SADIQ BASHA

SADIQ BASHA நான் ஒரு கழுகு

கடலூர் மாவட்டம் புலியூர் தோட்டத்தில் மாநில செயற்குழு கூட்டம் மரியாதைக்குரிய முத்தமிழன் தி.வேல்முருகன் MLA அவர்கள் தலைமைய...
31/01/2025

கடலூர் மாவட்டம் புலியூர் தோட்டத்தில் மாநில செயற்குழு கூட்டம் மரியாதைக்குரிய முத்தமிழன் தி.வேல்முருகன் MLA அவர்கள் தலைமையில் நடைபெற்றது. கூட்டம் முடிந்த பின்னர் , தலைவரிடம் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதியில் உறுப்பினர் சேர்க்கைக்கான படிவத்தை அவரிடம் பெற்றுக் கொண்டேன்.

மன நிறைவான அரசியல் பயணம், மனசாட்சிக்கு கட்டுப்பட்ட மக்களுக்கான அரசியல் , புனிதமான இடத்திலிருந்து எனது அரசியல் போராட்டங்களும் , பணிகளும் தொடரும்..!

வாழ்க தமிழ்.! வளர்க தமிழ்நாடு.! நிம்மதி பெருமூச்சு விடட்டும் எம் இன தமிழ் மக்கள்..!

Velmurugan.T தமிழக வாழ்வுரிமைக் கட்சி Tiruppur District Police Poochi S Murugan @

14/01/2025
தந்தை பெரியார் அவர்களின் நினைவு நாளான இன்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் முத்தமிழன் தி.வேல்முருகன் MLA , ( சட்டமன...
24/12/2024

தந்தை பெரியார் அவர்களின் நினைவு நாளான இன்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் முத்தமிழன் தி.வேல்முருகன் MLA , ( சட்டமன்ற உறுதிமொழிக் குழுவின் தலைவர் ) அவர்களின் ஆணைக்கிணங்க , ராயநல்லூர் கனல்.உ.கண்ணன் அவர்களின் ஆலோசனையின் படி ,திருப்பூர் கிழக்கு மாவட்டம், தாராபுரம் பெரியார் திடலில் உள்ள, தந்தை பெரியார் அவர்களின் திருவுருவ சிலைக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் , திருப்பூர் கிழக்கு மாவட்ட செயலாளர் மரியாதைக்குரிய அண்ணன் திரு.மு.சரவணன் அவர்களின் தலைமையில் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதியின் சார்பில் கலந்து கொண்டேன். இதில், தாராபுரம் ஒன்றிய , நகர பொறுப்பாளர்கள் , திருப்பூர் கிழக்கு மாவட்ட ஊடகப்பிரிவு பொறுப்பாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Velmurugan.T கனல் உ.கண்ணன் இராயநல்லூர் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சரவணன் தமிழக வாழ்வுரிமைக் கட்சி

09/12/2024

சட்டமன்ற அவைத்தலைவர் அப்பாவு அவர்கள் செயல்பாடு தொடர்ந்து இதேபோல் நீடித்தால் 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சியை பிடிப்பது கடினம்.!

பேசுவது அத்தனையும் தலை கணத்துடன் , ஆணவத்துடன் பேசுவது போல் உள்ளது. தொகுதியில் உள்ள பிரச்சனை சம்பந்தமாக அமைச்சரிடம் கேட்காமல் , அரசு அதிகாரிகளிடமா கேட்க முடியும்.?
அமைச்சரை கேள்வி கேட்டால் அவைத்தலைவர் பதில் சொல்வது தமிழ்நாட்டில் தான் அரங்கேறி வருகிறது. ஒன்றிய அரசுக்கு முழு ஜால்ரா அடிக்கும் அவைத்தலைவருக்கு வாழ்த்துக்கள்.!

M Appavu Appavu Annachi M. K. Stalin Udhayanidhi Stalin Velmurugan.T Edappadi K. Palaniswami தங்கமகன் OPS Durai Murugan

15/11/2024

சசிகலாவின் உறவினர்களால் சசிகலா அவர்களுக்கு ஏற்பட்டுள்ள மன உளைச்சல்.

அதிமுக கட்சியை கைப்பற்றும் கனவு நிறைவேறுமா..?!

கொடநாடு கொலை வழக்கு சம்பந்தமாக தற்போதைய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு சம்பந்தம் இல்லை என முன்பே தெரிந்திருந்தும் அதனை பேசு பொருளாக்கியது திமுக வட்டாரம். கொடநாடு கொலை வழக்கு சம்பந்தமாக வழக்கில் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுடைய பெயர் இடம்பெறாதது பற்றி உயர்நீதிமன்ற நீதிபதிகள் விளக்கம் கேட்டுள்ளனர். இது ஒருபக்கம் இருக்க, அதிமுக ஆட்சியின் போது மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களுக்கு மெரினாவில் இடம் வழங்குவது சம்பந்தமாக அதிமுக தரப்பில் முக்கிய தலைமை நிர்வாகி உதவி இருப்பதாகவும் தெரியவருகிறது.

எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கும் கொடநாடு கொலைக்கும் சம்பந்தம் இருப்பதாக கனகராஜ் என்பவரின் சகோதரர் பேசிய விவகாரத்தில் எடப்பாடி தரப்பில் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் வழக்கு சம்பந்தமாக விசாரணை செய்த நீதிபதிகள் 1 ½ கோடி நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட்டு, கொடநாடு கொலை வழக்கு சம்பந்தமாக வாய் திறக்க கூடாது என கனகராஜ் சகோதரருக்கு எச்சரிக்கையும் செய்துள்ளது.

அதிமுக கட்சி மாபெரும் தலைவர்கள் தலைமை வகித்த கட்சி ஆகும். தற்போது அந்த கட்சியில் நடந்துவரும் உட்கட்சி விவகாரங்கள் யாருக்கு சாதகமாக அமைகிறதோ இல்லையோ திமுக கட்சிக்கு சாதகமாகவே அமைந்துள்ளது. ஒருபக்கம் EPS - OPS பிரச்சனை மற்றொரு பக்கம் சசிகலா அவர்களின் உறவினர்கள் சொத்து பிரச்சனை என பல கோணங்களில் பிரச்சனை வந்த வண்ணமாக உள்ளது. பல ஆயிரக்கணக்கான சொத்துக்களை பாதுகாப்பதில் ஏற்பட்டுள்ள விவகாரத்தில் , சசிகலாவின் சொத்துக்களை இளைய சகோதரன் திவாகரன் அவர்களுக்கு ஒரு பெரும் பகுதியை எழுதி கொடுத்ததின் விளைவாக சசிகலா உறவினர்களுக்கும் , சசிகலாவுக்கும் பெரிய வார் நடந்து வருகிறது. இதில், திவாகரன் சசிகலா குடும்பத்தில் செய்யும் அதிகாரங்களால் சசிகலா அவர்கள் நிலை குழைந்து போயுள்ளார். இதிலிருந்து அவர் மீண்டும் திரும்பி வந்து அதிமுக கட்சியை தன் வசப்படுத்துவது அவ்வளவு எளிதல்ல,

தீபாவளிக்கு அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு 2 கோடி பரிசு கிடைத்திருக்கிறது.

சசிகலா தரப்பில் அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு தீபாவளி பரிசாக ஒரு கோடி வழங்கப்பட்டது. இந்த தகவலை எப்படி தெரிந்து கொண்ட எடப்பாடி அவர்கள். அவரும் பதிலுக்கு ஒரு கோடியை தூக்கி கொடுத்துள்ளார். இதனால் இந்த ஆண்டு தீபாவளி ஆளும் கட்சி எம்.எல்.ஏக்களை விட எதிர் கட்சி எம்.எல்.ஏக்களுக்கு அதிர்ஷ்டமான தீபாவளி தான். அதிமுக கட்சியில் பொதுக்குழு உறுப்பினர்களிடம் மறைமுகமாக பேரம் பேசி வரும் சசிகலா அவர்களை எப்படியாவது வழிக்கு கொண்டு வந்து , பொதுச்செயலாளர் பொறுப்பை ஏற்க திட்டமிட்டு வருகிறார். ஆனால் சசிகலா அவர்களின் குடும்பத்தில் நடக்கும் பிரச்சனைகளுக்கு மத்தியில் இப்போதைக்கு அது நடக்காது காரியம்.

இதை சரியாக எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பயன்படுத்தி கட்சியிலிருந்து வெளியே போனவர்களை ஒருங்கிணைத்து , இப்போது இருந்தே சரியான வியூகங்களை வகுத்திட வேண்டும். தென் தமிழகத்தில் உள்ள கருத்து வேறுபாடுகளை கலைத்து மீண்டும் பன்னீர் செல்வம் அவர்களை கட்சியில் இணைந்தால் அதிமுக மீண்டும் எழுச்சி பெறும். இல்லையென்றால் கடைசிவரை டம்ளரில் மட்டுமே நீச்சல் அடிக்க முடியும்.

Edappadi K. Palaniswami ADMK -IT WING சசிகலா நடராஜன் &சின்னம்மா பேரவை தங்கமகன் OPS Mudhalvan OPS

12/11/2024

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்துள்ளது ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி. இப்பகுதியில் உள்ள அறிவொளி நகரில், கடந...

திருப்பூரில் காவல்துறை அனுமதியோடு போதை ஊசி, போதை மாத்திரைகள் விற்பனை !.?நடவடிக்கை மேற்கொள்ள பொதுமக்கள் கோரிக்கை !
07/11/2024

திருப்பூரில் காவல்துறை அனுமதியோடு போதை ஊசி, போதை மாத்திரைகள் விற்பனை !.?

நடவடிக்கை மேற்கொள்ள பொதுமக்கள் கோரிக்கை !

