கவிகள் ஆயிரம்

கவிகள் ஆயிரம் கவிகள் ஆயிரம் இந்த குருப்பில் இணைந்த

அமரர். அப்துல் கலாம் எனும் மாமனிதர் மறைந்த நாள் இன்று .உலகிலேயே அதிவேகமாக சென்று தாக்கும்ஏவுகணை - இந்தியாவின் பிரம்மோஸ்(...
29/07/2023

அமரர். அப்துல் கலாம் எனும் மாமனிதர் மறைந்த நாள் இன்று .
உலகிலேயே அதிவேகமாக சென்று தாக்கும்ஏவுகணை - இந்தியாவின் பிரம்மோஸ்(ஒலியை விட 2.5 மடங்கு) இதற்கு இணையானஒரு ஏவுகணையை பத்தாண்டு ஆராய்ச்சிக்குமேலும் அமெரிக்க, சீனாவால் தயாரிக்கமுடியவில்லை
உலகிலேயே ஒரே ஏவுகணையில் 6அணுகுண்டுகளை சுமந்து, ஒரே நேரத்தில்ஆறு இலக்குகளை தாக்கும் ஒரே ஏவுகணை -பிருத்வி
உலகிலேயே மிகச்சிறிய நவீன போர்விமானம்- இந்தியயாவின் தேஜஸ்
உலகிலேயே அதிவேக போர்விமானம் -சுகோய் 30 ரக இந்திய விமானம்
உலகிலேயே ஒரே ஏவுகணையில் 10 எதிரிவிமானங்களை வீழ்த்தும் ஆற்றல் பெற்றது -இந்தியாவின் ஆகாஷ் ஏவுகணை
உலக அணு ஆயுத ஏவுகணையில் காற்றில்லாஉயரத்திற்கு சென்று 5000 கி.மீ தொலைவை 17நிமிடத்தில் தாக்கும் அதிவேக அணுஆயுதஏவுகணை - அக்ணி 5
உலகிலேயே GPS தொழில்நுட்பத்துடன்கடலுக்கடியில் நீர்மூழ்கி கப்பலயேசாம்பலாக்கும் ஏவுகணை - இந்தியாவில் K4ஏவுகணை
உலகிலேயே ராடாரால் கண்டுபிடிக்க முடியாததரை ஒட்டி சென்று 1000 கி.மீ அப்பால் உள்ளஇலக்கை அழிக்கும் ஒரே ஏவுகணை -இந்தியாவின் நிர்பாய்
உலகிலேயே அணு ஆயுதத்தை கொண்டுதாக்கினாலும் அழிக்க இயலாத ஒரே பீரங்கி -அர்ஜுனா டாங்கி.
உலகிலேயே 1 நிமிடத்தில் 20 ஏவுகணையைசெலுத்தும் ஆற்றல் பெற்ற ராக்கெட் லாஞ்சர்இந்தியாவின் பினாகா.
கலாம் ஐயாவின் சரித்திரத்தில் சில.!
1. தாய்மொழியான தமிழ் வழியில் கல்விபயின்று, அறிவியல் துறையில் உலகசாதனைகள் செய்தவர் அப்துல் கலாம்.
2. இந்திய ஜனாதிபதிகளில் மிக, மிகஎளிமையாக இருந்தவர் இவர் ஒருவரே.ஜனாதிபதி மாளிகையில் சைவ உணவுகள்மட்டுமே சாப்பிட்ட ஒரே ஜனாதிபதி இவர்தான்.
3. நாடெங்கும் பட்டி தொட்டிகளில் படிக்கும்மாணவ – மாணவிகளிடம் கூட நாட்டின் மீதுதேசப்பற்று ஏற்பட செய்தவர். ஒரு அரசாங்கம்செய்ய வேண்டிய பணியை ‘‘மாணவர்களேகனவு காணுங்கள்’’ என்று சொல்லிமாணவர்கள் மத்தியில் புரட்சியைஏற்படுத்தியவர்.
4. நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும்என்பதற்காக பெருந்தலைவர் காமராஜர்திருமணம் செய்து கொள்ள மறுத்தார்.அதுபோல திருமணம் செய்தால் அறிவியல்வளர்ச்சிப் பணிகளில் முழுமையாக ஈடுபடமுடியாது என்று திருமணம் செய்ய மறுத்தார்அப்துல் கலாம்.
