GoldenTrichy

GoldenTrichy Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from GoldenTrichy, Media Agency, Tiruchirappalli.

அரசியல் /ஆன்மீகம் /விளையாட்டு குழந்தைகளின் சாதனைகள் /சினிமா கோவில் /திருவிழாக்கள் மற்றும் அனைத்து ஊர்களிலும் நடக்கும் செய்திகள் அரிய!மக்களை மகிழ்வித்திட கோல்டன் திருச்சி!

உங்களது வியாபாரங்களை சமூக வலைதளங்களில் ஒளிபரப்பு செய்ய வேண்டுமா? 9943475716.

10/09/2026

இடைத்தேர்தல் மக்கள் வரிப்பணத்தை வீணடிக்க கூடிய செயல் தேவையில்லாத வேலை தான் இந்த இடைத்தேர்தல் எம்பி கனிமொழி பேட்டி..

10/09/2026

முதல் நாள் புகார் அடுத்த நாள் கொ**லை

திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் தன்னை அழைத்து மிரட்டியதாக புகார் தெரிவித்த மறுநாளே பிரதீப் ராஜ் (28) என்பவர் படுகொ**லை.

காவல் ஆய்வாளர் கந்துவட்டி ரவுடிக்கு ஆதரவாக செயல்பட்டு தன் மீது பொய் வழக்கு போடுவதாக பிரதீப் குற்றம்சாட்டி இருந்த நிலையில் அதிர்ச்சி சம்பவம்.

10/09/2026

தங்கத் தமிழ்மகன் ஸ்டாலின்... வைகோ வீடியோ TREND

ஸ்டாலின் மிசாவில் கைது செய்யப்பட்டதற்கு ஆதாரமாக வைகோ பேசிய பழைய வீடியோவை திமுகவினர் டிரெண்ட் செய்து வருகின்றனர். அந்த வீடியோவில், ஸ்டாலினுக்கு திருமணமான 5 நாளில் வாலிபத்தின் வசந்தத்தை காண வேண்டிய சமயத்தில் மகனை மனமகிழ்வோடு சிறைக்கு அனுப்பிவைத்தார் கருணாநிதி. தங்க தமிழ்மகன் ஸ்டாலினை காப்பாற்ற சிட்டி பாபு உயிர்விட்டார் என்று வைகோ உருக்கமாக பேசுகிறார். இது தவெக தலைமைக்கு நெருக்கடியாக மாறியுள்ளது...

10/09/2026

'தம்பி விஜய்'.. பிரசாரத்தை தொடங்கிய ஸ்டாலின்!

ஸ்டாலின் குறித்த CM விஜய்யின் பேச்சு இடைத்தேர்தலில் தவெகவுக்கு பின்னடைவாக மாறியுள்ளது. எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி கூட்டணி கட்சியான விசிகவும் முதல்வரின் உடல்மொழியை கடுமையாக விமர்சித்தது. இந்நிலையில் ஸ்டாலினின் 'தம்பி விஜய்' வீடியோ அனுதாபத்தை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளதாக விமர்சகர்கள் கருதுகிறார்கள். மேலும், இடைத்தேர்தல் பிரசாரத்தை இந்த வீடியோ மூலம் தொடங்கிவிட்டார் என்றும் கூறுகிறார்கள்...

10/09/2026

தவெக கூட்டணி பெயரை அறிவித்தார் CM விஜய்

தவெக தலைமையிலான கூட்டணிக்கு 'மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி’ என்ற பெயரை CM விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். பனையூர் தவெக ஆபிஸில் கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் சுமார் 1.30 மணி நேரம் நடைபெற்றது. அப்போது இடைத்தேர்தல், கூட்டணியின் பெயர், அடுத்தக்கட்ட செயல்பாடு குறித்து ஆலோசிக்கப்பட்டது. தொடர்ந்து CM விஜய் கூட்டணி பெயரை அறிவிக்க, அதனை அங்கிருந்த தலைவர்களும் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்...

10/09/2026

நடிகர் மீது பாய்ந்த சிங்கம்.. அதிர்ச்சி VIDEO!

கன்னட நடிகர் கிரண் ராஜ் மீது சிங்கம் ஒன்று பாயும் வீடியோ SM-ல் பார்ப்போரை பதை பதைக்க வைத்தது. இந்நிலையில், அது படத்திற்காக தான் செய்யும் பயிற்சி என அவரே வீடியோ மூலம் விளக்கமளித்துள்ளார். மேலும், ராக்கி என்ற சிங்கத்திடம் பழகி வருகிறேன். அது என்னை தாக்கவில்லை. ரீல்ஸில் கட் செய்து போட்டதால் அப்படி தெரிகிறது. ஆகையால், யாரும் கவலைப் பட வேண்டாம் எனவும் அதில் கேட்டுக்கொண்டுள்ளார்.

09/09/2026

ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த SK! VIDEO

மதுரையில் சிவகார்த்திகேயன் சாலையில் நின்ற தனது ரசிகர்களை சர்ப்ரைஸாக சந்தித்து உரையாடியுள்ளார். 'சேயோன்' ஷூட்டுக்காக அங்கு சென்றவர் ‘ஃபேமஸ் ஜிகர்தண்டா' கடைக்கு விசிட் அடித்தார். ரசிகர்கள் அவரைக் கண்டதும் சூழ்ந்துகொள்ள, SK அவர்களிடம் மகிழ்ச்சியாக உரையாடினார். அவர்களுக்கும் ஜிகர்தண்டா வாங்கித் தந்தார். இப்படம் வருகிற அக்டோபரில் ரிலீஸாகிறது. யாரெல்லாம் படத்திற்கு வெயிட்டிங்?

09/09/2026
09/09/2026

8 மாணவர்கள் உயிரி**'ழப்பு வெளிவந்த அதிர்ச்சி தகவல் 🥲

09/09/2026

இடைத்தேர்தல் பணிகள்
ஆரம்பம்

அக்.6-ல் தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டதையடுத்து, அங்கு தேர்தல் பணிகள் தொடங்கியுள்ளன. சாலைகளில் வைக்கப்பட்டிருந்த தவெக, திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் பேனர்கள் அகற்றப்பட்டதோடு, தலைவர்களின் சிலைகளும் துணியால் மூடப்பட்டன. அத்துடன் ₹50,000-க்கு மேல் பணம் எடுத்துச்செல்வோரை தடுத்தி நிறுத்தி உரிய ஆவணங்கள் இருக்கிறதா என போலீசார் சோதிக்கின்றனர்.

Address

Tiruchirappalli

Website

Alerts

Be the first to know and let us send you an email when GoldenTrichy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category