News 32 Media

News 32 Media Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from News 32 Media, Media/News Company, Villupuram.
(6)

விழுப்புரத்தின் குரல்... மக்களின் நம்பிக்கை! விழுப்புரம் மாவட்டத்தின் செய்திகளை எவ்வித சமரசமும் இன்றி, உண்மையுடன், மனசாட்சியுடன், நேர்மையாகவும் பதிவு செய்வது மட்டுமே எங்கள் குழுவின் தலையாய கடமை #விழுப்பு விழுப்புரத்தின் குரல்... மக்களின் நம்பிக்கை!

விழுப்புரம் மாவட்டத்தின் செய்திகளை எவ்வித சமரசமும் இன்றி, உண்மையுடன், மனசாட்சியுடன், நேர்மையாகவும

் பதிவு செய்வது மட்டுமே எங்கள் குழுவின் தலையாய கடமை!

மக்களின் அன்றாடப் பிரச்சனைகள் முதல் பிராந்தியத்தின் முக்கியப் பதிவுகள் வரை அனைத்தையும் உடனுக்குடன் உங்களின் கரங்களுக்குக் கொண்டு சேர்க்கிறோம். எப்போதும் உங்களது மனசாட்சிக்கு நம்பிக்கையான ஊடகமாக எங்களது பயணம் தொடரும்.

எங்களது இந்த நேர்மையான முயற்சிக்கு உங்களது மேலான ஆதரவை எப்போதும் தாராளமாகத் தாருங்கள்! உங்களது ஆதரவே எங்களின் பலம்!

#விழுப்புரம் #நேர்மையானஊடகம்

15/06/2026

முத்துவேல் லேஅவுட்டில் தெரு நாய்கள் தொல்லை அதிகரிப்பு!

விழுப்புரம் நகராட்சி 22-வது வார்டுக்குட்பட்ட முத்துவேல் லேஅவுட் பகுதியில் 20-க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் கூட்டமாக சுற்றித்திரிவதால் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் அச்சத்தில் உள்ளனர்.

⚠️ பள்ளி செல்லும் குழந்தைகள் பாதிப்பு
⚠️ இருசக்கர வாகன ஓட்டிகளை துரத்தும் நாய்கள்
⚠️ முதியோர், பெண்கள் அச்சத்துடன் நடமாடும் நிலை

உடனடியாக தெரு நாய்களை பிடித்து அப்புறப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அறிஞர் அண்ணா அரசு கலை அறிவியல் கல்லூரி சேர்க்கை கலந்தாய்வு!விழுப்புரம் கீழ்பெரும்பாக்கத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரசு கலை ...
15/06/2026

அறிஞர் அண்ணா அரசு கலை அறிவியல் கல்லூரி சேர்க்கை கலந்தாய்வு!

விழுப்புரம் கீழ்பெரும்பாக்கத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரசு கலை அறிவியல் கல்லூரியில் 2026-27 கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

📚 ஜூன் 18 - அறிவியல் பாடப்பிரிவுகள் (B.Sc., BCA)
📚 ஜூன் 19 - வணிகவியல் பாடப்பிரிவுகள் (B.Com General & B.Com Professional)

📱 கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்ட மாணவர்களுக்கு செல்போன் மூலம் குறுந்தகவல் அனுப்பப்படும்.

📄 மாணவர்கள் அசல் சான்றிதழ்கள் மற்றும் தேவையான ஆவணங்களுடன் குறிப்பிட்ட தேதியில் கல்லூரிக்கு வர வேண்டும்.

⏰ காலை 9 மணிக்கு முன்பாகவே சேர்க்கை அரங்கில் இருக்குமாறு கல்லூரி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

15/06/2026

டாஸ்மாக் கடையை மூடக்கோரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்! | விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே கரடிப்பாக்கம் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு டாஸ்மாக் கடையை மூடக்கோரி 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பள்ளி, அங்கன்வாடி, நூலகம், ரேஷன் கடை அருகே டாஸ்மாக்
பெண்கள் மற்றும் மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறி
டாஸ்மாக் கடையை உடனடியாக மூட வேண்டும் என வலியுறுத்தல்

மனுவை பெற்ற மாவட்ட கலெக்டர், கோரிக்கையை பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

15/06/2026

மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் புஸ்ஸி ஆனந்த் சாமி தரிசனம் |

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு அங்காளம்மன் திருக்கோவிலில் தமிழக வெற்றி கழகத்தின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான புஸ்ஸி ஆனந்த் சாமி தரிசனம் மேற்கொண்டார்.

