சுட்டி யானை - Chutti Yaanai

சுட்டி யானை - Chutti Yaanai ஒவ்வெரு குழந்தைக்கும்
ஒவ்வொரு வானம்

கையிலிருக்கும் ஒற்றை பூமியை எப்படி அடுத்த தலைமுறையிடம் கொடுக்கப் போகிறோம். இப்போது நிலவி வரும் வெப்பமான சூழ்நிலையை நம் க...
22/04/2025

கையிலிருக்கும் ஒற்றை பூமியை எப்படி அடுத்த தலைமுறையிடம் கொடுக்கப் போகிறோம். இப்போது நிலவி வரும் வெப்பமான சூழ்நிலையை நம் குழந்தைகளுக்கு பரிசளித்துள்ளோம். ஒவ்வொரு ஆண்டும் பூமியின் வெப்பநிலை உயர்ந்து கொண்டே வருகிறது. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்.
ஒருதுளி தேன் கூட சிந்தாமல் கூடுகட்டும் தேனீக்கள்,கடினமான ஓட்டுக்குள் இளநீர் எனச் சொல்லச்சொல்ல விரிந்து செல்லும் இயற்கையின் அளவற்ற கருணை.
ஆனால் எல்லையற்ற பேராசையால் மனிதனின் அறிவு சகலத்தையும் சிதைக்கும் தருணத்தில் இயற்கை தனக்கான ஆன்மாவை தன்னிலிருந்தே கருத்தரித்துக் கொள்ளும்.
அப்போது அதனை பார்க்க மனித இனம் இந்த பூமியில் இருக்கப் போவதில்லை. அதிகபட்சம் நூற்றாண்டுகள் இந்த பூமியில் மனித இனம் வாழ்ந்து விட்டாலே அது ஒரு சாதனையாகத்தான் இருக்கும்.

எம் அடுத்த தலைமுறைக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள்.. இயற்கை நிச்சயம் மிக கருணையுடையது. நாங்கள் செய்த தவறுக்காக உங்களை தண்டி...
14/03/2025

எம் அடுத்த தலைமுறைக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள்.. இயற்கை நிச்சயம் மிக கருணையுடையது. நாங்கள் செய்த தவறுக்காக உங்களை தண்டிக்காது என்று நம்புகிறேன். தண்டித்து விடக் கூடாது என்று விரும்புகிறேன். உங்களுக்கு விட்டு செல்ல எங்களிடம் எதுவும் இல்லை, நல்ல அனுபவம் உட்பட. நாங்கள் பட்டாம்பூச்சிக்கு பின்னால் ஓடவில்லை, தும்பியை அமர்ந்து ரசிக்கவில்லை, பறவைகளின் கீச்சு இசையில் இன்பத்தை காணாமல் தீம் பார்க்கில் சந்தோஷத்தை கண்டடைந்தவர்கள் நாங்கள்.எங்கள் மீது கோபம் கொண்டு தும்பியும், பட்டாம்பூச்சியும், பறவையும் இந்த புவியைவிட்டு செல்லாமல் இருந்தால், நீங்கள் அவர்களை நண்பர்களாக்கி கொள்ளுங்கள். என்னைவிட அவர்களுக்குதான் உங்களுக்கு சொல்லி தர அதிக விஷயம் இருக்கிறது.
மீண்டும் உன்னிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். என்னை மன்னித்துவிடு...
இன்று உலக பட்டாம்பூச்சிகள் தினம்..

16/01/2025

நெல் வயலில் இருந்து வாய்க்கு சோறாக வந்தடையை இத்தனை விதமான உழைப்பை விவசாயியிடம் பெற்றால் தான், நம் பசியையும் போக்க முடியும்.

