03/05/2025
#சட்டமன்றத்தில் உரிமைக்குரலாய் ஒலிக்கும்
மனிதநேய மக்கள் கட்சி…
கடந்த மாதம் மார்ச் 14 ந்தேதி தொடங்கி ஏப்ரல் 29 ந்தேதியோடு 36 நாட்கள் சட்டமன்றம் நடந்து முடிந்துள்ளது. மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் வைத்த கோரிக்கைகள், பேசிய விசயங்களை ரத்தின சுருக்கமாக தருகிறோம்.
தமிழக வரலாற்றில் முஸ்லீம் சமுதாயத்தின் உரிமைக்குரலாய் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருக்கும் ஒரே கட்சி மனிதநேய மக்கள் கட்சி என்றால் அது மிகையல்ல,
சட்டமன்றத்தில் பேச வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் சிறுபான்மை சமுதாயம் மட்டுமின்றி இதர ஒடுக்கப்பட்ட சமுதாயங்களின் கோரிக்கைகளையும், பிரச்சினைகளையும் தொடர்ந்து பேசி வருகின்றனர் மனிதநேய மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள்.
சட்டமன்றத்தில் வைக்கப்பட்ட கோரிக்கைகளின் விபரம்:-
19/03/25
🔹சட்டபேரவையில் நெல்லை டவுன் ஜாகிர் ஹீசைன் படுகொலை குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து மமக தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா MLA ,அவர்கள் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்ககோரியும் உரையாற்றினார்.
20/03/2025
🔹சிறுபான்மை மாணவர்களிற்கான கல்வி உதவி நிதியை கூடுதலாக ஒதுக்க வேண்டும்.அயல்நாடு சென்று ஆராய்ச்சி மாணவர்களிற்கு கல்வி உதவி வழங்க வேண்டும்.-பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா MLA,
🔹பள்ளிக்கூடம் மற்றும் கல்லூரிகளில் மதிய உணவு இடைவேளை நேர மாற்றத்தால் ஜூம்ஆ தொழுகை யை நிறைவேற்றுவதில் சிக்கலை அகற்றும் வகையில் சரி செய்ய வேண்டும். -பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா MLA,
🔹பள்ளிவாசல் மற்றும் தேவலாயங்கள் கட்டுவது மற்றும் மராமத்து பணிகளிற்கு உள்ள சிக்கல்களை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா MLA,
🔹அதிமுக ஆட்சியில் வஃக்ப் சொத்துக்களை சர்கார் புறம்போக்கு வகையறாக்கள் என மாற்றியதை வருவாய் ஆவணங்களை ஆய்வு செய்து முறைப்படுத்த வேண்டும். -பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா MLA,
🔹சென்னை அண்ணாசலையில் உள்ள மதரஸே ஆஜம் பள்ளி வளாகத்தில் ITI யும்,பள்ளி மாணவர்கள் கட்டணமின்றி நவீன மைதானத்தை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். -பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா MLA,
🔹கவிக்கோ அப்துர் ரஹ்மான் படைப்புகளை நாட்டுடமை ஆக்க வேண்டும்,தெருவிற்கு அவர் பெயர் வைக்க வேண்டும்,கவிதா மண்டலம் உருவாக்க வேண்டும். -பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா MLA,
🔹வஞ்சக வஃக்ப் திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். -பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா MLA,
#25/03/2025
🔹சிறுபான்மை மற்றும் பட்டியலின மக்களை பாதிப்படைய செய்யும் தொகுதி வரையறையை நிறுத்த வேண்டும்.-பேரா.ஜவாஹிருல்லா.MLA.
#27/03/2025
🔹வஃக்ப் திருத்த சட்டம் அரசியல் அமைப்பு சட்டத்திற்கு விரோதமானது என பாஜக வானதி சீனிவாசனின் பேச்சுக்கு சட்டபேரவையில் பதிலடி கொடுத்தார் மமக தலைவர் பேரா.ஜவாஹிருல்லா.MLA
🔹என்னுடைய கோரிக்கை மட்டுமல்லாது ஒட்டு மொத்த சமூக நல்லிணக்கத்தை விரும்பக்கூடிய அனைவரின் கோரிக்கையை ஏற்று வக்ஃப் திருத்த சட்டத்திற்க்கு எதிராக தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தமிழ்நாட்டின் முதலமைச்சருக்கு நன்றியுடன் வாழ்த்துக்களை தெரிவித்தார் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர். எம் எச் ஜவாஹிருல்லா எம் எல்ஏ அவர்கள்.
