Deva thoughtss

Deva thoughtss Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Deva thoughtss, Digital creator, Vellore.

04/08/2025

யாருக்கும் யாரும் சொந்தமில்ல
இந்த உலகத்துல...
யாருக்கும் யாரும் நிரந்தரமில்ல
நம்ம வாழ்க்கையில...
யாருக்கும் யாரும் சொந்தமில்ல
இந்த உலகத்துல...
யாருக்கும் யாரும் நிரந்தரமில்ல
நம்ம வாழ்க்கையில...

நம் வாழ்க்கை ஒரு பயணம்,
நம்மை நடத்துபவர் இயேசுவே...
நம் வாழ்க்கை ஒரு தேர்வு,
அதில் வெல்வதே நம் இலக்கு...
நம் வாழ்க்கை ஒரு பயணம்,
நம்மை நடத்துபவர் இயேசுவே...
நம் வாழ்க்கை ஒரு தேர்வு,
அதில் வெல்வதே நம் இலக்கு...

பெற்றோரின் அன்பு
இந்த உலகம் இருக்கும் வரைதான்...
சகோதரர்களின் அன்பு
புது உறவுகள் கிடைக்கும் வரைதான்...
(பெற்றோரின் அன்பு
இந்த உலகம் இருக்கும் வரைதான்...
சகோதரர்களின் அன்பு
புது உறவுகள் கிடைக்கும் வரைதான்...)
நண்பர்களின் அன்பு,
காதலியின் அன்பு,
நண்பர்களின் அன்பு,
காதலியின் அன்பு,
பணம் இருக்கும் வரைதான்...
(பணம் இருக்கும் வரைதான்...)

நம் வாழ்க்கை ஒரு பயணம்,
நம்மை நடத்துபவர் இயேசுவே...
நம் வாழ்க்கை ஒரு தேர்வு,
அதில் வெல்வதே நம் இலக்கு...
நம் வாழ்க்கை ஒரு பயணம்,
நம்மை நடத்துபவர் இயேசுவே...
நம் வாழ்க்கை ஒரு தேர்வு,
அதில் வெல்வதே நம் இலக்கு...

இந்த உலக கஷ்டங்கள்
இந்த உடல் இருக்கும் வரைதான்...
இந்த உலக சோதனைகள்
இயேசுவோடு இல்லாத வரைதான்...
(இந்த உலக கஷ்டங்கள்
இந்த உடல் இருக்கும் வரைதான்...
இந்த உலக சோதனைகள்
இயேசுவோடு இல்லாத வரைதான்...)
இயேசுவில் விசுவாசம், இயேசுவில் நம்பிக்கை,
இயேசுவில் விசுவாசம், இயேசுவில் நம்பிக்கை,
வீணாக போவதில்லை...
(வீணாக போவதில்லை...)

நம் வாழ்க்கை ஒரு பயணம்,
நம்மை நடத்துபவர் இயேசுவே...
நம் வாழ்க்கை ஒரு தேர்வு,
அதில் வெல்வதே நம் இலக்கு...
நம் வாழ்க்கை ஒரு பயணம்,
நம்மை நடத்துபவர் இயேசுவே...
நம் வாழ்க்கை ஒரு தேர்வு,
அதில் வெல்வதே நம் இலக்கு...

யாருக்கும் யாரும் சொந்தமில்ல
இந்த உலகத்துல...
யாருக்கும் யாரும் நிரந்தரமில்ல
நம்ம வாழ்க்கையில...
(யாருக்கும் யாரும் சொந்தமில்ல
இந்த உலகத்துல...
யாருக்கும் யாரும் நிரந்தரமில்ல
நம்ம வாழ்க்கையில...)

Lyrics and Tune Music : Deva Yesuve En Dhevane En Mel Manam irangumYesuve En Dhevane En Mel Manam irangumNaan Paavam Sei...
04/08/2025

Lyrics and Tune
Music : Deva

Yesuve En Dhevane En Mel Manam irangum
Yesuve En Dhevane En Mel Manam irangum

Naan Paavam Seidhen Ummai Noga Seidhen
ummai Thedaamal Vaalndhu Vandhen
Naan Paavam Seidhen Ummai Noga Seidhen
ummai Thedaamal Vaalndhu Vandhen
Ennai manniyum, Ennai manniyum yesuve

