Trichy Insight - Local News Portal

Trichy Insight - Local News Portal Hyper local media platform focusing Tiruchirapalli public issues,governance accountability platform
(1)

23/08/2026

📰 திருச்சியில் பிரம்மாண்ட பாரத் மால்: 5 ஸ்கிரீன் PVR தியேட்டருடன் வருது!
திருச்சி மக்களுக்கு ஒரு செம என்டர்டெயின்மென்ட் ட்ரீட் ரெடியாகிட்டு இருக்கு. சுமார் 5.15 லட்சம் சதுர அடி பரப்பளவுல 5 ஸ்கிரீன் கொண்ட PVR மல்டிபிளக்ஸ், பிரம்மாண்ட ஹைப்பர்மார்க்கெட் மற்றும் ஃபுட் கோர்ட்டோட உருவாகி வரும் பாரத் மால் கட்டுமானப் பணிகள் இப்போ ஜெட் வேகத்துல நடந்துட்டு இருக்கு. இந்த புது மால்ல என்னென்ன ஸ்பெஷல் வசதிகள் வரப்போகுதுன்னு இந்தச் செய்தியில விரிவா பார்க்கலாம்.
— Trichy Insight

23/08/2026

📰 திருச்சியில் ஒடிசா கஞ்சா வேட்டை: தாய், மகன் உட்பட 4 பேர் அதிரடி கைது!
ஒடிசாவில இருந்து கஞ்சாவை வாங்கி புதுச்சேரியில பதுக்கி வச்சு, திருச்சியில சில்லறை விற்பனை செஞ்சு வந்த பயங்கர நெட்வொர்க்கை நம்ம ஊர் தனிப்படை போலீசார் கையும் களவுமா பிடிச்சிருக்காங்க. ராம்ஜி நகர்ல நடந்த அதிரடி ரெய்டுல மூன்றரை கிலோவுக்கு மேல கஞ்சா, ஆட்டோ, பைக் எல்லாம் பறிமுதல் செய்யப்பட்டு தாய், மகன் உட்பட நாலு பேர் கைது ஆகியிருக்காங்க. அந்த அதிரடி ஆபரேஷன் பத்தி இப்போ விரிவா பார்க்கலாம்.
— Trichy Insight

23/08/2026

📰 அன்பில் மாரியம்மன் கோயில் மண்டப சர்ச்சை: அமைச்சர் விளக்கம்!
திருச்சி அன்பில் மாரியம்மன் கோயில்ல அம்மை வார்த்தவங்களுக்காக கட்டப்படுற புதிய மண்டபம் பத்தி இப்போ சமூக வலைதளங்கள்ல பெரிய விவாதமே போயிட்டு இருக்கு. இது அறிவியலுக்கு எதிரானதுன்னு ஒரு தரப்பு விமர்சிக்க, நோய் குணமானவங்க நேர்த்திக்கடன் செலுத்த வர்றதுக்காகத்தான் இந்த ஏற்பாடுன்னு அமைச்சர் ரமேஷ் விளக்கம் கொடுத்திருக்காரு. இந்த விவகாரத்துல ரெண்டு தரப்பும் சொல்ற வாதங்கள் என்னன்னு முழுசா பார்க்கலாம்.
— Trichy Insight

23/08/2026

📰 திருச்சில மீட்டர் ஆட்டோ உண்மையா? மக்கள் அதிரடி முடிவு!
திருச்சி ஜங்ஷன்லயோ சத்திரம் பஸ் ஸ்டாண்ட்லயோ இறங்கி ஒரு ஆட்டோ புடிச்சாலே பர்ஸ் காலியாகுற அளவுக்கு ரேட் பேசி மிரட்டுற ஊர்ல, இப்போ புதுசா ஒரு ஸ்மார்ட் மீட்டர் ஆட்டோ சர்வீஸ் ஆரம்பிச்சிருக்காங்க. பகல்ல முதல் ஒன்றரை கிலோமீட்டருக்கு 50 ரூபாய், நைட்ல 75 ரூபாய்னு தெளிவா கட்டண போர்டு போட்டு விளம்பரம் பண்றாங்க. ஆனா இது நிஜமாவே இந்த ரேட்டுக்கு ஓடுதா இல்ல சும்மா பப்ளிசிட்டிக்கான்னு திருச்சி மக்களுக்கு சந்தேகம் வந்துருச்சு. உண்மையா இருந்தா மனசார பாராட்டி சப்போர்ட் பண்ணுவோம், அதே நேரத்துல வழக்கம்போல ஏமாத்துனா கமெண்ட்ல கிழிச்சு எக்ஸ்போஸ் பண்ணுவோம்னு நம்ம ஊர் நெட்டிசன்கள் செம கெத்தா இறங்கிட்டாங்க.
— Trichy Insight

