Madasamy Mani

Madasamy Mani Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Madasamy Mani, Digital creator, Tamilnadu, Tirunelveli.

தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சி
Treasurer - Panagudi Town Congress Committee
State Secretary - Tamilnadu Congress Research Department
Vice President - Indian Youth Congress, Radhapuram

This morning (21.08.2025), Tirunelveli East District Youth Congress Executive Committee meeting was held at the historic...
21/08/2025

This morning (21.08.2025), Tirunelveli East District Youth Congress Executive Committee meeting was held at the historic Tirunelveli District Congress Office under the leadership of Tamil Nadu Congress President Thiru. K.P. Surya Prakash.

The session began with floral tributes to Perunthalaivar Thiru. K. Kamaraj and former Prime Minister Annai Indira Gandhi, honouring their timeless contributions to our nation. The newly elected Youth Congress office bearers of Tirunelveli East District actively participated in this important gathering.

In his presidential address, Thiru. Surya Prakash emphasized the need to appoint Youth Congress office bearers in every constituency, to raise the voices of young people and to work tirelessly towards their solutions. He also strongly condemned the large scale “vote theft” engineered by the BJP government in collusion with the Election Commission of India.

Thirumathi. Takkallapally Sagarika Rao, Youth Congress National Secretary & Tamil Nadu incharge, highlighted the crucial role of women in the Youth Congress and stressed the importance of structured training programs to empower them. Her words deeply inspired the gathering, especially the young women present.

Following the Executive Committee meeting, as per the directive of Congress Leader Rahul Gandhi, a public awareness campaign against vote theft was organised near the former Speaker Thiru. Sellapandian’s flyover, Vannarapettai, Tirunelveli. This campaign was led by District President Thiru. Obeth Newbegin, along with Thiru. Surya Prakash and Thirumathi. Sagarika Rao Takkallapally.

I, Madasamy Mani (Vice President, Radhapuram Assembly Youth Congress), actively participated in the campaign along with Thiru. Nickson Gnanasingh (Vice President, Nanguneri Assembly), Thiru. Senthil Vel (President, Ambasamudram Assembly), Thiru. Harish M. (Chief General Secretary, TN Youth Congress), Thiru. Jeban Chella Bruce (General Secretary, TN Youth Congress), Mr. Pal Samy (Tirunelveli East District incharge & TN Youth Congress General Secretary) and several other dedicated functionaries and members.

Together, we reached out to motorists and the general public, spreading awareness about the dangerous threat of vote theft and the need to protect democracy.

- Madasamy Mani
Vice President, Radhapuram Assembly Youth Congress
21.08.2025
இன்று (21.08.2025) காலை, திருநெல்வேலி கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் , திருநெல்வேலி மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திரு. K.P. சூரிய பிரகாஷ் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த செயற்குழு கூட்டத்தில், புதிதாக தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் பங்குகொண்டோம். கூட்டம் துவங்கும் முன்னர், பெருந்தலைவர் கு. காமராஜர் அவர்களின் சிலைக்கும், அன்னை இந்திரா காந்தி அவர்களின் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம்.

இச்செயற்குழு கூட்டத்தில், மாநில தலைவர் திரு. சூர்யா பிரகாஷ் அவர்கள், தொகுதி வாரியாக இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் நியமித்தல், மற்றும் இளைஞர்கள் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு குரல் கொடுப்பதும், அவற்றின் தீர்வுக்காக பாடுபடுவதும் பற்றி விவரித்தார். இந்திய தேர்தல் ஆணையமும், பிஜேபி அரசும் சேர்ந்து நடத்திய "ஓட்டு திருட்டு" அராஜகம் பற்றிய ஒரு விளக்க உரையை, இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்கள் மத்தியில் எடுத்துரைத்தார்.

பின்னர் இளைஞர் காங்கிரஸ் தேசிய செயலாளரும், தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் பொறுப்பாளருமான திருமதி. சகாரிகா ராவ் அவர்கள், இளைஞர் காங்கிரசில் பெண்களின் ஈடுபாட்டின் முக்கியத்துவம், அவர்களுக்கான பயிற்சியும் எடுத்துரைத்தார். இள வயது பெண்கள் நிரம்பிய கூட்டம், அவரின் பேச்சு எழுச்சியாக அமைந்தது.

