25/08/2025
திருவள்ளூரில் இருந்து திருத்தணி செல்லும் வழியிலுள்ள சென்னை - திருப்பதி நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடி மீது கனரக லாரியொன்று மோதியதால் அதிர்ச்சி. நல்வாய்ப்பாக சுங்கச்சாவடி ஊழியர் உயிர் தப்பிய நிலையில், சேதமடைந்த சுங்கச்சாவடியின் சுவரும், இரும்பு ராடுகளும் மற்றொரு தடத்திலிருந்த கார் மீது விழுந்தது. காரில் வந்தவர்களும், நல்வாய்ப்பாக சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். சம்பவம் குறித்து திருவள்ளூர் தாலுக்கா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.