#03/04/2025
🔸வக்ப் திருத்த சட்டத்தை தமிழ்நாட்டு அரசு ஏற்காது என்ற முடிவை முதல்வர் எடுக்க வேண்டும்-ப.அப்துல் சமது,MLA,
#22/04/2025
🔹நீண்டகாலமாக காலியாக உள்ள உதவி செயலாளர் AS1 பணியை நிரப்ப அரசு முன் வருமா என சட்டபேரவையில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேரா.ஜவாஹிருல்லா அவர்களின் கேள்விக்கு பதில் அளித்த
சிறுபான்மை நலத்துறை அமைச்சர் நாசர் அவர்கள் பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட சிறுபான்மை நலச் செயலாளர் அவர்களால் காலியாக உள்ள உதவி செயலாளர் AS1 பணியை நிரப்ப உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
🔹பள்ளிவாசல்கள்,மதரஸாக்கள்,
தர்காக்களுக்கு பட்டா வழங்க அரசு முன் வருமா சட்டபேரவையில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேரா.ஜவாஹிருல்லா அவர்களின் கேள்விக்கு மாண்புமிகு சிறுபான்மை நலத்துறை அமைச்சர் நாசர் அவர்கள் பள்ளிவாசல்கள்,மதரஸாக்கள்,
தர்காக்களுக்கு பட்டா வழங்க வருவாய்த்துறை செயலாளர் வாயிலாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பதிலளித்தார்
🔹பயன்படுத்தப்படாத வக்ஃப் நிலங்களில் நீண்ட கால குத்தகை அடிப்படையில் கல்வி, மருத்துவ கட்டமைப்புகள் இயங்குவதற்கு அரசு நடவடிக்கை எடுக்குமா சட்டபேரவையில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேரா.ஜவாஹிருல்லா அவர்களின் கேள்விக்கு பதிலளித்த மாண்புமிகு சிறுபான்மை நலத்துறை அமைச்சர் நாசர் அவர்கள் சமூக நலத்திட்டங்களை செயல்படுத்த வஃக்ப் நிலங்களை குத்தகைக்கு கேட்டு தனியாரிடமிருந்து மனுக்கள் வரும்பட்சத்தில் மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று அவரின் ஆலோசனைகளின்படி உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.
🔹 கவிக்கோ அப்துல் ரஹ்மான் மற்றும் மணவை முஸ்தபா ஆகியோறுக்கு அரசு விழா கொண்டாடப்படும் என அறிவித்த தமிழக முதல்வருக்கு நன்றி சொல்லி சட்டமன்றத்தில் பேச தொடங்கிய பேரா.ஜவாஹிருல்லா MLA அவர்கள் சென்னையில் இருப்பது போல் மதுரை,கோவை,திருச்சியில் வக்ஃப் தீர்ப்பாயம் அமைக்கபடுமா என கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த சிறுபான்மை நலத்துறை அமைச்சர் நாசர் அவர்கள். மதுரையில் வஃக்ப் தீர்ப்பாயம் அமைய உள்ளதாகவும், மாண்புமிகு உறுப்பினரின் கோரிக்கையை பரிசீலித்து ஆய்வு மேற்கொண்டு கோவை மற்றும் திருச்சியில் தேவையிருப்பின் தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று வஃக்ப் தீர்ப்பாயம் அமைக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.
#28/04/2025
🔹பாஸ்போர்ட் பெறுவதற்கான விசாரணைக்கு காவலர்கள் வீட்டிற்கு வர வேண்டும் என்ற உத்தரவை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும்- -பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா MLA
🔹எனது கோரிக்கையை ஏற்று வாழ்நாள் சிறைவாசிகளிற்கு பொதுமன்னிப்பு வழங்கி விடுவிப்பு செய்ததை போன்று பரோலில் உள்ள 22 சிறைவாசிகளையும் பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டும் -பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா MLA,
🔹காவல்துறையில் உயரக்குறைவினால் காலியாக உள்ள முஸ்லிம் இடங்களை நிரப்பும் வகையில் பட்டியலின மக்களிற்கு உள்ள உயர அளவு சலுகையை பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் இளைஞர்களிற்கும் வகுக்க வேண்டும்- பேரா.ஜவாஹிருல்லா MLA
#29/04/2025
🔸திண்டுக்கலில் உள்ள திப்புசுல்தான மணிமண்டபத்தில் நூலகம் அமைக்க வேண்டும்.திப்புசுல்தான் ஹைதர்அலி வராலற்றை ஆவண படமாக எடுக்க வேண்டும்- ப.அப்துல் சமது MLA
🔸நீதியரசர் ராஜேந்திர சச்சார் அறிக்கை படி சிறுபான்மை மக்கள் அரசியல் பிரதிநிதித்துவம் பெறும் வகையில் தொகுதி மறு சீரமைப்பு நடத்த வேண்டும்
-ப.அப்துல் சமது,MLA,
🔸பன்னூலாசிரியர் MRM அப்துர் ரஹீம் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவரது பிறந்த ஊரான இராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் அமைய உள்ள நூலகத்திற்கு அவரின் பெயரை சூட்ட வேண்டும் - -ப.அப்துல் சமது,MLA
🔸தொல்லியல்துறையின் கட்டுபாட்டிலுள்ள வேலூர் கோட்டையில் உள்ள பள்ளிவாசலில் தொழுகை நடத்த , முதல்வர் அவர்கள் அனுமதி பெற்று தர வேண்டும் -
ப.அப்துல்சமது,MLA,
🔸உலமாக்களிற்கு மாணிய விலையில் இரு சக்கர வாகனங்கள் வழங்கும் வயது வரம்பான 40 லிருந்து 35 வயதாக குறைக்க வேண்டும்-ப.அப்துல் சமது,MLA,
🔸தமிழ்நாட்டில் உள்ள உருது மேல்நிலைபள்ளி,உயர்நிலைபள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் - ப.அப்துல் சமது,MLA,
🔸இஸ்லாமியர்களிற்கான 3.5℅ ஒதுக்கீடு எந்த அளவிற்கு வழங்கப்பட்டுள்ளது என்பதை ஆய்வறிக்கை வெளியிட வேண்டும். இட ஒதுக்கீட்டை 5 சதவீதமாக உயர்த்தி தர வேண்டும்- ப.அப்துல் சமது,MLA
மேற்கண்ட கோரிக்கைகள் மற்றும் பிரச்சினைகள் குறித்து நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் விவாதிக்கப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.