16/09/2025
உடுமலையில் பட்டு விவசாயிகள் கஞ்சி காய்ச்சி போராட்டம்: அதிகாரிகள் அலட்சியம்:
#திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள சில்வர் மைன் சில்க்ஸ் பிராசசர்ஸ் என்ற தனியார் நிறுவனம் பட்டு விவசாயிகளிடம் பட்டுக்கூடு கொள்முதல் செய்தது.
#அந்த வகையில் திருப்பூர், கோவை, திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த 81 விவசாயிகளுக்கு சுமார் ரூ.25 லட்சம் நிலுவை வைத்து உள்ளது அந்த நிறுவனம்.
#இதுகுறித்து அதிகாரிகளிடம் பல முறை மனு அளித்தும் இதுவரை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பணம் கிடைக்கவில்லை.
#இந்நிலையில் உடுமலை அருகே மைவாடியில் உள்ள பட்டுவளர்ச்சித் துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் விவசாயிகள் கஞ்சி காய்ச்சி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.