THE MESSAGE DAILY

THE MESSAGE DAILY News, Entertainment, Business promotions and Discussion social issues.

உலகளவில் ஆதிக்க அரசியலும் அநீதியும் முடிவுக்கு வந்து நீதியும் மனிதநேயமும் வெல்ல வேண்டும் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர்...
20/03/2026

உலகளவில் ஆதிக்க அரசியலும் அநீதியும் முடிவுக்கு வந்து நீதியும் மனிதநேயமும் வெல்ல வேண்டும்

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா எம்எல்ஏ வெளியிடும் அறிக்கை

புனித ரமலான் மாதம் நிறைவடைந்த மறுதினம்
உலகம் முழுவதும் வாழும் முஸ்லிம்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் ஈதுல் ஃபித்ர் எனும் ஈகை பெருநாள்
வாழ்த்துகளை இதயப்பூர்வமாக அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, தொழுகை, தர்மம், சகோதரத்துவம் மற்றும் தன்னடக்கம் போன்ற உயர்ந்த பண்புகளை வளர்த்துக் கொள்ளும் காலமாக ரமலான் மாதம் அமைந்திருந்தது. இந்த புனித மாதம் நமக்குக் கற்றுத்தந்த கருணை, பகிர்வு, பொறுமை, மனிதநேயம் போன்ற உயரிய பண்புகளை ஈகை திருநாளுடன் மட்டும் முடிவுறச் செய்யாமல், ஆண்டு முழுவதும் நமது வாழ்க்கையில் கடைப்பிடிப்பதே ரமலானின் உண்மையான செய்தியாகும்.

இந்நன்னாளில் உலகம் முழுவதும் நடைபெற்று வரும் போர்கள் மற்றும் மோதல்கள் முடிவுக்கு வந்து மனிதக்குலம் அமைதி மற்றும் சகோதரத்துவத்தின் பாதையில் முன்னேற வேண்டும் என்று இறைவனைப் பிரார்த்திக்கிறோம். குறிப்பாக மேற்காசியப் பகுதிகளில் நீடித்து வரும் பதற்றங்கள் முடிவுக்கு வந்து, அப்பகுதியில் நிலையான அமைதி நிலவ வேண்டும். உலகளவில் ஆதிக்க அரசியலும் அநீதியும் முடிவுக்கு வந்து நீதியும் மனிதநேயமும் வெல்ல வேண்டும் என்ற நம்பிக்கையையும் இந்த நாளில் வலியுறுத்துகிறேன்.

நமது இந்தியா பல மதங்கள், பல மொழிகள் மற்றும் பல பண்பாடுகள் இணைந்து வாழும் மகத்தான நாடாகும். இந்நாட்டில் சகோதரத்துவம், சமூக நல்லிணக்கம் மற்றும் சமூக ஒற்றுமை நிலைத்திருக்க வேண்டுமெனவும் இந்த ஈகை பெருநாளில் நாம் அனைவரும் பிரார்த்திப்போம்.

தமிழ்நாட்டில் மக்கள் நலன், சமூக நீதி மற்றும் சமூக நல்லிணக்கத்தை முன்னிறுத்தும் இன்றைய நிலை தொடர வேண்டும் என்ற மக்கள் விருப்பம் நிறைவேற இந்நாளில் மனமாரப் பிரார்த்திக்கிறேன்.

இந்த மகிழ்ச்சியான ஈகை பெருநாளில் அனைவருக்கும் அமைதி, வளம், ஆரோக்கியம் கிட்டவும் சகோதரத்துவத்துவம
தழைத்தோங்கவும் பிரார்த்தனை செய்கிறேன்.