01. வயல் காட்டைச் சீர்செய்தல்
02. ஏர் பிடித்தல்
03. உழவு ஓட்டுதல்
04. பரம்படித்தல்
05. விதை நெல் சேகரித்தல்
06. விதை நேர்த்தி செய்தல்
07. விதைகளை நீரில் ஊற
வைத்தல்
08. நாற்றங்காலில் விதைத்தல்
09. நாற்றாக வளருதல்
10. நாற்று எடுத்தல்
11. முடிச்சு கட்டுதல்
12. வயல் நிலத்தில் முடிச்சு வீசுதல்
13. நடவு நடுதல்
14. களையெடுத்தல்
15. உரமிடுதல்
16. எலியிடம் தப்புதல்
17. பூச்சியிடமிருந்து பாதுகாத்தல்
18. நீர் தட்டுப்பாடு இன்றி வளருதல்
19. கதிர் முற்றுதல்
20. கதிர் அறுத்தல்
21. கட்டு கட்டுதல்
22. கட்டு சுமந்து வருதல்
23. களத்துமேட்டில் சேர்த்தல்
24. கதிர் அடித்தல்
25. பயிர் தூற்றல்
26. பதறுபிரித்தல்
27. மூட்டை கட்டுதல்
28. நெல் ஊறவைத்தல்
29. நெல் அவித்தல்
30. களத்தில் காயவைத்தல்
31. மழையிலிருந்து பாதுகாத்தல்
32. நெல் குத்துதல்
33. நொய்யின்றி அரிசியாதல்
34. அரிசியாக்குதல்
35. மூட்டையில் பிடித்தல்
36. விற்பனை செய்தல்
37. எடை போட்டு வாங்குதல்
38. அரிசி ஊறவைத்தல்
39. அரிசி கழுவுதல்
40. கல் நீக்குதல்
41. அரிசியை உலையிடல்
42. சோறு வடித்தல்
43. சோறு சூடு தணிய வைத்தல்
44. சோறு இலையில் இடல்

இத்தனை தடைகளைத் தாண்டி வந்த சோற்றை நாம் முழுவதும் உண்ணாமல் வீணாக்குவது எத்தனை பெரிய பாவம்..

உண்ணும் முன் உணருவோம், அந்த உணவு நம் இலைக்கு வந்த பாதையையும், அதன்பின்னுள்ள உழவனின் உழைப்பையும்.!.

சுதந்திரதின பரிசு - சுட்டி யானை சிறார் இதழ்கள்நாமக்கல் மாவட்டம், மக்கிரிபாளையம் சௌதாபுரம் கிராமம், ஊராட்சி ஒன்றிய துவக்க...
18/08/2024

சுதந்திரதின பரிசு - சுட்டி யானை சிறார் இதழ்கள்

நாமக்கல் மாவட்டம், மக்கிரிபாளையம் சௌதாபுரம் கிராமம், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், 100 குழந்தைகளுக்கு சுதந்திர தின நாளில் பரிசாக சுட்டி யானை சிறார் இதழ்களை பரிசாக வழங்கி மகிழ்ந்த நாமக்கல் சக்திவேல் அண்ணா அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி..

நமது குழந்தைகளுக்கு பிறந்தநாள் பரிசாகவோ, அல்லது ஊக்கப் பரிசாகவோ நாமும் சுட்டி யானை சிறார் இதழ்களையோ அல்லது வண்ண வண்ண கதை புத்தகங்களையோ பரிசாக வழங்கலாம்.

புத்தகங்கள் பெற
9500125125

Doodle art by Jessie 😍 #சுட்டியானை
03/05/2024

Doodle art by Jessie 😍

#சுட்டியானை

சுட்டி யானை இது இதழ்கள் இல்லை ஐயா. இது ஒவ்வொரு குழந்தைகளுக்கு கிடைக்க வேண்டிய வரப்பிரசாதம். ஏனெனில் இவர்கள் வளரும் பருவத...
28/04/2024

சுட்டி யானை இது இதழ்கள் இல்லை ஐயா. இது ஒவ்வொரு குழந்தைகளுக்கு கிடைக்க வேண்டிய வரப்பிரசாதம். ஏனெனில் இவர்கள் வளரும் பருவத்திற்கு இந்த இதழ் மிகப்பெரிய உந்து சக்தியாக இருக்கும் என்பது என் கருத்து ஐயா.

அலுவலக வேலையில் இருப்பதால் மேலோட்டமாக பார்த்தேன். இதன் மூலம் என் மகனுக்கு நிறைய செய்திகள் சொல்லித் தர முடியும் என்று நம்பிக்கை உள்ளது.

ஒவ்வொரு பக்கங்களும் அற்புதம்.

இந்த இதழ் வெளிவர காரணமாக இருந்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துகள்.

