Tirunelveli Pasanga La

Tirunelveli Pasanga La Tirunelveli Pasanga la ... tirunelveli gethu pasanga

குற்றாலம்..❤️
02/08/2026

குற்றாலம்..❤️

❤️
31/07/2026

❤️

PP bus..🚶🏻‍➡️🚶🏻‍➡️
26/07/2026

PP bus..🚶🏻‍➡️🚶🏻‍➡️

₹6261 எனக்கு இந்த மாதம் கரண்ட் பில். ரீடிங் எடுக்க வரும்போது வீட்ல ஆள் இல்லனா பொதுவா போன மாதம் எவ்வளவு கட்டணமோ அதை தான க...
19/07/2026

₹6261 எனக்கு இந்த மாதம் கரண்ட் பில். ரீடிங் எடுக்க வரும்போது வீட்ல ஆள் இல்லனா பொதுவா போன மாதம் எவ்வளவு கட்டணமோ அதை தான கட்டணும் போன மாதம் பில் ₹2385. அதுக்கும் இதுக்கும் எவ்ளோ வித்தியாசம் இருக்கு பாருங்க. இது சம்மந்தமா உடனே எனது தந்தை அம்பாசமுத்திரம் EB ஆபீஸ் ல போய் கேட்டதுக்கு once Computer ல enter பண்ணிட்டா மாத்த முடியாது. அடுத்த அடுத்த மாசலத்துல Adjust பண்ணுவோம் னு அலட்சியமான பதில் சொல்றாங்க. இத்தனைக்கும் இந்த மாத கணக்குபடி எவ்ளோ unit வந்துருக்குனு மீட்டர் photo கூட எடுத்துட்டு போனுச்சு.. இதற்கு மேல் யாரிடம் புகார் தெரிவிக்கலாம் என்று தெரிந்தால் கூறுங்கள்.

நெல்லை மாவட்டத்தில் உள்ள மாஞ்சோலை எஸ்டேட் நிலங்கள் அனைத்தும் உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தமிழ்நாடு வனத்துறையிடம்...
19/07/2026

நெல்லை மாவட்டத்தில் உள்ள மாஞ்சோலை எஸ்டேட் நிலங்கள் அனைத்தும் உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தமிழ்நாடு வனத்துறையிடம் முழுமையாக ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் களக்காடு–முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு மற்றும் ஊத்து பகுதிகள் முழுவதும் வனத்துறையின் நேரடி நிர்வாகக் கட்டுப்பாட்டிற்கு வந்துள்ளன.

சிங்கம்பட்டி ஜமீன் மூலம் பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்திற்கு கடந்த 1929ஆம் ஆண்டு 99 ஆண்டுகள் குத்தகை அடிப்படையில் மொத்தம் 8,373.57 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டிருந்தது. குத்தகைக் காலம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து நிலங்களை வனத்துறையிடம் மீள ஒப்படைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

இதன் ஒரு பகுதியாக, 2025ஆம் ஆண்டு மே மாதத்தில் 8,152.13 ஏக்கர் நிலம் வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. மீதமிருந்த 221.44 ஏக்கர் பரப்பில் தொழிலாளர் குடியிருப்புகள், தேயிலைத் தொழிற்சாலைகள் மற்றும் பிற கட்டுமானங்கள் இருந்ததால் அந்தப் பகுதி மட்டும் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது.

இந்நிலையில், கடந்த மே 29ஆம் தேதி உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், மீதமிருந்த 221.44 ஏக்கர் நிலத்தையும் 15 நாட்களுக்குள் வனத்துறையிடம் ஒப்படைக்க அம்பாசமுத்திரம் துணை இயக்குநரும் வனஉயிரினக் காப்பாளரும் நோட்டீஸ் வழங்கினர்.

அதனைத் தொடர்ந்து, ஜூலை 11ஆம் தேதி அம்பாசமுத்திரம் துணை இயக்குநர் முன்னிலையில், நோட்டரி பப்ளிக் சாட்சியத்துடன் ஒப்படைப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில் பிபிடிசிஎல் நிறுவனத்தின் சட்ட மேலாளரும் அம்பாசமுத்திரம் வனச்சரக அலுவலரும் கையெழுத்திட்டனர். இதன் மூலம் எஞ்சிய 221.44 ஏக்கர் நிலமும் தமிழ்நாடு வனத்துறையிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டது.

இதனால் கடந்த ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக பிபிடிசிஎல் நிறுவனத்தின் குத்தகையில் இருந்த மொத்த 8,373.57 ஏக்கர் மாஞ்சோலை எஸ்டேட் நிலப்பரப்பும் முழுமையாக தமிழ்நாடு வனத்துறையின் நேரடி கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலையின் முக்கிய நீர்ப்பிடிப்பு மற்றும் பல்லுயிர் வளமிக்க பகுதியாக விளங்கும் மாஞ்சோலை, தென்னிந்தியாவில் அதிக மழைப்பொழிவு பெறும் பகுதிகளில் ஒன்றாகும். மேலும், கேரள வனப்பகுதிகளில் இருந்து யானைகள் இயற்கையான இடம்பெயர்வின் ஒரு பகுதியாக இப்பகுதிக்கு வருவது வழக்கமாக உள்ளது.

