டம், ஓரிக்கை கிராமத்தைச் சேர்ந்த சங்கர், 47; அரசு பஸ் டிரைவர். இவர் நேற்று காலை காஞ்சிபுரத்திலிருந்து புதுச்சேரி நோக்கி பஸ்சை ஓட்டி வந்தார்.

காலை 8:15 மணிக்கு விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் மேம்பாலத்தின் கீழ் பஸ் நிறுத்தத்தில் நிறுத்தி பயணிகளை இறக்கி விட்டு புதுச்சேரி செல்லும் பயணிகளை ஏற்றிக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கே கிளியனுாரைச் சேர்ந்த் தனியார் பஸ் டிரைவர் வெங்கடேசன், 43; சங்கரிடம், 'எப்படி எங்கள் பஸ் நிற்கும் நேரத்தில் பயணிகளை ஏற்றலாம்' எனக் கேட்டு தகராறு செய்து, சங்கரை செருப்பால் அடித்து தாக்கினார். இதில் காயமடைந்த சங்கர், திண்டிவனம் அரசு மருத்துவனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். இதனை அறிந்த அரசு பஸ் டிரைவர்கள், இந்த தாக்குதலை கண்டித்து பஸ்களை சாலையில் நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் திண்டிவனம் - விழுப்புரம் சாலையில் போக்குவரத்து பாதித்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திண்டிவனம் டவுன் சப் இன்ஸ்பெக்டர் செல்வதுரை மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதின் பேரில், அரசு பஸ் டிரைவர்கள் போராட்டத்தை 8:30 மணியளவில் கைவிட்டனர்.

அதனைத் தொடர்ந்து, போலீசார் சம்மந்தப்பட்ட தனியார் பஸ்சை பறிமுதல் செய்து, காவல் நிலையம் கொண்டு சென்றனர். மேலும், அரசு பஸ் டிரைவர் சங்கர் கொடுத்த புகாரின் பேரில், தனியார் பஸ் டிரைவர் வெங்கடேசன் மீது வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனர்.

தகவல் : தினமலர்

🛕🌸 அவ்வையார்குப்பம் அம்மன் திருவிழா - 2025 🌸📍 இடம்: அவ்வையார்குப்பம் ரேணுகாம்பாள் அம்மன் கோயில்📆 நாள்: 9 நாள் பெருவிழா |...
11/06/2025

🛕🌸 அவ்வையார்குப்பம் அம்மன் திருவிழா - 2025 🌸

📍 இடம்: அவ்வையார்குப்பம் ரேணுகாம்பாள் அம்மன் கோயில்

📆 நாள்: 9 நாள் பெருவிழா | வருடம்: 2025

🗓️ நாள் 1:
🍲 அம்மனுக்கு கூழ் ஊற்றல்
✊காவல் தெய்வம் காத்தவராயன் வீதி உலா
🪔 அந்தி இரவில் சக்திகரகம் எடுத்து ஆலயத்திற்குள் வரவு

வாழ்க வளத்துடன் !
11/06/2025

வாழ்க வளத்துடன் !

மயிலம் முருகர் கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா நடந்தது. மயிலம் வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணியர் சுவாமி கோவிலில், வைகாசி...
10/06/2025

மயிலம் முருகர் கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா நடந்தது. மயிலம் வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணியர் சுவாமி கோவிலில், வைகாசி விசாகத் திருவிழாவையொட்டி, நேற்று காலை 6:00 மணிக்கு, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. காலை 11:00 மணிக்கு, கோவில் வளாகத்திலுள்ள விநாயகர், பாலசித்தர், மூலவர், நவகிரக சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

பிற்பகல் 12:00 மணிக்கு தங்க கவச அலங்காரத்தில் மூலவர் அருள்பாலித்தார். 12:30 மணிக்கு சண்முகா அர்ச்சனை, மகா தீபாராதனை நடந்தது. விழாவை முன்னிட்டு, கோவில் மண்டபத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு 8:00 மணிக்கு, உற்சவர் கிரிவல நிகழ்ச்சி நடந்தது.

விழா ஏற்பாடுகளை, மயிலம் பொம்மபுர ஆதினம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் செய்திருந்தார். வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

தகவல் : தினமலர்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பகுதியைச் சேர்ந்த 32 வயதான தியாகராஜன், ஐதராபாத்தில் கார் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தார்...
06/06/2025

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பகுதியைச் சேர்ந்த 32 வயதான தியாகராஜன், ஐதராபாத்தில் கார் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தார். அண்மையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.

உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால் திண்டிவனம் திரும்பிய தியாகராஜன், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகச் சென்றார். அங்கு அவரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருந்ததால், திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். ஆனால், அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்ததையடுத்து, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி தியாகராஜன் உயிரிழந்தார்.

கடந்த ஆண்டும் இதே கொரோனா தொற்றால் அவரது தந்தை ரகுபதி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. 2025 ஆம் ஆண்டில் விழுப்புரம் மாவட்டத்தில் பதிவான முதல் கொரோனா மரணம் இதுவாகும்.

தகவல் : இந்தியன் எக்ஸ்பிரஸ்

திண்டிவனம், மரக்காணம் அரசு ஐ.டி.ஐ.,களில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த ஒன்றிய சேர்மனிடம் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் ...
05/06/2025

திண்டிவனம், மரக்காணம் அரசு ஐ.டி.ஐ.,களில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த ஒன்றிய சேர்மனிடம் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் கோரிக்கை கடிதம் அளிக்கப்பட்டது.

திண்டிவனம் அடுத்த மொளசூர் மற்றும் மரக்காணம் ஆலத்துார் கூட்ரோட்டில் அரசு ஐ.டி.ஐ., உள்ளது. இங்கு, நடப்பு கல்வியாண்டில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தவும், மாணவர்களின் இடைநிற்றலை கண்டறிந்து, அவர்களை சேர்ப்பதற்கான நடவடிக்கை, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக இளநிலை வேலை வாய்ப்பு அலுவலர் லாவண்யா, மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி பயிற்சி அலுவலர் பிரேமலதா கொண்ட குழுவினர், திண்டிவனம் பகுதியில் உள்ள கல்வி நிலையங்கள், பி.டி.ஓ., அலுவலகங்களுக்கு சென்று, ஐ.டி.ஐ.,யில் உள்ள தொழிற்பிரிவுகள், அரசின் சலுகைகள் குறித்து எடுத்துரைத்து, மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

நேற்று ஒலக்கூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு சென்று, ஒன்றிய சேர்மன் சொக்கலிங்கத்தை நேரில் சந்தித்து மாணவர் சேர்க்கைக்கு உதவுமாறு கோரிக்கை விடுத்து கடிதம் கொடுத்தனர்.

தகவல் : தினமலர்

Address

Tindivanam Seithigal
Tindivanam
604001

Alerts

Be the first to know and let us send you an email when திண்டிவனம் செய்திகள் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to திண்டிவனம் செய்திகள்:

Share

Category