-யசோதா, ஈரோடு

குழந்தைகளுக்கு பாட்டுப்பாடுங்கள்1. பச்சிளம் குழந்தைகள் ஒலியை உடனடியாகப் பிரித்தறியவோ, அதை மூளைச்சேகரத்தில் வகைப்படுத்தவோ...
27/04/2024

குழந்தைகளுக்கு பாட்டுப்பாடுங்கள்

1. பச்சிளம் குழந்தைகள் ஒலியை உடனடியாகப் பிரித்தறியவோ, அதை மூளைச்சேகரத்தில் வகைப்படுத்தவோ முடியாது. ஆனால் ஒரே வார்த்தையை அல்லது ஒரே விதமான ஒலிக்குறிப்பைத் திரும்பதிரும்பக் கேட்பதன் மூலம் குழந்தைகளின் காதுகளும் மூளையும் பிரித்துச் சேகரித்து நினைவில் வைத்துக்கொள்கின்றன.

2. தாலாட்டுப்பாடல்களில் வரும் ஒரே மாதிரியான சொற்களும், சந்தமும் எதுகை மோனையும் குழந்தைகளின் காதுகளில் அமைதியை ஏற்படுத்துகின்றன.

3. ஆராரோ ஆரிரரோ என்ற ஒலிக்குறிப்பில் உள்ள இசை நெடில் குழந்தைகளின் காதுகளில் ஒரு இனிய அநுபவத்தை ஏற்படுத்துகிறது. அதனால் தான் குழந்தைகள் அந்த இசையில் அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் மன அமைதியுடனும் உறங்கி விடுகிறார்கள்.

4. குழந்தைகளுக்கான மொழிப்பயிற்சியில் முதல் பாடமே தாலாட்டுப்பாடல்கள் தான். திரும்பத்திரும்ப பாடல்களைக் கேட்கும் குழந்தைகள் அந்த வார்த்தைகளின் அவர்களுடைய மொழிக்கிட்டங்கியில் சேர்த்துக் கொள்கிறார்கள்.

5. குழந்தைகளின் ஞாபகத்திறன் மூன்று வயதுக்கு மேல் தான் உருப்பெறும் என்றாலும் அதன் நனவிலி மனதில் வெளியில் நடக்கும் அத்தனை அநுபவங்களும் தங்களுடைய முத்திரையை சிறிதளவேனும் பதிக்காமலிருக்காது.

6. திரும்பத் திரும்பச் செய்வதன் மூலமும் திரும்பத் திரும்பச் சொல்வதன் மூலம் மட்டுமே குழந்தைகள் தங்கள் கற்றல் திறனை வளர்த்துக் கொள்கிறார்கள். முழுமையாக அதைக் கற்கும்வரை அவர்கள் சலிப்படைவதேயில்லை. நூற்றுக்கணக்கான முறை செய்கிறார்கள். வார்த்தைகளை அல்லது ஒலிக்குறிப்புகளைச் சொல்கிறார்கள்.

7. பெற்றோர்கள் குழந்தைகளின் இந்தச் செயல்பாடுகளைத் தடைசெய்யக்கூடாது. எத்தனை முறை கேட்டாலும் குழந்தைகளுக்காக அதைச் செய்யவேண்டும். அப்போது தான் குழந்தைகளின் ஒட்டுமொத்த உடல், மனம், மூளைச் செயல்பாடுகள் வலிமையடையும்.

8. இந்தச் செயல்பாடுகள் குழந்தைகள் தாயின் கருவறையிலிருந்து வெளியே வந்ததுமே தொடங்கி விடுகிறது. கற்றல் உயிரியல் செயல்பாடு. வேறுவிதமான குறைபாடுகளில்லாத குழந்தைகள் ஒவ்வொரு கணமும் தாங்கள் வாழ்வதற்கான அடிப்படைக் கூறுகளைக் கற்றுக்கொண்டேயிருக்கின்றன.

9. பச்சிளம் குழந்தைகள் பிறந்தவுடன் தன்னுடைய ஐம்புலன்களால் தான் இந்த உலகை அறிந்து கொள்கின்றார்கள். மூன்று வயது வரை மூளையின் வளர்ச்சி அணுகணமும் நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது. அதனால் தான் பெரும்பாலும் மூன்று வயதுக்கு முன்னால் நடந்த எந்த நிகழ்வும் நம் நினைவுகளில் சேகரமாவதில்லை.

10. மூன்று வயதுக்கு முன்னால் அசைவுகளும், ஓசையும், தொடுகையுமே பிரதானமான புற உலகை அறிந்து கொள்வதற்கான கருவிகளாகச் செயல்படுகின்றன. ஒரு சிறு அசைவும் குழந்தையின் கண்களின் கவனத்தை ஈர்க்கின்றது. ஒரு சிறு ஓசையும் குழந்தையின் காதுகளில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. அதனால் தான் இசைக்குச் செவி மடுத்து குழந்தை அமைதி கொள்கிறது.

