
14/06/2025
இரண்டு புதிய நூல்கள் வெளியீடு இன்று (14.06.2025) மாலை 5.30 மணிக்கு பாளை வ.உ.சி. மைதானத்தில் நடைபெற்றது. க. நா. சுப்ரமண்யம் எழுதிய 'உலகத்துச் சிறந்த நாவலாசிரியர்கள்' பற்றி நண்பர் சுடலைமுத்து பேசினார். சுரேஷ் பிரதீப் எழுதிய 'கிருஷ்ண ஜனனம்' குறுங்கதைத் தொகுப்பு பற்றி நண்பர் சாமுவேல் ராஜா பேசினார். 'தினவு' இதழின் ஆசிரியர் ஆகாசமுத்து, நண்பர்கள் ஈஸ்வரன், பொன்னையா, மாரி விஜய் ஆகியோர் நிகழ்வில் கலந்துகொண்டனர்.