Yesuve En Dhevane En Mel Manam irangum
Yesuve En Dhevane En Mel Manam irangum

Ummai Marudhaliththen Pin vaangi Ponen
Um Vallamai Ilandhen appa
Ummai Marudhaliththen Pin vaangi Ponen
Um Vallamai Ilandhen appa
ennai manniyum, ennai manniyum Yesuve

Yesuve En Dhevane En Mel Manam irangum
Yesuve En Dhevane En Mel Manam irangum

kasai adigalaal gaaya patteere
Enakkaaga Bali aaneere
kasai adigalaal gaaya patteere
Enakkaaga Bali aaneere
Um Raththathaal Ennai Kaluvidume
En Paavangalai Pokkidume

Yesuve En Dhevane En Mel Manam irangum
Yesuve En Dhevane En Mel Manam irangum

Aniyaayam Seidhen Kadum Kobam Konden
Pirar Vaalvai Keduththene
Aniyaayam Seidhen Kadum Kobam Konden
Pirar Vaalvai Keduththene
Ennai manniyum yesuve
indh oru visai Ennai manniyum yesuve

#ஷார்ட்ஸ் #அதிகாரம்2 #ஷார்ட்ஸ்

Lyrics and Tune : Deva by JesusMusic : Suno by JesusVideo By : Deva by JESUSYesuve En Dhevane En Mel Manam irangumYesuve En Dhevane En Mel Manam irangumNaan ...

26/06/2025
லோத்துசுயநலவாதி.கொழுத்த நிலத்தைதான் எடுத்துக்கொண்டுவறண்ட நிலத்தைஆபிரகாமுக்கு கொடுத்தான்.ஆபிரகாம்சமாதானம் பண்ணுகிறவன்.நீ ...
26/06/2025

லோத்து
சுயநலவாதி.

கொழுத்த நிலத்தை
தான் எடுத்துக்கொண்டு

வறண்ட நிலத்தை
ஆபிரகாமுக்கு கொடுத்தான்.

ஆபிரகாம்
சமாதானம் பண்ணுகிறவன்.

நீ அப்படி போனால்
நான் இப்படி போகிறேன்
நீ இப்படி போனால்
நான் அப்படி போகிறேன்
என்றான்.

லோத்து
செழிப்பான பூமியை
தேர்ந்தெடுத்து ஏமாந்தான்.

ஆபிரகாம்
கிடைத்ததை வைத்து
வெற்றி அடைந்தான்.

ஏனெனில்

லோத்து
கண்களை நம்பினான்

ஆபிரகாம்
கர்த்தரை நம்பினான்.

விடுமுறை காலங்களில் சமோசா விற்று தன் குடும்பத்தை காப்பாற்றும் இந்த மாணவியை பாராட்டலாமே ❤️‍🔥🥰
26/06/2025

விடுமுறை காலங்களில் சமோசா விற்று தன் குடும்பத்தை காப்பாற்றும் இந்த மாணவியை பாராட்டலாமே ❤️‍🔥🥰

13/06/2025

ஏசியால் கரண்ட் பில் அதிகமாக தான்? இனிமே கவலைய விடுங்க...

ஒரு புருஷனுக்கு பொண்டாட்டியை விடஅதிகமா இருக்க வேண்டிய மூணு விஷயம்: * வயசு * அறிவு * பணம்ஒரு பொண்டாட்டிக்கு புருஷனை விட அ...
13/06/2025

