26/08/2026
வேளாண்மைத் துறை மாதிரி மனு
தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 பிரிவு 6(1) இன் கீழ் மனு
*மனுதாரர்:*
*பெறுநர்:*
பொது தகவல் அலுவலர்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மாவட்டம்.
பொருள்:
கீழ்க்கண்ட தகவல்கள் அனைத்தும் .
______ மாவட்டம், _______ தாலுகா, ______ வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகம் சம்பந்தமாக கோரப்படுகிறது.
*மதிப்பிற்குரிய அலுவலர்அவர்களுக்கு,*
1. பணி நேரத்தில், அனைத்து அரசு அலுவலர்களும் அடையாள அட்டை அணிந்து பணிபுரிய வேண்டும் என்று உயர் நீதிமன்றம் பிறப்பித்த ஆணையை(W.P.NO 15640 of 2018) மதித்து மேற்படி அலுவலகத்தில் 01/01/2018 ஆம் தேதி முதல் 30/12/2020 ஆம் தேதி வரை பணியிலிருந்த ஊழியர்கள் அனைவரும் அணிந்துள்ள அடையாள அட்டையின் ஒளிநகல்கள்.
2. தங்களது அலுவலகத்தில் 1.1.2024 ஆம் ஆண்டு முதல் 31.12.2025 ஆண்டு வரை பிரதமந்திரியின் கிசான் மற்றும் இலவச சொட்டுநீர் பாசான வசதி திட்டத்தின் கீழ் பயனடைந்தவர்களின் பெயர்கள் மற்றும் விலாசம் உட்பட அவர்களுடைய பட்டா எண் மற்றும் புல எண் விபரம் அடங்கிய கோப்புகளின் ஒளி நகல்கள்.
3. மத்திய மாநில அரசுகளின் விவசாய மானிய திட்டங்களை பெற குறைந்தபட்ச தகுதிகள் என்னென்ன என்பது பற்றிய சுற்றறிக்கையின் ஒளி நகல்கள்.
4. 1/01/2024ம் ஆண்டு முதல் 31/12/2025 வரை உளுந்து, மக்காசோளம் மற்றும் உழவு மானியம் பெற்ற விவசாயிகள் பெயர்கள் அடங்கிய கோப்புகளின் ஒளி நகல்கள்.
5. ____ வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் பணிபுரிந்து வருபவர்களின் பெயர், அவர்களின் பதவி விபரம். இந்த அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் பணியாளர்கள் ஒவ்வொருவரும் எத்தனை ஆண்டுகளாக பணிபுரிந்து வருகின்றனர் அதன் விபரம் அடங்கிய கோப்புகளின் ஒளி நகல்கள்.
6. விவசாய அலுவலர்கள் விவாசய இடங்களுக்கு சென்று ஆய்வு செய்த நாள், எந்தெந்த விவசாயிகளின் இடங்களுக்கு சென்று ஆய்வு செய்தனர் அதன் விபரம் அடங்கிய ஆவண கோப்புகளின் ஒளி நகல்கள்.
7. 01/ 01/2024 முதல் 31/12/2025 வரை விவசாய அலுவலர்கள் விவசாய இடங்களை ஆய்வு செய்வதற்கு சென்று வர ஆன செலவினங்களின் ரசீதுகளின் ஒளி நகல்கள்.
8. மேற்படி அலுவலகத்தில் பணிபுரியும் அனைத்து அலுவலர்களின் பெயர், பதவியின் பெயர், அலுவலக அஞ்சலக முகவரி ஆகியவற்றை சட்டப்பிரிவு 4 (1)( b) க்கு கீழ்ப்படிந்து வழங்க வேண்டுகிறேன்.
9. மேற்கண்ட அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள சிறு மற்றும் குறுவிவசாயிகளின் எண்ணிக்கை மற்றும் முழுமுகவரி கிராமம்வாரியாக விவரம் தர வேண்டுகிறேன்.
இப்படிக்கு
இடம்:
நாள்: