24/07/2025
உடுமலை அருகே உள்ள திருமூர்த்திமலையில் ஆடி அமாவாசை விழா:
# திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்துள்ள சுற்றுலாதலமான திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில் பிரம்மா, விஷ்ணு, சிவன் என மூன்று தெய்வங்களும் ஒருங்கே அமைந்துள்ளதால் இக் கோவில் தமிழக அளவில் பிரசித்தி பெற்ற கோயிலாக விளங்கி வருகிறது.
# இந்நிலையில் ஆடி அமாவாசையை ஒட்டி பக்தர்கள், பொதுமக்கள் என பல்லாயிரக்கணக்கானோர் அதிகாலை திருமூர்த்திமலைக்கு வரத் தொடங்கினர். குறிப்பாக ஆயிரக்கணக்கான மாட்டு வண்டிகளில் குடும்பத்துடன் வந்திருந்தனர்.
# உடுமலை, பொள்ளாச்சி, பல்லடம், திருப்பூர் ஆகிய ஊர்களில் இருந்து நூற்றுக்கணக்கான சுற்றுலா வாகனங்களிலும் பொது மக்கள், பக்தர்கள் திருமூர்த்திமலைக்கு வந்தி்ருந்தனர்.
# இந்த தினத்தை ஒட்டி அமணலிங்கேஸ்வரர் கோவிலில் அதிகாலை முதலே சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். மேலும் பாலாற்றில் புனித நீராடினர்.
# குறிப்பாக தங்களது மூதாதையர்களுக்கு தர்பணம் செய்து வழிபட்டனர். உடுமலையில் இருந்து திருமூர்த்திமலைக்கு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. திருமூர்த்திமலையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
# இதே போல கொழுமம் அமராவதி ஆற்றங்கரையோ த்திலும் ஆடி அமாவாசையை ஒட்டி முதாதையர்களுக்கு தர்பணம் கொடுக்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கா னோர் கலந்து கொண்டனர்.