இப்படிக்கு
எம் எச் ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
சென்னை
17/03/2026

ஜெருசலம் அல்அக்சா பள்ளிவாசலை மூடி வழிப்பாட்டு உரிமையை பறிக்கும் இஸ்ரேல்  அரசின் கொடுங்கோன்மை வன்மையாக கண்டிக்கத்தக்கதுமன...
19/03/2026

ஜெருசலம் அல்அக்சா பள்ளிவாசலை மூடி வழிப்பாட்டு உரிமையை பறிக்கும் இஸ்ரேல் அரசின் கொடுங்கோன்மை வன்மையாக கண்டிக்கத்தக்கது

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் மு ஹி ஜவாஹிருல்லா சமஉ வெளியிடும் அறிக்கை

புனித ரமலான் மாதத்தின் இறுதியிலும், வரவிருக்கும் ஈகைத் திருநாள் முன்னிட்டும் ஜெருசலத்தில் உள்ள அல்அக்ஸா பள்ளிவாசலில் தொழுகைகளைத் தடுக்கவும், பள்ளிவாசலை மூடிப்போடவும் இஸ்ரேல் அரசு எடுத்திருக்கும் நடவடிக்கை வன்மையாக கண்டிக்கத்தக்கது.

உலக முஸ்லிம்களின் மூன்றாவது புனிதத் தலமாக விளங்கும் அல்-அக்ஸா பள்ளிவாசலில், ரமலான் மாதத்தின் இறுதி நாட்களில் நடைபெறும் இரவு தொழுகைகள், தடுக்கப்பட்டிருப்பது, மனித உரிமைகளுக்கு எதிரான வெளிப்படையான வரம்பு மீறல் ஆகும்.

வழிப்பாட்டு உரிமை என்பது அடிப்படை மனித உரிமையாகும். அதை இவ்வாறு ஒடுக்குவது சர்வதேச சட்டங்களுக்கும், மனிதநேயத்துக்கும் முற்றிலும் முரணானது.

ஜெருசலம் நகரில் முஸ்லிம்கள் மீது விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் மற்றும் அடக்குமுறைகள் உலக அமைதிக்கு தீங்கு விளைவிப்பவை.

எனவே, உடனடியாக அல்-அக்ஸா பள்ளிவாசலை திறந்து, முஸ்லிம்கள் தங்கள் வழிப்பாட்டு உரிமையை சுதந்திரமாக நிறைவேற்ற அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். மேலும், இந்த விவகாரத்தில் சர்வதேச சமூகமும் தலையிட்டு, முஸ்லிம்களின் வழிப்பாட்டு உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

இத்தகைய அடக்குமுறைகள் தொடர்ந்தால், அது பிராந்திய அமைதிக்கும், உலகளாவிய நல்லிணக்கத்திற்கும் பெரும் அச்சுறுத்தலாக மாறும் என்பதை பயங்கரவாத இஸ்ரேல் அரசு உணர வேண்டும்.

இப்படிக்கு
மு ஹி ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
சென்னை
19/03/2026

🇵🇸

உணவகங்களுக்கு மின் பயன்பாட்டில் ரூ.2 மானியம் வழங்கும் தமிழக அரசின் முடிவுக்கு வரவேற்கத்தக்கது மனிதநேய மக்கள் கட்சியின் த...
14/03/2026

உணவகங்களுக்கு மின் பயன்பாட்டில் ரூ.2 மானியம் வழங்கும் தமிழக அரசின் முடிவுக்கு வரவேற்கத்தக்கது

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் மு ஹி ஜவாஹிருல்லா ச ம உ வெளியிடும் அறிக்கை

எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக உணவகங்கள், தேனீர் கடைகள் உள்ளிட்ட சிறு வியாபாரிகள் கடுமையான சிரமங்களை எதிர்கொண்டு வரும் நிலையில், வழக்கமான மின் பயன்பாட்டை மீறி பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கு யூனிட்டுக்கு ரூ.2 மானியம் வழங்க தமிழக அரசு எடுத்துள்ள முடிவை மனமகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன்.

