10/09/2025
விஜய்யின் பிரச்சாரம் 23 நிபந்தனைகளுடன் அனுமதி
1. பரப்புரை நடத்தும் இடம் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள வணிக பகுதி என்பதால் காலை 10.35 மணி முதல் 11.00 மணி வரை நடக்கும் பரப்புரைக்கு கட்சியினர் காலை 09.35 மணிக்குள் வர வேண்டும்.
2. த.வெ.க. தலைவர் விஜய் எந்தப்பகுதியிலும் ரோடு ஷோ, வரவேற்பு நிகழ்ச்சி நடத்தக்கூடாது. 3. விஜய்யின் வாகனத்திற்கு பின்னால் 5 வாகனங்களுக்கு மேல் எந்தவொரு வாகனமும் அனுமதிக்கப்படாது. முன்னும் பின்னும் த.வெ.க.வினர் ஊர்வலமாக வரக்கூடாது.
4. பட்டாசுகள் வெடிக்க அனுமதியில்லை. எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் வைத்திருக்க கூடாது. இசைக்குழு பயன்படுத்தக்கூடாது. 5. பரப்புரையின்போது வரக்கூடிய வாகனங்களுக்கு உண்டான பார்க்கிங் வசதிகள் தாங்களே ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும். 6. அனுமதிக்கும் வழித்தடத்தில் மட்டுமே பரப்புரைக்கு வருபவர்கள் வரவேண்டும்.
7. கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள், வயது முதிர்ந்தவர்கள், மாற்றுத்திறனாளிகள் வருவதை தவிர்த்திட வேண்டும்.
8. பரப்புரையில் கலந்து கொள்ளும் எவரும் கம்பு, குச்சி, பிற ஆயுதங்கள் எதையும் வைத்திருத்தல் கூடாது. 2
9. பொதுமக்களுக்கும், சட்டம் ஒழுங்கிற்கும் இடையூறு ஏற்படாத வகையில் நடத்தப்பட வேண்டும்.
10. மருத்துவ வசதி, குடிநீர், முதல் உதவி சாதனங்கள், ஆம்புலன்ஸ், தீயணைப்பு சாதனங்கள் தயார் நிலையில் வைக்க வேண்டும்.
11. காவல்துறைக்கு உதவியாக தன்னார்வலர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும்.
12. பிறர்மனம் புண்படும் வகையிலோ, பிற ஜாதி, மதத்தினரை புண்படுத்தும் வகையிலோ நடந்து கொள்ளக்கூடாது.
13. பெட்டி வடிவ ஒலிபெருக்கியை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கூம்பு வடிவ குழாயை கட்டாயம் பயன்படுத்த கூடாது.
14. மாவட்டம் வாரியாக யாருடைய தலைமையில், எத்தனை வாகனங்களில், எவ்வளவு தொண்டர்கள் வருவார்கள் என்ற விபரமும், தலைமை தாங்கி அழைத்து வரும் பிரதிநிதிகளின் தொடர்பு எண் உள்ளிட்ட விபரங்களும் முன்னதாகவே அளிக்கப்பட வேண்டும்.
15. பொது சொத்துக்கோ, தனியார் சொத்துக்கோ, சேதம் ஏற்படுத்தக்கூடாது. சேதம் ஏற்படுத்தினால் சூழ்நிலைக்கேற்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு சட்டம் ஒழுங்கு நிலை நிறுத்தப்படும்.
16. அரசு மற்றும் தனியார்
கட்டிடங்கள், காம்பவுண்ட் சுவர்கள், மரங்கள், மின் விளக்கு கம்பங்கள், மின் கம்பங்கள், மின் மாற்றிகள், வாகனங்கள், கொடிக்கம்பங்கள், சிலையை சுற்றி அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு கிரில் கம்பிகள் மீது ஏறிக்கொண்டு இடையூறு ஏற்படுத்தக் கூடாது. 17. பரப்புரை முடிந்தவுடன் அமைதியான முறையில் கலைந்து செல்லவேண்டும்.
18.ப்ளக்ஸ் பேனரோ, அலங்கார வளைவுகளோ, கொடி கட்டப்பட்ட கம்பிகளோ உரிய அனுமதி பெறாமல் வைக்க கூடாது. 19. காவல்துறை விதிகளுக்கு உட்பட்டே நடந்து கொள்ள வேண்டும். 20. பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும், பள்ளி மாணாக்கர்களுக்கும், குழந்தைகள், முதியவர்கள், நோயாளிகளுக்கும் போக்குவரத்து இடையூறு ஏற்படா வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும்.
21. பொதுப்போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படா வண்ணம் நடந்து கொள்ள வேண்டும். ஆம்புலன்ஸ் சென்று வர எவ்வித தடங்கலும் ஏற்படுத்த கூடாது. Q
22. மேலே கூறப்பட்டுள்ள அனைத்து விதிமுறைகள் மற்றும் காவல் வழங்கப்படும் அறிவுரைகளையும் அதிகாரிகளால் அவ்வப்போது பின்பற்றி நடப்பதை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.
23. நிபந்தனைகளில் எவையேனும் மீறப்படும் பட்சத்தில் பரப்புரையை இடையிலேயே நிறுத்துவதற்கு காவல்துறையினருக்கு முழு அதிகாரம் உள்ளது.