Chennai icons

Chennai icons Chennai Icons is emerging as the best entertainment and infotainment YouTube channel.

Boosting the stylish glam looks with the simplest casual attires, actress
31/07/2023

Boosting the stylish glam looks with the simplest casual attires, actress

Actress  latest photoshoot
31/07/2023

Actress latest photoshoot

விறுவிறுப்பான ராபரி திரில்லர் 'லாக்கர்'!இரட்டை இயக்குநர்களில் கிருஷ்ணன்- பஞ்சு தமிழ்த் திரை உலகில் பிரபலமானவர்கள்.அதன் ப...
21/07/2023

விறுவிறுப்பான ராபரி திரில்லர் 'லாக்கர்'!

இரட்டை இயக்குநர்களில் கிருஷ்ணன்- பஞ்சு தமிழ்த் திரை உலகில் பிரபலமானவர்கள்.அதன் பிறகு பாரதி -வாசு, ராபர்ட்- ராஜசேகர், மலையாள சித்திக்- லால் போன்ற இரட்டையர்கள் பிரபலமானவர்கள். நீண்ட இடைவெளிக்குப் பின் தமிழில் இரட்டையர்கள் ஒரு புதிய படத்தை இயக்கி உள்ளார்கள்.அவர்கள் தான் ராஜசேகர் என் மற்றும் யுவராஜ் கண்ணன்.சினிமாவின் மீது காதல் கொண்ட இந்த இருவரும் இணைந்து 'லாக்கர்' என்கிற படத்தை இயக்கி உள்ளார்கள்.
இப்படத்தை நாராயணன் செல்வம் புரொடக்சன்ஸ் தயாரித்திருக்கிறது.

இதில் கதாநாயகனாக விக்னேஷ் சண்முகம் நடித்துள்ளார் .இவர் ஏற்கெனவே இறுதிப்பக்கம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர்.எதற்கும் துணிந்தவன் , கேம் ஓவர் போன்ற படங்களில் எதிர்மறைப் பாத்திரங்களிலும் மாஸ்டர் படத்தில் குணச்சித்திர வேடத்திலும் நடித்திருப்பவர். கள்ளச்சிரிப்பு என்ற ஜீ5க்கான இணைய தொடரிலும் நடித்துள்ளார்.
கதாநாயகியாக அறிமுக நடிகை நிரஞ்சனி அசோகன் நடித்துள்ளார். இவர் சில பைலட் படங்களிலும் ஆல்பங்களிலும் நடித்துள்ளவர்.

வில்லனாக நிவாஸ் ஆதித்தன் நடித்துள்ளார்.இவர் தரமணி, ரெஜினா போன்ற படங்களில் நடித்தவர்.பிரின்ஸ், மிரள், குட் நைட் போன்ற படங்களில் நடித்த சுப்ரமணியன் மாதவன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

இப்படத்திற்கு தணிகைதாசன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.இவர் தரமணி எம்.ஜி.ஆர் திரைப்படக் கல்லூரி மாணவர்.களப்பணி அனுபவத்திற்காக ஓம் பிரகாஷ் மற்றும் பல்லு போன்ற ஒளிப்பதிவாளர்களிடம் பணியாற்றியவர். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் போன்ற சேனல்களுக்கு ஒளிப்பதிவு செய்து கொடுத்துள்ளவர்.நிறைய விளம்பரப் படங்கள், கார்ப்பரேட் வீடியோக்கள் எடுத்துள்ளவர்.இவர் டெல்டா என்கிற இன்னொரு படத்திலும் ஒளிப்பதிவுப் பணி செய்து வருகிறார்.

அறிமுக இசையமைப்பாளர் வைகுந்த் ஸ்ரீநிவாசன் இசையமைத்துள்ளார்.இவர் ஏற்கெனவே நடிகர் தளபதி விஜய் பிறந்தநாளை முன்னிட்டு அண்ணன் வேற மாதிரி என்ற பாடல் இசை அமைத்தவர். ஏராளமான இசை ஆல்பங்களுக்கும், மை டியர் எக்ஸ் இணையத் தொடருக்கும் இசையமைத்துள்ளவர்.

படத்தில் மூன்று பாடல்கள் இடம் பெற்றுள்ளன. கார்த்திக் நேத்தா,விஷ்ணு இடவன் என இரு பாடலாசிரியர்கள் எழுதி உள்ளனர்.