எரிவாயு சிலிண்டர் கிடைப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கல்களால், பல உணவகங்கள் மற்றும் தேனீர்கடைகள் மின்சார சாதனங்களை அதிகமாக பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்களுக்கு கூடுதல் செலவுச் சுமை ஏற்பட்டது. அந்த சுமையை குறைக்கும் வகையில் தமிழக அரசு எடுத்துள்ள இந்த மனிதநேயமான மற்றும் நடைமுறை சார்ந்த முடிவு சிறு வியாபாரிகளுக்கு பெரும் நிவாரணமாக இருக்கும்.

எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு பிரச்சனை முழுமையாக சரியாகும் வரை இந்த மானியம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதும் பாராட்டத்தக்கதாகும்.

இந்த நடவடிக்கைக்காக தமிழக முதலமைச்சர் அவர்களுக்கும், தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இப்படிக்கு
மு ஹி ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
சென்னை
14/03/2026


எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாட்டிற்கு ஒன்றிய அரசே முழு பொறுப்பேற்க வேண்டும். மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் பேராசிர...
11/03/2026

எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாட்டிற்கு ஒன்றிய அரசே முழு பொறுப்பேற்க வேண்டும்.

மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா MLA வெளியிடும் அறிக்கை

சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாட்டின் காரணமாக இந்திய திருநாட்டின் அனைத்து தரப்பு மக்களும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர்.வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்த ப்பட்டு இருப்பது கவலை அளிக்கிறது.

பல்வேறு பெருநகரங்களில் உணவகங்கள் தங்களது உணவு பட்டியலை குறைத்துக் கொண்டதும் பல்வேறு ஊர்களில் உணவகங்கள் மூடப்படக்கூடிய சூழ்நிலையையும் அறிய முடிகிறது.

உணவகங்கள் தேநீர் விடுதிகள் மற்றும் சிறு தொழில்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகி இருக்கின்றன. சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 60 ரூபாய் உயர்த்தப்பட்டு இருப்பதோடு முன்பதிவின் காலம் 25 நாட்களாக அதிகரித்திருப்பது இல்லத்தரசிகளின் கவலையை இன்னும் அதிகப்படுத்தி இருக்கிறது.

சர்வதேச சந்தையில் கச்ச எண்ணெய் விலை இறங்கும் போது உள்நாட்டில் எண்ணெய் விலையை குறைக்காமல் லாபம் ஈட்டியது ஒன்றிய அரசு. தற்போது அந்த லாபத்தை மானியமாக வழங்கி இந்த விலையேற்றத்தை தவிர்த்திருக்க வேண்டும்.

ஒன்றிய அரசு பொதுமக்களின் அத்தியாவசிய தேவையை உணர்ந்து தொலைநோக்குப் பார்வையோடு பணிகளை முன்னெடுக்காததன் விளைவாக அடித்தட்டு மக்கள் மிகப்பெரிய பாதிப்புக்கு ஆளாகி இருக்கின்றனர்.

ரஷ்யா போன்ற நாடுகளும் இந்தியாவுக்கு வழங்க இருக்கிற கச்சா எண்ணையின் விலையை உயர்த்திருப்பதாக தெரிய வருகிறது. மேற்காசியா நாடுகள் நிலவும் போர் சூழலை சரியாக கணிக்காமல் ஒன்றிய அரசு அலட்சியமாக இருந்ததன் காரணமாக இந்திய நாட்டின் பொதுமக்கள் அல்லல் படும் நிலை உருவாகி இருக்கிறது. மாற்று ஏற்பாடுகளை முறையாக செய்யாமல்
மக்கள் மீது பெருஞ்சுமையை சுமத்தி இருக்கும் ஒன்றிய பாஜக அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

பொதுமக்கள் மற்றும் சிறு குறு தொழில்கள் பாதிக்காத வகையில் சமையல் மற்றும் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை தட்டுப்பாடு இன்றி வழங்க ஒன்று அரசு துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றேன்.

