02/08/2026
கிறிஸ்தவ வரலாற்றுச் சங்க நூலகம் & அருங்காட்சியகத்திற்கு சிறப்பு விருந்தினர்கள் வருகை
இன்று மாலை சுரண்டையில் அமைந்துள்ள கிறிஸ்தவ வரலாற்றுச் சங்க நூலகம் மற்றும் அருங்காட்சியகத்திற்கு, தென்னிந்திய திருச்சபை திருநெல்வேலி திருமண்டலப் பேராயர் Rt. Rev. A.R.G.S.T. பர்னபாஸ் ஐயா அவர்கள், திருமதி ஜாய் அம்மா அவர்களுடன் சிறப்பு விருந்தினராக வருகை தந்தார்.
அவர்களுடன் வடக்கு சபை மன்றத் தலைவர் அருள்திரு. A. ஜெபரத்தினம், அருள்திரு. ஜான்சன், பேராயரின் Chaplain அருள்திரு. பொன்ராஜ், அருள்திரு. ஜெப சோபித ராஜா மற்றும் குருவானவர்கள் வருகை தந்தனர்.
மேலும் கிறிஸ்தவ வரலாற்றுச் சங்க உறுப்பினர்களான திரு. A.S.A.R. பாலச்சந்திரன், திரு. T.T.V. சந்திரசேகரன், திரு. பன்னீர் செல்வம், திரு. ஜெபசீலன், திரு. தர்மம், திரு. மார்ட்டின், IMS ஊழியர் திரு. ஜேசுதுரை, உபதேசிமார்கள் மற்றும் சபை உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
நூலகம் மற்றும் அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வரும் அரிய கிறிஸ்தவ வரலாற்று நூல்கள், ஆவணங்கள் மற்றும் வரலாற்றுச் சுவடுகளை விருந்தினர்கள் பார்வையிட்டனர்.
வருகை தந்து எங்களது வரலாற்றுப் பாதுகாப்புப் பணியை ஊக்கப்படுத்திய பேராயர் ஐயா அவர்களுக்கும், திருமதி ஜாய் அம்மா அவர்களுக்கும் மற்றும் உடன் வருகை தந்த அனைவருக்கும் கிறிஸ்தவ வரலாற்றுச் சங்கத்தின் சார்பில் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
கிறிஸ்தவ வரலாற்றுச் சங்க நூலகம் & அருங்காட்சியகம்
சுரண்டை, தென்காசி மாவட்டம்