22/09/2025
ஈரோடு இரவு நேர ஒரு நாள் ஜவுளி சந்தை…
30 வருடங்களுக்கு மேலாக ஈரோட்டில் ஜவுளிச் சந்தை நடைபெற்று வருகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் துணிகள் உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் காளை மாட்டு சிலை செல்லும் வழியில் இந்தச் சந்தை இருக்கிறது.
இது ஜவுளிக் கடல் போல ஆடைகள் ஆடைகள் குவிக்கப்பட்டு, ஒவ்வொரு திங்கள் கிழமை இரவும் சந்தை நடைபெறுகிறது.
ஈரோட்டில் வாரந்தோறும் திங்கட்கிழமை இரவில் ஜவுளிச்சந்தை கூடுகிறது.
இந்த சந்தைக்கு ஈரோடு மட்டுமின்றி வெளி மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான வியாபாரிகள் வந்து கடைகளை அமைத்து வருகின்றனர்.
அனைத்து வகையான ஜவுளியும் ஒரே இடத்தில் கிடைப்பதால் பல்வேறு மாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்து வியாபாரிகள் வந்து ஜவுளியை கொள்முதல் செய்கின்றனர்.
உற்பத்தியாளர்களே நேரடியாக விற்பனை செய்வதால் ஆடைகள் நல்ல தரத்தில், குறைந்த விலையில் கிடைக்கின்றன.
வேட்டி, லுங்கி, துண்டு, குழந்தைகள் ஆடைகள், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான ஆடைகள் எல்லாம் இங்கே கிடைக்கும். எல்லாமே தரமானதாகவும், விலை குறைவாகவும் இருக்கும்.
தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் இருந்து சிறு வியாபாரிகள் இந்த சந்தையின் மூலம் நன்மை அடைகிறார்கள்.
இந்த சந்தை இரவில் ஆரம்பித்து விடிய விடிய செயல்படுகிறது.
மக்கள் இந்த சந்தைக்கு வந்து மொத்த விற்பனை விலையில் ஆடைகளை வாங்கிச் செல்கிறார்கள்.
இது ஜவுளி வணிகத்தில் ஒரு முக்கிய மையமாக விளங்குகிறது....
Rama Gobi R TV