5. இவரது வாழ்க்கையின் ஒவ்வொருவினாடியும் காந்திய கொள்கைகளைபிரதிபலித்தது.
6. மாணவ, மாணவிகளைப் பார்த்ததும் அவர்பூரித்துப் போவார். அவர்கள் அருகில் சென்றுபேசாமல் இருக்க மாட்டார்.
7. ஜனாதிபதியாக இருப்பவர்கள் இப்படித்தான்இருக்க வேண்டும் என்று எழுதப்படாத சிலமரபுகள் இருந்தன. பதவியேற்ற முதல் நாளேஅந்த மரபுகளை உடைத்தவர் அப்துல் கலாம்.
8. ‘‘அக்னிச் சிறகுகள்’’ எனும் நூல் அப்துல்கலாமின் சுய சரிதையாக வெளி வந்துள்ளது.
9. அப்துல் கலாம் நிறைய கவிதைகள்எழுதியுள்ளார். அந்த கவிதைகளின் வரிகள்ஒவ்வொன்றும் வாழ்க்கைக்கு வழிகாட்டும்வார்த்தைகளாக உள்ளன.
10. அப்துல் கலாம் தன்னடகத்தின் உச்சமாகதிகழ்ந்தவர். அவரைப் போன்று பணிவானமனிதர்களை காண்பது அரிது என்று உலகதலைவர்களே வியந்துள்ளனர்.
11. நான் என்ற அகந்தை எண்ணம் அவரிடம்துளி அளவு கூட இருந்ததில்லை. சிறு வயதுமுதல் வாழ்நாளின் இறுதி வரைஅமைதியானவர், அன்பானவர் என்றபாதையில் இருந்து அவர் விலகாமலேஇருந்தார்.
12. ‘‘நான் யார் தெரியுமா’’ என்ற ரீதியில் அவர்ஒரு நாள் கூட செயல்பட்டதில்லை. ஒரு தடவைஅவர் வெளிநாடு சென்றிருந்த போது விமானநிலைய அதிகாரிகள் அவர் அணிந்திருந்தகால் ஷூ–வை அகற்றி சோதித்த போது,சிரித்துக் கொண்டே முழு ஒத்துழைப்புக்கொடுத்தார்.
13. எந்த ஒரு இடத்திலும் தன்னைமுன்னிலைப்படுத்தி பரபரப்பு ஏற்படுவதைஅவர் ஒரு போதும் விரும்பமாட்டார்.ஜனாதிபதியாக இருந்த போது ஒரு நாள்டெல்லி ஜும்மா மசூதிக்கு தொழ சென்ற அவர்இடம் நெருக்கடி காரணமாக கடைசிவரிசையில் கூட்டத்தோடு கூட்டமாக நின்றுஇறைவனை தொழுதது குறிப்பிடத்தக்கது.
14. எந்த அளவுக்கு அவர் தன்னடக்கம்கொண்டிருந்தாரோ, அதே அளவுக்கு அவர்தன்னம்பிக்கையிலும் உச்சத்தில் இருந்தார். ‘‘நீமுயன்றால் நட்சத்திரங்களையும் பறிக்கலாம்’’என்று அடிக்கடி கூறுவார்.
15. இந்திய அரசியல்வாதிகளிடம் இவர்அடிக்கடி உதிர்த்த வார்த்தை – ‘‘தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள். அது தான்நம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும்’’
16. உலகத் தலைவர்களில் அப்துல் கலாம்அளவுக்கு இளைய சமுதாயம் எழுப்பியகேள்விகளுக்கு இதுவரை யாருமேஉன்னதமான பதில்களை அளித்ததில்லை.
