Sengalvarayan Farmworld

Sengalvarayan Farmworld Vlogs about farming business
(10)

28/05/2026

Part 2️⃣ – சிப்பி காளான் பேக் 2 நிமிடத்தில் ரெடி! 🍄🔥

**நேற்று போட்ட Part 1க்கு கொடுத்த supportக்கு ரொம்ப நன்றி ❤️
இதோ Part 2️⃣ 🍄🔥

சிப்பி காளான் வளர்ப்பில்
வைக்கோல் அவிக்கணும், கெமிக்கல் போடணும், நேரம் அதிகம் எடுத்துக்கொள்ளும் என்ற பிரச்சனை இல்லாமல்…

Pellets use பண்ணி வெறும் 2 நிமிடத்தில் பேக் ரெடி பண்ணலாம் 😲

#சிப்பிகாளான் #தமிழ்விவசாயம் #காளான்வளர்ப்பு #விவசாயம்

💻 Engineeringல இருந்து Farming வரை 🌱Episode 06“எங்க முதல் Shed… எங்களுக்கு அது ஒரு பெரிய கனவு” 🛖🐔Loan கிடைச்சதுக்கப்புறம...
27/05/2026

💻 Engineeringல இருந்து Farming வரை 🌱

Episode 06

“எங்க முதல் Shed… எங்களுக்கு அது ஒரு பெரிய கனவு” 🛖🐔

Loan கிடைச்சதுக்கப்புறம்…

எங்களுக்கு confidence கொஞ்சம் அதிகமாயிடுச்சு.

“சரி…
இப்போ நாமளும் ஆரம்பிக்கலாம்…”

ன்னு full excitement. 😄

ஆனா…

இப்போ மாதிரி ready-made shed எதுவும் இல்ல.

Budgetும் ரொம்ப கம்மி.

அதனால…

முடிஞ்ச அளவுக்கு எல்லா வேலையும் நாமளே பண்ண ஆரம்பிச்சோம்.

முதல்ல…

இடத்தை clean பண்ணணும்.

அங்க முழுக்க…

புதர்…

கல்…

குப்பை…

அதெல்லாம் இருந்துச்சு.

வெயில்ல நின்னு…

ஒவ்வொண்ணா சுத்தம் பண்ண ஆரம்பிச்சோம்.

காலைல போனா…

Night ஆகுற வரைக்கும் அங்கதான் இருப்போம்.

சில நேரம் சாப்பாடு கூட மறந்துருவோம். 😅

அப்போ…

எங்களுக்கு அது ஒரு சாதாரண shed இல்ல.

அது எங்க future மாதிரி தோணுச்சு. ❤️

எப்படி build பண்ணலாம்…

எப்படி low budgetல முடிக்கலாம்…

ன்னு research பண்ணுவோம்.

அப்போ internetலும் இப்போ மாதிரி தகவல் அதிகமில்லை.

அதனால…

தெரிஞ்சவங்ககிட்ட கேட்டு…

மீதியெல்லாம் நாமே try பண்ணி கத்துக்கிட்டோம்.

Shed கட்டுறதுக்கு…

மூங்கில் தேவைப்பட்டது.

ஆனா…

காசு மிச்சப்படுத்தணும்னு…

நாங்க readyஆ வாங்கலை.

ஒரு இடத்துல permission வாங்கி…

மொத்தமா மூங்கில் புதரையே வாங்கினோம். 🎋

அதுக்கப்புறம்…

ஒவ்வொரு மூங்கிலையும் நாங்களே வெட்டணும்.

அதை தூக்கணும்.

சுத்தம் பண்ணணும்.

Shedக்கு use பண்ணுற மாதிரி ready பண்ணணும்.

அந்த வேலை ரொம்ப கஷ்டமா இருந்துச்சு.

கை வலிக்கும்…

உடம்பு வலிக்கும்…

வெயில் வேற அடிக்கும். 😅

ஆனா…

அப்போ கூட…

எங்களுக்கு ஒரு சந்தோஷம் இருந்துச்சு.

“இது நம்ம பண்ணை…
இத நாமளே build பண்ணணும்…”

ன்னு.