இந்த நிகழ்வில் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் தென்னரசு உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள், நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

📍 மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில்
📍 விழுப்புரம் மாவட்டம்

மத்திய அரசு வேலை கனவா? இதோ அரிய வாய்ப்பு!📚 SSC-CGL & RRB-ALP போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள்📍 விழுப்புரம...
15/06/2026

மத்திய அரசு வேலை கனவா? இதோ அரிய வாய்ப்பு!

📚 SSC-CGL & RRB-ALP போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள்

📍 விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம்

✅ தேர்ந்த வல்லுநர்களால் பயிற்சி
✅ இலவச பாடக்குறிப்புகள்
✅ வாரந்தோறும் மாதிரித் தேர்வுகள்
✅ அரசு பணிக்கான சிறந்த வழிகாட்டுதல்

🗓 பயிற்சி தொடக்கம் : 17.06.2026
⏰ நேரம் : காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை

📝 முன்பதிவு செய்ய கடைசி நாள் : 16.06.2026

📞 தொடர்புக்கு : 94990 55906

மத்திய அரசு பணியை இலக்காக கொண்டு தயாராகும் விழுப்புரம் மாவட்ட இளைஞர்கள் இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள்!

15/06/2026

மருந்துக்கடையை உடைத்து ரூ.57 ஆயிரம், ஐபோன், விலையுயர்ந்த மாத்திரைகள் கொள்ளை! | CCTV காட்சிகள் வெளியீடு

புதுச்சேரி அருகே கோட்டக்குப்பம் பகுதியில் மருந்துக்கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த 3 இளைஞர்கள், ரூ.57 ஆயிரம் ரொக்கம், ஐபோன் மற்றும் விலையுயர்ந்த மருந்து மாத்திரைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடையில் பொருத்தப்பட்டிருந்த CCTV கேமராவில், ஒரே இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பொருட்களை திருடிச் செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளன.

புகாரின் பேரில் கோட்டக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, CCTV காட்சிகள் மற்றும் கைரேகை ஆதாரங்களின் அடிப்படையில் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

15/06/2026

வறண்ட வீடூர் அணை... தவிக்கும் விவசாயிகள்!

விக்கிரவாண்டி அருகே உள்ள வீடூர் அணையின் நீர்மட்டம் 32 அடியில் இருந்து 13 அடியாக குறைந்துள்ளதால், அணை நீரை நம்பி விவசாயம் செய்து வந்த ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

நீர்ப்பிடிப்பு பகுதி வறண்டு காணப்படுவதால் சாகுபடி மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கவும், அணைக்கு நீர் வரத்து ஏற்படுத்தவும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

15/06/2026

குறைதீர் முகாமிலேயே குறைகள்? பொதுமக்கள் அவதி – நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம்! | விழுப்புரம்

15/06/2026

முன்னாள் அமைச்சர் ஏ. கோவிந்தசாமி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு முன்னாள் அமைச்சர் பொன்முடி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்வில் தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்று அஞ்சலி செலுத்தினர். கோவிந்தசாமி அவர்களின் அரசியல் மற்றும் சமூகப் பணிகளை நினைவுகூர்ந்து மரியாதை செலுத்திய இந்த நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

14/06/2026

அதிமுகவை அழிக்க நினைப்பது சி.வி.சண்முகம் தான்? | பசுபதி பரபரப்பு பேட்டி | விழுப்புரம்

விழுப்புரத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அதிமுக மாவட்ட செயலாளர் பசுபதி, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

Address

Villupuram

Alerts

Be the first to know and let us send you an email when News 32 Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to News 32 Media:

Share