ஒரு புருஷனுக்கு பொண்டாட்டியை விடஅதிகமா இருக்க வேண்டிய மூணு விஷயம்:
* வயசு
* அறிவு
* பணம்
ஒரு பொண்டாட்டிக்கு புருஷனை விட அதிகமா இருக்க வேண்டிய அஞ்சு விஷயம்:
* பொறுமை
* அன்பு
* சுத்தம்
* திட்டமிடல்
* பிரார்த்தனை
ரெண்டு பேருக்கும் சமமா இருக்க வேண்டிய மூணு விஷயம்:
* புரிஞ்சுக்கிறது
* சகிப்புத்தன்மை
* மரியாதை
வறுமையில புருஷனை நேசிக்கிற பொண்டாட்டியும், வயசான காலத்துல பொண்டாட்டியை நேசிக்கிற புருஷனும் தான் இந்த உலகத்துலேயே சிறந்த ஜோடி.
அவ அவர்ட்ட சொன்னா, "டாக்டரை கூப்பிட வேணாம், நான் உங்க கைய என் கையில வச்சுட்டு நிம்மதியா தூங்கணும்னு ஆசைப்படுறேன்."
அவன் அவகிட்ட சொன்னான், அவங்க சந்தோஷமான பழைய காலத்தை பத்தி, அவங்க எப்படி சந்திச்சாங்கன்னு, அவங்க முதல் முத்தத்தை பத்தி. அவங்க அழல, எதை பத்தியும் வருத்தப்படல, பதிலா சிரிச்சாங்க. ஏன்னா அவங்க நன்றியுள்ளவங்களா இருந்தாங்க.
அப்புறம் அவ மெதுவா முணுமுணுத்தாள், '🥰நான் உங்களை ரொம்ப நேசிக்கிறேன்.!'💞 'நானும்.!' அவன் அவ வார்த்தைகளை திருப்பி சொல்லிட்டு அவ நெத்தியில ஒரு மெதுவான முத்தம் கொடுத்தான்.😘
அவ கண்ணை மூடி அவன் கையில தலைய வச்சு நிம்மதியா தூங்கிட்டா, எப்பவும் எந்திரிக்காத தூக்கம் அது!
அன்பு💞 உண்மையிலேயே விலை மதிக்க முடியாதது. ஏன்னா எல்லாரும் இந்த உலகத்துக்கு வர்றது அன்பு மட்டும்தான் கூடவே இல்லாம. திரும்ப போறதும் அன்பு இல்லாம வேற எதுவும் இல்ல.
யோசிச்சு பாருங்க...
வேலை, பணம், பதவி, சம்பாதிச்சது, சேத்து வச்சது, நம்ம சொத்து எல்லாம் வெறும் கருவிகள் மட்டும்தான். அதுக்கு மேல ஒன்னும் இல்ல!
இன்னைக்கு இல்லன்னா நாளைக்கு நம்ம எல்லாரும் இந்த நிலையை கடந்துதான் போகணும்!
நம்மளோடதுன்னு நாம நினைச்சதெல்லாம் இங்கேயே விட்டுட்டு போகும். அதனால அளவே இல்லாம நேசிங்க. அன்புதான் உங்க வாழ்க்கையில ரொம்ப முக்கியமானதுன்னு நினைச்சு நேசிங்க. உங்களை நேசிக்கிறவங்களை நீங்களும் நேசிங்க!!❤️
எப்பவும் அடுத்தவங்களோடாத ஆசைப்படாதீங்க 👊🏻

மிஷனெரி ஆன் லூதர் பேக்பி Anne Luther Bagby.  மண்ணில்: 20-03-1859விண்ணில்: 22-12-1942ஊர்: டெக்சாஸ்நாடு: அமெரிக்காதரிசன பூ...
13/06/2025

மிஷனெரி ஆன் லூதர் பேக்பி Anne Luther Bagby.

மண்ணில்: 20-03-1859
விண்ணில்: 22-12-1942
ஊர்: டெக்சாஸ்
நாடு: அமெரிக்கா
தரிசன பூமி : பிரேசில்

ஆன் லூதர் பேக்பி (Anne Luther Bagby) பிரேசில் நாட்டில் ஊழியம் செய்த அமெரிக்க பாப்டிஸ்ட் மிஷனெரியாவார். கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்த அவர், தனது பதினோராம் வயதில் ஞானஸ்நானம் பெற்று, எப்பொதும் தேவ ஊழியத்தின்மேல் வாஞ்சையாய் இருந்தார். 1879ஆம் ஆண்டு, பேலர் ஃபீமேல் காலேஜிலிருந்து (பேலர் பெண்கள் கல்லூரி) பட்டம் பெற்ற பின், ஆசிரியையாக பணி புரிந்தார். 1881ஆம் ஆண்டு மிஷனெரி அழைப்பை பெற்ற வில்லியம் பக் பேக்பி (William Buck Bagby) என்பவரை மணம் முடித்தார். அதே ஆண்டில், இந்த புதுமண தம்பதியர் "ஃபாரின் மிஷன் போர்டு"-இன் (வெளிநாட்டு மிஷன் வாரியம்) சார்பாக பிரேசில் நாட்டிற்கு மிஷனெரிகளாக புறப்பட்டனர்.