செயற்குழு கூட்டம் நிறைவுற்ற பிறகு, திருநெல்வேலி வண்ணாரப்பேட்டை பகுதியில், சபாநாயகர் திரு. செல்லப்பாண்டியன் மேம்பாலம் அருகே, தலைவர் ராகுல் காந்தி அவர்கள் முன்னெடுக்க சொல்லிய "ஓட்டு திருட்டு" பிரச்சாரத்தை முக்கிய சாலையில் மாவட்ட தலைவர் திரு. ஒபெத் நியூபிகின் அவர்கள், திரு. சூரிய பிரகாஷ் மற்றும் திருமதி. சகாரிகா ராவ் ஆகியோர் தலைமையில், முன்னெடுதோம்.

இதில் நான் மாடசாமி ( ராதாபுரம் தொகுதி இளைஞர் காங்கிரஸ் துணை தலைவர் ), நாங்குநேரி தொகுதி இளைஞர் காங்கிரஸ் துணை தலைவர் திரு. நிக்சன் ஞானசிங் அவர்கள், அம்பாசமுத்திரம் தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் திரு. செந்தில் வேல் அவர்கள், தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் முதன்மை பொது செயலாளர் திரு. ஹரிஷ் அவர்கள், தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் பொது செயலாளர் திரு. ஜெபன் செல்ல ப்ரூஸ், நெல்லை கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் பொறுப்பாளரும் தமிழ்நாடு இளைஞர் காங்கிரசு பொது செயலாளர் திரு. பால் சாமி அவர்கள் மற்றும் நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டு வாகன ஓட்டிகளிடமும், பொது மக்களிடமும் பிரச்சாரம் மேற்கொண்டோம் - ராதாபுரம் மாடசாமி மணி 21.08.2025
Rahul Gandhi Priyanka Gandhi Vadra Indian National Congress Indian National Congress - Tamil Nadu Indian Youth Congress National Students' Union of India (नेशनल स्टूडेंट्स यूनियन ऑफ इंडिया)

Uday Bhanu Chib Supriya Shrinate Srivatsa YB Gaurav Pandhi Girish Chodankar Rajeev Gowda K.C. Venugopal Krishna Allavaru Alka Lamba Netta D'Souza K Selvaperunthagai Tamil Nadu Youth Congress Adv Jebi Mather Arun Bhaskar

22/07/2025
23/06/2025

Thiru. Pawan Kalyan , before you attempt to lecture Tamilians on "secularism", open history book of India.

It was Congress leaders who fearlessly fought to break caste barriers and ensured temple entry rights for OBCs, SCs, STs & MBCs at Madurai Meenakshi Amman Temple, Suchindram Temple and many others across Tamil Nadu.

Hindus in Tamil Nadu don’t need lessons from a Bharatiya Janata Party (BJP) mouthpiece. We have consistently and rightfully rejected the communal agenda of the BJP and its fringe elements, because the Indian Constitution empowers us to uphold secularism, not surrender to hate.
India With Congress Madasamy Mani

Rahul Gandhi Priyanka Gandhi Vadra Uday Bhanu Chib Supriya Shrinate Girish Chodankar Srivatsa YB Gaurav Pandhi Krishna Allavaru Challa Vamshi Chand Reddy Sachin Rao Karti P Chidambaram Jothimani Sennimalai Indian National Congress Indian National Congress - Tamil Nadu

09/05/2025

“We survived. You and I. And those who survive have a duty. Our duty is to do our best to keep on living. Even if our lives are not perfect.” - Haruki Murakami

30/03/2025

Mr. "Switch Off" Speaker Om Birla, the Parliament belongs to everyone, and even a party with just one MP has the right to free speech under Article 105. You cannot override the rules based on your flawed interpretation. DMK ( DMK - Dravida Munnetra Kazhagam) , why didn’t you stand with the Indian National Congress MPs on the mic switch-off issue?
Om Birla Honourable Loksabha Speaker India With Congress Madasamy Mani

Rahul Gandhi Priyanka Gandhi Vadra Supriya Shrinate Uday Bhanu Chib Krishna Allavaru Indian National Congress - Tamil Nadu K Selvaperunthagai Girish Chodankar K.C. Venugopal Manickam Tagore Karti P Chidambaram Jothimani Sennimalai

30/03/2025

Don't Let Southern States Face Kanyakumari's Fate: Say No to Unfair Delimitation !