அதனால…

எவ்வளவு கஷ்டமா இருந்தாலும்…

ஒவ்வொரு மூங்கிலையும் நாங்களே வெட்டி…

அந்த shedல use பண்ணோம்.

ஒரு bamboo வாங்குறதுக்குக்கூட…

எவ்வளவு rateன்னு compare பண்ணுவோம். 😄

ஏன்னா…

கையில் இருந்த காசு limited.

ஒரு ரூபா செலவு பண்ணினாலும்…

யோசிச்சுதான் பண்ணணும்.

ஆனா…

அந்த struggleலயும் ஒரு சந்தோஷம் இருந்துச்சு.

ஏன்னா…

முதல்முறையாக…

“நாம நமக்காக ஏதோ build பண்ணிக்கிட்டு இருக்கோம்…”

ன்னு ஒரு feel வந்துச்சு.

சில நேரம்…

வேலை பண்ணிட்டு அப்படியே தரையில உட்காந்து…

“ஒருநாள் இது பெரிய farm ஆகும்…”

ன்னு பேசிக்கிட்டே இருப்போம். 😊

அப்போ எங்களுக்கு தெரியாது…

அந்த சின்ன shedல ஆரம்பிச்ச வாழ்க்கை…

ஒரு நாள்…

எங்களை social media வரைக்கும் கொண்டு போகப்போகுதுன்னு.

(அடுத்த episode நாளைக்கு…) 👀

ுந்துFarmingவரை

💻 Engineeringல இருந்து Farming வரை 🌱

இந்த வயல்ல வேலை செஞ்சிட்டு 🔥🌾அதோ அங்க தெரியுற தென்னமரத்துக்கு அடியில ஓய்வெடுக்கனும் 🔥❤️ என்னோட வாழ்க்கை இப்படிதான் இருக்...
27/05/2026

இந்த வயல்ல வேலை செஞ்சிட்டு 🔥🌾அதோ அங்க தெரியுற தென்னமரத்துக்கு அடியில ஓய்வெடுக்கனும் 🔥❤️ என்னோட வாழ்க்கை இப்படிதான் இருக்கணும்னு விரும்புறேன் 😍💯 இந்த வாழ்க்கை வாழ்றதுக்கு தான் முயற்சி பண்ணிட்டிருக்கேன் 💯😍
உங்களுக்கு இந்த வாழ்க்கை பிடிக்குமா??

27/05/2026

🍄வைக்கோல் இல்லாம காளான் பை போட முடியும் 🔥👇🏻

#தமிழ்விவசாயம் #காளான்வளர்ப்பு #விவசாயம் #ரீல்ஸ் #சிம்பிள்முறை #அக்ரிடெக்

💻 Engineeringல இருந்து Farming வரை 🌱Episode 05“சும்மா Try பண்ணதுதான்… வாழ்க்கையா மாறிச்சு”MLM companyல இருந்து வெளியே வந...
26/05/2026

💻 Engineeringல இருந்து Farming வரை 🌱

Episode 05

“சும்மா Try பண்ணதுதான்… வாழ்க்கையா மாறிச்சு”

MLM companyல இருந்து வெளியே வந்ததுக்கப்புறம்…

ஒரு விஷயம் மட்டும் clearஆ புரிஞ்சுச்சு.

நமக்கு…

யாருக்கீழயோ வேலை பண்ணுற வாழ்க்கை set ஆகாது.

ஆனா…

அடுத்தது என்ன பண்ணுறதுன்னு மட்டும் தெரியல.

அந்த நேரத்துல…

வெளியே கூலி வேலைக்குக்கூட நிறைய போயிருக்கேன்.

கொத்தனார் வேலைக்கு helperஆ போனதும் இருக்கு…

மூட்டை தூக்குற வேலைக்கு போனதும் இருக்கு…

Centering வேலைக்கு போனதும் இருக்கு…

Carpenter வேலைக்கும் போயிருக்கேன்.

கிட்டத்தட்ட ஒரு 6 மாதம்…

இந்த மாதிரி கூலி வேலைகளும் பண்ணிட்டிருந்தேன்.