17. அப்துல் கலாமிடம் ஒரு தடவை ஒருமாணவி ‘‘நல்ல நாள், கெட்ட நாள் எது?’’ என்றுகேட்டாள். அதற்கு அப்துல் கலாம், ‘‘பூமி மீதுசூரிய ஒளிபட்டால் அது பகல். படா விட்டால்இரவு. இதில் நல்லது கெட்டது என்று எதுவும்இல்லை’’ என்றார்.
18. அப்துல் கலாம் மிகப்பெரிய உறவு, நட்புவட்டாரத்தைக் கொண்டவர். ஆனால் தனதுஅதிகாரத்தை தவறாக பயன்படுத்தி அவர் யார்ஒருவருக்கும், எதற்கும் சிபாரிசு செய்ததேஇல்லை.
19. ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில்கூட, அந்த மாத சம்பளத்தை வாங்கி அதில் ஒருபகுதியை தன் குடும்பத்துக்கு அனுப்புவதைஅப்துல் கலாம் வழக்கத்தில் வைத்திருந்தார்.
20. அப்துல் கலாமின் நெருங்கிய உறவினர்கள்எல்லாம் இன்றும் நடுத்தர வர்க்கவாசிகளாகவே உள்ளனர். அப்துல் கலாமின்கறை படாத நேர்மைக்கு இது ஒன்றே சிறந்தஎடுத்துக்காட்டு.
21. அப்துல் கலாம் எந்த ஒரு காலக்கட்டத்திலும்,எந்த ஒரு பதவியையும் எதிர்பார்க்காதவர். 22. இளம் வயதில் விமானி ஆக வேண்டும் என ஆசைப்பட்டார்.. அது கிடைக்காததால் பாதுகாப்புத்துறை தொழில் நுட்பப் படிப்பினை தேர்வு செய்தார். 23. அனைத்து வளங்களும் கொண்ட இந்தியா 2020-ல் உலகின் வல்லரசாக மாறும் என்று கூறி இந்தியர்களிடம் உற்சாகத்தையும் உத்வேகத்தையும் வளர்த்தார்.
24. திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் 1954–ம் ஆண்டு பி.எஸ்.சி படித்த அப்துல்கலாம் அந்த பட்டத்தை வாங்காமல் விட்டுவிட்டார். 48 ஆண்டுகளுக்கு பிறகு அதைகேட்டுப் பெற்றார்.
25. யாழ்ப்பாணத்தை சேர்ந்த கனகசுந்தரம்என்ற சன்னியாசியிடம் அப்துல் கலாம்ஆங்கிலம் கற்றுக் கொண்டார்.
26. ராமேசுவரம் மாவட்ட கல்விக் கழக பள்ளிஅறிவியல் ஆசிரியர் சிதம்பரம்சுப்பிரமணியத்திடம் இருந்துதான் அறிவியல்ஆர்வத்தை கலாம் பெற்றார்.
27. அப்துல் கலாமின் நீண்ட நாள் காலைஉணவு ஒரே ஒரு ஆப்பம். ஒரு தம்ளர் பால்.வேறு எதையும் சாப்பிட மாட்டார்.
28. அப்துல் கலாமிடம் ஒரு பழமையானவீணை உண்டு. எப்போதாவது நேரம்கிடைத்தால் அந்த வீணையை வாசிப்பார்.
29. சிறு வயதில் கிணற்றுக்குள் கலாம்கல்லைத் தூக்கிப் போட்டார். அதில் இருந்துகுமிழ், குமிழாக வந்தது. அது ஏன் வருகிறதுஎன்று அப்துல் கலாம் கேட்டார். அவர் கேட்டமுதல் அறிவியல் கேள்வி இது தான்.