If the fascist Bharatiya Janata Party (BJP) proceeds with delimitation based solely on population, southern states risk losing significant parliamentary representation, despite their contribution to India's economy and development. We Congress Party cadres demand a clear and transparent framework for delimitation, rather than empty assurances from the Home Minister and Finance Minister.

Between the 2006 and 2011 elections, Kanyakumari district lost one Assembly seat (Thiruvattar) due to delimitation, even though the total number of Assembly constituencies in Tamil Nadu remained unchanged. This serves as a stark reminder of how political representation can be altered through flawed delimitation policies.

India With Congress Madasamy Mani

Rahul Gandhi Priyanka Gandhi Vadra Krishna Allavaru Jothimani Sennimalai Supriya Shrinate Karti P Chidambaram Uday Bhanu Chib Gaurav Pandhi

Indian National Congress Indian National Congress - Tamil Nadu K Selvaperunthagai K.C. Venugopal Priyanka Gandhi Vadra Girish Chodankar Challa Vamshi Chand Reddy Alka Lamba Dr.Syed Naseer Hussain, MP, Rajya Sabha Suraj Hegde Jairam Ramesh

Manickam Tagore Vijay Vasanth Dr A Chella Kumar Mukul Wasnik Netta D'Souza Meenakshi Natarajan Adv Jebi Mather Sachin Rao Amarinder Singh Raja Warring IWC Women

When a half baked "Entire Political Science" Narendra Modi government announces a scheme, it inevitably burns a massive ...
03/03/2025

When a half baked "Entire Political Science" Narendra Modi government announces a scheme, it inevitably burns a massive hole in the exchequer.

Madam Nirmala Sitharaman Ji, do you still believe you’re capable of managing this country’s finances ?

Government Of India bet on SGBs had led to a staggering 930% increase in its liabilities on this borrowing by 2023-24. GOI would not only have to pay 2.5% interest on gold bonds, but would also have to repay bond holder at current price of gold, not the price at which the bonds were bought.

“The assumption in the government at the time was that price of gold would increase, but at a low & manageable level and so the government’s liabilities on these bonds would be contained,” a former government official.
India With Congress Rahul Gandhi Priyanka Gandhi Vadra Girish Chodankar Surajj M N Hegde Madasamy Mani

Indian National Congress - Tamil Nadu Indian National Congress Indian National Congress - Kerala Rajeev Gowda Supriya Shrinate Pawan Khera K Selvaperunthagai Uday Bhanu Chib Jothimani Sennimalai Karti P Chidambaram Krishna Allavaru AICC Communications

Openness is the key ! A must read how Dr.Manmohan Singh's led Congress Government formulated "balanced" policies in cons...
04/02/2025

Openness is the key !

A must read how Dr.Manmohan Singh's led Congress Government formulated "balanced" policies in conserving forests, animals, tribals and other stakeholders.

இந்தியாவிற்கு சமூக நீதி தந்த காங்கிரசை, ராதாபுரம் தொகுதியில் மீண்டும் பலம் பெற செய்வோம் !   டாக்டர்.மன்மோகன் சிங் கொண்டு...
02/02/2025

இந்தியாவிற்கு சமூக நீதி தந்த காங்கிரசை, ராதாபுரம் தொகுதியில் மீண்டும் பலம் பெற செய்வோம் !

டாக்டர்.மன்மோகன் சிங் கொண்டு வந்த சமூக நீதி சட்டங்கள் மக்களுக்கு உரிமைகள் வழங்கியது - தகவல் உரிமை சட்டம், கல்வி உரிமை சட்டம், உணவு பாதுகாப்பு சட்டம், நில கையகப்படுத்துதல் சட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் போன்றவை பாசிச பிஜேபி மோடி ஆட்சி மற்றும் சில பாசிச மாநில அரசாங்கங்களால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது.