அப்போ…

“Engineering படிச்சுட்டு இந்த மாதிரி வேலை பண்ணுறியே…”

ன்னு நிறைய பேர் திட்டினாங்க.

சில பேர் advice பண்ணாங்க.

சில பேர் கிண்டலும் பண்ணாங்க.

ஆனா…

அப்போ கூட…

எனக்கு அந்த கூலி வேலை பண்ணுறது கஷ்டமா தெரியல.

வெயில்ல நின்னு வேலை பண்ணுறதும்…

மணல் அள்ளுறதும்…

மூட்டை தூக்குறதும்…

எல்லாமே somehow சந்தோஷமாத்தான் இருந்துச்சு.

ஆனா…

AC roomல ஒரே இடத்துல உட்காந்துட்டு…

Computer முன்னாடி வேலை பண்ணுறதுதான்…

எனக்கு செட்டாகவே இல்ல.

அந்த வாழ்க்கை மட்டும்…

எனக்காக இல்லன்னு feel பண்ண ஆரம்பிச்சேன்.

அந்த நேரத்துலதான்…

நாட்டுக்கோழி market கொஞ்சம் நல்லா போயிட்டு இருந்துச்சு. 🐔

ஒருநாள்…

எங்க வீட்டுல நாட்டுக்கோழி வாங்கிட்டு வந்திருந்தாங்க.

அப்போ கேட்டேன்…

“எவ்வளவு கிலோ?”

ன்னு.

“450 ரூபா…”

ன்னு சொன்னாங்க. 😳

அப்போதான் எனக்கு ஒரு thought வந்துச்சு.

“நாட்டுக்கோழிக்கி இவ்வளவு demand இருக்கா?”

ன்னு.

ஆனா…

அந்த price மட்டும் எனக்கு interest கொடுக்கல.

நான் சின்ன வயசிலிருந்தே…

வீட்டுல நாட்டுக்கோழி வளர்த்திருக்கேன்.

ஏன்னா…

நான் வளர்ந்தது கிராமத்துல. 🌾

எங்க வீட்டுல எப்பவுமே…

கொஞ்சமாவது நாட்டுக்கோழி இருக்கும்.

அதனால…

நாட்டுக்கோழி வளர்ப்புல கொஞ்சம் experienceயும் இருந்துச்சு.

ஒருபக்கம் நல்ல demand…

இன்னொருபக்கம் நமக்கே கொஞ்சம் experience…

அப்போதான் தோணுச்சு.

“நாம ஏன் நாட்டுக்கோழி வளர்க்க ஆரம்பிக்கக்கூடாது?”

ன்னு.

அதுக்கப்புறம்…

நானும் என் friendsமும் சேர்ந்து…

“சும்மா நாமளும் try பண்ணி பார்க்கலாமே…”

ன்னு பேச ஆரம்பிச்சோம்.

Business ideaவாக இல்ல…

பெரிய planயும் இல்ல…

Time pass மாதிரி தான் ஆரம்பம். 😄

அதுக்கப்புறம்…

Rentக்கு ஒரு இடம் தேட ஆரம்பிச்சோம்.

எங்க எங்கயோ சுற்றினோம்…

நிறைய இடம் பார்த்தோம்…

சில இடம் பிடிக்கலை…

சில இடத்துக்கு rent set ஆகலை…

அப்படி தேடிக்கிட்டே இருந்தப்போதான்…

ஒரு இடம் செட்டாகிடுச்சு.

அந்த இடம் முழுக்க காலியாக இருந்துச்சு.

ஆனா…

எங்களுக்கு அது ரொம்ப பெரிய opportunity மாதிரி தெரிஞ்சுச்சு. ❤️

இடம்லாம் பார்த்துட்டோம்…

Rentவும் பேசிட்டோம்…

ஆனா…

அதை advance கொடுத்து எடுக்குற அளவுக்கு…

எங்ககிட்ட காசு இல்லை.

என்ன பண்ணுறதுன்னு தெரியாம…

முயற்சி பண்ணிக்கிட்டே இருந்தோம்.

அப்போதான்…

எங்க அண்ணன் ஒருத்தர்

நரேஷ் அண்ணா.