மாஞ்சோலை நிலங்கள் முழுமையாக வனத்துறையின் கட்டுப்பாட்டிற்குள் வந்திருப்பது, களக்காடு–முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் நீண்டகால வனப் பாதுகாப்பு, உயிரியல் இணைப்பிற்கு முன்னேற்றமாக கருதபடுகிறது.

காமராஜரை கேள்வி கேட்டசிறுவன்::-காமராஜர் தமிழகத்தின்முதல்வராக இருந்தபோது நெல்லையில்நடைப்பெற்ற நிகழ்ச்சியில்கலந்து கொள்வதற...
15/07/2026

காமராஜரை கேள்வி கேட்ட
சிறுவன்::-
காமராஜர் தமிழகத்தின்
முதல்வராக இருந்த
போது நெல்லையில்
நடைப்பெற்ற நிகழ்ச்சியில்
கலந்து கொள்வதற்காக
சென்னையிலிருந்து காரில்
வந்து கொண்டிருந்தார். காரில்
அவருடன் உதவியாளரும்
இருந்தார். அன்றைய தினம் பகல் 11
மணியளவில், கார்
கோவில்பட்டி அருகே வரும்
போது, வழியில் 12
வயது சிறுவன் ஒருவன் மாடுகள்
மேய்த்து கொண்டிருந்தான்.
அதைக் கண்ட காமராஜர்
டிரைவரிடம்
“காரை நிறுத்துப்பா“
என்று கூறினார். பின்னர் அந்த
சிறுவன்
அருகே சென்று “தம்பி நீ படிக்க
வேண்டிய வயதில்
மாடு மேய்க்கிறியே பள்ளி கூடம்
போக வேண்டியது தானே“
என்று கேட்டார். அதற்கு அந்த
சிறுவன் “பள்ளிக்கூடம் போனால்
கஞ்சி கிடைக்குமா?“
என்று அவரிடம் கேட்டான்.
அந்தக்கேள்வி காமராஜரின்
மனதை பாதித்தது. “அப்ப நீ
படிப்பதற்கு கஞ்சி தான்
தடையா சரி மதிய
வேளை கஞ்சி கொடுத்தால் நீ
பள்ளிகூடம் போவியா“
என்று காமராஜர் கேட்டார்.
அதற்கு பதில் கூறிய சிறுவன்
உற்சாகத்தில் “ஓ போவேனே! “
என்று கூறினான். அன்று தான்
காமராஜர் ஏழை மாணவ
மாணவியர்கள்
படிப்பிற்கு தடையாக
இருப்பது மதிய உணவு தான்
என்று முடிவுக்கு வந்தார்.
உடனே மதிய
உணவு திட்டத்தை கொண்டு வந்தார்.
இன்றைக்கு டாக்டராக,
இன்ஜினியராக, கலெக்டராக
இருப்பவர்களின்
தலைமுறையைப் பின்னோக்கிப்
பார்த்தால். அவர்களின்
கல்விக்கு காமராஜர் காரணமாக
இருப்பார்...!!

காமராஜர் குற்றாலம் குளியல் காமராஜர் அவர்கள் முதல்வராக இருந்தபொழுது, ஒருமுறைஎண்ணை தேய்த்துக் கொண்டு, குற்றால அருவிக்குச்ச...
15/07/2026

காமராஜர் குற்றாலம் குளியல்
காமராஜர் அவர்கள் முதல்வராக இருந்தபொழுது, ஒருமுறைஎண்ணை தேய்த்துக் கொண்டு, குற்றால அருவிக்குச்சென்றாராம்.
அருவியில் யாரும் குளித்துக்கொண்டிருக்கவில்லையாம்.
மக்கள் கூட்டம் ஒரு ஓரமாக காவலர்களால்
தடுத்தி நிற்க வைக்கப்பட்டிருந்தனர்.
ஏன்யா அருவி காலியா இருக்கு? சுற்றுலாப்
பயணிகள் யாரும் குளிக்கலையா?என்று
கேட்டிருக்கிறார்...
இல்லைங்கய்யா,, முக்கியஸ்தர்கள் வந்தால்,யாரையும் அருவியில் அனுமதிப்பதில்லை, இது வெள்ளைக்காரன் காலத்திலிருந்து வரும்
வழக்கம் என்றனராம் அதிகாரிகள்.
உடனே காமராஜர் கோபம் கொண்டு, அது வெள்ளைக்காரன் ஆட்சி.
இது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் ஆட்சியைய்யா, மக்களுக்காகத்தான் நாம் இருக்கிறோமே ஒழிய நமக்காக மக்கள் இல்லை. உடனே அருவியில் குளிக்க மக்களை அனுமதிங்கய்யா என்று சொல்லிவிட்டு, மக்களோடு மக்களாகக் குளித்து மகிழ்ந்திருக்கிறார்.
அதனால்தான் அவர் இன்றைக்கும் கர்ம வீரர் காமராஜர் என்று உள்ளன்போடு மக்களால் அழைக்கப்படுகிறார்..
பெருந்தலைவரின் பிறந்தநாள் இன்று...

Address

Tirunelveli
Tirunelveli
627001

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tirunelveli Pasanga La posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tirunelveli Pasanga La:

Shortcuts

Share