நாம் ஒன்றாக முயற்சி செய்தால் மாற்றம் நிகழ்த்தலாம். சமூக நியாயத்திற்கான கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்போம். இணைவீர் இந்திய இளைஞர் காங்கிரஸ் - ராதாபுரம் மாடசாமி மணி 02.02.2025
Indian National Congress Indian National Congress - Tamil Nadu Indian Youth Congress Rahul Gandhi Priyanka Gandhi Vadra

Dr. Manmohan Singh - Architect of Social Justice in Modern India - Written by Madasamy Mani 28.12.2024நவீன இந்தியாவிற்கு...
28/12/2024

Dr. Manmohan Singh - Architect of Social Justice in Modern India - Written by Madasamy Mani 28.12.2024

நவீன இந்தியாவிற்கு சமூக நீதி தந்த தலைமகன் டாக்டர்.மன்மோகன் சிங் அவர்கள் - மாடசாமி மணி 28.12.2024

கல்வியை மட்டும் மூலதனமாக கொண்டு, இந்தியாவின் ஆகப்பெரும் அதிகாரத்தின் உச்சம் தொட்டு, நாட்டையே காப்பாற்றியவர்கள் இருவர். டாக்டர்.மன்மோகன் சிங் அவர்களும் APJ அப்துல் கலாம் அவர்களும். தங்களுடைய வாழ்க்கையை பொது வாழ்விற்காக, நாட்டின் முன்னேற்றத்திற்காக செலவிட்ட உன்னத தலைவர்கள் இவர்கள் இருவரும்.

டாக்டர்.மன்மோகன் சிங் அவர்களின் வாழ்க்கை நமக்கும் நம் வருங்கால மக்களுக்கும் ஒரு அளவுகோலாக மாறி இருக்கிறது. பணிவும், நேர்மையும், அமைதியுடன் அனைத்தும் அணுகக்கூடிய வழக்கத்தை தன்னுடைய வாழக்கை முழுக்க கடைபிடித்த உத்தமர், டாக்டர்.மன்மோகன் சிங் அவர்கள்.

பள்ளி பருவத்தில் இருந்தே மன்மோகன் சிங் அவர்கள் மீது அதீத அன்பு உண்டு. மன்மோகன் சிங் அவர்களின் இறப்பு செய்தி கேட்டு, நண்பர்கள் சிலர் என்னை தேற்றியது மிகவும் பயன் பட்டது. அவர்களுக்கு மிக்க நன்றி. குறிப்பாக பள்ளி கால தோழி ஒருவர் "I could understand how you would be feeling right now. Time heals. He is old enough. Lived with a great purpose for the nation. He has done enough for us. Let him rest in peace now." என்று Whats App யில் அனுப்பினார். அதன் பிறகே அன்று இரவு (26.12.2024) என்னால் தூங்க செல்ல முடிந்தது.

டாக்டர்.மன்மோகன் சிங் அவர்கள் ஒரு படித்த காமராஜர் என்று அடிக்கடி சொல்வேன். ஏன் என்றல், இந்த இரு பெரும் தலைவர்களும், கொண்டு வந்த சட்டங்கள் திட்டங்கள் அனைத்தும் ஏழை எளிய மக்களுக்காகவும், அவர்கள் வறுமையில் இருந்து மீண்டு வருவதற்காகவும் இருந்துள்ளது. சமூக நீதி தலைவர் காமராஜர் போன்றே, தன்னுடைய வாழ்நாளை இந்தியா முழுமைக்கும் சமூக நீதி அடைய வாழ்ந்து காட்டி இருக்கிறார் டாக்டர்.மன்மோகன் சிங் அவர்கள்.

சமூக நீதி 1 : படிப்பின் முக்கியத்துவம் அதிலும் தரமான கல்வி ஏழை எளிய, வறுமை கோட்டிற்கு கீழே வாழும் மக்களுக்கு கிடைக்கப்பெற செய்ய கொண்டு வந்தார் இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டம் - Right To Free and Compulsory Education. தரமான கல்வி எட்டாக்கனியாக இருக்கும் ஏழை மக்களுக்கு, கல்வி என்கிற சமூக நீதியை கொடுத்த தலைவன் டாக்டர்.மன்மோகன் சிங்.

