12/05/2024
அன்பு மாணவச் செல்வங்களே
நீட் நீட் என்று அனைவரும் டாக்டராகி ஊசி போட வேண்டும் என்பது தான் உங்களது எதிர்கால திட்டமா புரியவில்லை...
சரி உங்களில் எத்தனை பேருக்கு *திருவாரூர்* *CentralUniversity* பற்றிய விவரம் தெரியும்...?
அப்படித் தெரியவில்லை என்றால் இதோ தெரிந்துகொள்ளுங்கள்...!
*தற்போது 12ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு உபயோகப்படும்...*
மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் சார்பாக மத்திய அரசால் மாநிலத்துக்கு ஒன்றென "மத்திய பல்கலை கழகம்" என்ற பெயரிலேயே பதிமூன்று பல்கலை கழகங்கள் (சென்ட்ரல் யுனிவர்ஸிட்டிகள்) நடத்தப்பட்டு வருகின்றன.
இது போக, அஸ்ஸாம் பல்கலைகழகம், சில்சார் அஸ்ஸாம் மாநிலம், பாபா குலாம் ஷா பாதுஷா பல்கலை கழகம் ராஜோரி, ஜம்மு காஷ்மீர் மாநிலம்,
பெங்களூரு டாக்டர் அம்பேத்கார் ஸ்கூல் ஆஃப் எக்கானமிக்ஸ் யூனிவர்ஸிட்டி, காலிக்கோட் பல்கலை கழகம் பேரம்பூர் ஒடிஸா மாநிலம் சர்தார் படேல் யூனிவர்ஸிட்டி ஆஃப் போலீஸ் செக்யூரிட்டி மற்றும் கிரிமினல் ஜஸ்டிஸ் ஜோத்பூர் என
பிற ஐந்து யூனிவர்ஸிட்டிகளும் மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் நடத்தப்படுகின்றன.
பொதுவாக இந்த பல்கலைகழகங்களைப் பற்றிய விவரங்கள் தமிழ்நாட்டில் நிறைய மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் தெரியவே இல்லை.
*தமிழ்நாட்டில் இந்த பல்கலைகழகம் திருவாரூர் அருகே இருக்கிறது*. இந்த பல்கலைகழகம் ஒவ்வொரு வருடமும் இருநூறு மாணவர்களுக்கு இண்டக்ரேட்டட் கோர்ஸூகளுக்கானஅட்மிஷன் தருகிறது.
*Integrated MSc (Chemistry, Physics, Maths , Life Sciences) , Integrated MA EXONOMICS. இது போக மாஸ்டர்ஸ் டிகிரி கோர்ஸூகளும் எம்பிஏ கோர்ஸுகளும் பிஎச்டி கோர்ஸுகளும்* தனித்தனியே நடத்தப்படுகின்றன.
இங்கே படிக்கும் மாணவர்களில் பாதி பேர் கேரளாவைச் சார்ந்தவர்களாக இருக்கிறார்கள். மீதிப்பேரில் மற்ற மாநிலத்தவர்கள் இருக்கிறார்கள் தமிழ்நாடு உட்பட.
ஒரு செமஸ்டருக்கு பீஸ் என்று பார்த்தால் *முவாயிரத்திலிருந்து எட்டாயிரத்துக்குள்* வருகிறது.
இது போக ஆண்கள் பெண்களுக்கு தனித்தனி ஹாஸ்டல் வசதியும் இருக்கிறது. *ஹாஸ்டல் கட்டணங்களும் மிக மிக குறைவே.*
ஆனால் *இப்படி ஒரு கல்வி நிறுவனம் இருப்பது தமிழ்நாட்டில் நிறைய பெற்றோர்களுக்கு மாணாக்கர்களுக்கு தெரியவே இல்லை* என்பது வருத்தத்துக்குரிய விசயம்.
எப்படி இந்த பல்கலை கழகங்களில் சேர்ந்து படிப்பது...
18 மத்திய பல்கலை