இப்படிக்கு.
எம் எச் ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
சென்னை
11/03/2026

பேர்ணாம்பட்டு நகர இளைஞர்களின் தற்சார்பு முயற்சிக்கு கரம் கொடுப்போம்!⚠️ *பேர்ணாம்பட்டு - ஆம்பூர் • குடியாத்தம் • வேலூர்*•...
08/03/2026

பேர்ணாம்பட்டு நகர இளைஞர்களின் தற்சார்பு முயற்சிக்கு கரம் கொடுப்போம்!

⚠️ *பேர்ணாம்பட்டு - ஆம்பூர் • குடியாத்தம் • வேலூர்*• *வாணியம்பாடி*⚠️

👉🏻*ரம்ஜான் பரிசு 🎁 கிட்* 👈🏻 உங்கள் *நண்பர்கள்*, *உறவினர்*
யாருக்காக வேண்டுமானாலும் பரிசாக அனுப்பலாம்!

உள்ளவை:👇🏻
• அரிசி – 5 Kg
• கோதுமை மாவு – 1 Kg
• மைதா – 1 Kg
• செமியா – 2 Pack
• மக்ரோனி – 1 Kg
• சர்க்கரை – 1 Kg
• எண்ணெய் – 1 Litre
• கடலைப் பருப்பு – 500 gm
• உளுத்தம் பருப்பு – 500 gm
• ரூஹ் ஆஃப்சா – 1 Bottle
• மிளகாய் பொடி – 100 gm
• மஞ்சள் பொடி – 50 gm
• டாட்டா உப்பு – 1 Pack
• ஊறுகாய் – 1 Bottle

💰 மொத்த மதிப்பு ₹1500…. ஆனால் *₹999* விலையில் இப்போது உங்களுக்காக கிடைக்கிறது!

*ஒரு ☎️ கால் போதும் — உங்கள் வீட்டுக்கு டெலிவரி! 🚴‍♂️*

📞 Order Now:
9500971285

சமையல் எரிவாயு விலை உயர்வு – மக்களின் வாழ்வை மேலும் சுமையாக்கும் ஒன்றிய அரசின் முடிவு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்மனி...
08/03/2026

சமையல் எரிவாயு விலை உயர்வு – மக்களின் வாழ்வை மேலும் சுமையாக்கும் ஒன்றிய அரசின் முடிவு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா எம்எல்ஏ வெளியிடும் அறிக்கை

நாடு முழுவதும் வீட்டு பயன்பாட்டு சமையல் எரிவாயு உருளையின் விலையை உயர்த்தியுள்ள ஒன்றிய அரசின் முடிவு பொதுமக்கள் மீது கடுமையான பொருளாதாரச் சுமையை ஏற்படுத்தும் ஒன்றாகும்.

ஏற்கனவே அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, வேலைவாய்ப்பு குறைவு, வாழ்க்கைச் செலவுகள் அதிகரிப்பு ஆகிய காரணங்களால் பொதுமக்கள் பெரும் நெருக்கடியில் வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையில், இந்த சமையல் எரிவாயு விலை உயர்வு அவர்களின் வாழ்க்கையை மேலும் சிரமப்படுத்தும் நடவடிக்கையாகும்.

மார்ச் 7 முதல் அமலுக்கு வந்துள்ள இந்த புதிய விலை உயர்வின் மூலம் 14.2 கிலோ வீட்டு உபயோக சமையல் சிலிண்டரின் விலை ரூ.60 உயர்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட நகரங்களில் சிலிண்டர் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. இதேபோல் 19 கிலோ வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலையும் ரூ.115 உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் உணவகங்கள், சிறிய உணவுக் கடைகள், தேநீர் கடைகள் போன்ற சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட உள்ளன. அதன் தொடர்ச்சியாக உணவுப் பொருட்களின் விலையும் உயர வாய்ப்பு உள்ளது.

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை என்றும், தேவையான அளவு கையிருப்பு இருப்பதாகவும் ஒன்றிய அரசு தொடர்ந்து கூறிவரும் நிலையில்,மேற்காசியாவில் நிலவும் பதற்றமான சூழ்நிலையை காரணம் காட்டி சமையல் எரிவாயு விலையை உயர்த்துவது எந்தவிதத்திலும் நியாயப்படுத்த முடியாததாகும்.