30. ராமேஸ்வரத்தில் உள்ள லட்சுமணத்தீர்த்தத்தில் தை மாதம் விழா நடத்தும் போதுஅப்துல் கலாம் குடும்பத்தினருக்கு‘‘சந்தனப்பாடி’’ என்று ஒரு மரியாதைகொடுத்தனர். அந்த அளவுக்கு அப்துல் கலாம்குடும்பத்தினருக்கும் இந்துக்களுக்கும்நெருக்கம் இருந்தது.
31. அப்துல் கலாமுக்கு மிகுந்த இசை ஞானம்உண்டு. தியாகராஜ கீர்த்தனைகளில் சிலகிருதிகளை அவர் தெரிந்து வைத்திருந்தார்.
32. 1950–களில் திருச்சி ஜோசப் கல்லூரியில்படித்த போது அசைவம் சாப்பிட்டால் அதிகம்செலவாகிறது என்று அசைவம் சாப்பிடுவதைநிறுத்தினார். பிறகு அதுவே நிரந்தரமாகிப்போனது.
33. 1998–ம் ஆண்டு மே மாதம் 11–ந் தேதிபொக்ரானில் இந்தியா அணுகுண்டுசோதனை நடத்தி உலக அரங்கில் தன்னைவல்லரசாக அறிவித்தது. இதற்கு அடித்தளம்அமைத்தவர் அப்துல் கலாம்தான்.
34. 1958–ல் மத்திய அரசின் பாதுகாப்புத்துறையில் அப்துல்கலாம் வேலைக்கு சேர்ந்தபோது அவருக்கு மாத சம்பளமாக ரூ.250வழங்கப்பட்டது.
35. இந்திய ராணுவத்தில் உள்ள திரிசூல்,அக்னி, பிருத்வி, நாக், ஆகாஷ் அகியஏவுகணைகள் அப்துல் கலாம் திட்டஇயக்குனராக இருந்த போதுவடிவமைக்கப்பட்டு வந்தவையாகும்.
36. இந்தியாவுக்காக இவர் கண்டம் விட்டுகண்டம் பாயும் ஏவுகணையை உருவாக்கியபோது அமெரிக்கா உள்பட பல நாடுகள்இவரை ஆச்சரியத்துடனும், மிரட்சியுடனும்பார்த்தன.
37. போலியோ நோயாளிகளுக்கான எடைகுறைந்த ஊன்றுகோல் மற்றும் இருதயநோயாளிகளுக்கான எடை குறைந்தஸ்டெண்ட் கருவி ஆகியவை இவர் கண்டுபிடித்தவையாகும். அந்த ஸ்டெண்டுக்கு ‘‘கலாம்ஸ்டெண்டு’’ என்றே பெயராகும்.
38. தமிழ் இலக்கியங்கள் அனைத்தையும்அப்துல் கலாம் படித்துள்ளார். குறிப்பாகதிருக்குறளை கரைத்து குடித்திருந்தார் என்றேசொல்லலாம்.
39. இவர் எழுதிய ‘‘எனது பயணம்’’ என்றகவிதை நூல் ஆங்கிலத்தில் மொழி மாற்றம்செய்யப்பட்டுள்ளது.
40. எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பது இவரதுபழக்கம். ஒரு நாளைக்கு 18 மணி நேரம் கூடஉழைப்பதற்கு தயங்க மாட்டார்.
41. குடிப்பழக்கம், ஊழல், வரதட்சணை போன்ற5 தீய பழக்கங்களை கைவிட நாம்ஒவ்வொருவரும் சபதம் எடுத்துக் கொள்ளவேண்டும் என்று டெல்லி காந்தி சமாதியில்எழுதி வைக்க அப்துல் கலாம் அறிவுறுத்திஅதை அமல்படுத்தினார்.
42. இந்திய பாதுகாப்புத்துறையின் ஆய்வுக்குமுதலில் வெளிநாட்டு கருவிகள், பொருட்கள்பயன்படுத்தப்பட்டன. அவற்றை நிறுத்தி விட்டுமுழுக்க, முழுக்க உள்நாட்டு பொருட்கள் மூலம்ஆய்வு பணிகளை அப்துல் கலாம் செய்யவைத்தார்.
