
28/11/2024
யப்பா விடுங்கடா சாமி... விட்டா நம்மள கிறுக்கனாக்கிருவானுங்க போல. ஒரு படத்துல எவ்வளவு தான்டா பொருத்து படம் பார்க்கிறது. படம் ங்கிறது larger than life தான். Heist படம் என்பதால் இன்னும் அரையடி larger ஆ இருந்துட்டு போகுது. அதுக்குன்னு இப்படியா?
ஒரு பேங்கர் இந்த படத்தை பார்த்தா, வேற எதுலயாவது சிரிப்பான். ஒரு ரவுடி இந்த படத்தை பார்த்தா எல்லாத்தையும் விட்டுட்டு புத்தனாகிடுவான். ஒரு ஷேர் மார்க்கெட்காரன் பார்த்தா, நான் விவசாயம் செய்யப் போறேன் னு பசுமை விகடன் ஆபிஸ்க்கு போய்டுவான். ஒரு திருடன் இந்த படத்தை பார்த்தா, கொலைகாரனா promotion ஆகிடுவான்.
சரி சினிமா பார்ப்போம் ன்னு நீங்க போனா.... ஐயம் சாரி. 😪😪