08/03/2023
அனைத்து பெண்களும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 பெண் உரிமைகள்! பெண்களையும் அவர்களது உரிமைகளையும் பாதுகாக்க இந்தியாவில் பல சட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு உரிமைகளைப் பற்றி நன்கு அறிந்திருக்க வேண்டும். அவர்களின் மேம்பாட்டிற்காக செயல்படும் அத்தகைய 5 உரிமைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
1. சம ஊதிய சட்டம், 1976 : உலகம் முழுவதும் ஊதிய ஏற்றத்தாழ்வு என்ற பிரச்சனையை பெண்கள் எதிர்கொள்கிறார்கள். கூலி வேலையில் தொடங்கி பல்வேறு வேலைகளிலும் இந்த ஊதிய பிரச்சனைகள் நீண்டு கொண்டே செல்கிறது. எனவே தான் ஆணுக்கும், பெண்ணுக்கும் சம ஊதியத்தை உறுதி செய்யும் வகையில் இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளது. 2. பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு, தடை மற்றும் தீர்வு), 2013 : இந்தச் சட்டத்தின்படி, பணியிடத்தில் ஐந்து வகையான நடத்தைகள் பாலியல் துன்புறுத்தலாக கருதப்படுகின்றன. உடல் ரீதியான தொடர்பு, பாலியல் விருப்பங்களுக்கான கோரிக்கை அல்லது பாலினவாத கருத்துக்களை பேசுதல், ஆபாச படங்களை காட்டுதல் மற்றும் விரும்பத்தகாத உடல், வாய்மொழி அல்லது வாய்மொழி அல்லாத பாலியல் நடத்தை ஆகியவற்றிற்கு தண்டனை வழங்கப்படுகிறது. 3. இந்திய விவாகரத்து சட்டம், 2001 : திருமணமான அல்லது திருமணம் செய்யத் திட்டமிடும் ஒவ்வொரு பெண்ணும் அறிந்திருக்க வேண்டிய சட்டம். 2001ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட இந்த சட்டம் விவகாரத்து பெறுவதை எளிமையாக்குகிறது. இந்து திருமண சட்டம் 1995 பிரிவு 13பி-டின் படி ஆணும், பெண்ணும் பரஸ்பரம் விவாகரத்து கோரினால், அவர்கள் கட்டாயம் ஓராண்டு சேர்ந்து வாழ்த்திருக்க வேண்டும் என்ற விதி உள்ளது. ஆனால் இந்திய விவாகரத்து சட்டம் வழக்கின் சூழலுக்கு ஏற்ப ஓராண்டுகள் இணைந்து வாழாத தம்பதிக்கும் விவாகரத்து வழங்க அனுமதி அளிக்கிறது 4. கர்ப்பத்தின் மருத்துவ முடிவு சட்டம், 1971 : இந்தியாவில் கருக்கலைப்பை சில நேரங்களில் சட்ட ரீதியாக செய்யலாம் . கர்ப்பத்தின் மருத்துவ முடிவு சட்டம் 1971 படி., சட்டரீதியான கருக்கலைப்புகள் சில நிபந்தனைகளின் கீழ் மட்டுமே செய்யப்படுகின்றன. கர்ப்பத்தின் தொடர்ச்சியானது தாயின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது. உடல் அல்லது மன ஆரோக்கியத்தில் கடுமையான காயத்தை ஏற்படுத்துகிறது. சில நேரங்களில் ஏதேனும் கடுமையான வன்புணர்வு, பாலியல் வன்கொடுமை அல்லது கற்பழிப்பு உள்ளிட்டவை காரணமாக உருவாகும் கர்ப்பங்களை கலைக்க உதவுகிறது.