Tamilan Nizam Mpk

Tamilan Nizam Mpk Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Tamilan Nizam Mpk, Social Media Agency, Tirupur.

25/09/2026

Courtesy saatai online ,

24/09/2026

13/09/2026



💔 மனம் உருக வைத்த ஒரு காட்சி…

காசாவில் போர் தன் பெற்றோரைப் பறித்த நிலையிலும், ஆதரவற்ற சூழ்நிலையிலும் அந்தச் சிறுமி முழு குர்ஆனையும் மனனம் செய்து, அதற்கான பரிசைப் பெறும்போது கண்ணீர் வடித்த காட்சி மனதை நெகிழச் செய்தது. 😢📖

இது ஒரு சாதாரண சாதனை அல்ல…
அவள் கடந்து வந்த துயரங்களையும், இழப்புகளையும் தாண்டி அல்லாஹ்வின் வார்த்தைகளை தன் இதயத்தில் சுமந்திருக்கிறாள்.

அல்லாஹ் கூறுகிறான்:

“நிச்சயமாக பொறுமையாளர்களுக்கு அவர்களுடைய கூலி கணக்கின்றி வழங்கப்படும்.”
— அல்குர்ஆன் 39:10

உலகில் அவர்கள் சந்தித்த ஒவ்வொரு இழப்புக்கும், ஒவ்வொரு கண்ணீருக்கும், ஒவ்வொரு சோதனைக்கும் மறுமையில் அல்லாஹ்விடம் மிகப் பெரிய வெகுமதி உண்டு. 🤲

யா அல்லாஹ்…
இந்தச் சிறுமிக்கும், காசாவில் தங்கள் உயிரையும் குடும்பத்தையும் இழந்த அனைவருக்கும் ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் வழங்குவாயாக. 🤲❤️

அவர்களின் கண்ணீரை மறுமையின் மகிழ்ச்சியாக மாற்றுவாயாக.

ஆமீன் யா ரப்பல் ஆலமீன். 🤲

07/09/2026

04/09/2026

COURTESY NAALAINAMETHE ADMK IT WING 234

Canada 🍁
23/08/2026

Canada 🍁

22/08/2026
15/08/2026

இஸ்லாமியத் so-called தலைவர்களின் கவனத்திற்கு — ஒரு அன்பான வேண்டுகோள்

மங்கலம் மற்றும் திருப்பூரின் சில பகுதிகளில் சில மாட்டு இறைச்சிக் கடைகள் சுகாதாரமற்ற முறையிலும், பொதுமக்களுக்கு அருவருப்பை ஏற்படுத்தும் வகையிலும், இறைச்சியை வெளிப்படையாகத் தொங்கவிட்டு விற்பனை செய்வதைப் பார்க்க முடிகிறது.

இது Beef சாப்பிடலாமா, வேண்டாமா என்ற விவாதம் அல்ல.
இது சுகாதாரம், ஒழுங்கு மற்றும் சமூகப் பொறுப்பு பற்றிய விஷயம்.

கண்ணாடித் தடுப்பு, குளிர்சாதன வசதி போன்றவற்றுடன் சுத்தமாகவும் முறையாகவும் தொழில் செய்பவர்களை நான் குறை கூறவில்லை.

ஆனால் சிலரின் பொறுப்பற்ற செயலால் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்திற்கும் கெட்ட பெயர் வரக்கூடாது.

கோவையில் கடந்த காலத்தில் ஏற்பட்ட மதப் பதற்றங்களின் வேதனையான விளைவுகளை நாம் மறந்துவிடக்கூடாது. அதன் பாதிப்பையும், அதன்பிறகு முஸ்லிம்கள் சந்தித்த தனிமைப்படுத்தலையும் நான் கோவையில் படித்த காலத்தில் நேரடியாக உணர்ந்திருக்கிறேன்.

ஒரு சிலரின் தவறு — ஒரு சமூகத்தின் பெயரைக் கெடுக்கக்கூடாது.

எனவே இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் ஜமாஅத் தலைவர்கள் இதில் கவனம் செலுத்தி, சம்பந்தப்பட்ட வியாபாரிகளிடம் பேசி சுத்தமான, சட்டபூர்வமான, பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத விற்பனை முறையைப் பின்பற்றச் செய்ய வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

பிரச்சினை பெரிதான பிறகு பேசுவதைவிட,
பிரச்சினை உருவாகாமல் தடுப்பதே சிறந்த சமூகப் பணி.

13/08/2026

Courtesy puthiyathalaimuarai assembly pin drop silence 🤫

Address

Tirupur
641604

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tamilan Nizam Mpk posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share