இது பொதுமக்களின் வாழ்வாதாரத்தைப் பற்றிய உணர்வு இல்லாத ஒரு முடிவாகவே அமைந்துள்ளது.

ஏற்கனவே பணவீக்கம் காரணமாக ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், சமையல் எரிவாயு விலை உயர்வு குடும்பங்களின் மாதாந்திர செலவுகளை மேலும் அதிகரித்து, அவர்களின் பொருளாதார நிலையை பாதிக்கும் அபாயம் உள்ளது.

எனவே, பொதுமக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, சமையல் எரிவாயு உருளையின் விலையை உயர்த்தியுள்ள இந்த முடிவை ஒன்றிய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

இப்படிக்கு
எம் எச் ஜவாஹிருல்லா
தலைவர் மனிதநேய மக்கள் கட்சி

இந்தியா- ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதற்கு அமெரிக்கா அனுமதி அளித்திருப்பது இந்திய இறையாண்மைக்கு விடுக்கப்பட்டுள்ள மா...
06/03/2026

இந்தியா- ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதற்கு அமெரிக்கா அனுமதி அளித்திருப்பது இந்திய இறையாண்மைக்கு விடுக்கப்பட்டுள்ள மாபெரும் சவால்.

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா எம்எல்ஏ வெளியிடும் அறிக்கை

சர்வதேச சந்தையில் எண்ணெய் விநியோகத்தை பராமரிக்க, அமெரிக்க கருவூலத் துறை இந்திய சுத்திகரிப்பு நிலையங்களுக்கு ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்க 30 நாள் விலக்கு அளித்துள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்கா கூடுதலாக 25 சதவீத வரியை விதித்தது .இந்தியா மீதான அமெரிக்காவின் மொத்த வரி 50 சதவீதமாக உயர்ந்திருந்தது.

பின்னர் பிப்ரவரியில் இந்தியா ரஷ்ய எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதாக உறுதியளித்துள்ளதாகவும் இந்தியா மீது விதிக்கப்பட்ட 50 சதவீத வரி 18 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளதாகவும் என்று அறிவித்தது.

தற்போது ரஷ்யாவிடம் எரிபொருள் வாங்க 30 நாட்களுக்கு அனுமதி வழங்குவதாக அமெரிக்கா அறிவித்து இருப்பது இந்திய இறையாண்மைக்கு விடுக்கப்பட்ட சவாலாகும்.

ஏற்கனவே பாகிஸ்தான் போரை தான் நிறுத்தியதாக டிரம்ப் பலமுறை அறிவிப்பு செய்த நிலையில் நமது பிரதமர் மௌனம் காத்து வந்தார். தற்போதும் எந்தவித மறுப்பும் சொல்லாமல் மௌனமாகவே பிரதமர் இருக்கிறார். இந்தியாவின் விருந்தினர்களாக வந்த ஈரான் கப்பற்படையினரின் கப்பலை இலங்கை அருகே அமெரிக்கா சுட்டு வீழ்த்தி இருக்கிறது. இதில் நூற்றுக்கணக்கான ஈரானிய கடற்படை வீரர்கள் பலியாகினர். இதுகுறித்தும் எந்த கண்டன அறிக்கையும் இதுவரை வெளியிடப்படவில்லை. இந்தியாவின் வெளியுறவு கொள்கையில் தற்போது மிகப்பெரிய அளவில் பின்னடைவு ஏற்பட்டிருப்பதாகவே கருத வேண்டி இருக்கிறது.

