Thoothukudi Diary

Thoothukudi Diary "Stay connected with Thoothukudi Diary to know about the events, programs, spiritual, and commercial information happening in Thoothukudi."

தூத்துக்குடியில் நாளை மின்தடை: எந்தெந்தப் பகுதிகளில் தெரியுமா?தூத்துக்குடி மாநகர மற்றும் புறநகர் பகுதிகளில் மாதாந்திரப் ...
17/12/2025

தூத்துக்குடியில் நாளை மின்தடை: எந்தெந்தப் பகுதிகளில் தெரியுமா?
தூத்துக்குடி மாநகர மற்றும் புறநகர் பகுதிகளில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் காரணமாக நாளை 18-12-2025 (வியாழக்கிழமை) மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது. காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை கீழ்காணும் பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.
கீழ அரசடி, மேல அரசடி, திரேஸ்நகர், திரேஸ்புரம், சாகிர் உஷேன் நகர், டேவிஸ்புரம், ஜீவா நகர், அலங்கார தட்டு, நேருகாலனி கிழக்கு, சுனாமிநகர், வாலசமுத்திரம், குருஸ்புரம், பூபாலராயர் புரம், எஸ்.எஸ். மாணிக்கபுரம்.கிருஷ்ணராஜபுரம், முத்துகிருஷ்ண புரம், வெற்றிவேல் புரம், சங்குகுளி காலனி, முத்தையார் காலனி, மாப்பிள்ளையூரணி, ஜோதி நகர், ஆரோக்கியபுரம், தாளமுத்துநகர், நேரு நகர், ஹவுசிங் போர்டு, குமரன் நகர், கோவில்பிள்ளை விளை.
புறநகர் மற்றும் கடலோரப் பகுதிகள்: வெள்ளப்பட்டி, தருவைகுளம், T.சவேரியார்புரம், மாதா நகர், ராமர்விளை, ராஜபாளையம், சிலுவைப்பட்டி, அ.குமாரபுரம், மேலமருதூர், தளவாய்புரம், பட்டிணமருதூர், பணையூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் மின்தடை செய்யப்படுகிறது.

தூத்துக்குடியில் மின்சாரம் தாக்கி…பொறியியல் பட்டதாரி பலி!                                                               ...
17/12/2025