சமூக நீதி 2 : மக்கள் கையில் பண புழக்கத்தை அதிகரிக்க செய்யவும், வறுமையில் இருந்து மக்களை மீட்கவும், அவர்களின் வாங்கும் சக்தியை ஓரளவுக்கு மேம்படுத்தவும் கொண்டு வந்தார், மஹாத்மா காந்தி தேசிய ஊராக வேலைவாய்ப்பு திட்டம். பிறகு அதில் ஊழலை தடுக்க ஆதார் திட்டம் கொண்டு வந்து, வங்கி சேவைகளை அம்மக்களுக்கு பெற செய்தார் டாக்டர்.மன்மோகன் சிங். இன்றும் ஏழை குடும்பங்களுக்கு நிதி ஆதராம் கிட்ட ஊராக வேலைவாய்ப்பு திட்டம் உதவியாக இருக்கிறது.

பிரதமரான இரண்டே வருடங்களில் விவசாயிகளின் ரூ.72,000 ஆயிரம் கோடி கடனை தள்ளுபடி செய்து, அவர்களின் அடுத்த கட்ட வாழ்க்கைக்கு உதவினார் டாக்டர்.மன்மோகன் சிங். விவசாயிகளுக்கு minimum support price குறைந்த பட்ச ஆதார விலையை மாற்றி அமைக்க, திரு. M.S.ஸ்வாமிநாதன் அவர்கள் தலைமையில் விவசாயிகளுக்கான தேசிய ஆணையத்தை ( National Commission on Farmers ) உருவாக்கினார்.

சமூக நீதி 3 : இந்தியா முழுமைக்கும் பசியை போக்க, குழந்தைகளின் ஊட்டச்சத்து மேம்பட , மதிய உணவு அளித்திட கொண்டு வந்தார் தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் ( Food Security Act ).

சமூக நீதி 4 : இன்போசிஸ் நாராயண மூர்த்தி அவர்கள், ஒரு கணினியை இந்தியாவிற்குள் இறக்குமதி செய்ய 3 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியதாக இருந்தது. டாக்டர்.மன்மோகன் சிங் 1991 ஆம் ஆண்டு கொண்டு வந்த license ஒழிப்பு திட்டத்தால், 1998 ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் எங்கள் பள்ளியிலேயே மாணவர்கள் கணினி பயில துவங்கினோம்.

இன்று கணினி புரட்சியில், முக்கியமாக சேவை துறையில் முன்னணி நாடாக நம் இந்திய நாடு திகழவும், அதன் மூலம் அந்நிய முதலீடுகள் ஈர்க்கவும் டாக்டர்.மன்மோகன் சிங் தாராளமய கொள்கைகள் முக்கிய பங்கு ஆற்றின. இன்று பல லட்ச குடும்பங்களின் பிள்ளைகள் சேவை துறையை சார்ந்தவர்களாகவும், பொருளாதார அடிப்படையில் அவர்கள் வாழக்கை தரம் முன்னேறி இருக்கிறது என்றால், தன்னுடைய கொள்கைகளால் பொருளாதார ரீதியாக சமூக நீதியை நிலைநாட்டியவர் டாக்டர்.மன்மோகன் சிங் அவர்கள்.

சமூக நீதி 5 : கார்ப்பரேட்களின் சமூகப் பொறுப்பு ( Corporate Social Responsibility )

பெருநிறுவனங்கள் தாங்கள் ஈட்டும் லாபத்தில் இருந்து 2% பணத்தை மக்களின் மற்றும் நாட்டின் முன்னேற்றத்திற்காக செலவழிக்க வைத்தார். குழந்தைகள் ஊட்டச்சத்து, பெண் கல்வி, திறன் மேம்பாடு, சுகாதாரம், முதியோர் நலன், ஆராய்ச்சி, விளையாட்டு துறை, ஊரக வளர்ச்சி என்று அனைத்து தரப்பு ஏழை மக்களும் பயனடைய வழி காட்டினார் டாக்டர்.மன்மோகன் சிங் அவர்கள்.

இதே போன்று இன்னும் பல கூற இருக்கிறது. அவற்றுள் சிலவற்றை நேற்று (27.12.2024 வெள்ளிக்கிழமை ) பெரம்பூர் பகுதியில், காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள், பொது மக்கள் மத்தியில் கனத்த இதயத்துடன் சில நிமிடம் உரையாற்றினேன். அதற்கு முன்னதாக டாக்டர்.மன்மோகன் சிங் யின் மறைவையொட்டி, காங்கிரஸ் கொடி கம்பத்தில் காங்கிரஸ் கொடியினை அரை கம்பத்தில் பறக்க செய்தோம். அவரது திருவுருவ படத்திற்கு ரோஜா மாலை அணிவித்து, மலர்களால் மரியாதை செலுத்தினோம்.