இப்படிக்கு.
எம் எச் ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி

*இறைவன் நாடினால்* ஈரானில் அத்துமீறி தாக்குதல் தொடுத்துஈரானின் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி கொமைனி அவர்களை கொலை செய்துள்ளஉல...
02/03/2026

*இறைவன் நாடினால்*

ஈரானில் அத்துமீறி தாக்குதல் தொடுத்து

ஈரானின் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி கொமைனி அவர்களை கொலை செய்துள்ள

உலக ரவுடி அமெரிக்கா மற்றும் அதன் கள்ளக் குழந்தையான இஸ்ரேலை கண்டித்தும்

பேர்ணாம்பட்டு மவுலானா ஆசாத் சவுக் [நான்கு கம்பம்] அருகில்

நாளை [03.03.2026] அன்று இரவு 09.30 - 10.30 வரை

கையில் மெழுகுதிரி ஏந்தி அறவழியில் ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கின்றது.

இன்று நடைப்பெறவிருப்பது ஆர்ப்பாட்டம் மட்டுமல்ல,

பூமியில் குழப்பத்தை உருவாக்கி கொண்டிருக்கும் தீய சக்திகளுக்கும்

அந்த குழப்பத்தை முறியடிப்பதை கடமையாக கொண்டுள்ள இஸ்லாமியர்களுக்குமான

ஆயிரங்காலத்து அறப்போராட்டத்தின் தொடர்ச்சி!

ஒரு கொமேனியை கொன்று விட்டால் உலகத்தில் நிரந்தரமாக ஆட்சி செய்யலாம் என்ற குழப்பவாதிகளின் திட்டத்தை பொய்ப்பிக்க,

ஏகாதிபத்தியத்திற்கு எதிராக கண்டனங்களை பதிவு செய்ய அழைக்கின்றது...

*தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்.*
*பேர்ணாம்பட்டு நகரம்*
*வேலூர் மேற்கு மாவட்டம்*

அலி காமேனி வீரமரணம்:அமெரிக்கா–இஸ்ரேல் தாக்குதல் பயங்கரவாதத்திற்கு வன்மையான கண்டனம்!மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராச...
01/03/2026

அலி காமேனி வீரமரணம்:

அமெரிக்கா–இஸ்ரேல் தாக்குதல் பயங்கரவாதத்திற்கு வன்மையான கண்டனம்!

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா எம்எல்ஏ வெளியிடும் அறிக்கை

ஈரான் இஸ்லாமிய குடியரசின் உயரிய தலைவர் அலி காமேனி அவர்கள் உயிரிழந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து மேற்கொண்டதாக கூறப்படும் வான்வழித் பயங்கரவாத
தாக்குதல், ஒரு சுயாட்சி நாட்டின் இறையாண்மையை வெளிப்படையாக மீறும் செயல் ஆகும்.

ஐக்கிய நாடுகள் சபையின் அனுமதி இன்றி மேற்கொள்ளப்பட்ட இந்த இராணுவ நடவடிக்கை, சர்வதேச சட்டங்களையும் ஐ.நா. சாசனத்தின் அடிப்படை கோட்பாடுகளையும் மீறும் ஆபத்தான முன்மாதிரியாகும்.

ஒரு நாட்டின் அரசியல் மற்றும் மதத் தலைமை அமைப்பை இலக்காகக் கொண்டு நடத்தப்படும் தாக்குதல், பிராந்திய அமைதியை சீர்குலைக்கும் செயல் மட்டுமல்ல; அது உலக அமைதிக்கும் பெரும் அச்சுறுத்தலாகும்.

இத்தகைய ஒருதலைப்பட்சமான பயங்கரவாத நடவடிக்கைகள் மத்திய கிழக்கு பிராந்தியத்தை மேலும் தீவிர மோதல்களுக்குள் தள்ளக்கூடியவை.

பல தசாப்தங்களாக பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்க்க முயற்சிக்கப்பட்ட விவகாரங்கள், இராணுவ தாக்குதலால் ஒருபோதும் தீர்க்கப்படமாட்டாது. போர் என்பது தீர்வாகாது; அது மனித உயிரிழப்புகளையும் அழிவையும் மட்டுமே அதிகரிக்கும்.