43. அப்துல் கலாம் ஒரு போதும் நன்றிமறக்காதவர். தனது ஆசிரியர்கள், நண்பர்கள்,உதவி செய்தவர்கள் என அனைவரையும்அடிக்கடி நினைவுப்படுத்தி பேசுவார்.
44. அப்துல் கலாமிடம் நகைச்சுவை உணர்வுஅதிகம் உண்டு. நெருக்கடியான சமயங்களில்கூட அவர் நகைக்சுவையை வெளிப்படுத்ததயங்கியதில்லை.
45. இளைஞர்கள் ஒழுக்கமாக இருக்கவேண்டும் என்று அப்துல் கலாம் மிகவும்விரும்பினார். ஒரு தடவை மைசூரில் நடந்தவிழாவில் அவர் பேசுகையில், ‘‘இந்தியாவில்உள்ள ஒவ்வொரு இளைஞனுக்கும் கட்டாயம்
2 ஆண்டுகள் ராணுவ பயிற்சி அளிக்கவேண்டும்’’ என்றார்.
46. பணம், வயது, சாதி, இனம், மதம், மொழிஎன்பன போன்றவற்றில் கலாம் வேறுபாடுபார்த்ததே இல்லை. இந்த அரிய குணத்தைஅவர் தம் தந்தையிடம் இருந்து பழக்கத்தில்பெற்றார்.
47. அப்துல் கலாம் தினமும் திருக்குரான்படிக்கத் தவறியதில்லை. அதில் அவருக்குபிடித்த வரிகள் எவை தெரியுமா?. ‘‘இறைவா!உன்னையே நாங்கள் வணங்குகிறோம்.உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்’’எனும் வரிகளாகும்.
இந்த வரிகள், என்னுடைய எல்லா சோதனைநாட்களிலும் என்னை கரை சேர்த்த வைரவரிகள் என்று அப்துல் கலாம்குறிப்பிட்டுள்ளார்.
48. சென்னை மூர் மார்க்கெட்டில் உள்ள ஒருபழைய புத்தகக் கடைகளில் 1950–களில்அப்துல் கலாம், ‘‘த லைட் பிரம் மெனி லேம்பஸ்’’என்ற புத்தகத்தை வாங்கினார். கடந்த 60ஆண்டுக்கும் மேலாக அதை அவர்பொக்கிஷமாக வைத்திருந்தார்.
49. அறிவியல் தொழில் நுட்பத்துக்கு மிகவும்உதவும் பெரிலியம் தாது பொருளைவெளிநாடுகள் இந்தியாவுக்கு தர மறுத்தன.உடனே இதுபற்றி கலாம் ஆய்வு செய்தார்.இந்தியாவின் பல பகுதிகளில் பெரிலியம் மண்ணில் அதிக அளவில் கலந்துள்ளதை கண்டுபிடித்து நமது நாட்டு பெரிலியம் கலந்த மணல் கலவையை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை தடுத்தார்... அதிர்வடைந்த...மறுத்த நாடுகள் போட்டி போட்டுக் கொண்டு இந்தியாவுக்கு பெரிலியம் தந்தது. 50. ஒரு தடவை காந்தி சமாதிக்கு சென்ற ஐயா.கலாம்.. காந்தியின் வாழ்க்கை அனுபவங்களை குழந்தைகளிடம் பரப்ப நான் சபதம் ஏற்கிறேன் என்று குறிப்பு எழுதினார்.. அதன்படி ஜனாதிபதி பதவிக் காலம் முடிந்த பிறகும் கூட.. பள்ளிகள்.. கல்லூரிகளுக்கு சென்று பேசி வந்தார். வாழிய எந்நாளும் அப்துல் கலாம் அய்யாவின் புகழ் என்றென்றும்.