திருப்பூர் மாநகர எல்லைக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் போதை ஊசி, போதை மாத்திரை உள்ளிட்ட போதை வஸ்துக்கள் தாராள.....

பங்குச்சந்தை மோசடியில் தனியார் வங்கிகளின் பங்கு !“லக்கி பாஸ்கர்” திரைப்படத்தின் விமர்சனம்
04/11/2024

பங்குச்சந்தை மோசடியில் தனியார் வங்கிகளின் பங்கு !

“லக்கி பாஸ்கர்” திரைப்படத்தின் விமர்சனம்

சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரிப்பில், வெங்கட் அட்லூரி இயக்கத்தில், துல்கர் சல்மான், மீனாட்சி சௌத்ரி, ராம....

'வெற்று' ஆரவாரமோ , 'வீண்' ஆரவாரமோ அதைப்பற்றி ஜவாஹிருல்லா அவர்கள் கவலைப்பட வேண்டியதில்லை.  திராவிட மாடல் அரசை விமர்சனம் ச...
30/10/2024

'வெற்று' ஆரவாரமோ , 'வீண்' ஆரவாரமோ அதைப்பற்றி ஜவாஹிருல்லா அவர்கள் கவலைப்பட வேண்டியதில்லை. திராவிட மாடல் அரசை விமர்சனம் செய்த தளபதி விஜய் அவர்கள் , மக்களை பிளவுபடுத்தும் பாசிச பாஜக கட்சியை விமர்சனம் செய்யாதது ஏன் என பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதில், ஜவாஹிருல்லா அவர்களும் சேர்ந்து கொண்டார். பாஜக கட்சியை பற்றி பேச வேண்டும் என்ற கட்டாயம் தற்போது அவருக்கு இல்லாமல் இருந்திருக்கலாம். அப்படி பார்த்தால் பாஜக கட்சி மட்டுமல்லாது பல கட்சியை பற்றி அவர் பேசவில்லை. தவெக கட்சி மாநாட்டில் பல கட்சிகளை பற்றி பேசுவதற்கு அவர்கள் அங்கு ஒன்று கூடவில்லை. ஆட்சியில் இருக்கும் கட்சியை பெரும்பாலும் விமர்சனம் செய்வது சகஜம் தான் என தற்போதைய அமைச்சர்களே கூறி வருகின்றனர்.

முஸ்லீம்களின் உரிமையை பறிக்கும் வக்பு திருத்தச் சட்டத்தை எதிர்த்து விஜய் அறிக்கை விட்டாரா என மற்றும் ஒரு கேள்வியும் எழுகிறது. வெற்று ஆரவாரம் செய்பவர்கள் என கூறிவிட்டு , அவர்களிடம் அறிக்கை விட சொல்வது தான் அரசியல் நாகரிகமா.? பாசிச பாஜக கட்சி மட்டும் தான் மக்களை பிளவுபடுத்துகிறதா.? திராவிட மாடல் அரசு சமூகநீதி பேசிக்கொண்டு மக்களை சாதி ரீதியாக பிளவுபடுத்தவில்லையா.?

புதிதாக கட்சி துவங்கியவர்களை வாழ்த்துவது போல வாழ்த்தி விட்டு , பிறகு தூற்றுவது நாகரிகம் அற்றது. பிளவுவாத அரசியல் பாஜக கட்சி மட்டுமே செய்வதாக கூறி வேண்டாம். நீங்கள் கூட்டணி வைத்திருக்கும் திமுக கட்சியும் அதே பிளவுபடுத்தும் வேலையை செய்து வருவதை நீங்கள் அறிந்திருக்க கூடும். ஆகவே தவெக இப்போது தான் பிறந்துள்ளது , பிறந்த குழந்தையை பார்த்து இத்தனை பயம் எதற்காக என்பதே இப்போது கேள்வி.?

TVK தமிழ்நாடு TVK தொண்டன் M. K. Stalin Udhayanidhi Stalin DMK ITWing Poochi S Murugan DMK - Dravida Munnetra Kazhagam

தின பூமி பத்திரிக்கை நாளிதழ் உரிமையாளர் திரு.மணிமாறன்‌ அவர்கள் மதுரை செல்லும் வழியில் சாலை விபத்தில் உயிரிழந்தார். அன்னா...
15/10/2024

தின பூமி பத்திரிக்கை நாளிதழ் உரிமையாளர் திரு.மணிமாறன்‌ அவர்கள் மதுரை செல்லும் வழியில் சாலை விபத்தில் உயிரிழந்தார். அன்னாரை இழந்துள்ள அவர்களது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவன் அருள் புரிவானாக.!

Thinaboomi Madurai 90s King Madurai District News - மதுரை மாவட்ட செய்திகள் Madurai public

Address

MP. Nagar , Thangammal Odai
Udumalpet
642203

Telephone

+918883994277

Website

Alerts

Be the first to know and let us send you an email when SADIQ BASHA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SADIQ BASHA:

Share

Category