11. தாலாட்டுப்பாடல்களில் உள்ள திரும்பத்திரும்ப வரும் ஓலி நயம் குழந்தைகளின் செவிகளை நிறைக்கிறது. செவிகளின் வழியே மூளைக்குச் செல்லும் ஓசைநயம் குழந்தைகளின் நரம்பு மண்டலத்தைச் சாந்தப்படுத்துகிறது. பாடல்களின் அர்த்தம் விளங்காமலேயே குழந்தைகள் இசையினால் வசீகரிக்கப்படுகிறார்கள் என்றால் தாலாட்டு தொடங்கி குழந்தைப்பாடல்களின் முக்கியத்துவம் விளங்கும்.

12. பச்சிளம் குழந்தைகளுக்கு தாலாட்டுப்பாடல்கள் என்றால், குழந்தைகள் வளர வளர குழந்தைப்பாடல்களை அவர்களுக்குச் சொல்லித்தரவேண்டும். அம்மா இங்கே வா வா என்ற பாடல்வழியே குழந்தைகள் அம்மா என்ற உறவின் பெருமையை மட்டுமல்ல அகரவரிசையையும் கற்றுக் கொள்கிறார்கள். அவர்களையறியாமலே தாய்மொழியைக் கற்றுக்கொள்ளும் திறனும் அதன்வழியே சிந்திக்கும் திறனும் உருக்கொள்கிறது.

13.. குழந்தைகளுக்காகப் பாடும் பாடல்கள் எளிமையாக இருக்கவேண்டும். பெரும்பாலும் மூன்று அசைச்சொற்களோடு இருக்கவேண்டும். சந்தநயம் வேண்டும். வரிகளின் முதலடியோ ஈற்றடியோ எதுகை மோனையோடு இருக்க வேண்டும். இசைக்கு இசைவாக ஏகாரத்தில் முடிகிற சொற்களைத் தேர்வு செய்ய வேண்டும். பாடலாகப் பாடப்படுகிற இசைக்கோர்வை வேண்டும்.

14. பாடல்கள் குழந்தைகளுக்கு இந்த உலகை அறிமுகப்படுத்தவோ, உலக நடைமுறைகளைப் பற்றிய சித்திரங்களையோ, இயற்கையைப் பற்றிய காட்சிகளையோ,அறிமுகப்படுத்தலாம். அன்றாட வாழ்வின் நடவடிக்கைகளைப்பற்றியோ, எளிய கணிதம், அறிவியல், பற்றியதாக இருக்கலாம். வேடிக்கையாகவோ, விடுகதைப்பாடல்களாக, இருக்கலாம். மானுட அறம் குறித்தோ, கதையாகவோ, உறவுகளின் மேன்மை குறித்தோ, கதைப்பாடல்களாகவோ, விளையாட்டுப்பாடல்களாகவோ, இருக்கலாம்.

15. பாடல்களில் எளிய கருத்துகள் பொதிந்திருக்க வேண்டும். மொழியை குழந்தைகள் தெரிந்து கொள்ளும் விதமாக இருக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மேல் குழந்தைகளின் மொழியில் இருக்கவேண்டும்.

16. எளிய வார்த்தைகளை இசையுடனும் பொருளுடனும் கோர்க்கும் திறமை. ஏனெனில் குழந்தைகள் பாடல்களை விளையாட்டாய் பாடும்போதே முதலில் தாய்மொழியை தெரிந்து கொள்கிறார்கள். மொழிவளம் அவர்களுடைய மனதில் உரமாகிறது. அவர்கள் அதன் வழியே உலகை அறிந்து கொள்கிறார்கள்.

18. குறிப்பிட்ட காலம்வரை எக்காரணம் கொண்டும் திரைப்படப்பாடல்களைப் பாடவோ, கேட்கச்செய்யவோ கூடாது. இயந்திரத்திலிருந்து வரும் ஒலி என்ன நவீனமாக இருந்தாலும் அது இயந்திரம் தான். அம்மாவோ அப்பாவோ, ஆச்சியோ தாத்தாவோ, மாமாவோ அத்தையோ குழந்தையின் முகம் பார்த்துப் பாடும்போது குழந்தைகளுக்குக் கிடைக்கும் நெருக்கத்தையும் குரலில் உள்ள பாசமிக்க ஈரத்தையும் எந்த இயந்திரமும் கொடுத்து விடாது.