அவர் சொன்னார்…

“நீங்க தைரியமா ஆரம்பிங்க…
நான் loan வாங்கித் தரேன்…”

ன்னு.

உண்மையா சொல்லணும்னா…

நாங்க முதல் முறையாக business ஆரம்பிக்க…

எங்களுக்கு financialஆ help பண்ணது அவர்தான். ❤️

அவரு வாங்கிக் கொடுத்த loanல்தான்…

எங்க முதல் shed கனவு ஆரம்பிச்சது.

அதுக்கப்புறம்…

அந்த இடத்தை கொஞ்சம் கொஞ்சமா build பண்ண ஆரம்பிச்சோம்.

அப்போ எங்களுக்கு தெரியாது…

அந்த சின்ன shedதான்…

ஒரு நாள் எங்க வாழ்க்கையையே மாற்றப்போகுதுன்னு.

(அடுத்த episode நாளைக்கு…) 👀

ுந்துFarmingவரை

🖥️💻Engineeringல இருந்து Farming வரை 🌱Episode 04“வேலை தேடின காலத்துல… MLMல கூட போயிருக்கேன்”ஒரு வேலையும் set ஆகலை…எந்த வே...
25/05/2026

🖥️💻Engineeringல இருந்து Farming வரை 🌱

Episode 04

“வேலை தேடின காலத்துல… MLMல கூட போயிருக்கேன்”

ஒரு வேலையும் set ஆகலை…

எந்த வேலைக்கு போனாலும் மனசு ஒத்துக்கலை…

அப்போ வாழ்க்கை கொஞ்சம் confusingஆ போயிட்டு இருந்துச்சு.

வீட்டுலயும் pressure அதிகமாயிடுச்சி.

“ஏதாவது ஒரு வேலைக்கு போய்யே ஆகணும்…”

ன்னு சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க.

நானும்…

பல வேலை try பண்ணிக்கிட்டே இருந்தேன்.

அப்போதான்…

என்னோட நண்பர் சுரேஷ் கிருஷ்ணனா மூலமா ஒரு பிஸினெஸ் வாய்ப்பு கெடச்சது.

ஒரு MLM companyல join பண்ணேன்.

“Smart way”ன்னு ஒரு company.

அதுல…

காசு கொடுத்து ஒரு product வாங்கணும்.

அதுக்கப்புறம்…

நாம இன்னொருத்தரை join பண்ண வைக்கணும்.

அவங்க இன்னொருத்தரை சேர்க்கணும்.

அந்த மாதிரி ஒரு business அது

அந்த நேரத்துல…

எங்களுக்கு அது ரொம்ப பெரிய business opportunity மாதிரி தெரிஞ்சது. 😄

Morningல இருந்து night வரைக்கும்…

Meeting…

Training…

Follow up…

Motivation…

அப்படியே full busy.

அப்போ அந்த business மூலியமாக…

நிறைய கனவுகளும் வந்துச்சு. ✨

Car வாங்கலாம்…

பங்களா வாங்கலாம்…

நிறைய சம்பாதிக்கலாம்…

வாழ்க்கையே மாறிடும்…

அப்படின்னு எங்களோட seniors ரொம்ப motivation கொடுப்பாங்க.

அதையெல்லாம் நாங்களும் முழுசா நம்பிட்டோம். 😄

“நமக்கு எந்த வேலையும் set ஆகல…

இதுதான் நமக்கான opportunity…”

“இத்தனை நாள் நாம இதுக்காகதான் wait பண்ணிக்கிட்டு இருந்திருக்கோம்…”

ன்னு கூட நினைச்சிருக்கோம்.

சில நேரம்…

நாம சீக்கிரம் பணக்காரங்க ஆகப்போற மாதிரி கூட feel பண்ணிருக்கோம். 😂

அந்த companyக்காக…

நிறைய ஊர் சுற்றிருக்கேன்.

நிறைய பேர்கிட்ட பேசியிருக்கேன்.

எனக்கு கீழே மட்டும்…

ஒரு 40 பேர் வரை join பண்ணியிருந்தாங்க.

அப்போ அது ரொம்ப பெரிய achievement மாதிரி தோணுச்சு.