என்னைப்போன்று 90களில் பிறந்த குழந்தைகளுக்கு டாக்டர்.மன்மோகன் சிங் அவர்களின் வாழக்கை ஒரு பாடம் மற்றும் பெரிய அளவினான உதாரணம். 2011 ஆம் ஆண்டு முதல் அடுத்த சில ஆண்டுகள் வரை காங்கிரஸ் அனுதாபிகள் தவிர்த்து கிட்டத்தட்ட அனைவரும், டாக்டர்.மன்மோகன் சிங் அவர்களை கிண்டலும் கேலியும் செய்தனர். அனைத்து இடங்களிலும் டாக்டர்.மன்மோகன் சிங் அவர்களையும் அவரின் தாராளமய, தனியார்மய கொள்கைகளை ஆதரித்து பேசி இருக்கிறேன், முறையிட்டும் இருக்கிறேன். இனியும் தொடர்ந்து செய்வேன். பாசிச நரேந்திர மோடி ஆட்சியின் அவலங்களை அனுபவித்த பின்னரே, டாக்டர்.மன்மோகன் சிங்கை தூற்றிய பலர், அவரின் அருமையை எண்ணி பெருமை பேசுகிறார்கள்.

இந்திய நாட்டின் வரலாற்றில் மட்டும் அல்ல, உலக வரலாற்றில் இடம் பெற்றுள்ளார் டாக்டர்.மன்மோகன் சிங். இந்த நாட்டில் மன்மோகன் சிங் அவர்களை போன்று பலரை உருவாக்குவோம். அவரின் நேர்மையான வாழ்க்கையை நாம் அனைவரும் பின்பற்றுவதே டாக்டர்.மன்மோகன் சிங் அவர்களுக்கு நாம் செய்யும் மரியாதையாக இருக்க முடியும் - மாடசாமி மணி 28.12.2024
Rahul Gandhi Priyanka Gandhi Vadra Indian National Congress Indian National Congress - Tamil Nadu Indian Youth Congress National Students' Union of India (नेशनल स्टूडेंट्स यूनियन ऑफ इंडिया) All India Mahila Congress Jairam Ramesh

மனிதனுக்காக்க மானுட பிறவி எடுத்து வந்த இறை தூதன் ஏசு கிறிஸ்து ! உலகிற்கு அஹிம்சையை தன் வாழ்வு மூலம் கற்று கொடுத்த சமாதான...
25/12/2024

மனிதனுக்காக்க மானுட பிறவி எடுத்து வந்த இறை தூதன் ஏசு கிறிஸ்து ! உலகிற்கு அஹிம்சையை தன் வாழ்வு மூலம் கற்று கொடுத்த சமாதான ஆன்மா ஏசு.

அவர் வாழ்க்கை மிகப்பெரிய பாடம் அனைத்து மக்களுக்கும். தமக்கு யாரேனும் தீங்கு செய்தாலும் , பதிலுக்கு தீங்கு விளைவிக்காது , நல்லதே செய்யுங்கள், மன்னிப்பு கொடுங்கள் என்று சொல்கிறது அவர் வாழ்க்கை. தமிழ் கூறும் நல்லுலகமும் அதை தான் கூறுகிறது. மனித குலத்தின் மொத்த பாவத்தையும் அவரே ஏற்று கொண்டார். சாதரண மனிதன் அதனை நினைத்து கூட பார்க்க முடியாது.

கிறிஸ்துவ பள்ளியில் ( வள்ளியூர் கெய்ன்ஸ் ) படித்ததால், ஏசு கிறிஸ்து பற்றி போதிய அளவு பரிச்சயம் உண்டு.