22/08/2026

📰 தாய்மாமன் சீரு, ஆனா மொய் பேக் காலி: 1 பைசா டெண்டர் பகீர்!
விசேஷ வீட்டுக்கு தாய்மாமன் முறை செய்ய வர்ற மாதிரி பந்தாவா வந்து ஒரு தங்க மோதிரத்தை போட்டுட்டு, கிளம்பும்போது மொத்த மொய் பேக்கையும் தூக்கிட்டு போய்டுவாங்களோங்கிற பதற்றத்துலயே மக்கள வச்சிருக்கு அரசு. 755 கோடி ரூபாய் தங்க மோதிர திட்டத்துல ஒரு நிறுவனம் 1 பைசா கட்டணம் கேட்டு டெண்டர் எடுத்திருக்கு. நம்ம கடைக்கு போய் ஒரு கிராம் மோதிரம் வாங்கினாலே 15 சதவீதம் பில் தீட்டுவாங்க. இதுல அசல் தயாரிப்பு செலவு 10 சதவீதம்னு வச்சாலே 75 கோடி ரூபாய் அந்த கம்பெனிக்கு கைக்காசு செலவு. இந்த செலவுக்கு மார்க்கெட்டிங் ரீச் கூட தேறாதுங்கிறப்போ, இதுக்கு பின்னாடி பெருசா என்னவோ ஓடுதுன்னு மக்கள் கொந்தளிக்கிறாங்க.
— Trichy Insight

22/08/2026

📰 ஸ்ரீரங்கத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தரிசனம்!
முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது குடும்பத்தினருடன் திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அவருக்குக் கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பான பூரணகும்ப வரவேற்பு அளிக்கப்பட்டது. முன்னதாக முத்தரையர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அவர், முக்கிய சன்னதிகளில் வழிபாடு நடத்தினார்.
— Trichy Insight

22/08/2026

📰 திருச்சியில் போதை மாத்திரை, கஞ்சா வேட்டை: 6 பேர் அதிரடி கைது!
திருச்சியில இளைஞர்களை சீரழிக்கும் போதை கலாச்சாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க போலீசார் அதிரடி வேட்டை நடத்தி இருக்காங்க. கோட்டை, ஸ்ரீரங்கம், கருமண்டபம்னு பல இடங்கள்ல ஒரே நேரத்துல ரெய்டு விட்டு இரண்டாயிரம் போதை மாத்திரைகள், புகையிலை மற்றும் கஞ்சா விற்ற ஆறு பேரை போலீசார் அமுக்கியிருக்காங்க. அந்த முழு விவரங்களை இப்போ பார்க்கலாம்.
— Trichy Insight

22/08/2026

📰 திருச்சி கிழக்கை கைவிட்டாரா முதல்வர் விஜய்? உட்கட்சி மோதலால் தவெக திணறல்!
திருச்சி கிழக்கு தொகுதியை முதல்வர் விஜய் ராஜினாமா செய்ததில் இருந்தே அங்கு தவெக உட்கட்சி பூசல் வெடித்துள்ளது. அடுத்த இடைத்தேர்தல் வேட்பாளர் யார், தொகுதி பொறுப்பாளர் யார் என்பதில் நிர்வாகிகளிடையே கடுமையான போட்டி நிலவுகிறது. தலைமை விரைந்து தலையிட்டு முடிவெடுக்காவிட்டால் இந்த கோட்டை மீண்டும் திமுக வசம் செல்ல வாய்ப்புள்ளதாக கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன.
— Trichy Insight

21/08/2026

📰 ** உறையூரில் கலங்கல் குடிநீர்; கொதிப்பில் மக்கள்!
** திருச்சி உறையூர் வைகோக்காரத் தெருவுல கடந்த சில நாட்களாவே குடிநீர் ரொம்ப அசுத்தமாவும் துர்நாற்றத்தோடும் வருதுன்னு மக்கள் பகிரங்கமா வேதனை தெரிவிக்கிறாங்க. இது சம்பந்தமா மாநகராட்சி அதிகாரிகிட்டயும் ஆன்லைன்லயும் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கலன்னு சொல்லிட்டு வராங்க. அடிப்படைத் தேவையான தண்ணீருக்கே இந்த நிலைன்னா மக்கள் என்னதான் பண்ணுவதுனு கோபத்துல இருக்காங்க.
— Trichy Insight

21/08/2026

டிஜிடல் அரெஸ்ட வலையில் சிக்காதீர். திருச்சி மாவட்ட காவல் ஆணையர் காமினி IPS., அவர்கள் விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டள்ளார்.

Address

Tiruchirappalli
620003

Alerts

Be the first to know and let us send you an email when Trichy Insight - Local News Portal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share