தமிழன்குரல் இணைய நாளிதழ்!
தமிழன்குரல் தமிழர்களுக்கான அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய இணைய நாளிதழாகும். செய்திகள், அரசியல், வர்த்தகம், மருத்துவம், ஜோதிடம், ஆன்மிகம், கல்வி, விளையாட்டு, தொழில்நுட்பம், மகளிர் பக்கம், தலையங்கம், பாமரன், மக்கள் பணியில், கவியரங்கம், கலாச்சாரம், வாசகர் பக்கம் மற்றும் சினிமா போன்ற பல அம்சங்களுடன் புதிய தொழிட்நுட்பத்துடனும் நமது தமிழன்குரல் இணையத்தளம் இயங்கி வருகிறத
ு.
2009ம் ஆண்டு ஜூன் 5ம் தேதி இலாப நோக்கற்ற நிறுவனமாக தொடங்கப்பட்டது. இவ்வலைதளம் மூலம் செய்திகளை உடனுக்குடன் உலக தமிழகளுக்கு கொண்டு செல்வது, நம் தமிழ் மொழியின் பெருமையை எடுத்துரைப்பது மற்றும் தமிழை வளர்ப்பதே இதன் நோக்கமாகும்.
தற்போது நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் நமது தமிழன்குரல் 2013 ஆகஸ்ட் 5ம் தேதி புதிய பதிப்பை வெளியிட்டு உலக தமிழர்களின் முழு ஆதரவை பெற்றுள்ளோம்.
இந்த இடைப்பட்ட காலத்தில் பல போட்டிகள், பொறாமைகள், அடுத்தடுத்து பல தடைகள் வந்த போதும் அத்தனையும் புறம்தள்ளி, இன்று இந்தியாவின் மிகச்சிறந்த தமிழ் வலை தளமாக நாம் வளர்ந்தது வருவது எங்களுக்கு பெருமையும் மகிழ்ச்சியை கொடுக்கிறது. அதனால் எங்களுக்கு இன்னும் பொறுப்பும், கடமையும் அதிகரித்துள்ளது தெரிகிறது.
இந்நிறுவனம் எந்த கட்சியையும் அல்லது நிறுவனத்துடனும் சார்ந்து பணியாற்றவில்லை. மேலும் எங்கள் வலைத்தளத்தில் பிறர் செய்யும் தவறுகளை சுட்டிக் காட்டுவதை விட அவர் செய்யும் நன்மைகளை சொல்வதே எமது தனிச்சிறப்பு. நமது வலை தளத்தில் ஆபாச செய்திகளோ, ஆபாச படங்களோ, பிறரை குறை கூறுவதோ, யாரையும் புண்படுத்துவது போன்ற செய்திகள் எதையும் நாங்கள் வெளியிடுவதில்லை என்பதை பெருமையுடன் தெரிவித்துகொள்கிறோம்.
எங்களை இவ்வளவு காலம் ஆதரித்து வந்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றி ! நமது இணைய நாளிதழை நம்பர் 1 தமிழ் நாளிதழாக மாற்றிட தொடர்ந்திருங்கள் !
வாழ்க தமிழ் ! வளர்க தமிழ் !