20/10/2026
திருமந்திரப் பயணம் முதல் தந்திரம்
பாடல் 158: 🕉️
வளத்திடை முற்றத்தோர் மாநிலம் முற்றும்
குளத்தின் பெண்கொண்டு குயவன் வனைந்தான்
குடமுடைந் தால்அவை ஓதென்று வைப்பர்
உடலுடைந் தால்இறைப் போதுமை யாரே.
விளக்கம் 🔱
இந்த உலகம் முழுவதும் பிறக்கின்ற உயிர்களின் உடல்கள் எல்லாம் அழகாக செய்யப்பட்ட மண்குடம் போன்றது. தாயின் வளமை பொருந்திய இடையின் முன்பிருக்கும் வயிற்றிலிருக்கும் குளமாகிய கருப்பைக்குள் சுரோணிதமாகிய மண் மற்றும் சுக்கிலமாகிய நீர் கலந்து குயவனாகிய இறைவனால் படைந்த உடல் இது.
மண்ணால் செய்யப்பட்ட குடம் உடைந்து போனால் கூட ஓடாக பயன்படும் என்று வைத்திருக்கும் மனிதர்கள், தோலாகிய மண்ணால் செய்யப்பட்ட இந்த உடலாகிய குடம் உடைந்து போனால் (இறந்து போனால்) மட்டும் வைத்திருக்காமல் வெளியே எடுத்துச் சென்று சுடுகாட்டில் வைத்து எரித்துவிடுவார்கள்.
கருத்து: களிமண்ணால் செய்யப்பட்ட குடத்திற்கு இருக்கும் மதிப்பு கூட உயிர்பிரிந்த உடலுக்கு கிடையாது.
🔱 இந்த திருமந்திரப் பாடலை சிவபெருமானின் திருவடிகளில் சமர்ப்பித்து, மனதாரப் பாடி வணங்குங்கள். 🙏
உங்கள் மனதில் இருக்கும் வேண்டுதலை சிவனிடம் சொல்லுங்கள்…
சிவன் அருள் நிச்சயம் உங்களை வந்து சேரும். 🕉️
📿 தினமும் ஒரு திருமந்திரம்…
உங்களுக்காக தொடர்ந்து வரும்.
சிவனருளை பெற தொடர்ந்து பாருங்கள். 🔱
🕉️ ஓம் நமசிவாய!