19. எனவே குழந்தைகளுக்கான பாடல்களைப் பாடுங்கள்.
உங்கள் குழந்தைகள் உங்களிடம் வசியமாகி விடுவார்கள்.

பதிவு - எழுத்தாளர் உதயசங்கர்

கவின் சொற்கோவும், சுட்டி யானை இதழும்
24/04/2024

கவின் சொற்கோவும், சுட்டி யானை இதழும்

ஆசிரியர் சுபாஷினி ஜெகன்நாதன் அவர்களின் பதிவு ..டூடுல் ஓவிய சிறப்பிதழாக சுட்டியானை இதழ் இன்று கிடைத்தது. நன்றி.என் சிறுவய...
22/04/2024

ஆசிரியர் சுபாஷினி ஜெகன்நாதன் அவர்களின் பதிவு ..

டூடுல் ஓவிய சிறப்பிதழாக சுட்டியானை இதழ் இன்று கிடைத்தது. நன்றி.

என் சிறுவயதில் எனக்கு இப்படியான சிறார் இதழ்கள் கிடைக்கப்பெறவில்லை என்பது என் ஏக்கம். அதனால் என்ன குழந்தைகள் கைகளுக்கு செல்லும் முன் நான் தான் இதனை முதலில் ஒரு பக்கம் விடாமல் வாசித்து விடுகிறேனே.

இதில் காமிக் வடிவில் வரும் வலசைத்தொடர் என் பேவரைட்.

என் வகுப்பு குழந்தைகளுக்கு இதன் பின்னட்டையில் வரும் பாடல் மிகப் பிடிக்கும். ஏதேனும் ஒரு மெட்டமைத்து பாடி மகிழ்வார்கள்.

அதன் பின் நண்பர்களுடன் ஒவ்வொரு பக்கமாக புரட்டி அதனைப்பற்றி பேசுவார்கள்.

ஒரு வாரம் எங்களுக்கு பள்ளிகள் விடுமுறை.

திங்கட்கிழமை இந்த இதழ் வகுப்பில் செய்ய இருக்கும் மாயாஜாலத்தைக் காண ஆவலாக இருக்கிறேன்.

-ஆசிரியர் சுபாஷினி ஜெகன்நாதன்
புதுச்சேரி

எப்போதும் வசந்தக்காலம் தான் புத்தகங்களோடு வாழ்பவர்களுக்கு....-சீனப்பழமொழி💙🐦சுட்டி யானை 3-வது இதழுடன் ஆசிகாஒத்தநாடு - தஞ்...
20/04/2024

எப்போதும் வசந்தக்காலம் தான் புத்தகங்களோடு வாழ்பவர்களுக்கு....

-சீனப்பழமொழி

💙🐦

சுட்டி யானை 3-வது இதழுடன் ஆசிகா
ஒத்தநாடு - தஞ்சாவூர்
நன்றி பாரதிகண்ணன் அண்ணன்

மறுபடியும் மறுபடியும் சொல்கிறேன்....குழந்தைகளிடம் வாசிப்பை மேம்படுத்த சில எளிய வழிகள்.1. வீட்டில் குழந்தைகள் கண்ணில் படு...
10/04/2024

மறுபடியும் மறுபடியும் சொல்கிறேன்....

குழந்தைகளிடம் வாசிப்பை மேம்படுத்த சில எளிய வழிகள்.

1. வீட்டில் குழந்தைகள் கண்ணில் படுகிற மாதிரி புத்தகங்கள் கிடக்க வேண்டும்.

2. அம்மா அல்லது அப்பா தினம் குறைந்தது ஒரு மணி நேரமாவது குழந்தைகளின் முன்னால் வாசிக்க வேண்டும்.

3. குழந்தைகளிடம் உரையாடிக்கொண்டே வாசிப்பது நல்லது.

4. புத்தகங்களை வாசித்துக்கொண்டே குழந்தைகளுக்குக் கதை சொல்லவேண்டும்.

5. கதை சொல்லும்போது புத்தகத்தை அடிக்கடி பார்த்துவிட்டு கதை சொல்லவேண்டும்.

