Tiruvannamalai people's Page TN 25

Tiruvannamalai people's Page TN 25 திருவண்ணாமலை

05/07/2025

#திருவண்ணாமலை #மாநகரில் வெளி மாநில பக்தர்களின் #கார் எங்கு நிறுத்து வேண்டும் என்று இடம் மற்றும் வழி அதற்கான #வழிகாட்டி #பலகை #வைத்தால் #மட்டுமே #சாத்தியம். இவற்றை எல்லாம் சரிசெய்தால் #போக்குவரத்து கட்டுக்குள் வரும்!

05/07/2025
*மனுதலைப்பு: * #திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் திருக்கோயிலில் உள்ளூர் பக்தர்களுக்காக தனி தரிசன பாதை அமைக்கக் கோரி** ...
17/06/2025

*மனு
தலைப்பு: * #திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் திருக்கோயிலில் உள்ளூர் பக்தர்களுக்காக தனி தரிசன பாதை அமைக்கக் கோரி**

பெறுநர்:
மதிப்பிற்குரிய அதிகாரி,
இந்து சமய அறநிலையத்துறை,
அண்ணாமலையார் திருக்கோயில்,
திருவண்ணாமலை – 606601.

#மதிப்பிற்குரிய ஐயா/அம்மையீர்,

வணக்கம்.
நான் (உங்கள் பெயர்), #திருவண்ணாமலை நகரத்தைச் சேர்ந்த ஒரு குடிமகனாக இருக்கிறேன். நமது திருத்தலமான அண்ணாமலையார் திருக்கோயிலில், தினமும் மற்றும் பவுர்ணமி, கார்த்திகை தீபம், மகா சிவராத்திரி போன்ற விழாக்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகின்றனர்.

இந்த நேரங்களில் #உள்ளூர் பக்தர்களும் வெளிமாநில பக்தர்களும் ஒரே பாதையில் தரிசனம் செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால் #உள்ளூர் மக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதும், மூத்தவர்கள், பெண்கள், மாற்றுத் திறனாளிகள் போன்றோருக்கு சிரமம் ஏற்படுவதும் வழக்கமானதாக உள்ளது.

எனவே, #திருவண்ணாமலை நகர மக்களுக்கு (அண்மையில் வசிப்பவர்கள்), ஆதார சான்றுகளின் அடிப்படையில் ஒரு தனி தரிசன பாதையை (Local Resident Darshan Queue) ஏற்படுத்தி தரும்படி தங்களை பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.

இந்த ஏற்பாடு:

பக்தர்களின் அசௌகரியத்தை குறைக்கும்,

கோயிலின் ஒழுங்கை மேம்படுத்தும்,

உள்ளூர் மக்களின் மத உணர்வை மதிப்பிக்கும் நல்ல முயற்சி ஆகும்.

#தாங்கள் இம்மனுவை கருணையுடன் பரிசீலித்து, உரிய நடவடிக்கை எடுத்து தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.

#நன்றி.

உங்கள் விசுவாசியாக,
(உங்கள் முழுப் பெயர்)
(முகவரி – திருவண்ணாமலை நகரம்)
(தொலைபேசி எண்)
(தேதி)

---

07/06/2025

🚆 விழுப்புரம் - திருவண்ணாமலை சிறப்பு ரெயில் சேவை!
📅 தேதி: 10.06.2025 | பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு

📍 திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலத்தில் பங்கேற்கும் பக்தர்களின் வசதிக்காக, தென்னக ரெயில்வே அமைப்பு சார்பில் முன்பதிவில்லா சிறப்பு ரெயில் இயக்கப்படும்.

🛤️ விழுப்புரம் - திருவண்ணாமலை (வண்டி எண் 06130)
🕘 புறப்படும் நேரம்: காலை 9.25
🕚 வருகை நேரம்: பகல் 11.10

🛤️ திருவண்ணாமலை - விழுப்புரம் (வண்டி எண் 06129)
🕧 புறப்படும் நேரம்: பிற்பகல் 12.40
🕑 வருகை நேரம்: பிற்பகல் 2.15

📌 நின்று செல்லும் இடங்கள்:
வெங்கடேசபுரம், மாம்பழப்பட்டு, ஆயந்தூர், திருக்கோவிலூர், ஆதிச்சனூர், அண்டம்பள்ளம், தண்டரை.

📢 மேலும் தகவல்: திருச்சி கோட்ட ரெயில்வே மக்கள் தொடர்பு அலுவகம்

🙏 பக்தர்கள் நலன் கருதி சிறப்பான சேவையை வழங்கும் ரெயில்வே துறைக்கு நன்றி!

  Bike  #திருவண்ணாமலைக்கு வந்திருக்கு ஏழு கிமீ பயணிக்க 9 ரூவா  #தான். நாட்கள் போகப்போக விலை கூடும் ஆனா புற்றீசல் போல இந்...
03/06/2025

Bike #திருவண்ணாமலைக்கு வந்திருக்கு ஏழு கிமீ பயணிக்க 9 ரூவா #தான். நாட்கள் போகப்போக விலை கூடும் ஆனா புற்றீசல் போல இந்த ஆண்டு ஆட்டோ வாங்கினவங்க நிலமை மோசமாகிடும். அட்டோகாரனுங்க கொஞ்ச நஞ்ச ஆட்டமா போட்டாணுவன்னு இப்பவே பேச்சி.

Market correction னு சோலிய முடிக்க போறானுவ

கிராமபுறங்களில் கூட சுத்தமாக  இருக்கும்... இதுல  #மாநகராட்சி அந்தஸ்து வேற...
26/05/2025

கிராமபுறங்களில் கூட சுத்தமாக இருக்கும்... இதுல #மாநகராட்சி அந்தஸ்து வேற...

24/05/2025

திருவண்ணாலை
சின்ன கடை தெரு பகுதியில்
கடும் வாகன நெரிசல் தவிக்கும் பொதுமக்கள்.

என்னென்ன பீலா விட்டாங்க, ஆட்டோ மாடவீதி வராது, இந்த சந்துல பூந்து அந்த சந்துல வரணும்னு .....ஆட்டோ இப்ப ராஜ கோபுரம் வாசல் ...
23/05/2025

என்னென்ன பீலா விட்டாங்க, ஆட்டோ மாடவீதி வராது, இந்த சந்துல பூந்து அந்த சந்துல வரணும்னு .....

ஆட்டோ இப்ப ராஜ கோபுரம் வாசல் வரை வருது... விட்டா அண்ணாமலையார் கோயில் கொடி மரம் வர போகும் போல...

Address

Tiruvannamalai

Alerts

Be the first to know and let us send you an email when Tiruvannamalai people's Page TN 25 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tiruvannamalai people's Page TN 25:

Share