அந்நாட்டில் கத்தோலிக்க மார்க்கம் மிக பரவலாய் இருந்த பஹியாவில் (Bahia) அவர்கள் குடியேறினர். ஊழியம் செய்த இரண்டு ஆண்டுகளில் இந்த தம்பதியர் அங்கு போர்த்துகீசிய மொழியில் நடத்தப்படும் முதல் பாப்டிஸ்ட் சபையை நிறுவினர். பின்பு, 1884ஆம் ஆண்டு ரியோ டி ஜெனெரோவிற்கு (Rio de Janeiro) சுவிசேஷத்தை எடுத்துச் சென்றனர். அங்கு இத்தம்பதியர் கத்தோலிக்கர்களிடமிருந்து கடுமையான எதிர்ப்பை சந்தித்தனர். அவர்கள் நடத்திய கூட்டங்களில் ஒருவர் கூட கலந்துகொள்ள வரவில்லை. ஆகையால் கூட்டத்தை ஈர்ப்பதற்காக அவர்கள் இசைக்கருவிகளை வாசித்து, பின்பு மெதுவாக சத்திய வேதத்தை பிரசங்கித்தனர். படிப்படியாய் கர்த்தர் அவர்கள் சபையில் ஆத்துமாக்களை சேர்த்தார். உள்ளூர் பாதிரியார்களின் துன்புறுத்தல்களுக்கு மத்தியிலும் அவர்கள் தொடர்ந்து உண்மையாய் ஊழியம் செய்தனர். சத்துருவின் தாக்குதல்கள் அதிகரித்தாலும், ஊழியமும் செழித்தோங்கியது. 1901ஆம் ஆண்டில் இவர்கள் சாவ் பாவ்லோ (Sao Paulo) என்ற ஊரில் குடியேறி, அங்கு அநேக சபைகளையும் பள்ளிகளையும் நிறுவினர். தேவனுடைய ராஜ்யம் கட்டப்பட பல கிறிஸ்தவ மாநாடுகளை ஒழுங்கு செய்தனர்.

ஆன் அவர்கள் வேதாகமத்திலுள்ள குணசாலியான ஸ்திரீயை போலவே திகழ்ந்தார். தன் பிள்ளைகளை தேவ பயத்தில் வளர்த்து, குடும்ப கடமைகளை நிறைவேற்றி, தன் கணவருக்கு ஊழியத்தில் உதவி செய்து, பிரேசில் நாட்டிலேயே மிகப்பெரிய பள்ளிக்கூடத்தையும் நடத்தி வந்தார். அதுமட்டுமல்லாமல், இவர் ஆசிரியர்களுக்கு பயிற்சியளித்தார் மற்றும் பெண்கள் மிஷனெரி கூட்டங்களில் பிரசங்கிப்பதில் உற்சாகமாக பங்கேற்றினார். எல்லாவற்றிற்கும் மேலாக, துன்பங்கள் மத்தியிலும், தன் பிள்ளைகளில் இருவரை இழந்தபோதும் மன உறுதியுடன் நின்று முறுமுறுக்காமலும், குறைசொல்லாமலும் இருந்தார்.

ஆன், வில்லியம் பேக்பி தம்பதியர் தென் அமெரிக்காவில் மிக நீண்ட காலம் ஊழியம் செய்த தம்பதியர்களில் ஒருவர். அவர்களின் ஒன்பது குழந்தைகளில் ஐந்து பேர் மிஷனெரிகளாக பிரேசிலில் பணியாற்றுவதன் மூலம் இத்தம்பதியர் விட்டு சென்ற ஊழியம் பரம்பரையாய் தொடர்ந்தது.
Missionary Anne Luther Bagby

Born: March 20, 1859
Home with the Lord: December 22, 1942
Hometown: Texas, USA
Mission Field: Brazil

Anne Luther Bagby was an American Baptist missionary who served faithfully in Brazil. Born into a devout Christian family, she was baptized at the tender age of eleven, having always shown a deep desire for God’s service. In 1879, she graduated from Baylor Female College, after which she worked as a teacher.

In 1881, she married William Buck Bagby, a man who had received a clear missionary calling. That same year, this newlywed couple set out for Brazil as missionaries under the Foreign Mission Board.
Planting the Gospel in Brazil

At that time, Brazil was predominantly Catholic, especially in the region of Bahia, where they first settled. Within just two years of their ministry, the couple established the first Portuguese-speaking Baptist church in the region.

“I will build my church, and the gates of Hades will not overcome it.”
—Matthew 16:18 (NIV)

In 1884, they moved to Rio de Janeiro to spread the Gospel. They faced strong opposition from the Catholic population. No one would attend their early gatherings. But the Bagbys did not lose hope. Using music to draw people, they would gently share the Word of God.

