22/10/2025
விவசாயிகளுக்கு கண்ணீர் தீபாவளி -EPS
#எடப்பாடி_பழனிசாமி
#விவசாயிகள்_பாதிப்பு
#தஞ்சை_ஆய்வு
#டெல்டா_பகுதி
#நெல்_பயிர்_பாதிப்பு
தஞ்சாவூர் மாவட்டம் காட்டூரில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், தொடர் மழை காரணமாக நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பாதிக்கப்பட்டுள்ள நெல் மணிகள் மற்றும் நெல் மூட்டைகளை அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி இன்று ஆய்வு செய்தார். பின்னர் அங்கு முளைத்த நெல்லுடன் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்தார்.
மூட்டைகள் கொள்முதல் செய்திருந்தால் மூட்டைகள் தேக்கமடைந்து இருக்காது. உரிய லாரிகள் அனுப்பாததால்,எடை போட்ட மூட்டைகள் இங்கு தேங்கி முளைத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்த தீபாவளி விவசாயிகளுக்கு கண்ணீர் தீபாவளியாக ஆகிவிட்டது என தெரிவித்தார்.