02/02/2020
மாணவியை தற்கொலைக்கு தூண்டிய ஆசிரியைகள் மீது 306 பிரிவில் வழக்கு .. குழந்தை இயேசு அரசு உதவி பெறும் பள்ளி மாணவி பேச்சியம்மாள் 15, பள்ளி ஆசிரியைகளால், மாணவிகள் முன்னிலையில் அடித்து துன்புறுத்தப்பட்டுள்ளார். சம்பவத்தன்று காலையில் பள்ளிக்கு வந்த போது திருப்பியனுப்பட்டார். இதனால் மனமுடைந்து செய்துங்கநல்லூர் வீட்டிற்கு சென்று தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். மாணவி பயின்ற 10ம் வகுப்பு பி பிரிவு மாணவிகளை பள்ளியில் சந்தித்து மாவட்ட குழந்தை நல அலுவலர் விசாரணை மேற்கொண்டார். வகுப்பில் ஆசிரியைகள், மாணவி பேச்சியம்மாள் உள்ளிட்டோரை சக மாணவிகள் முன்னிலையில் பிரம்பால் பிறப்புறுப்பு உள்ளிட்ட இடங்களில் அடித்து காயப்படுத்தியுள்ளனர். இதையெல்லாம் மாணவிகள் கடிதமாக எழுதி குழந்தை நல அலுவலரிடம் தந்துள்ளனர். மாணவி, தொடர்ந்து டார்ச்சர் செய்யப்படுவதால் தாம் தற்கொலை செய்வதை தவிர வேறு வழியில்லை என வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். குழந்தை நல அலுவலர் அளித்த விசாரணை அறிக்கையின் அடிப்படையில் ஆசிரியைகள் கேத்ரின், டெய்சி ஆகியோர் மீது மாணவியை தற்கொலைக்கு தூண்டியதற்காக இந்திய தண்டனை சட்டம் 306 ன் படி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீசார் வழக்கு பதிவு செய்ததால் 4 நாட்களுக்கு பிறகு இன்று பேச்சியம்மாளின் உடலை திருநெல்வேலி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இருந்து பெற்றுக் கொள்கின்றனர்.