21/11/2019
ஆதார் பதிவு, திருத்தம் அஞ்சலகங்களில் சிறப்பு முகாம்.
நாமக்கல் அஞ்சல் கோட்டத்தில், இன்று மற்றும் நாளை ஆதார் பதிவு மற்றும் திருத்தம் செய்யும் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு தலைமை அஞ்சலகம், மல்லசமுத்திரம், சங்ககிரி மேற்கு துணை அஞ்சலகம், வளையப்பட்டி, ப.வேலூர், சேந்தமங்கலம் மற்றும் ஆகியவற்றில், இந்த சிறப்பு முகாம் நடக்கிறது. இங்கு, ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு, புதிதாக ஆதார் அட்டை எடுத்தல், ஏற்கனவே எடுக்கப்பட்ட ஆதார் அட்டைகளில் உள்ள பிழைகளை திருத்தம் செய்தல், தொலைபேசி எண், பிறந்த தேதி, மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை சேர்த்தல் ஆகிய சேவைகளை பெறலாம்.
புதிய ஆதார் எடுத்தல் இலவசம்.
ஆதார் திருத்தம் செய்ய கட்டணமாக, ₹50 செலுத்த வேண்டும். தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி திருத்தம் செய்ய துணை ஆவணங்கள் தேவையில்லை. பிற திருத்தங்களை மேற்கொள்பவர்கள், ஆவணங்களை கொண்டு வரவேண்டும். இவ்வாறு, கோட்ட கண்காணிப்பாளர் முருகேசன் தெரிவித்துள்ளார்.