அரையாண்டு பரீட்சை முடிந்த பிறகு கிறிஸ்துமஸ் விழா பள்ளியில் அல்லது ஒரு மண்டபத்தில் நடக்கும். ஏசு பிறப்பு நாடகம் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும். பள்ளி படிப்பு முடியும் வரை நான் வெறும் பார்வையாளனாக ரசிகனாக மற்றுமே இருந்துள்ளேன். நிழச்சி முடிந்த பின்னர் அனைவருக்கும் பரிசு பொருள் கிறிஸ்துமஸ் தாத்தா வழங்குவார். UKG முதல் 10 வகுப்பு வரை எனக்கு அந்த பரிசு பொருள் மீது நாட்டம் வந்தது இல்லை. காரணம் அங்கு வழங்கப்படும் கேக். என்ன தான் பல உயர் தர கேக் இருந்தாலும் அன்று விழாவில் வழங்கப்படும் கருப்பு கேக் ருசி தனி ரகம் தான். இன்றும் அதன் சுவை மனம் என்னுள்ளே இருக்கிறது. வாய்ப்பு கிடைக்கும் பொழுது 4 , 5 கேக் வாங்கி வைத்து , வள்ளியூர் முதல் பணகுடி வீட்டுக்கு செல்லும் வரை ரசித்து ருசித்து கொண்டே சென்ற நாட்கள் உண்டு. 6 வகுப்பு முதல் திங்கட்கிழமை தோறும் மாலை வேளையில் ஒரு மணி நேரம் பைபிள் வகுப்பு நடைபெறும். பாட்டு , கதை, பொது அறிவு போட்டி என களைகட்டும். பைபிள் வசனம், கதைகள் கொஞ்சம் தெரியலானேன்.

அவர் வாழ்வில் எனக்கு பிடித்த நிகழ்வு மற்றும் வசனம் ஜான் 8 : 1 - 11 முடிய வசனங்கள் ( John 8 : 1 -11 ) .

ஒரு விடியற்காலையில், ஏசு கிறிஸ்துவை சுற்றி பலர் கூடி இருகிக்கின்றனர். அங்கு ஒரு பெண்ணை இழுத்து வந்து , " இவள் ஒரு விபச்சாரி , மோசஸ் யின் சட்ட கட்டளைகளின் படி இவளை கல்லால் அடித்து சாகடிக்க வேண்டும்" என்று முறையிட்டனர்.

நிமிர்ந்து பார்த்த ஏசு , "இங்கு யார் அவர் வாழ்வில் பாவச் செயல் செய்ததில்லையோ, அவர் முதல் கல்லை அப்பெண்ணின் மீது எறியலாம்" என்றார்.

அப்பெண்ணை சுற்றி இருந்த ஆண்கள் தங்கள் கையில் இருந்த கல்லை கீழே போட்டு விட்டு, ஒருவர் பின் ஒருவராக விலகினார்.

ஏசு, அப்பெண்ணிடம் சென்று, உன் மீது குற்றம் சுமத்தியவர்கள் யாரேனும் உள்ளனரா என்று கேட்டார். அப்பெண் திரும்பி பார்த்து யாரும் இல்லை என்றாள். நானும் உன்னை குற்றம் சுமத்தவில்லை. இனி நீ பாவ செயல் செய்யாது இருப்பாய் ( Sin No More ! ) என்று கூறி அனுப்பி வைத்தார்.

அஹிம்சை யும் மன்னிப்பும் மனிதத்துவமும் போதித்த ஏசு , காந்தி பிறந்த உலகத்தில் தான் இன்று வெறுப்பும் , மத இன மொழி சாதி தீண்டாமைகள் என்கிற நோய்கள் உள்ளன.

ஏசுவாக மாறுவது மிகக் கடினம். ஏசுவின் வார்த்தைகளை உள்வாங்கி கொண்டு மனித வாழ்வை வாழ்வது சுலபம். பாவ செயல் செய்யாது , மனிதனாக வாழ இந்நன்னாளில் முயல்வது ஏற்புடையது.

அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் நல் வாழ்த்துக்கள் - ராதாபுரம் மாடசாமி மணி

Written by me on 25.12.2018

This Christmas, let us embrace the humility of service. May the spirit of peace guide our actions, fostering compassion ...
25/12/2024

This Christmas, let us embrace the humility of service. May the spirit of peace guide our actions, fostering compassion for all. Let us strive to build a society where justice and equality reign, reflecting the true meaning of Christmas. Wishing you all a happy and blessed Christmas - Madasamy Mani 25.12.2024

Address

Tamilnadu
Tirunelveli

Alerts

Be the first to know and let us send you an email when Madasamy Mani posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share