இதுல

Silver achiever…

Gold achiever..

Diamond..

Pearl …

அப்டியே மெய்சிலிர்க்க வெப்பாங்க 🙊😂

ஆனா…

உண்மையா பார்த்தா…

சம்பாதிச்சத விட செலவு பண்ணது தான் அதிகம். 😅

வர்ற காசு…

Travel…

Food…

Meeting…

இதுலயே போயிடும்.

அதுக்கு மேல கைல இருக்குற காசெல்லாம் போட்டு செலவு பண்ணோம்..

கிட்டத்தட்ட 8 மாதம்…

அதுலயே சுற்றிட்டு இருந்தேன்.

இப்போ திரும்ப யோசிச்சு பார்த்தா…

அந்த businessல நாங்க success ஆகல.

ஆனா…

அந்த experience மட்டும் வீணா போகல.

அதுதான் முதன்முறையாக…

Businessன்னா என்ன…

Active incomeன்னா என்ன…

Passive incomeன்னா என்ன…

People management…

Communication…

Confidence…

இந்த மாதிரி நிறைய விஷயங்களை கற்றுக்கொடுத்துச்சு.

முக்கியமா…

“வேலைக்கு போறத விட…

சொந்தமா ஏதாவது பண்ணணும்…”

ன்னு அந்த நேரத்துல தான் மனசுக்குள்ள strongஆ பதிஞ்சுச்சு.

அப்போ எனக்கு தெரியல…

அந்த MLM companyல கற்ற சில விஷயங்கள்தான்…

பின்னாடி நான் business பண்ணும்போது ரொம்ப help ஆகப்போறதுன்னு.

உங்களுக்கு இந்த மாதிரி ஒரு MLM company அனுபவம் இருந்தா கமெண்ட் ல சொல்லுங்க 👍🙏

(அடுத்த episode நாளைக்கு…) 👀

ுந்துFarmingவரை

💻 Engineeringல இருந்து Farming வரை 🌱Episode 03“Engineering முடிஞ்சதும் வாழ்க்கை set ஆகிடும்னு நினைச்சேன்…”College முடிஞ்...
24/05/2026

💻 Engineeringல இருந்து Farming வரை 🌱

Episode 03

“Engineering முடிஞ்சதும் வாழ்க்கை set ஆகிடும்னு நினைச்சேன்…”

College முடிஞ்ச நாள்…

நாங்க எல்லாரும் ரொம்ப happyஆ இருந்தோம். 😊

“இனிமேல் தான் வாழ்க்கை ஆரம்பிக்கப் போகுது…”

ன்னு ஒரு excitement.

நல்ல வேலை…

நல்ல சம்பளம்…

சொந்த காசுல வாங்குற முதல் bike…

வீட்டுக்கு help பண்ணுறது…

Education loan அடைக்குறது…

அப்படின்னு நிறைய கனவுகள். ✨

Collegeல campus interviewகளும் நடந்துச்சு.

ஆனா…

அதுல select ஆகுற அளவுக்கு
எனக்கு knowledgeயும் confidenceமும் இல்ல.

நான் படிச்சது தமிழ் மீடியம்.

அதனால interviewல English பேசுறப்போ…

கொஞ்சம் பயமும் தயக்கமும் இருக்கும்.

சில நேரம் answer தெரிஞ்சிருந்தாலும்…

பேசுற confidence இருக்காது.

“பரவாயில்ல…

வெளியே போய் try பண்ணிக்கலாம்…”

ன்னு நினைச்சேன்.

அதுக்கப்புறம் தான்…

சென்னை…

ஸ்ரீபெரும்புதூர்…

வேலூர்…

இந்த மாதிரி நிறைய இடத்துக்கு interviewக்காக சுற்ற ஆரம்பிச்சேன்.

Busல போன நாட்களும் இருக்கு…

Trainல நின்னுகிட்டே போனதும் இருக்கு…

கையில் file எடுத்துக்கிட்டு…

Resume வைத்துக்கிட்டு…

ஒரு வேலை கிடைக்கும்னு நம்பிக்கையோட சுற்றிட்டு இருந்தோம்.

என் friends கூட interviewக்கு போனதும் உண்டு.