தூத்துக்குடியில் மின்சாரம் தாக்கி…பொறியியல் பட்டதாரி பலி! தூத்துக்குடி, வடக்கு சோட்டையன் தோப்பு கிராமத்தைச் சார்ந்த 21 வயதான ஹரிஹரன்.இவர் பொறியியல் படித்த பட்டதாரி ஆவார்.இவரின் படிப்பிற்கு ஏற்ற சரியான வேலை கிடைக்காத காரணத்தினால் தனது குடும்பத்தின் வறுமையை உணர்ந்து ஒரு கட்டிட பொறியாளரிடம் சில ஆண்டுகளாக கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று முள்ளக்காடு சந்தோஷ் நகரில் ஒரு புதிய வீடு கட்டிட வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார் அப்போது அங்குள்ள மின்சார மோட்டாரை தூக்கும்போது அதிலிருந்து மின்சாரம் தாக்கியயது.
இதில் பலத்த காயம் அடைந்த அவரை முள்ளக்காடு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்து முத்தையாபுரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஜீவமணி தர்மராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
இந்த சம்பவம் குறித்து வழக்கறிஞர் அ.சார்லஸ் கூறுகையில்:-தூத்துக்குடி மாவட்டம், வடக்கு சோட்டையன் தோப்பு கிராமத்தைச் சார்ந்த 21 வயதான திரு.ஹரிஹரன் பொறியியல் படித்த பட்டதாரி ஆவார்.
இவரின் படிப்பிற்கு ஏற்ற சரியான வேலை கிடைக்காத காரணத்தினால் தனது குடும்பத்தின் வறுமையை உணர்ந்து ஒரு கட்டிட பொறியாளரிடம் சில ஆண்டுகளாக கூலி வேலை பார்த்து வந்துள்ளார்.
அவரின் உத்தரவுப்படி நேற்று முள்ளக்காடு பகுதியில் உள்ள ஒரு இடத்தில் புதிய வீடு கட்டும் வேலை செய்து கொண்டிருந்த போது அவருக்கு சரியான பாதுகாப்பு உபகரணங்களை வழங்காமலும், போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொடுக்காமலும் குற்றமுறு எண்ணத்துடன் அலட்சியமாக அஜாக்கிரதையாக அவரை பணிக்கு அமர்த்தியவர் வேலை வாங்கிய காரணத்தினால் நேற்று மாலை பணியிடத்திலேயே அவர் மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளார் என்கிற செய்தியை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
தங்களது பொருளாதாரச் சூழ்நிலையை கவனத்தில் கொண்டு கூலி வேலைக்குச் செல்லும் தலித் இளைஞர்களுக்கு தொடர்ந்து இப்படிப்பட்ட சம்பவங்கள் நடப்பது வேதனைக்குரிய ஒன்றாகும்.
எனவே இளைஞரை பணிக்கு அமர்த்திய பொறியாளர், அந்த வீட்டின் உரிமையாளர் மற்றும் கவன குறைவாக தன்னுடைய பணியை சரிவர செய்யாத மின்வாரிய ஊழியர்கள் உள்ளிட்ட அத்தனை பேர்களும் தங்களது பொறுப்புணர்வை உணர்ந்து இறந்து போன ஹரிஹரன் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கிராம மக்களும், குடும்பத்தினரும் கோரிக்கை வைக்கிறோம் என்றார்.

பலி வாங்கிய அரசு பள்ளிச் சுவர்!யார் பொறுப்பு?
17/12/2025

பலி வாங்கிய அரசு பள்ளிச் சுவர்!யார் பொறுப்பு?

திருவள்ளூர் மாவட்டம்,கொண்டாபுரம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் சுவர் இடிந்து விழுந்து,7-ம் வகுப்பு மாணவர் உயிர...

தலைவர் சஸ்பெண்ட்...தூத்துகுடியில் 40 வாகனங்களுடன் தூய்மைப் பணியாளர்கள் திடீர் முற்றுகைப் போராட்டம்!_____________________...
17/12/2025

தலைவர் சஸ்பெண்ட்...தூத்துகுடியில் 40 வாகனங்களுடன் தூய்மைப் பணியாளர்கள் திடீர் முற்றுகைப் போராட்டம்!
__________________________________________________________ https://www.youtube.com/watch?v=7mlehTLdVBk
__________________________________________________________

தூய்மை பணியாளர்கள் நல சங்கத் தலைவர் பொன்ராஜை காரணமின்றி சட்டவிரோதமாக வேலையில் இருந்து நிறுத்தியதால் தூய்மை ப...

தூத்துக்குடியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை                                ...
13/12/2025

தூத்துக்குடியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை #தூத்துக்குடி #குற்றவாளிக்கு_தண்டனை #குற்றச்செய்தி

"கட்சி தொடங்கி உடனே முதல்வர் ஆசையா?" - தொல்.திருமாவளவன் கடும் தாக்கு!  #தொல்_திருமாவளவன்  #விசிக    #அரசியல்    #இந்திய_...
13/12/2025

"கட்சி தொடங்கி உடனே முதல்வர் ஆசையா?" - தொல்.திருமாவளவன் கடும் தாக்கு!
#தொல்_திருமாவளவன் #விசிக #அரசியல் #இந்திய_கம்யூனிஸ்ட் #தூத்துக்குடி

Address

97, Ettayapuram Road, Near Suresh Ias Acedamy
Tuticorin
628002

Website

Alerts

Be the first to know and let us send you an email when Thoothukudi Diary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share