1)இறைச்சியை நெருப்பில் சுட்டுச் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். சுகாதாரமில்லாத முறை என்றான் வெள்ளையன்.===============நாங்கள...
07/08/2022

1)இறைச்சியை நெருப்பில் சுட்டுச் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். சுகாதாரமில்லாத முறை என்றான் வெள்ளையன்.
===============
நாங்களும் மாறினோம்.
================
இன்று அதையே
==============
BARBECUE என்று BC,
KFC ,
MACDONALD இல் விக்கிறான்.
===============
2). உப்பு + கரியில் பல் தேய்த்தோம்.
பற்பசையை அறிமுகப் படுத்தினான்.
==============
*இப்போது உங்கள் TOOTHPASTE இல்
*SALT + CHARCOAL இருக்கா ?
*என்று கேட்கிறான்.
==============
3). மண்பானை, மண்சட்டியில் சமைத்தோம்.
===============
உலோகப் பாத்திரங்களை அறிமுகப் படுத்தினான்.
==============
இன்று மண்சட்டியில் சமைத்த உணவை விசேட விலையில் STAR HOTEL களில் விக்கிறான் .
=============
4). நாட்டு மாட்டின் பாலை பயன்படுத்தினோம்.
=============
ஜெர்சி மாட்டை அறிமுகப் படுத்தினான்.
=============
இன்று அவனே ஆசியாவிலிருந்து நாட்டு மாடுகளின் S***M ஏற்றுமதி செய்கிறான்.
===============
5). இளநீர் , பதனீரைப் பருகினோம்.
==============
COKE, PEPSI ஐ கொண்டு வந்தான்.
==============
இன்று அவனே இளநீரைத் தகரத்தில் அடைத்து விற்கிறான்.
==============
6). CORPORATE COMPANY களின் வியாபார உத்தியான விளம்பரப் பேச்சைக்கேட்டுத் தொண்மைகளைத் தொலைத்த
================
" முட்டாள் "
================
இனம் நாமாகத்தானிருப்போம்.
===============
7). நாகரீகப் போர்வையில் நாமும் இதே தவறைத்தான் செய்கிறோம் என்பதே கசப்பான உண்மை.
==============
😎. வெற்றிலைக் கொடி படற அகத்தியை நட்டோம்,
===============
அகத்திக் கீரை தின்ன ஆடு வளர்த்தோம்,
===============
ஆடு போட்ட புலுக்கையை அள்ளி காடு வளர்த்தோம்,
===============
காட்டுக்குள்ளே புழுப் புறட்டக் கோழியை விட்டோம்,
==============
வளர்த்ததெல்லாம் விற்காம பேருக்குச் நேர்ந்துவிட்டோம்,
===============
நேர்ந்துவிட்ட அதுகளை வெட்ட திருவிழா வச்சோம்,
==============
திருவிழாப் பேரைச் சொல்லி உறவை அழைச்சோம்,
==============
உறவுகளோடு உட்கார்ந்து அவனுக்கு அவளெனப் பேசி முடிச்சோம்.
==============
பேசி முடிச்சதுக்கு ஆதாரமா எங்க தோட்டத்து வெற்றிலையோடு பாக்கையும் வச்சோம்.
=============
இப்படியே வஞ்சகம், சூதில்லாமல் சுழன்ற எங்கள் வாழ்க்கைமுறை, இப்போ நஞ்சும் சூதுமா நகருக்குள் நடக்கிறது.
===============
நம் பாரம்பரியத்தை தொலைத்து அடிமுட்டாளாகி
================
"நாகரிக கோமாளி ஆகி விட்டோம்"