6. அப்படிக் கதை சொல்லிக்கொண்டிருக்கும்போது இடையில் விரித்து வைத்த புத்தகத்தை அப்படியே குழந்தையிடம் விட்டு விட்டு எழுந்து சென்று கவனிக்க வேண்டும். குழந்தை அந்தப்புத்தகத்தைக் கையில் எடுக்கிறதா இல்லையா என்று பார்க்க வேண்டும்.

7. குழந்தைகள் புத்தகங்களில் கிறுக்கினாலோ கிழித்தாலோ திட்டவோ மிரட்டவோ கூடாது.

8. குழந்தைகளை மடியில் வைத்துக்கொண்டு புத்தகங்களில் உள்ள கதைகளைச் சொல்ல வேண்டும்.

9. குழந்தைகளுக்குக் கதை சொல்லும்போது ஏனோ தானோ என்றோ தாங்கள் சின்னவயதில் கேட்ட கதைகளையோ சொல்லாமல் நாமும் அதில் ஒன்றி குழந்தைகளின் கண்களைப் பார்த்துக்கொண்டு அபிநயம் பிடித்துக்கொண்டு சொல்லவேண்டும்.

10. இவை எல்லாவற்றுக்கும் முதலில் குழந்தைகளுக்கான புத்தகங்களை வாங்கி முதலில் அம்மாவும் அப்பாவும் வாசித்து விடுவது நல்லது. குழந்தைகளை வைத்துக்கொண்டு எழுத்துக்கூட்டி வாசித்துக்கொண்டிருக்கக்கூடாது.

11. குழந்தைகள் தமிழ் புத்தகங்களை வாசிப்பதன் மூலம் தமிழ் மொழி, தமிழினம், பாதுகாக்கப்படுகிறது என்ற உணர்வு பெற்றோர்களுக்கு வேண்டும்.

12. எனக்கு என்னுடைய அம்மா தான் வாசிப்பின்ருசியை ஊட்டிவிட்டவர். வீட்டில் வாங்கிய வணிகப்பத்திரிகைகளின் வழியாக வாசிப்பை மேம்படுத்திக்கொண்டேன்.

13. பள்ளியில் இருந்த நூலகவகுப்பு, நீதிபோதனை வகுப்பு, அதில் கிடைத்த உண்மையான குழந்தைக்கதைகள் என்னிடம் வாசிப்பிற்கான தேடலை உருவாக்கியது.

14. என்னுடைய நண்பர்கள் புத்தகங்களை வாசிக்கிற, நூலகத்துக்கு செல்கிற நண்பர்கள். அவர்களுடனான உரையாடல் சிறுவயதிலேயே வாசிப்பதற்கும், எனக்கென்று புத்தகங்களை வாங்கவும், பதுக்கவும், திருடவும்கூட செய்யவைத்தது.

15. விளையாட்டு சாமான்களை தயக்கமில்லாமல் வாங்கிக்கொடுப்பதைப் போல புத்தகங்களை வாங்கிக்கொடுக்கவும் அந்தப்புத்தகங்களை வைத்துக்கொள்ள வீட்டிலுள்ள அல்மாரியில் சிறு இடம் ஒதுக்கிக்கொடுக்கவும் வேண்டும்.

16. எக்காரணம் கொண்டும் புத்தகங்களை முன்வைத்து குழந்தைகளிடம் சிறு முகம் சுளிப்பைக்கூட காட்டக்கூடாது.

17. தினமும் குழந்தைகளுக்குக் கதை சொல்லுங்கள். குழந்தைகளுக்கு அப்படியொரு டார்லிங் ஆகிவிடுவீர்கள்.

18. கதைகள் அத்தனை வலிமையானவை. மனிதமனதை மயக்கிவிடும் மாயம் கொண்டவை.

-உதயசங்கர் (சிறார் எழுத்தாளர்)

அண்ண நூற்றாண்டு நூலகத்தில் உலக புத்தக தின கொண்டாட்டம். குழந்தைகளைப் பங்குபெறச் செய்வோம்.Via - விழியன்
05/04/2024

அண்ண நூற்றாண்டு நூலகத்தில் உலக புத்தக தின கொண்டாட்டம். குழந்தைகளைப் பங்குபெறச் செய்வோம்.

Via - விழியன்

Address

Kaiththamalai Saalai
Tirupur
638751

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm
Sunday 9am - 5pm

Telephone

+919500125126

Alerts

Be the first to know and let us send you an email when சுட்டி யானை - Chutti Yaanai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to சுட்டி யானை - Chutti Yaanai:

Share

Category