25/06/2024
ஆம்பூர் அருகே ஒற்றைக் காட்டி யானை நடமாட்டத்தால் காப்புக்காட்டை ஒட்டியுள்ள பொதுமக்கள், மலை மலைவாழ் மக்கள் இரவு நேரங்களில் வெளியில் நடமாடும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.
வாணியம்பாடி,ஜூன்.25- திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் வனச்சரகம், பனங்காட்டேரி மலை கிராமத்தை ஒட்டியுள்ள பகுதிகளின் வழியாக வயது முதிர்ந்த ஆண் யானை ஒன்று தனது வழக்கமான பாதையில் வந்து, நேற்றிரவு சாணாங்குப்பம் காப்புக்காடு, எட்டி குட்டை பகுதியில் தங்கியுள்ளது.
கடந்த 45 வருடங்களுக்கு மேலாக தனது வழக்கமான பாதைகளில் இந்த ஒற்றை தந்தம் உடைய ஆண் யானை வந்து செல்லுகிறது. ஆனால் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் எந்த செயல்களிலும் யானை ஈடுபட்டதில்லை.
கண்பார்வை சற்று குறைந்த நிலையிலும் தனக்கு தேவையான உணவுக்காக மட்டுமே காப்புக்காட்டை ஒட்டியுள்ள பகுதிகளில் நடமாடும். மற்ற நேரங்களில் அடர்ந்த வன பகுதிக்குள் இருக்கும்.
யானை நடமாட்டம் குறித்து வனத்துறையினர் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளதால் பொது மக்கள் அச்சமடைய வேண்டாம். எச்சரிக்கையுடன் இருந்தால் போதுமானது.
காப்புக்காட்டை ஒட்டியுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், மலை கிராமங்களில் உள்ள மலைவாழ் மக்கள் இரவு நேரங்களில் வெளியில் நடமாடும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.
யானை நடமாட்டம் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால் உடனடியாக 97862 54998 எண்ணுக்கு தொடர்பு கொண்டு தெரிவிக்க வேண்டும் என்று ஆம்பூர் வனச்சரக அலுவலர் எம்.பாபு கேட்டுக் கொண்டுள்ளார்.
யானையின் படம் கூகுள் செயலி. நன்றி.