24/06/2022
💐
30/05/2022

💐

தற்கொலைக்கு முன் என்னை    ஒரு முறை நினைத்துக் கொள்ளுங்கள்.இது ஒரு சூப்பர் ஸ்டாரின் உதடுகள் அடிக்கடி உதிர்க்கும் வார்த்தை...
16/12/2021

தற்கொலைக்கு முன் என்னை
ஒரு முறை நினைத்துக் கொள்ளுங்கள்.
இது ஒரு சூப்பர் ஸ்டாரின் உதடுகள்
அடிக்கடி உதிர்க்கும் வார்த்தைகள்!

இவை ஏதோ சினிமா டயலாக் அல்ல!

நடைமுறையில் நிறைய
விவசாயிகளின் தற்கொலை முடிவை
மாற்றி வாழ்வதற்கான நம்பிக்கை தந்த
உயிரோட்டமுள்ள வார்த்தைகள்!

அந்த உண்மையான சூப்பர் ஸ்டார்
வேறு யாருமல்ல! இந்தி நடிகர் நானா
படேகர் தான் . தமிழில் இவர் நடித்த படம்
பொம்மலாட்டம், காலா.

தனது சம்பாத்தியத்தில் 90
சதவீதத்தை நன்கொடையாக வழங்கிய
சூப்பர் ஹீரோ. வறட்சியால்
பாதிக்கப்பட்டிருக்கும் மகாராஷ்ட்ராவின்
மராத்வாடா மாவட்டம்.

கூரைகள் இல்லாத வீடுகள்.
கொடூர வெயிலில், விவசாய நிலங்கள்
பாளம் பாளமாக வெடித்திருக்கும்.
மின்சாரமும் இருக்காது.

கிராமத்திற்கு ஒரு விவசாயி
தற்கொலை செய்து கொண்டிருப்பார்.
அரசியல்வாதிகளே எட்டிப் பார்க்க
தயங்கும் மக்கள் நிறைந்த பகுதி.

இங்கு அடிக்கடி ஒரு பிரபலத்தை
மட்டும் காண முடியும். இருட்டிலும் கூட
செல்போன் வெளிச்சத்தில், அந்த
பிரபலத்தின் கைகள் செக்
விநியோகித்துக் கொண்டிருக்கும்.

சினிமா உலகில் அவரது பெயர்
நானா படேகர். இந்தி திரையுலகில்
பிரபலமான மராத்திய நடிகர்.
திரையுலகுக்கு வருதற்கு முன் போஸ்டர்
ஒட்டியும், சாலைகளில் ஜீப்ரா கோடு
வரைவதும் தான் நானாவின் பிழைப்பு.

தினச்சம்பளம் 35 ரூபாய்.
சம்பளம் தாயும் மகனும் வாழ்க்கையை
நகர்த்தி கொண்டிருந்தனர்.

மராத்தி நாடகங்களில் நடித்து,
ஹிந்தி சினிமாவில் புகுந்த பிறகு,
வருமானம் கொட்டியது. மூன்றே
மாதங்களில் முழு சினிமாவை முடித்து
விடும் இன்றைய காலத்தில்,

'பிரகார் ' என்ற படத்தில்
நடிப்பதற்காக, இந்திய ராணுவத்திடம் 3
ஆண்டுகள் சிறப்பு பயிற்சி பெற்ற, சற்றே
வித்தியாச நடிகர் நானா.

மகாராஷ்ட்ராவில் சில
ஆண்டுகளுக்கு முன் வரலாறு காணாத
வறட்சி. கிராமத்திற்கு ஒரு விவசாயி
தற்கொலை. அரசாலும் தடுக்க முடியவில்லை.

தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள்
போராடியும் இயலவில்லை. நடிகர்
என்பதையும் தாண்டி, சொந்த
மாநிலத்தை சேர்ந்த விவசாயிகள்
கொத்து கொத்தாக செத்து மடிவது
நானாவை என்னவோ செய்தது.

குறிப்பாக மராத்வாடாப் பகுதியில்
நாக்பூர், லாத்தூர், ஹிங்கோலி,
பிரபானி, நான்டெட் மாவட்டங்களில்
விவசாயிகளின் தற்கொலை அதிகம்.

விவசாயிகளின் தற்கொலையை
தடுக்க என்ன செய்யலாம் என
யோசித்தார் நானா. சில காலம்
சினிமாவை ஒதுக்கி வைத்தார்.

சக நடிகர் மன்கர்டுடன் இணைந்து
'நாம் ' என்ற பெயரில் அறக்கட்டளை
ஒன்றைத் தொடங்கினார். முதல் நாளே
80 லட்ச ரூபாய் நன்கொடை குவிந்தது.

நானா படேகர் என்ற அந்த பெயருக்கு
மக்களிடம் அத்தனை செல்வாக்கு.
2 வது வாரத்தில் 7 கோடியாக உயர்ந்தது.
மொத்தம் 22 கோடி ரூபாய்
நன்கொடையாக கிடைத்தது.

நன்கொடை பணம் முழுவதும்
விவசாயிகளுக்கு முழுமையாக சேர
வேண்டும் என்பது நானாவின் அடுத்த
இலக்கு.