படத்தொகுப்பு ஸ்ரீகாந்த் கண பார்த்தி.இவர் பென்குயின், குருதி ஆட்டம் போன்ற படங்களில் உதவியாளராகப் பணியாற்றியவர்.இப்படிப் பல்வேறு திறமைக் கரங்கள் இணைந்துள்ளன.

முழுக்க முழுக்க சென்னை, அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. கிழக்கு கடற்கரைச் சாலை, அம்பத்தூர், குரோம்பேட்டை போன்ற இடங்களில் 30 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.படப்பிடிப்பு முடிந்து இறுதி கட்டப் பணியில் இருக்கும் லாக்கர் ஒரு ராபரி டிராமாவாக உருவாகியுள்ளது.
விரைவில் திரைக்கு வர உள்ளது.

Poetic Photos...
19/07/2023

Poetic Photos...

Ponniyin Selvan 2 movie snaps
27/04/2023

Ponniyin Selvan 2 movie snaps

*தளபதியை சந்தித்த புரட்சி தளபதி....**நடிகர் விஷால் அவர்கள் நடிப்பில் உருவாகிவரும்  “மார்க் ஆண்டனி" திரைப்படத்தின் டீஸர் ...
27/04/2023

*தளபதியை சந்தித்த புரட்சி தளபதி....*

*நடிகர் விஷால் அவர்கள் நடிப்பில் உருவாகிவரும் “மார்க் ஆண்டனி" திரைப்படத்தின் டீஸர் இன்று மாலை 06:30 மணிக்கு வெளிவருவதை தொடர்ந்து நடிகர் ''தளபதி" விஜய் அவர்களை சமீபத்தில் "மார்க் ஆண்டனி" திரைப்படத்தின் டீஸர் காண்பிக்க படக் குழுவினர் அனுமதி கேட்டு தொடர்புக் கொண்டபோது உடனே அழைப்பு விடுத்தார்.*

புரட்சி தளபதி விஷால் - தளபதி விஜய் சந்திப்பின் போது "மார்க் ஆண்டனி" திரைப்படத்தின் டீஸர் கண்டு மகிழுந்து படக்குழுவினரை வெகுவாக பாராட்டினார் அதற்காக நன்றி தெரிவித்த நடிகர் விஷால் அவர்களிடம் "நண்பனுக்காக இதை செய்யமாட்டேனா" என்று விஜய் கூறியது படக்குழுவினரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

தளபதி விஜய் அவர்களுக்கு படக்குழுவினர்கள் பூங்கொத்து வழங்கினார்கள், புரட்சி தளபதி விஷால் அவர்கள் வழக்கம் போல் பூங்கொத்தை தவிர்த்து தளபதி விஜய் அவர்களின் பெயரில் அன்னை தெரசா முதியோர் இல்லத்தில் உணவு வழக்கியதற்கான ரசீதையும் அவரிடம் வழங்கினார்.

அதன் பின் தனது நீண்ட நாள் விருப்பமான திரைப்படம் இயக்கும் ஆசை "துப்பறிவாளன் 2" மூலம் தொடங்கியுள்ளதாக நடிகர் விஜயிடம் கூறிய விஷால் அதன் பின் தொடர்ந்து திரைப்படங்களை கதைகளை இயக்க உள்ளதாகவும் தங்களுக்கும் இரண்டு கதை தயார் செய்துள்ளதாக நடிகர் விஜயிடம் நடிகர் விஷால் கூறிய போது "நீ வா நண்பா நான் இருக்கிறேன் சேர்த்து பயணிப்போம்" என்று விஜய் கூறி மேலும் உற்சாக படுத்தினர்.

இச்சந்திப்பின் போது "மார்க் ஆண்டனி" திரைப்படத்தின் தயாரிப்பாளர் "மினி ஸ்டூடியோஸ் " வினோத் குமார், இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன், ஒளிப்பதிவாளர் அபிநந்தன், நிர்வாக தயாரிப்பாளர் ஹரிகிருஷ்ணன் ஆகியோர்கள் உடன் இருந்தனர்.

Address

Vadapalani

Website

Alerts

Be the first to know and let us send you an email when Chennai icons posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Chennai icons:

Share

Category