MY Tiruchengode - திருச்செங்கோடு

MY Tiruchengode - திருச்செங்கோடு உடனுக்கு உடன் திருச்செங்கோடு செய்தி?

திருச்செங்கோடு சிறப்பு நிலை நகராட்சியில் புறநகர் பேருந்து நிலையம், கழிவுநீர் சுத்திகரிப்பு திட்டம் உள்ளிட்ட முக்கிய நலத்...
28/03/2025

திருச்செங்கோடு சிறப்பு நிலை நகராட்சியில் புறநகர் பேருந்து நிலையம், கழிவுநீர் சுத்திகரிப்பு திட்டம் உள்ளிட்ட முக்கிய நலத்திட்டங்கள் அரசியல் காரணங்களால் தடுக்கப்படுகின்றது. அதிமுக, பாஜக மற்றும் சில திமுக உறுப்பினர்கள் கூட்டாக செயல்பட்டு, மக்களை தூண்டிவிடுகின்றனர் என சேர்மன் ஆவேசம். முழு வீடியோ முதல் கமெண்டில்

தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் கேஸ் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது குறித்த விரிவான ...
27/03/2025

தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் கேஸ் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது குறித்த விரிவான வீடியோ கீழே முதல் கமெண்டில்.

,
,
,
,
,
,
,
,
,

29/06/2024

*திருச்செங்கோடு வாசிப்பு அறக்கட்டளை* மற்றும் *திருச்செங்கோடு போட்டோகிராபி கிளப்* சார்பில் *புகைப்படப் போட்டி* நடக்கிறது. புகைப்பட போட்டி தலைப்பு: *”திருச்செங்கோடு ஊரும் வாழ்வும்”*, *”உங்கள் பார்வையில் கிராமங்களின் வாழ்வியல்”* புகைப்படங்களை 05.07.2024 க்குள் அனுப்பி வைக்க வேண்டும். போட்டி தொடர்பான தகவல்கள் பெற : *7010661516* என்ற எண்ணிற்கு அழைக்கவும்.
*புகைப்பட போட்டி நிபந்தனைகள்:-*
போட்டிக்கான புகைப்படங்கள் 01.06.2024 க்குப் பிறகு எடுத்தவையாக இருக்க வேண்டும்
படங்கள் நீங்களே எடுத்த, உங்களின் சொந்த படமாக இருக்க வேண்டும்.
ஒரு நபர் 3 படங்கள் சமர்ப்பிக்கலாம். அதற்கு மேல் அனுமதியில்லை.
படங்களை [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக மட்டுமே அனுப்ப வேண்டும், படங்கள் மீது வாட்டர் மார்க், பெயர்கள், லோகோ உள்ளிட்ட தகவல்கள் இடம் பெறக்கூடாது.
படங்கள் JPEG ஃபார்மெட்டில் இருக்க வேண்டும்.
படங்களின் பெயர்களுக்குப் பதிலாக புகைப்படம் எடுத்தவர்களின் பெயர்கள் இடம் பெற வேண்டும்.
இந்த போட்டியில் TPC நிர்வாகிகள், வெளிச்சம் வாசிப்பு அறக்கட்டளை நிர்வாகிகள் அவர்கள் குடும்பத்தினர் பங்கேற்க அனுமதியில்லை.
நடுவர்களால் தேர்வு செய்யப்படும் 20 புகைப்படங்கள் பொதுமக்களின் பார்வைக்கு புத்தக கண்காட்சி அரங்கில் புகைப்பட கண்காட்சியாக இடம் பெறும். இந்த படங்களில் இருந்து பொதுமக்கள் தேர்வு செய்யும் மூன்று புகைப்படங்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.
போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும்.
போட்டிக்கு அனுப்பப்படும் புகைப்படங்கள் brightness,contrast,saturation போன்றவற்றை எடிட் செய்யலாம் ஆனால் படத்தின் பின்புலங்களை மாற்றுவது உள்ளிட்ட Manupulation எடிட்டிங் செய்த புகைப்படங்கள் போட்டிக்கு ஏற்றுக் கொள்ளப்படாது.
புகைப்படங்கள் கேமரா / செல்போன்களில் எடுக்கப்பட்ட தெளிவான புகைப்படங்களாக இருக்க வேண்டும்.
*நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது*

28/06/2024
திருச்செங்கோடு  புத்தகத் திருவிழா -20243 ம் ஆண்டு திருச்செங்கோடு புத்தகத் திருவிழா வரும் ஜூலை மாதம் நடக்கிறது. திருச்செங...
07/06/2024

திருச்செங்கோடு புத்தகத் திருவிழா -2024
3 ம் ஆண்டு திருச்செங்கோடு புத்தகத் திருவிழா வரும் ஜூலை மாதம் நடக்கிறது. திருச்செங்கோடு மக்களே தயாராகுங்கள். பள்ளி, கல்லூரி மாணவர்கள், புகைப்பட கலைஞர்களுக்கான போட்டிகள்... என கலைகட்ட போகுது நம்ம திருச்செங்கோடு புத்தகத் திருவிழா.

fair 2024

30/12/2023

நாமக்கல் மாவட்டத்தில் கட்டுப்பாட்டுடன் புத்தாண்டு கொண்டாட காவல்துறையினர் அறிவுரை.
நாமக்கல் மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்ட த்தில் ஈடுபவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை நாமக்கல் மாவட்ட காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.
 வழிபாட்டு தலங்களில் புத்தாண்டு தின சிறப்பு பிராத்தனைகளில் கலந்து
கொள்ளும்போது பாதுகாப்பான முறையில் தங்களது உடைமைகளை
வைத்துக் கொள்ள வேண்டும்.
 இரு சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்பவர்கள்
அனைவரும் தலைகவசம் மற்றும் சீட்பெல்ட் அணிந்து செல்ல வேண்டும்
 இவ்வாண்டு விபத்து இல்லாத ஆண்டாக அமையும் வண்ணம்
அனைவரும் போக்குவரத்து விதிமுறைகளை கடைப்பிடிக்க
வேண்டும்
 பொது போக்குவரத்து மற்றும் பொது இடங்களுக்கு செல்பவர்கள்
தங்களது உடைமைகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும்
 சாலைகள் மற்றும் பொது இடங்களில் பொதுமக்களுக்கு இடையூறு
ஏற்படா வண்ணம் புத்தாண்டு தினத்தை கொண்டாட
அறிவுறுத்தப்படுகிறது. தவறும் பட்சத்தில் சட்டப்படியான நடவடிக்கை
மேற்கொள்ளப்படும்.
 போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்கள் மீது உரிய அபாரதம்
விதித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
 குடிபோதையில் வாகனங்களை ஓட்டுபவர்கள் மீது வழக்கு பதிவு
செய்யப்பட்டு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்ற மூலம்
நடவடிக்கை எடுக்கப்படும் .
 ஹோட்டல் மற்றும் வணிக நிறுவனங்களில் அரசால்
அறிவிக்கப்பட்டுள்ள விதிமுறைகளை முறையாக கடைப்பிடிக்குமாறு
அறிவுறுத்தப்படுகிறது.
 பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வண்ணம் செயல்படும் நபர்கள்
மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நாமக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் அறிவுறுத்தல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

Address

Tiruchengode
637211

Telephone

+919842917178

Website

Alerts

Be the first to know and let us send you an email when MY Tiruchengode - திருச்செங்கோடு posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MY Tiruchengode - திருச்செங்கோடு:

Share