எனவே,அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உடனடியாக அனைத்து தாக்குதல் நடவடிக்கைகளையும் நிறுத்த வேண்டும். சர்வதேச சமூகம் அவசரமாக தலையிட்டு, மோதலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் பிரச்சினைகள் அனைத்தும் தூதரக வழி மற்றும் அமைதியான பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்க்கப்பட வேண்டும். ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை அவசரக் கூட்டம் கூட்டி, பிராந்திய அமைதியை உறுதி செய்ய வேண்டும்.
ஒரு சுயாட்சி நாட்டின் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதலை கடுமையாகக் கண்டிக்கிறோம். உலக நாடுகள் அனைத்தும் பொறுப்புணர்வுடன் செயல்பட்டு, போர் அல்ல, அமைதியே மனிதகுலத்தின் பாதை என்பதை மீண்டும் உறுதி செய்ய வேண்டுகிறோம்.

இப்படிக்கு
எம் எச் ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
சென்னை
01/03/2026



பொய் வழக்குகள் மூலம் எதிர்க்கட்சிகளை ஒடுக்க முயன்ற ஒன்றிய அரசின் செயல் நீதிமன்றத்தில் சந்தி சிரித்தது!மனிதநேய மக்கள் கட்...
27/02/2026

பொய் வழக்குகள் மூலம் எதிர்க்கட்சிகளை ஒடுக்க முயன்ற ஒன்றிய அரசின் செயல் நீதிமன்றத்தில் சந்தி சிரித்தது!

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா எம்எல்ஏ வெளியிடும் அறிக்கை

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி காலத்தில் (2022) அறிமுகப்படுத்தப்பட்ட புதிய மதுபானக் கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு, மத்திய புலனாய்வு நிறுவனம் (CBI) மற்றும் அமலாக்கத் துறை (ED) ஆகிய ஒன்றிய அமைப்புகள் வழக்குகள் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டன.

இந்த வழக்கில் டெல்லியின் முன்னாள் முதலமைச்சர் அர்விந்த் கேஜ்ரிவால் மற்றும் முன்னாள் துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட்டனர். மணிஷ் சிசோடியா 530 நாட்களும், அர்விந்த் கேஜ்ரிவால் 156 நாட்களும் சிறையில் வைக்கப்பட்டனர்.

ஆனால், டெல்லி நீதிமன்றம் தற்போது இவ்வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லை என்று தெளிவாகக் குறிப்பிட்டு இருவரையும் விடுதலை செய்துள்ளது. மேலும், போலியாக வழக்கு புனைந்தமை தொடர்பாக விசாரணை அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளது என்பது மிகுந்த அதிர்ச்சியூட்டும் விடயமாகும்.

“அடிப்படை ஆதாரங்களே இல்லாமல், சதி நோக்கத்துடன் ஒரு முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்படுவது எவ்வாறு சாத்தியமானது?” என்ற நீதிமன்றத்தின் கேள்வி, ஜனநாயகத்தின் மீது நிகழ்ந்த அநீதி குறித்து நாட்டையே சிந்திக்க வைக்கிறது.

இந்த பொய் குற்றச்சாட்டுகள் அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தி, டெல்லி சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தோற்பதற்கான சூழலை உருவாக்கின. ஒன்றிய பாஜக அரசை விமர்சிக்கும் எதிர்க்கட்சித் தலைவர்களை மிரட்டவும், அரசியல் ரீதியாக பலவீனப்படுத்தவும் ஒன்றிய விசாரணை அமைப்புகள் பயன்படுத்தப்படுகின்றன என்ற குற்றச்சாட்டு இத்தீர்ப்பின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.

ஜனநாயக அமைப்புகள் அரசியல் பழிவாங்கலுக்கான கருவிகளாக மாற்றப்படுவது மிகவும் ஆபத்தான போக்கு. அரசியல் வேறுபாடு குற்றமாக கருதப்படும் சூழல் உருவாகக்கூடாது. நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு, அதிகார துஷ்பிரயோகத்திற்கு எதிரான வலுவான எச்சரிக்கை மணி.