இந்த விஷயத்தில் நானா படேகர்
உறுதியாகவும் தெளிவாகவும் இருந்தார்.
நன்கொடையும் ஏராளமாக வந்துவிட்டது.
வேறு ஏதாவது அமைப்பு வழியாக
வழங்கிடுவோம் என்று அவர் ஒதுங்கி விடவில்லை.

மூன்றாவது அமைப்பின்
தலையீட்டை அவர் அனுமதிக்கவில்லை.
எந்த அமைப்பையும் அணுகவில்லை.
அவரே நேரடியாக களத்தில் குதித்தார்.

மராத்வாடாவில் தற்கொலை
செய்து கொண்ட விவசாயிகளின்
குடும்பத்தினரை வீடு வீடாக சென்று
நானாவே நேரடியாக சந்தித்தார்.

தற்கொலை செய்து கொண்ட
விவசாயிகள் வறட்சியால், பாதிக்கப்பட்ட
விவசாயிகளின் குடும்பத்தினருக்கு
நேரடியாக சென்று நிதியுதவி வழங்கினார்.

கணவரை இழந்த மனைவிகளை
சந்தித்து ஆறுதல் கூறினார்.
மகாராஷ்ட்ராவில், இப்போது 700 க்கும்
மேற்பட்ட கிராமங்களில்,

நானா படேகரின் அறக்கட்டளை,
பாதிக்கப்பட்ட விவசாயிகளை
கண்டறிந்து உதவி செய்து வருகிறது.

விவசாயிகள் தற்கொலை
குறைந்திருப்பது நானாவுக்கு சற்று
நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

நிதியுதவி போக, எஞ்சிய பணத்தில்
மராத்வாடா பகுதியில் உள்ள ஏரிகள்,
குளங்களை தூர் வாரும் பணி தீவிரமாக
Bநடைபெற்றது.

ஒரு கோடிக்கு மேல் மரங்கள்
நடப்பட்டன. கணவனை இழந்த
பெண்களுக்கு சுய வேலை வாய்ப்பு,
இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு
ஏற்படுத்தி தரப்பட்டது.

ஒவ்வொரு கிராமத்துக்கும் சுத்தமான
குடிநீர் வழங்குவது நானா படேகரின்
அடுத்த இலக்கு.

அறக்கட்டளை வழியாக சேர்ந்த
பணத்தை மட்டுமல்லாது, சினிமாவில்
தான் சம்பாதித்த பணத்தில் 90
சதவீதத்தை அறக்கட்டளைக்கே நானா
படேகர் வழங்கி விட்டார்.

திரையில் ஆன்டி ஹீரோவாக
நடிக்கும் நானா தான், மராத்வாடா
மக்களின் நிஜ ஹீரோ. கோடி கோடியாக
பணம் சம்பாதித்த போதும், மும்பையில்
ஒரு பெட்ரூம் கொண்ட பிளாட்டில் தான்
இப்போதும் தாயுடன் வசிக்கிறார் நானா.

''சம்பாதித்த பணத்தை
அறக்கட்டளைக்கு வழங்கிவிட்டீர்களே''
என்றால் , 'இப்போதுதான் நான்
பிறந்ததற்கான அர்த்தத்தை
உணர்ந்திருக்கிறேன்'' என 'நச்' பதில்
வருகிறது.

தற்கொலைக்கு முன் என்னை
ஒரு முறை நினைத்து கொள்ளுங்கள்..
நானாவின் உதடுகள் அடிக்கடி
உதிர்க்கும் வார்த்தை இது.

புற்றீசல்கள் போன்று தோன்றி
மறைவதில்லை வாழ்க்கை. வாழ்ந்த
வாழ்க்கை அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும்.

கட்சி ஆரம்பித்து மக்களுக்கு சேவை என்பது ஒருவகை. இது மற்றொரு வகை.

மீள் பதிவு

Address

Usilampatti

Telephone

+918825614364

Website

Alerts

Be the first to know and let us send you an email when கவிகள் ஆயிரம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to கவிகள் ஆயிரம்:

Share

Category