“So then faith comes by hearing, and hearing by the word of God.”
—Romans 10:17 (NKJV)

Despite persecution by local priests, the Lord added souls to the church. As opposition increased, so did the growth of their ministry. In 1901, they moved to São Paulo, where they established numerous churches and schools and organized many Christian conferences to advance God’s kingdom.

“Be steadfast, immovable, always abounding in the work of the Lord.”
—1 Corinthians 15:58 (ESV)

A Woman of Noble Character

Anne truly embodied the Proverbs 31 woman. She raised her children in the fear of God, managed her household faithfully, supported her husband in ministry, and led Brazil’s largest school for girls at the time. She also trained other teachers and passionately preached in women’s missionary meetings.

“She opens her mouth with wisdom, and the teaching of kindness is on her tongue.”
—Proverbs 31:26 (ESV)

Through personal suffering—including the loss of two of her children—she remained strong, never bitter or resentful, but full of unwavering faith.

“God is our refuge and strength, an ever-present help in trouble.”
—Psalm 46:1 (NIV)

Anne and William Bagby are counted among the longest-serving missionary couples in South America. Of their nine children, five became missionaries in Brazil, continuing the legacy they began.

“But the mercy of the Lord is from everlasting to everlasting on those who fear Him, and His righteousness to children’s children.”
—Psalm 103:17 (NKJV)
Inspiration to Today’s Readers:

Anne Luther Bagby’s life reminds us that God uses ordinary people for extraordinary purposes. She lived with compassion, courage, and conviction—proving that even in the face of hardship, God’s light shines through faithful hearts.

Let her story encourage you to say:
“Here am I, Lord. Send me!”
—Isaiah 6:8
Here is the English translation of the life story of Missionary Anne Luther Bagby, along with motivating Bible verses that reflect her dedication, resilience, and impact. This version is written in a way that can inspire readers to trust in God’s calling and faithfulness.
மிஷனெரி ஆன் லூதர் பேக்பி Anne Luther Bagby.

11/06/2025

Remix song

அவர் வந்த பெருமையை இகழ்ந்து விடாதே போற்றித்திரு அகவல் 75-77அருபரத்தொருவன் அவனியில் வந்துகுருபரன் ஆகி அருளிய பெருமையைச்சி...
10/04/2025

அவர் வந்த பெருமையை இகழ்ந்து விடாதே போற்றித்திரு அகவல் 75-77

அருபரத்தொருவன் அவனியில் வந்து

குருபரன் ஆகி அருளிய பெருமையைச்

சிறுமை என்றிக ழாதே

அதாவது,

இந்தச் சைவ சித்தாந்தப் பாடல், இந்துக்கள் (இந்து தேச மக்கள்) அனைவரையும் இரங்கிக் கேட்டுக்கொள்வதாய் உள்ளது. என்ன வென்றால், பரலோகத்துக்குரியவரான கடவுள் ரூபமில்லாதவர் தான். ஆனாலும் அவர் கெட்டுப்போன மனிதருக்கு நித்தியஜீவனைக் கொடுத்து முக்திசேர்க்க, குருவாக, இவ்வுலகத்தில் வந்த பெருமையை அற்பமானதாய் எண்ணி, சிறுமையாய் இகழ்ந்து பேசிவிடாதே என்று வேண்டிக்கொள்கிறது.

உருவமில்லாத, அதாவது ஒருவராலும் காணக்கூடாத இறைவன் உலகில் வந்து பிறப்பாரோ என்ற சந்தேகத்தோடு அதைச் சிறுமைப்படுத்தி இகழ்ந்துவிட வேண்டாம் என்று கூறப்படுவதைப் பார்க்கிறோம். அதே நேரத்தில் அவர் அளிக்கும் மீட்பின் பெருமையை அறிந்துகொண்டு, அதை வாஞ்சையோடு பெற்றுக்கொள்வது எத்தனை பாக்கியம்!!

அவர் வந்த பெருமையை இகழ்ந்து விடாதே (போற்றித்திரு அகவல் 75-77)அருபரத்தொருவன் அவனியில் வந்துகுருபரன் ஆகி அருளிய பெ.....

Address

Vellore
632001

Opening Hours

Tuesday 9am - 5pm
Saturday 9am - 5pm
Sunday 9am - 5pm

Telephone

+918778108988

Alerts

Be the first to know and let us send you an email when Deva thoughtss posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Deva thoughtss:

Share