ஒன்றிய அரசு எதிர்க்கட்சிகளை குறிவைத்து பொய் வழக்குகள் பதிவு செய்வதை உடனடியாக நிறுத்தி, ஜனநாயக மரபுகளையும் சட்டத்தின் மேலாதிக்கத்தையும் மதிக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்துகிறது.

இப்படிக்கு,
எம். எச். ஜவாஹிருல்லா
மாநில தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
சென்னை
27/02/2026

மராட்டியத்தில் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு ரத்து: அரசியலமைப்பை அவமதிக்கும் மிகப்பெரிய சமூக அநீதிமனிதநேய மக்கள் கட்சியின...
21/02/2026

மராட்டியத்தில் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு ரத்து: அரசியலமைப்பை அவமதிக்கும் மிகப்பெரிய சமூக அநீதி

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர்
பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா, எம்எல்ஏ
வெளியிடும் அறிக்கை

மகாராஷ்டிரா மாநிலத்தில், காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக் காலத்தில், சமூகநீதி அடிப்படையில் மராத்தியர்களுக்கு 16 சதவீதமும், முஸ்லிம்களுக்கு 5 சதவீதமும் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது.

ஆனால் தற்போது பாரதிய ஜனதா கட்சித் தலைமையிலான மகாராஷ்டிரா அரசு, முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்ட 5 சதவீத இடஒதுக்கீட்டை முற்றாக ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. இதனை வன்மையாகக்க் கண்டிக்கிறேன்.

முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு மும்பை உயர் நீதிமன்றம் மூலம் சட்டப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டிருந்த போதிலும், அதனை முழுமையாகச் செயல்படுத்தத் தவறிய மாநில அரசு, இப்போது அதை முற்றாக நீக்குவது, சட்டத்தையும் நீதித்துறையையும் கேலிக்கூத்தாக்கும் செயல் ஆகும்.

ஒரே நேரத்தில் வழங்கப்பட்ட இடஒதுக்கீட்டில், மராத்தியர்களுக்கான இடஒதுக்கீட்டைத் தொடர்ந்து வைத்துக்கொண்டு, முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை மட்டும் ரத்து செய்திருப்பது, பாஜக அரசின் சிறுபான்மையினருக்கு எதிரான திட்டமிட்ட பாகுபாடு அரசியலை வெளிச்சம் போடுகிறது.

இடஒதுக்கீடு என்பது ஓர் அரசியல் சலுகை அல்ல; அது வரலாற்று ரீதியாக பின் தள்ளப்பட்ட சமூகங்களைச் சமநிலைக்குக் கொண்டு வரும் சமூகநீதி கருவி.
ஆனால் முஸ்லிம் சமூகத்தைக்க் கல்வி, வேலைவாய்ப்பு, அதிகாரம் ஆகியவற்றிலிருந்து மேலும் தள்ளி வைக்கும் நடவடிக்கைகளையே மகாராஷ்டிரா பாஜக அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

இந்த முடிவு முஸ்லிம்களுக்கு எதிரான அரசியல் பழிவாங்கல் மட்டுமல்ல; சமத்துவம், சமூகநீதி, சகோதரத்துவம் ஆகிய அரசியலமைப்புச் சாசன அடிப்படை மதிப்புகளுக்கு விடுக்கப்பட்ட நேரடிச் சவாலாகும்.

மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில், இந்த அநீதியான, அரசியலமைப்புக்கு விரோதமான முடிவைக் கடுமையாகக்க் கண்டிக்கிறேன்.
முஸ்லிம்களுக்கான 5 சதவீத இடஒதுக்கீட்டை உடனடியாக மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என் கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு,
எம். எ. ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
சென்னை
20.02.2026

Address

Vellore

Website

Alerts

Be the first to know and let us send you an email when THE MESSAGE DAILY posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share