do4u.in

do4u.in Creative and Presentation

23/06/2025

நீங்கள் விரும்பும் எதுவொன்றையும் அடைவதற்குக் குறுக்கே நிற்பது இரண்டே தீர்மானங்கள்தாம்

பல நூற்றாண்டுகளாக, உலகின் தலைசிறந்த வெற்றியாளர்கள் தங்களுடைய மாபெரும் கனவுகளை அடைவதற்கு ஒரு நிரூபணமான சூத்திரத்தைப் பயன்படுத்தி வந்துள்ளனர். ஆனால், அது புறக்கணிக்கப்பட்டு வந்துள்ளது.

அதிசயங்களைச் சாத்தியமாக்கும் சூத்திரம்தான் அது. அது வெறும் இரண்டு தீர்மானங்களை மட்டுமே உள்ளடக்கியுள்ளது. அவற்றை நீங்கள் மேற்கொள்ளும்போது, நம்புதற்கரிய வெற்றிகளை உங்களால் குவிக்க முடியும், அளவிடற்கரிய மனநிறைவை உங்களால் பெற முடியும். ஆணித்தரமான நம்பிக்கையும் அசாதாரணமான முயற்சியும்தாம் அந்த இரண்டும்.

ஆணித்தரமான நம்பிக்கையை உருவாக்கிக் கொள்வதன் மூலம், நீங்கள் விரும்பும் எதுவொன்றையும் உங்களால் அடைய முடியும். அதை அடைகின்றவரை நீங்கள் அசாதாரணமான முயற்சிகளை மேற்கொண்டால், உங்கள் வெற்றியை எந்தவொரு சக்தியாலும் தடுக்க முடியாது.

உலகின் தலைசிறந்த சாதனையாளர்கள் பயன்படுத்துகின்ற அதே உத்தியைப் பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் சாத்தியம் என்று நம்பியிருப்பதற்கு அப்பாலும் உங்களால் செல்ல முடியும். பயத்தின் இடத்தில் நம்பிக்கையை எப்படிக் கொலுவேற்றுவது, எதிர்மறை உணர்வுகளை எப்படி விரட்டியடிப்பது, உங்களுடைய ஆற்றலைப் பயன்படுத்தி நேர்மறை விளைவுகளை எவ்வாறு உருவாக்குவது ஆகியவற்றை இந்நூலில் நீங்கள் கற்றுக் கொள்வீர்கள்.

அதிசயங்களைச் சாத்தியமாக்கும் சூத்திரத்தின் 30 நாள் சவால், நீங்கள் ஒரு வெற்றியாளராக ஆவதற்கான படிப்படியான வழிமுறைகளைத் தெள்ளத் தெளிவாக உங்களுக்கு எடுத்துரைக்கும்.

-----------

"உங்கள் வாழ்க்கையில் அதிசயிக்கத்தக்க விளைவுகளை உருவாக்கத் தேவையான எளிய நிரூபிக்கப்பட்ட ஒரு சூத்திரம் இது. இதை நான் வெகுவாகப் பரிந்துரைக்கிறேன்."

- ரயிஸ் ஹோவேஸ்

(த ஸ்கூல் ஆஃப் கிரேட்னெஸ் நூலின் ஆசிரியர்)

Address

Vadapalani

Alerts

Be the first to know and let us send you an email when do4u.in posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to do4u.in:

Share