12/10/2025
அன்பார்ந்த ஊடகங்களுக்கு ஒரு கனிவான வேண்டுகோள்,
கடந்த ஞாயிறு ஒளிபரப்பான நீயா நானா மூலமா பிரபலமான இந்த பொண்ணு பேசுனதை கேட்டு நாம எல்லாருமே சிலிர்த்து போனோம்,
அதுக்கு காரணமான மாமியாரையும் பாராட்டியாச்சு,
ஆனா இதுல பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்குறது அந்த பையன்றதை
கொஞ்ச தாமதமாதான் உணர முடியுது...
ஆனாலும் இவுங்கள பேட்டி எடுக்குறேன்னு ஒவ்வொருத்தரா மைக்க தூக்கிட்டு உங்க Views க்காக அவுங்க வீட்டுக்கு போய்,
நல்லா இருக்க குடும்பத்தை கெ*டுத்துறாதிங்க...
ஏன்னா அந்த பொண்ணுட்ட இவுங்க பேட்டி எடுக்குறப்போ அந்த பொண்ணு இந்த பையன உக்கார வச்சுக்கிட்டே இறந்து போன தன்னோட முதல் கணவரயே என் புருஷன்,
அவர் இருந்தா இன்னும் என்னை நல்லா படிக்க வச்சு பாத்திருப்பாரு,
அது இதுன்னு ஏதோ ஒரு ஆர்வத்துலையும்,
அறியாமையிலையும்
வெள்ளந்தியா பேசுறாங்க,
ஆனா இதெல்லாம் Telecast ஆகுறப்போ அந்த மறுமணம் செய்த பையனுக்கு ஒரு வ*ருத்ததை உண்டு பண்ணும்,
நாளடைவுல இது அவுங்களுக்குள்ள ஒரு Misunderstanding வரதுக்கு கூட வாய்ப்பிருக்கு...
மேலும் போக போக வலைதளங்கள்ல அந்த பெண் மீதானா அனுதாபங்கள் கோபமா மாறும்,
அப்பறம் தேவையில்லாம விமர்சனத்துக்குள்ளாகி ஏதாவது மனம் நோகும்படியான கமெண்டுகளை பாத்தாங்கன்னா அவுங்களுக்கு அது தேவையில்லாத மன உ*ளைச்சல் தரும்...
ஆக அமைதிய இருக்க இடம் தெரியாம வாழ்ந்த வரையும் இருந்த ஒரு நிம்மதியும்,
இறை அமைச்சுக்குடுத்த வாழ்க்கையும் சீர்குலைஞ்சிடும்...
இனி இதோட இவுங்கள பத்தின பதிவுகளை கூட பகிர்வதை தவிர்த்திடலாம்னு தான் இருக்கேன்...
கீழ பதியப்பட்ட புகைப்படங்கள் நீயாநானாக்கு பிறகா இவுங்கள கூப்பிட்டு பேட்டி எடுத்த சேனல்கள்ல இருந்து ஒரு க்ளிக்...
எனக்கு தெரிஞ்சு இனிமே யாரும் பேட்டி எடுக்க கூப்பிட்டா இவுங்களே தவிர்த்திட்றதும் நல்லது,
அவுங்கள அப்படியே விட்டுருங்க நிம்மதியா வாழட்டும்...
But சில எச்ச மீடியா வேலையா பதனி பதனி அந்தமாறிதான்...
❤❤❤
Disney+