சில இடங்களில்…

என் கூட வந்த friends select ஆயிட்டாங்க.

நான் மட்டும் reject. 🙂

அந்த feeling ரொம்ப கஷ்டமா இருக்கும்.

வெளியே வந்ததும்…

“பரவாயில்லடா…”

ன்னு காட்டிக்கிட்டாலும்…

உள்ளுக்குள்ள கொஞ்சம் கஷ்டமா இருக்கும்.

ஒரு interview முடிஞ்சு வெளியே வந்தப்போ…

“நம்மளால உண்மையாவே முடியுமா?”

ன்னு கூட யோசிச்சிருக்கேன்.

Engineering படிச்சவங்களுக்கு…

வெளியே வந்ததும் பெரிய சம்பளம் கிடைக்கும்…

ரொம்ப respect இருக்கும்…

ன்னு நெனச்சிருந்தேன்.

ஆனா reality வேற மாதிரி இருந்துச்சு.

சில இடங்களில்…

5 ஆயிரம்…

6 ஆயிரம் salary சொன்னாங்க.

சென்னையில room rent…

food…

bus…

இதெல்லாம் போக…

அது salaryஆ இல்ல pocket moneyஆன்னு கூட தோணும். 😅

அப்போதான்…

“நம்ம நினைச்ச மாதிரி வெளியுலகம் இல்ல…”

ன்னு கொஞ்சம் கொஞ்சமா புரிய ஆரம்பிச்சுச்சு.

அதுக்கப்புறம்…

வேலூர்ல காட்பாடி sideல ஒரு IT companyல வேலைக்கு சேர்ந்தேன்.

College studentsக்கு project explain பண்ணுற மாதிரி வேலை.

பெயருக்கு Software Engineer வேலைதான்.

ஆனா…

ஒரே இடத்துல உட்கார்ந்து computer பார்த்துக்கிட்டே இருக்குறது…

எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு.

தலை வலி…

மனசு ஒத்துக்காமை…

எதுவுமே set ஆகலை.

15 நாள்லயே அந்த வேலையை விட்டுட்டேன்.

அதுக்கப்புறம்…

என் friend சொன்னதால…

ஸ்ரீபெரும்புதூர்ல ஒரு production companyக்கு போனேன்.

Machine work.

அங்கே ஒரு washer fitting work பண்ணணும்.

நான் left hand use பண்ணுவேன்.

ஆனா…

“Right handல வேகமா பண்ணு…”

ன்னு சொல்லுவாங்க.

ஒரு மணி நேரத்துக்கு எவ்வளவு piece பண்ணணும்னு target.

அங்கேயும்…

நான் set ஆகலை.

அப்போதான் எனக்கு புரிய ஆரம்பிச்சுச்சு…

என்னால யாருக்கீழயோ வேலை பண்ணுறது ரொம்ப கஷ்டம்னு.

ஆனா…

அதுக்கப்புறம் வாழ்க்கை என்னை எங்க கூட்டிக்கிட்டு போகப்போகுதுன்னு…

அப்போ எனக்கு தெரியவே தெரியாது.

(அடுத்த episode நாளைக்கு…) 👀

ுந்துFarmingவரை

💻 Engineeringல இருந்து Farming வரை 🌱Episode 02“Arrear வச்ச நாட்கள்…”ஆரம்பத்துல…College போறதுக்கே ரொம்ப பயமா இருந்துச்சு....
23/05/2026

💻 Engineeringல இருந்து Farming வரை 🌱

Episode 02

“Arrear வச்ச நாட்கள்…”

ஆரம்பத்துல…

College போறதுக்கே ரொம்ப பயமா இருந்துச்சு.

ஆனா…

போகப் போக friends எல்லாரும் set ஆனதுக்கப்புறம்…

Daily college போக ரொம்ப பிடிச்சிருச்சி. 😊

ஆனா எனக்கு ஒரு பெரிய பிரச்சனை இருந்துச்சு.

நான் தமிழ் மீடியம்.

Engineeringல பெரும்பாலும்
Englishலதான் பாடம் நடத்துவாங்க.

