Dhinam vision

Dhinam vision Daily useful messages on frequency

15/07/2026

அனைவருக்கும் வணக்கம்.
குளூனி சமூக சேவை மையம், செல்லியம்பட்டியில், தமிழ்நாடு அரசின் சிங்கப்பெண் அதிரடிப்படை குறித்த விழிப்புணர்வு முகாம் 12.07.2026 அன்று காலை 11.00 மணியளவில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சப்-இன்ஸ்பெக்டர் திருமதி. சரசு அவர்கள் தலைமையிலான காவல்துறை குழுவினர் கலந்து கொண்டு, பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு, அவர்களுக்கான சட்ட உரிமைகள் மற்றும் அவசர உதவிகளைப் பெறும் வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு வழங்கினர்.

மேலும், குளூனி சமூக சேவை மையத்தின் இயக்குநர் அருட்சகோதரி எஃப்ரேம் அவர்களும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தார்.

இம்முகாமில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் ஐந்து இடங்களைப் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் 250-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர். மதியம் 1.30 மணியளவில் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது. இறுதியாக, அனைவருக்கும் நன்றி தெரிவித்து விழிப்புணர்வு முகாம் இனிதே நிறைவுற்றது.



#தினம்விஷன்
#காமராஜர்




15/07/2026
15/07/2026

திருச்சியில் ..
திமுக சார்பாக,மேற்கு சட்டமன்ற உறுப்பினர்,முன்னால் அமைச்சர்
கே.என்.நேரு அவர்களை தலைமையில் திமுகவினர்
கர்மவீரர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தினார்..

இந்நிகழ்வில் உடன்
மத்திய , வடக்கு மாவட்ட கழக செயலாளர்கள், மாநகர செயலாளர் மற்றும் நகர, ஒன்றி
ய, பேரூர்,பகுதி, வட்ட கழக நிர்வாகளிகள் கழக முன்னவர்கள் பலர் உடனிருந்தனர்



#தினம்விஷன்
#காமராஜர்



12/03/2026

திருச்சியில் இலவச கம்யூட்டர் பயிற்சி

Address

Tiruchirappalli

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dhinam vision posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share