17/05/2025
#ஓட்ட_பானை வளர்ப்பு
பாமக பிரமுகரை தாக்கிய விசிக கும்பல் மீது வழக்கு பதிவு
கூவத்தூர் இ.சி.ஆர். சாலையில் இருசக்கர வாகனத்தில் எதிரே மோதுவது போல் வந்ததர்களை தட்டி கேட்டதால் ஆத்திரம்:
டீசல் வாங்க வந்த பா.ம.க. பிரமுகரான கல்லூரி மாணவரை சரமாரியாக தாக்கியதாக சி.சி.டி.வியில் பதிவான காட்சிகளை கொண்டு வி.சி.க. பிரமுகர் உள்ளிட்ட 4 பேருக்கு போலீஸ் வலைவீச்சு!
கூவத்தூர் இ.சி.ஆர். சாலையில் இருசக்கர வாகனத்தில் எதிரே மோதுவது போல் மற்றொரு மோட்டார் சைக்களில் வந்தவர்களை தட்டி கேட்டதால் ஆத்திரமடைந்து டீசல் வாங்க வந்த கல்லூரி மாணவரை சரமாரியாக தாக்கியதாக சி.சி.டி.வி.யில் பதிவான காட்சிகளை வைத்து வி.சி.க. பிரமுகர் 2 பேர் உள்ளிட்ட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அருகே கூவத்தூர் அடுத்த தண்டரை கிராமத்தை சேர்ந்தவர், முரளிதரன்(வயது20). இவர்; நெம்மேலி அரசு கலைக்கல்லூரியில் பி.காம் இறுதியாண்டு படித்து வருகிறார். பா.ம.க. பிரமுகர், விவசாய குடும்பத்தை சேர்ந்த இவர் தங்கள் வீட்டு பவர்டில்லர் மற்றும் டிராக்டருக்கு டீசல் வாங்குவதற்காக கிழக்கு கடற்கரை சாலையில் காத்தான்கடையில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு வந்துள்ளார். அப்போது அங்கு எதிரே மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த கூவத்தூர் நாவாக்கல் பகுதியை சேர்ந்த வி.சி.க. பிரமுகர்கள் ரகு(வயது33), ரஞ்சித்(வயது35) ஆகியோர் முரளிதரன் மீது மோதுவது போல் மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்துள்ளனர். ஒழுங்காக மோட்டார் சைக்கிள் ஓட்டமாட்டீர்களா? என முரளிதரன் அவர்களை நோக்கி கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரகு, ரஞ்சித் ஆகியோர் எங்க ஏரியாவில் வந்து எங்களையே திட்டுகிறாயா? வன்னியனா பெரிய மயிறா? என கேட்டு ஆத்திரமடைந்து அவரை தாக்கி உள்ளனர். அடி தாங்க முடியாமல் பதிலுக்கு முரளிதரனும் அவர்கள் இருவரையும் தாக்கி உள்ளார். அப்போது மது போதையில் இருந்த வி.சி.க. பிரமுகர் என்பவர் முரளிதரனை கூட்டு சேர்ந்து தாக்குவதற்காக தன் செல்போன் மூலம் தகவல் தெரிவித்து தன் நண்பர்கள் இருவரை அங்கு வரவழைக்கிறார். பிறகு 4 பேரும் சேர்ந்து பங்கில் டீசல் வாங்கி கொண்டிருந்த கல்லூரி மாணவர் முரளிதரனை, பனியனை கிழித்து சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். பாமக பிரமுகர் முரளிதரனை 4 பேரும் சேர்ந்து தாக்கும் காட்சிகள் பெட்ரோல் பங்கில் உள்ள சி.சி.டி.வியில் பதிவாகி இருந்தது. பிறகு இந்த தாக்குதலில் கண்ணில் காயமடைந்த முரளிதரன் கூவத்தூர் போலீஸ் நிலையத்தில் தன் தந்தையுடன் சென்று புகார் செய்தார். பிறகு போலீசார் பெட்ரோல் பங்கில் உள்ள சி.சி.டி.வி.யில் பதிவான தாக்குதல் சம்பவங்களை ஆதாரமாக கொண்டு கொலை மிரட்டல் வழக்கு பதிவு செய்து கூவத்தூர் நாவாக்கால் பகுதியை சேர்ந்த ரகு, ரஞ்சித், தட்சணாமூர்த்தி, ராஜேஷ் ஆகிய 4 பேரை தேடி வருகின்றனர்.