அதெல்லாம் ஆரம்பத்துல புரிஞ்சிக்கவே ரொம்ப கஷ்டமா இருந்துச்சு.

உண்மையா சொல்லணும்னா…

எனக்கு Englishமும் வராது…

கணக்கும் வராது. 😅

அதனால…

Mathematics 1…

Mathematics 2…

Mathematics 3…

மூணுலயும் arrear வச்சுட்டேன்.

அதே மாதிரி English 2லயும் arrear.

அப்பப்போ…

ஒவ்வொரு semesterலயும் ஒரு ஒரு arrear வச்சுட்டே இருந்தேன்.

பார்க்க பார்க்க…

5th semester முடியும்போது…

Arrear நெறைய குவிஞ்சுட்டே போச்சு.

6th semester போகும்போது…

மொத்தம் 12 papers எழுத வேண்டிய நிலைமை.

6 arrear…

6 current subject…

மொத்தம் 12 papers. 😵

அப்போதான் கொஞ்சம் பயம் வந்துச்சு.

“இன்னும் arrear வச்சிட்டே போனா…

வெளியே போய் வேலை வாங்குறது ரொம்ப கஷ்டமாயிடும்…”

ன்னு.

அதுக்கப்புறம்…

எப்படியாவது clear பண்ணணும்னு முடிவு பண்ணேன்.

அந்த ஒரு semester…

கொஞ்சம் seriousஆ படிக்க ஆரம்பிச்சேன்.

Result வந்த நாள் இன்னும் ஞாபகம் இருக்கு…

மொத்த 12 papersயும் clear. ❤️

அதுக்கப்புறம்…

College முடிச்சு வெளியே வரும்போது…

ஒரு arrear கூட இல்லாம வெளியே வந்தேன்.

Engineeringல 65% எடுத்தா
First Classன்னு சொல்லுவாங்க.

எனக்கு வந்தது…

64.99%. 😅

0.01%ல First Class miss ஆயிடுச்சி.

அப்போ அதைப் பற்றி கொஞ்சம் feel பண்ணினதும் உண்டு.

“First Classல pass பண்ணிருந்தா…

கொஞ்சம் கௌரவமா இருக்கும்…”

ன்னு அப்போ நினைச்சிருக்கேன்.

அதனால…

இந்த paper… அந்த paperன்னு…

நிறைய subjectsக்கு revaluation கூட போட்டோம். 😄

“எப்படியாவது அந்த 0.01% வந்துடுமோ…”

ன்னு நம்பிக்கையோட.

ஆனா…

காசு மட்டும் தான் போச்சு.

Result எதுவும் மாறல. 😂

அந்த நேரத்துல…

College முடியும் நாளை ரொம்ப ஆவலோட எதிர்பார்த்துட்டு இருந்தோம்.

ஏன்னா…

College முடிஞ்சாலே நல்ல வேலை கிடைக்கும்…

வாழ்க்கை settle ஆயிடும்…

நினைச்சத வாங்கலாம்…

நினைச்சத சாப்பிடலாம்…

அப்படின்னு நிறைய கனவுகள் இருந்துச்சு. ✨

ஆனா…

College முடிச்சு வெளியே போய் வேலை தேட ஆரம்பிச்சதுக்கப்புறம்தான்…

வாழ்க்கையோட உண்மையான twist காத்திருந்துச்சு.

(அடுத்த episode நாளைக்கு…) 👀

ுந்துFarmingவரை

🚶‍♂️💻 Engineeringல இருந்து Farming வரை 🌱🚜Episode 01“Engineering வாழ்க்கை… நான் நினைச்ச மாதிரி இல்ல” ✨Engineering முடிச்ச...
22/05/2026

🚶‍♂️💻 Engineeringல இருந்து Farming வரை 🌱🚜

Episode 01

“Engineering வாழ்க்கை… நான் நினைச்ச மாதிரி இல்ல” ✨

Engineering முடிச்சுட்டு…

நல்ல வேலைக்கு போய்…

வாழ்க்கையே மாறப்போகுதுன்னு நினைச்சுட்டு இருந்த ஒருத்தனுக்கு…

காலேஜ் முடிச்சு வெளியே வந்ததுக்கப்புறம்தான் தெரிஞ்சது…

அது அவ்வளோ easy இல்லன்னு.

என்னோட பேர் செங்கல்வராயன். 😊

வேலூர் மாவட்டம்,
வேலப்பாடி, சாஸ்திரி நகர்.

நான் ஒரு average student தான்.

ரொம்ப நல்லாவும் படிக்க மாட்டேன்.

ரொம்ப மோசமாவும் படிக்க மாட்டேன்.

எதுலயுமே top கிடையாது.

விளையாட்டு… ⚽
படிப்பு… 📚
General knowledge…

எல்லாத்துலயும் average.

நான் படிச்சது முழுக்க தமிழ் மீடியம்.

12th படிக்கும்போது…

என் friends தான் நிறைய help பண்ணாங்க. ❤️

அவங்களால்தான் ஒரு decent mark எடுத்தேன்.

என் friends எல்லாரும் Engineering join பண்ணப்போ…

நானும் Engineering போகணும்னு ஆசைப்பட்டேன்.

அவங்களுக்கு நல்ல marks.

பெரிய college கிடைச்சது.

எனக்கு mark கொஞ்சம் கம்மி.

அதனால
மேல்விஷாரம் (ராணிப்பேட்டை மாவட்டம்)ல இருந்த
Global Institute of Engineering and Technologyல
ECE சேர்ந்தேன்.

College first day இன்னும் ஞாபகம் இருக்கு.

College campusக்குள்ள போனதும்…

Class room எங்கன்னே தெரியாம முழிச்சிட்டு இருந்தேன்.

யார்கிட்டயாவது கேக்கலாமா…

வேண்டாமா…

ன்னு கூட தெரியல.

அப்போதான்…

எனக்கு பின்னாடி இருந்து ஒரு குரல் வந்துச்சி.

“நீங்க எந்த department?” 👀

ன்னு கேட்டுட்டு…

என்ன department classக்குள்ள கூட்டிக்கிட்டு போன முதல் ஆள் அவன் தான்.

என்னோட நண்பன் விக்னேஷ். 🤝

இன்றைக்கும்…

அவன் என்னோட closest friendsல ஒருத்தன்.

என்னை தவிர…

அங்க இருந்த எல்லாருமே ரொம்ப intelligent மாதிரி தெரிஞ்சாங்க.

நான் மட்டும்…

“இங்க survive பண்ணுவோமா?” 😅

ன்னு பயந்துட்டு இருந்தேன்.

அதுக்கு மேல…

என்னோட பேர் “செங்கல்வராயன்”.

பழைய காலத்து பேர் என்று சொல்லி…

நிறைய பேர் கிண்டல் பண்ணாங்க. 😄

சில நாட்கள்…

College போகவே பயமா இருக்கும்.

“நாளைக்கு leave போட்டுறலாமா?” 🤧

ன்னு கூட யோசிச்சிருக்கேன்.

ஆனா…

அதே college வாழ்க்கைதான்… ✨

போகப் போக என் வாழ்க்கையில மறக்க முடியாத காலமா மாறிச்சு.

உங்களோட காலேஜ் முதல் உங்களுக்கு நியாபகம் இருக்கா 😍🔥
அப்போ கமெண்ட்- ல சொல்லுங்க 👇🏻

(அடுத்த episode நாளைக்கு…) 👀

ுந்துFarmingவரை

19/05/2026

₹100-க்கு செம காம்போ 😍 | காடை முட்டை குழிப்பணியாரம் +காளான் பக்கோடா + சமோசா + சூப் 🍄🔥

#காளான்

18/05/2026

🍄 நம்ம பண்ணையிலேயே fresh-ஆ வளர்க்குற chippi kaalaanல செய்த hot hot pakkoda & samosa 😍
Taste பண்ணா மறக்கவே முடியாது 🤤
கண்டிப்பா try பண்ணி பாருங்க ❤️

Address

Velapdi
Vellore

Website

https://www.instagram.com/sengalvarayan_farmworld?igsh

Alerts

Be the first to know and let us send you an email when Sengalvarayan Farmworld posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sengalvarayan Farmworld:

Share